கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,
வணக்கம்.
F.E.A.R (Federation of Extortion, Assassination and Rebellion)
கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,
வணக்கம்.
கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,
வணக்கம்.
இந்த பதிவின் தலைப்பை பார்த்து அதிர்ச்சி அடைய வேண்டாம் தோழர்களே. முழுமையான தகவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த பதிவு நம்முடைய லயன் காமிக்ஸ் ஜம்போ ஸ்பெஷல் குறித்த வெளியீடு அல்ல.
ஆங்கிலத்தில் சினிபுக் நிறுவனதினாரால் ரத்தப் படலம் அடுத்த ஆண்டு மே மாதம் முதல மாதம் ஒரு பாகமாக அனைத்து பாகங்களையும் (பத்தொன்பது) தனியாக வெளியிட ஒப்பந்தம் செய்து முடித்து அதனை பற்றிய அதிகாரபூர்வமான வெளியீட்டை அவர்களின் தளத்தில் வெளியிட்டு உள்ளனர். இங்கே கிளிக் செய்து அதனை படிக்கவும்.
என்னை பொறுத்த வரையில் அவர்கள் நான்காம் பாகத்தில் இருந்து ஆரம்பிப்பது அவர்களின் நிறுவனத்துக்கு நல்லது. ஏனென்றால், இதுவரையில் ஆங்கிலத்தில் இந்த தொடரை இரண்டு நிறுவனத்தினர் வெளியிட முயன்று உள்ளனர். அவர்கள் இருவருமே மூன்று பாகம் தான் வெளியிட முடிந்தது. அதன் பிறகு அவர்கள் நிறுவனங்கள் அடைந்த கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.
உண்மையில் சொன்னால் பதிமூன்று (13 - XIII) எப்படி ஒரு ராசியில்லாத எண்ணோ, அதனைப் போலவே தான் இந்த கதையை பிரசுரிக்க முயல்கிறவர்கள் அனைவருமே கஷ்டப் படுகிறார்கள். நம்முடைய லயன் காமிக்ஸ் எடிட்டரும் கூட எவ்வளவோ முயல்கிறார். ஆனால், முடியவில்லை. இன்னமும் கூட அறுநூரை தாண்டவில்லையாம் முன்பதிவு எண்ணிக்கை.
கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒரு புத்தகம் சினி புக் மூலம் வாங்கினால் (அதாவது அந்த புத்தகங்கள் இந்தியா வந்தால்) அதன் குறைந்த பட்ச விலை இருநூறு ரூபாயாக இருக்கும். அப்படியானால் பதினெட்டு பாகங்களுக்கு கணக்கு போட்டு பாருங்கள். ஆனால், நம்முடைய லயன் காமிக்ஸ் ஆசிரியர் அந்த பதினெட்டு பாகங்களையும் வெறும் இருநூறு ரூபாய்க்கே தருகிறார். ஆனாலும் அதனை வாங்க நம்மில் பலருக்கு மனம் வரவில்லை. என்ன கொடுமை ஐயா இது?
தொலைகாட்சி தொடராகவும் இந்த கதை வந்தது என்பதை கிங் விஸ்வா அவர்களின் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். இன்னமும் பார்க்கவில்லை. குறுந்தகடு வரவில்லையாம். காத்திருக்கிறேன்.
தரவிரக்கம் செய்ய Mega Up-Load Links:
http://www.megaupload.com/?d=BYEO6MA9
http://www.megaupload.com/?d=6NGO2PBA
படங்கள் உபயம் - கிங் விஸ்வா'வின் தமிழ் காமிக்ஸ் உலகம்.
இந்த கதை தொடர் இலங்கையில் இருந்து வந்த ஐஸ்பர்க் காமிக்ஸ் மூலமும் வெளிவந்தது என்பது குறிப்பிடத் தக்கது. நண்பர் விஸ்வா அதனை பற்றி பதிவிட்டதன் மூலமே தெரிந்து கொள்ள முடிந்தது.
அடுத்த காமிக்ஸ் பதிவு மூலம் உங்களை சந்திக்கிறேன், விரைவில்.
நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.
கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,
வணக்கம்.
சமீப காலங்களில் என்னால் வலையுலகம் பக்கமே வர இயலவில்லை. மன்னிக்கவும். அதற்குள் பார்த்தால் என்னவெல்லாமோ நடந்து இருக்கிறது. தமிழ் காமிக்ஸ் உலகின் முடி சூடிய மன்னரை காணவில்லை. அவருக்கு தொடர்ந்து விண்ணப்பங்கள் அனுப்பிக் கொண்டே இருக்கிறேன்.
இந்த தருணத்தில் தான் இந்த கதையை படித்தேன். இந்த கதையை விட இதன் பின்புலம் எனக்கு மிகவும் பிடித்தமான் ஒன்றாகும். விடா முயற்சிக்கு விக்கிரமாதித்தனை உதாரணம் கூறுவது அம்புலிமாமா கதை மூலம் தான் பிரபலம் அடைத்தது என்பதை கூறவும் வேண்டுமா என்ன?
ஓவியர் ஷங்கர் அவர்களின் கைவண்ணத்தில் வரையப் பட்ட அம்புலிமாமா விக்கிரமாதித்தன் கதையின் முதல் பக்கங்கள் மற்றும் அந்த வசனமும் ஓவியமும் யாராலும் மறக்க இயலாது. இந்த கதையில் இருக்கும் சித்திரங்கள் அவற்றில் ஒரு பங்கு அளவுக்கு கூட இல்லை என்றாலும் இந்த கதை தொடர் காமிக்ஸ் வடிவத்தில் வந்தது என்பதை சரித்திரத்தில் கூற இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விட்டதால் இந்த பதிவு இடப் படுகிறது.
இந்த கதைத் தொடர் சிறுவர் இலக்கியத்தில் மிகவும் புகழ் பெற்றதோடில்லாமல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றும் கூட. ஏனெனில், ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு கருத்து சொல்லப் பட்டு இருக்கும். அதன் மூலம் சிறுவர்களுக்கு நீதி போதனை புகட்ட இது ஒரு சிறந்த ஊடகமாக உபயோகப் படுத்தப் பட்டு வந்தது.
இதன் மூலம் சொல்லப் படும் கருத்துக்கள் சிறுவர்களின் மனதில் ஆழ இடம் பிடித்தது என்பது மறுக்க இயலாத உண்மை ஆகும். நண்பர் அய்யம்பாலயத்தார் அவர்களை அம்புலிமாமா தொடரின் விக்கிரமாதித்தன் கதைகளை பற்றிய ஒரு ஆய்வுக்கு அழைக்கிறேன்.
அடுத்த காமிக்ஸ் பதிவு மூலம் உங்களை சந்திக்கிறேன், விரைவில்.
நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.
இந்த கதை ஒரு சிறுகதை ஆகும். இதில் வரும் காட்சிகள் ஒரு சீ.ஐ.டி ராபின் கதையை நினைவு படுத்துகின்றன (முத்து காமிக்ஸ்).
இந்த கதையை படிக்கும் சிலர் என்னடா கதை இப்படி மொக்கையாக இருக்கிறதே என்றும் நினைக்கலாம். ஆனால் நண்பர்களே, கதை வெளிவந்த ஆண்டை சற்று கவனியுங்கள். இருபத்தியாறு வருடங்களுக்கு முன்பு இப்படிப் பட்ட கதைகள் எல்லாம் புதுமையே.
இந்த படங்களை வரைந்த திரு புஜ்ஜாய் அவர்களும் ஒரு சிறந்த ஓவியரே. இவரின் கைவண்ணத்தில் பல அற்புதமான சித்திரங்களை நான் கோகுலம், ரத்னபாலா, அமித் காமிக்ஸ் - சங்கர்லால் கதைகள் என்று பல தளங்களில் ரசித்து இருக்கிறேன். மிகச் சிறந்த ஒரு ஓவியர். அய்யம்பாளயத்தார் இவரையும் சற்று கவனித்து ஒரு பதிவிட்டால் நன்றாக இருக்கும்.
புதிய வாசகர்கள் என்னுடைய பழைய பதிவுகளை தெரிந்து கொள்ள,
எனது முந்தைய பதிவில் வந்த பட விபரங்கள்
1. டெக்ஸ் வில்லர் படம் - லார்ட் ஆப் த டீப்
2. குண்டன் பில்லி - மினி லயன் ஹீரோ படங்கள்
3. டேன்ஜர் டையபாலிக் - லயன் காமிக்ஸ் ஹீரோ படம்
4. மதி இல்லா மந்திரி (அ) இஸ்நோகுட் - திரைப்படம்
5. ரன்-டன்-ப்ளான்:லக்கிலுக்’ன் சக பாத்திரம்
6. சிஸ்கோ கிட் - அருமையான கௌபாய் படம்
7. விஸ்கி - சுஸ்கி மினி லயன் காமிக்ஸ் அறிமுகம்
காமிக்ஸ் சினிமா அல்லாத என்னுடைய பிற பதிவுகள்
1. ரகசிய ஏஜன்ட் ரஜினி காந்த் பூந்தளிர் காமிக்ஸ்
2.லயன் காமிக்ஸ் இதில் வராத ஸ்பைடரின் எழுத்து கதை
3. தினத் தந்தி பேப்பரில் வந்த ஏஜன்ட் காரிகனின் முழு வண்ண கதை
அடுத்த காமிக்ஸ் படம் மூலம் உங்களை சந்திக்கிறேன், விரைவில்.
நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.
கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,
வணக்கம்.
மன்னிக்கவும். பணிமாற்றம் காரணமாக நான் பதிவுகள் இடாமல் இருந்தேன். நேற்று என்னுடைய வலையுலக காமிக்ஸ் குருவாகிய பயங்கரவாதி டாக்டர் செவனின் பிறந்த நாள் என்று கேள்விப் பட்ட உடனே அவருக்கு ஒரு ஸ்பெஷல் பதிவு இட வேண்டும் என்று நினைத்தேன்.
இவருடைய பிறந்த நாள் பற்றி முதலிலேயே தெரிந்து இருந்தால் நிச்சயமாக இதனை விட சிறப்பாக செய்து ஒரு சூப்பர் ஸ்பஷல் பதிவை இட்டு இருக்கலாம், ஆனால் என்ன செய்வது? பதிவுகளை பார்த்து தான் அவருடைய பிறந்த நாள் பற்றி தெரிந்து கொண்டேன். அதனால் அடுத்த வருடம் கண்டிப்பாக நல்ல ஒரு பதிவு நிச்சயம் என்று இப்போதே உறுதி அளிக்க முடியும்.
வழமையாக என்னுடைய பதிவுகளில் காமிக்ஸ் சார்ந்த படங்களை பற்றி எழுதப்பட்டு இருக்கும். ஆனால், காரிகன் சம்பந்தப் பட்ட அந்த பழைய தொலைக் காட்சி தொடரை நான் இன்னமும் டவுன்லோட் செய்ய தேடிக் கொண்டே இருப்பதால் அதனை பற்றி பதிவிட இயலாது.
இதுவரையில் இரண்டு பிலிப் காரிகன் தொலைகாட்சி தொடர்கள் வந்து உள்ளன. ஒன்று 1937ல வந்தது. இரண்டாவது 1945இல வந்தது. அவற்றை பற்றிய சுட்டிகள் கொடுத்து உள்ளேன். தெரிந்து கொள்ளுங்கள்.வேறு என்ன செய்யலாம்? என்று ஆழ்ந்த சிந்தனையில் இருந்த போது தான் இந்த பதிவை பற்றி யோசித்தேன்.
மறுபடியும் பணி மாற்றம் காரணமாக என்னுடைய பொருட்களை எல்லாம் சீரமைத்துக் கொண்டு இருந்த போதுதான் இந்த பதிவு சார்ந்த கதை எனக்கு கிடைத்தது (சென்ற முறை இப்படி செய்யும்போது கிடைத்த காமிக்ஸ் பதிவு). பிறகுதான் யோசித்தேன் - பயங்கரவாதி டாக்டர் செவனுக்கு பிறந்த ஆள் பரிசாக பிலிப் காரிகன் கதையை தவிர வேறென்ன தர இயலும்? அதுவும் இந்த கதையை (சிலர் படித்து இருந்தாலும்) கண்டிப்பாக யாரிடமும் இருக்காது என்று உறுதியாக என்னால் கூற முடியும்.
தொண்ணுத்தி ஒன்றில் தான் முதன் முதலில் தினத்தந்தி (எனக்கு தெரிந்து) ஞாயிற்று கிழமைகளில் காமிக்ஸ் தொடரை வெளியிட ஆரம்பித்தது. அப்போது தான் நான் தினசரிகளை படிக்க ஆரம்பித்தேன். அதனால் இந்த கதையை என்னால் மிகவும் நினைவில் இருத்திக் கொள்ள முடிந்தது. இதற்க்கு பின்னர் மந்திரவாதி மாண்ட்ரேக் கதைகளை (மொத்தம் மூன்று) தினத் தந்தி வெளியிட்டது. அதன் பின்னர் என்ன காரணமோ தெரியவில்லை, காமிக்ஸ் தொடர்களை வெளியிடுவதை நிறுத்தி விட்டார்கள். இப்போதும் இதனை போன்று காமிக்ஸ் கதைகள் எதுவும் வருவது இல்லை. தினத் தந்தியிலும் சரி, மற்ற தினசரிகளிலும் சரி. சரி இந்த கதையை பற்றி பார்ப்போம். பெயரிடப் படாத இந்த கதை சரியாக பத்தொன்பது வருடங்களுக்கு முன்பு (1990) வந்தது. இதனை வண்ணத்தில் பார்த்து ஏமாந்து விடாதீர்கள். இது உண்மையில் ஒரு டெய்லி ஸ்டிரிப் மட்டுமே. வண்ணக் கலவை தினத் தந்தி குழுமத்தினரின் கைங்கர்யம்.
இந்த தொடரை வரைந்தவர் மிகவும் புகழ் பெற்ற ஓவியர் ஆன ஜார்ஜ் இவான்ஸ் ஆகும்.டெர்ரி அண்ட் தி பைரேட்ஸ் தொடர் பற்றி அறிந்தவர்கள் இவரை சுலபத்தில் மறக்க மாட்டார்கள். இவர் அலெக்ஸ் ரேமன்ட் அவர்களுக்கு அடுத்த படியாக காரிகனை வரைய வந்து தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் வரைந்தார். இவர் வரையும் துறையில் இருந்து ஓய்வு பெற்றது காமிக்ஸ் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும் - ஏனென்றால் இவருடன் பிலிப் காரிகனும் ஓய்வு பெற்று விட்டார். ஆம், 1996 முதல் பிலிப் காரிகன் கதைகளுக்கு மங்களம் பாடியாகி விட்டது.
இவர் கடைசியாக ஒரே ஒரு முறை மட்டும் 2001ல ஒரு பிளாஷ் கார்டன் கதையில் (சண்டே ஸ்டிரிப்) ஒரு சர்பிரைஸ் ஆக (Guest Entry) காரிகனை மீண்டும் கொண்டு வந்தார்.அந்த ஒரு நாளைக்கான படங்களை வரைந்ததும் இவரே. அது தான் இவர் கடைசியாக வரைந்த காரிகன் ஸ்டிரிப். அந்தோ பரிதாபம், இந்த ஸ்பெஷல் ஸ்டிரிப் வந்த சில நாட்களிலேயே ஜார்ஜ் இவான்ஸ் இறந்து விட்டார். அந்த ஒரு சண்டே ஸ்டிரிப் கதையை நானும் மாங்கு, மாங்கென்று தேடிக் கொண்டு இருக்கிறேன். அவ்வளவு சுலபத்தில் கிடைக்க மாட்டேன்கிறது. ஆனால் பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்கள் அனுப்பிய மின் அஞ்சல் மூலம் அந்த கதையை பெற்றுக் கொண்டேன். நன்றி தலைவரே. இதோ அதில் இருந்து ஒரு முக்கியமான காட்சி.
மதிப் பிற்குரிய பயங்கரவாதி டாக்டர் செவனுக்கு மறுபடியும் ஒரு முறை உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அடுத்த காமிக்ஸ் படம் மூலம் உங்களை சந்திக்கிறேன், முடிந்தால் விரைவில். நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.
பதிவு Related சுட்டிகள்:
முத்து விசிறியின் காரிகன் குறித்த முத்தான பதிவு
சீக்ரெட் எஜன்ட் பிலிப் காரிகன் பற்றிய விக்கிபீடியா குறிப்பு
சீக்ரெட் எஜன்ட் பிலிப் காரிகன் 1937 தொலைக்காட்சி தொடர் பற்றிய விக்கிபீடியா குறிப்பு
சீக்ரெட் எஜன்ட் பிலிப் காரிகன் 1945 தொலைக்காட்சி தொடர் பற்றிய விக்கிபீடியா குறிப்பு
சீக்ரெட் எஜன்ட் பிலிப் காரிகன் ஓவியர் ஜார்ஜ் இவான்ஸ் பற்றிய விக்கிபீடியா குறிப்பு
புதிய வாசகர்கள் என்னுடைய பழைய பதிவுகளை தெரிந்து கொள்ள,
எனது முந்தைய பதிவில் வந்த பட விபரங்கள்
1. டெக்ஸ் வில்லர் படம் - லார்ட் ஆப் த டீப்
2. குண்டன் பில்லி - மினி லயன் ஹீரோ படங்கள்
3. டேன்ஜர் டையபாலிக் - லயன் காமிக்ஸ் ஹீரோ படம்
4. மதி இல்லா மந்திரி (அ) இஸ்நோகுட் - திரைப்படம்
5. ரன்-டன்-ப்ளான்:லக்கிலுக்’ன் சக பாத்திரம்
6. சிஸ்கோ கிட் - அருமையான கௌபாய் படம்