Saturday, July 4, 2009

ஜூலை நான்கு சிறப்பு பதிவு - கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ் குமாரின் காமிக்ஸ் கதை

ஜூலை மாதம் நான்காம் தேதி என்ன ஸ்பெஷல்? என்று தானே கேட்கிறீர்கள்.

அந்த விடையை யூகிக்க உங்களுக்கு நான் பதினெட்டு மணி நேர அவகாசம் தருகிறேன். இந்த பதிவும் ஜூலை நான்காம் தேதியின் விவரமும் நாளை மாலை ஆறு மணிக்கு.

சரியாக சொல்பவர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு உண்டு.
Type in your answers NOW........

14 comments:

 1. நண்பரே, தலையைப் பிய்க்க வைத்து விட்டீர்களே,
  அமெரிக்க சுதந்திர தினம்,உங்கள் பிறந்ததினம், அல்லது உங்கள் அன்புள்ளத்தின் பிறந்ததினம், நண்பர் ஜோஸின் நான்காவது விவாகரத்து நினைவு நாள், எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் பிறந்ததினம், மிஸ். பூங்காவனம்ஸ் புஷ்பவதியாகிய நாள், ஒலக காமிக்ஸ் ரசிகர் இயக்கும் புதுப்படத்தின் பூஜை இப்படி நிறைய எழுதினாலும் என்ன விடையென்று தெரியவில்லை. ராஜேஷ்குமாரை விட சஸ்பன்ஸ் வைத்து விட்டீர்களே. நீங்கள் கில்லாடி, நண்பரே.

  ReplyDelete
 2. ஷங்கர் அவர்களே,

  //ஜோஸின் நான்காவது விவாகரத்து நினைவு நாள்//

  இப்படியும் நடந்ததா என்ன? ஆச்சரியமாக இருக்கிறதே?

  டுரூலி அமேஜிங்.

  ReplyDelete
 3. மிஸ்டர் பெயர் சொல்ல விரும்பாத பரந்தாமன் அவர்களே, இது மட்டுமல்ல இன்னமும் அதிரடியான விடயங்களை சந்திக்க தயாராக இருங்கள்.

  காமிக்ஸ்பிரியரே 18 மணி நேரம் எல்லாம் ரொம்ப ஓவர், தயவு செய்து விடையைக் கூறுங்கள், மெகான் ஃபாக்ஸின் டூ பீஸ் போட்டோ அனுப்பி வைக்கிறேன்.

  பி.கு. டூ பீஸில் ஒரு பீஸ் மிஸ்ஸு என்பது உபரித்தகவல்.

  ReplyDelete
 4. காமிக்ஸ்பிரியரே, கதையின் தலைப்பை பாருங்கள் நிலா வெளிச்சத்தில் ஒர் நியாயமான கொலை- கதைக்கு தலைப்பு வைப்பதில் கூட ராஜேஷ்குமார் ஒர் சக்கரவர்த்தி தான்.

  ReplyDelete
 5. மொக்கை மாமாJuly 4, 2009 at 9:00 AM

  என்னிடம் கூட இது போல ஒரு கதை உள்ளது.

  கதையின் தலைப்பு - அமாவாசை இரவில் அநியாயமாய் ஒரு கொலை.

  எப்படி?

  மொக்கை மாமா

  ReplyDelete
 6. காமிக்ஸ் பிரியரே,

  என்ன ஒரு அற்புதம்? இந்த புத்தகம் என்னிடமும் உள்ளது.

  உங்கள் மேல் எனக்கு சற்று கோபம் தான் வருகிறது. நீங்கள் இப்படி எதையாவது தேடி பிடித்து பதிவு போட்டு விடுகிறீர்கள். அந்த பதிவுகளை பார்த்து விட்டு நானும் என்னுடைய காமிக்ஸ் கலெக்ஷனை எல்லாம் தேடுகிறேன்.

  எனக்கு இன்னமும் தினத்தந்தி பேப்பரில் வந்த மாண்டிரெக் கதை கிடைக்கவில்லை.

  அதைப் போலவே இந்த பதிவை பார்த்ததில் இருந்து காலையில் இரண்டு மணி நேரம் என்னுடைய புத்தகங்களை எல்லாம் கலைத்து போட்டு தேட வைத்து விட்டீர்கள். ஆனாலும் கிடைத்து விட்டது. இதனை தேடும்போது இன்ன பிற அரிய புத்தகங்களும் கிடைத்தன (முல்லை தங்கராசனின் சிறுவர் இதழ் ஒன்று -1976ல் ஆரம்பிக்கப் பட்டது - Cover to cover)

  கலக்கலான ஆரம்பம். வாழ்த்துக்கள் நண்பரே. இதைப் போல இன்னமும் வேறு ஏதாவது அரிய கதைகள் இருந்தால் கூறுங்கள்.

  ReplyDelete
 7. பை தி வே, ராஜேஷ் குமார் எனக்கும் பிடித்த ஒரு எழுத்தாளர் தான். நான் ஆரம்பக் காலத்தில் நாவல் படிக்க ஆரம்பித்ததே அவருடைய கதைகளால் தான்.

  ஒரே ஒரு முறை அவரை பார்த்தது இருக்கிறேன். ஆனால் பேசியது இல்லை.

  அவருடைய அஞ்சாதே அஞ்சு முன்பு தொலைக்கட்சியில் (DD-1 OR dd-2) சீரியலாக வந்தது நினைவிருக்கிறதா? அந்த சீரியல் இயக்குனர் என்னுடைய நெடுநாள் நண்பர் என்பதால் அவரிடம் மிகவும் பாடுபட்டு அந்த தொடரை முழுமையாக சீ.டி.ல வைத்து இருக்கிறேன் என்றால் பாருங்கள், நான் எப்படி பட்ட ரசிகன் என்று.

  ராஜேஷ்குமாரின் ஆரம்பகால நாவல்கள் எல்லாமே என்ன்டிம் இருக்கின்றன. தொண்ணுத்தி ஆறு வரை. பிறகு நாவல் படிப்பதை நிறுத்தி விட்டேன்.

  சமீபத்தில் கிரைம் நாவல் ஆசிரியர் மற்றும் நெடுநாள் நண்பர் திரு ஜீ.அசோகன் சாரை சந்தித்தேன். அப்போது கூட நாவல்களையும் ராஜேஷ்குமாரை பற்றியும் நெடுநேரம் பேசிக் கொண்டு இருந்தோம்.

  ReplyDelete
 8. ஷங்கர் அவர்களே,

  // ராஜேஷ்குமாரை விட சஸ்பன்ஸ் வைத்து விட்டீர்களே. நீங்கள் கில்லாடி, நண்பரே//

  எனக்கு தெரிந்த வகையில் ராஜேஷ் குமார் அவர்களைப் போல சஸ்பன்ஸ் உடன் எழுதுவது கடினம். அப்படி இருக்கையில் அவரை மிஞ்சுவதாவது? கனவிலும் நடக்காது.

  நீங்களும் ராஜேஷ் குமாரை படித்து இருப்பது மனதுக்கு ஒரு சந்தோஷத்தை தருகிறது.

  காமிக்ஸ் பிரியன்.
  இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
  காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

  ReplyDelete
 9. மிஸ்டர் பெயர் சொல்ல விரும்பாத பரந்தாமன் அவர்களே,

  பதிவுக்கு கமெண்ட் போடாமல் கமெண்ட்க்கு கமெண்ட் போடும் உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.

  காமிக்ஸ் பிரியன்.
  இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
  காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

  ReplyDelete
 10. ஷங்கர் அவர்களே,

  //காமிக்ஸ்பிரியரே 18 மணி நேரம் எல்லாம் ரொம்ப ஓவர், தயவு செய்து விடையைக் கூறுங்கள், மெகான் ஃபாக்ஸின் டூ பீஸ் போட்டோ அனுப்பி வைக்கிறேன்.

  பி.கு. டூ பீஸில் ஒரு பீஸ் மிஸ்ஸு என்பது உபரித்தகவல்.//

  இப்படியெல்லாம் நீங்கள் கூறியதால் உங்களுக்கு மட்டும் ஒரு மின் அஞ்சல் அனுப்பி உள்ளேன். பாருங்கள்.

  அந்த போடோவை மறக்காமல் அனுப்பவும். ஹீ ஹீ ஹீ.

  ReplyDelete
 11. விஸ்வா,

  //உங்கள் மேல் எனக்கு சற்று கோபம் தான் வருகிறது. நீங்கள் இப்படி எதையாவது தேடி பிடித்து பதிவு போட்டு விடுகிறீர்கள். அந்த பதிவுகளை பார்த்து விட்டு நானும் என்னுடைய காமிக்ஸ் கலெக்ஷனை எல்லாம் தேடுகிறேன்.

  எனக்கு இன்னமும் தினத்தந்தி பேப்பரில் வந்த மாண்டிரெக் கதை கிடைக்கவில்லை.//

  எனக்கும் மந்திரவாதி மாண்டிரெக் கிடைக்க வில்லை. என்ன செய்ய?

  //அதைப் போலவே இந்த பதிவை பார்த்ததில் இருந்து காலையில் இரண்டு மணி நேரம் என்னுடைய புத்தகங்களை எல்லாம் கலைத்து போட்டு தேட வைத்து விட்டீர்கள். ஆனாலும் கிடைத்து விட்டது. இதனை தேடும்போது இன்ன பிற அரிய புத்தகங்களும் கிடைத்தன (முல்லை தங்கராசனின் சிறுவர் இதழ் ஒன்று -1976ல் ஆரம்பிக்கப் பட்டது - Cover to cover)// பாருங்கள், இப்போது அந்த கோபம் எல்லாம் ஓடிப் போய் இருக்குமே?

  சீரியல் இயக்குனர், ஜி.அசோகன் என்று உங்கள் நட்பு வட்டாரம் நீண்டுக் கொண்டே போகிறதே?

  ReplyDelete
 12. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

  இந்த நன்னாளில் உங்களுக்கு எல்லா வளமும் தருமாறு எல்லாம் வல்ல அந்த ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

  வாழ்க வளமுடன்.

  ஒலக காமிக்ஸ் ரசிகன்,
  100% உண்மையான பதிவுகள்.
  Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

  ReplyDelete
 13. ஷங்கர்,

  //ஒலக காமிக்ஸ் ரசிகர் இயக்கும் புதுப்படத்தின் பூஜை//

  உங்களுக்கு தகவல் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஒரு வேலை விஸ்வாஜி கூறினாரோ?

  ஆனால் படத்தின் பூஜை இப்போது இல்லை செப்டம்பர் மாதக் கடைசியில் தான். ஆனால் பட வேலைகளும், நடிக-நடிகையர் தேடலும் ஆரம்பித்து விட்டது.

  என்னுடைய பணி நிலைமையையும், சுமையையும் பொறுத்து தான் இயக்கம் இருக்கும்,இல்லையேல் வேறு யாராவது ஒருவர் இயக்கி நான் தயாரிப்பதோடு முடியும். முழு நீள காமெடி என்பதை சொல்லவும் வேண்டுமோ?

  ஒலக காமிக்ஸ் ரசிகன்,
  100% உண்மையான பதிவுகள்.
  Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

  ReplyDelete
 14. நண்பர் காமிக்ஸ்பிரியரே, பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், நலமும், செல்வங்களும் பெற்று அன்பில் வாழ வாழ்த்துகிறேன். சிட்டுக்கள் உங்கள் வீட்டின் ஜன்னல் கதவுகளில் வீற்றிருக்க வேண்டுமெனவும் வேண்டுகிறேன்.

  ஒலக காமிக்ஸ் ரசிகரே, நீங்கள் எனக்காக ஒர் பாத்திரம் ரெடியாக இருக்கிறது என்று கூறியதிலிருந்து எனக்கு வரும் கனவுகளை இங்கே எழுத முடியாது. புதுப் பட பூஜை என்பதனை எழுதும் போது மனதில் எதுவும் இல்லை, வேடிக்கையாகவே எழுதினேன். ஆனால் அது உண்மை என அறியும் போது, வாழ்த்துகிறேன், பாராட்டுக்கள்,படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  -உங்கள் எதிர்காலம் பற்றி அறிய வேண்டுமா, நாடுங்கள் ஜோஸ்வா முனிவர் அருள் பெற்ற ஜோதிடர் புஷ்பா புண்ணியகோடி-

  ReplyDelete

உங்கள் கருத்து எப்படி இருந்தாலும் கண்டிப்பாக பகிர்ந்துகொண்டே தீரவேண்டும், கருத்தே இல்லை என்றாலும் கூட அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related Posts Widget for Blogs by LinkWithin