Sunday, February 15, 2009

ரன்-டன்-ப்ளான்:லக்கிலுக் கதையில் அறிமுகமாகிய ஒரு அற்புத கதாபாத்திரம்

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,

வணக்கம்.

லக்கிலுக் படத்தினை உங்களுக்கு அறிமுகம் செய்யலாம் என்று நினைக்கும்போது நண்பர் லிமட் அவர்கள் அதனை அவருடைய வலைப்பூவில் வழங்கி விட்டதால் வேறொரு பதிவை இட வேண்டிய கட்டாயம் எனக்கு. இது அவருடைய தவறும் அல்ல. இவ்வாறு கூறுவது என்னுடைய தவறு. இனிமேல் இப்படி கூறாமல் இருக்கிறேன். ஆனால் இங்கே இப்படி கூற காரணம் என்னவெனில் இந்த பதிவில் முக்கியமான படம் எதுவும் இல்லை. மாறாக தொலைக்காட்சி தொடர் ஒன்றுதான் உள்ளது. அதனால் தான் இந்த பீடிகை. தடங்கலுக்கு மன்னிக்கவும்.

நான் முதன்முதலில் படித்த லக்கிலுக் காமிக்ஸ் புரட்சிதீ ஆகும். அருமையான இந்த கதையை படித்தவுடன் எனக்கு லக்கி லுக் மீது ஒரு காதலே வந்து விட்டது. பின்னர் லக்கி லூகின் மற்ற கதைகளை படிக்கும்போது ஒரு விஷயம் எனக்கு நன்கு புரிந்தது.


லக்கி லுக் கதைகளின் வெற்றிக்கு கதை அமைப்பும் துணை பாத்திரங்களும் எவ்வளவு முக்கியம் என்பது அவரை தவிர மற்ற பாத்திரங்களின் வெற்றியை கொண்டே கணிக்கலாம். உதாரணமாக அவரது குதிரை ஜாலி ஜம்பர், ஜோ டால்டன், ஆவரேல் டால்டன், காது கேட்காத கிழவர், ஜெயிலர், மா டால்டன். என்று பல துணை பாத்திரங்களும் சிறப்பாக இருப்பது புரியும்.


தீவிர வாசகர்கள் (கனவுகளின் காதலன்) "நண்பரே, ரின்-டின்-கேன் எங்கே?". என்று கேட்பது எனக்கு நன்றாக கேட்கிறது. நமக்கெல்லாம் ரின்-டின்-கேன் என்ற பெயரில் அறிமுகம் ஆன ரன்-டன்-ப்ளான் தான் இந்த பதிவின் நாயகன் (காமிக்ஸ் டாக்டர் மன்னிக்கவும் - இவர் அந்த நாயகன் ஜே.கே.ரித்தீஷ் இல்லை).

தன்னுடைய நிழலை விட வேகமாக சுடும் வீரன் லக்கி லுக் என்பது நமக்கு தெரியும். அவருக்கு இணையாக செயல் ஆற்றும் திறன் கொண்டது ஜாலி ஜம்பர் என்பதும் நமக்கு தெரியும். ஆனால், ரன்-டன்-ப்ளான்? இதற்க்கு ஏதாவது அடைமொழி உள்ளதா? பன்ச் வசனம் உள்ளதா?
இருக்கிறது, நண்பர்களே இருக்கிறது. "தன்னுடைய நிழலை விடவும் முட்டாள்தனமான ஒரு நாய்" என்பதே இதற்குரிய அடைமொழி. ரன்-டன்-ப்ளான் முதன் முதலில் அறிமுகம் ஆனது பிப்ரவரி நாலாம் தேதி 1960'ம ஆண்டு. இந்த பதிவை இரண்டு வாரங்களுக்கு முன்னர் இட்டு இருந்தால் பொன்விழா ஆண்டு துவக்கம் என்று கூறி தூள் கிளப்பி இருக்கலாம். என்ன செய்வது? தாமதம் என்ற கொடிய வியாதிக்கு நான் ஆளாகி பல மாமாங்கம் ஆகி விட்டதே?

ரன்-டன்-ப்ளான் ஆறுமுகம் ஆனது ஸ்பிரோ என்ற பிரபல பிரெஞ்சு காமிக்ஸ் இதழில் தான். இவர் தோன்றிய கதை Sur la piste des Dalton ஆகும். இது வெளிவந்த நாள் 04-02-1960 ஆகும்.லக்கி லூக்கை உருவாகிய கோச்சினி அவர்களின் மரணதிர்ற்கு சரியாக பத்து வருடங்கள் கழித்து திரு மொரிஸ் அவர்கள் ரன்-டன்-ப்ளான் உடைய தனி கதைகளை வெளியிட முடிவு செய்தார். ரன்-டன்-ப்ளான்'ன் குணாம்சங்கள் என்ன என்று இப்போது பார்ப்போம்:

திடீரென்று பாய்வது (வழமையாக ஜோ டால்டன் அல்லது லக்கிலுக் மீது)

அவ்வாறு பாயும்போது எல்லாம் தவறி கிழே விழிவது

ஆபத்து நேரங்களில் நீரில் குதிப்பது (பின்னர் லக்கிலுக் அவர்களால் முதல் உதவி பெறுவது - ஆம், உலகிலேயே நீந்த தெரியாத ஒரே நாய் இது தான்).

மிகவும் சோம்பேறியாக இருப்பது (கதையின் முதல் கட்டத்தில் யாரவது காலை மிதித்தால் பத்தாவது கட்டத்தில் கத்துவது).

அற்புதமான காவல் நாயாக இருப்பது (சிறையில் இருந்து டால்டன்'கள் தப்பித்தால் பல நாட்கள் கழித்தே தெரிந்து கொள்ளும் அளவிற்கு).

மா டால்டன் அவர்களின் சொல்லுக்கு மட்டும் கீழ் படிவது


மா டால்டன் அவர்களின் சொல்லுக்கு மட்டும் கீழ் படிவது

எதையுமே தவறாக புரிந்து கொள்வது (ஜோ டால்டன் இதனை விளக்க செய்யும் முயற்சியை அன்பின் அடையாளமாக எடுத்து கொள்வது)

ஜாலி ஜம்பர்'ஆல் வியப்புக்கு ஆளாவது (இப்படியும் ஜன்மங்கள் இருக்குமா என்று).


இதுவரையில் மொத்தம் இருபத்தி நான்கு ரன்-டன்-ப்ளான் கதைகள் வெளிவந்தது உள்ளன (கணக்கு சரிதானா கனவுகளின் காதலனே?). அவற்றின் அட்டை படங்களை இங்கு வரிசையாக வழங்கி உள்ளேன். இந்த பதிவை படித்து முடித்து விட்டு பின்னர் ஆற, அமர ஒரு முறை ஒவ்வொரு அட்டை படத்தையும் கூர்ந்து பாருங்கள். ஒவ்வொரு அட்டையும் ஒரு கதை சொல்லும்.

இப்போது இந்த பதவின் சாரம்சத்துக்கு வருவோம். மூன்று வருடங்களுக்கு முன் 2006'இல் பிரெஞ்சு அனிமேஷன் கம்பெனியாகிய ஷிலம் மூன்று குறும்படங்களை ரன்-டன்-ப்ளான்'ஐ கதை நாயகனாக கொண்டு வெளியிட்டது. இதோ அதனை பற்றிய விவரங்கள் இந்த அட்டை படத்துக்கு கீழே:இப்போது முக்கயுயமான ஒரு விடயத்திற்கு வருவோம்: சமீபத்தில் எங்கேயோ நான் (காமிக்ஸ் டாக்டர் / கிங் விஸ்வா / கனவுகளின் காதலன் / செழி / ரபிஃ) லயன் காமிக்ஸ் இதழில் லக்கி லுக் கதைகளின் உரிமை முடிந்து விட்டது என்று படித்தேன். அது உண்மையானால் ஆசிரியர் விஜயன் அவர்கள் இந்த தொடரை வாங்கி வெளியிடலாமே?

இதில் மற்றுமொரு நல்ல விடயம் உள்ளது. இது ஒரு தனி தொடர் ஆகும். அதனால் இது லக்கி லுக் காமிக்ஸ் என்ற பதிப்பகத்தில் வெளியிடப் பட்டது. அதனால் செலவும் குறைவாகவே இருக்கும்.

மீண்டும் விரைவில் அடுத்த காமிக்ஸ் படம் மூலம் உங்களை சந்திக்கிறேன்.

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.

16 comments:

 1. என்னுடைய வலைபூ பார்க்க மோசமாக உள்ளது. நண்பர்கள் இந்த பூவை சிறப்பாக மாற்றுவது எப்படி என்று அறிவுரை கூறினால் நன்றாக இருக்கும்.

  குறிப்பாக என்னுடைய எழுத்துக்கள் தோன்றும் தளம் சிறியதாக உள்ளது. ஆனால் நண்பர்கள் வலைப் பூவின் தளம் அகலமாக உள்ளது.

  உதவவும்.

  ReplyDelete
 2. அடடே,

  ரின் டின் ப்ளான் பின்னால் இவ்வளவு சங்கதிகள் உள்ளனவா? அதுவும் இந்த குறும்படங்களை பற்றிய தகவலுக்கு நன்றி.

  நீங்கள் ஒரு வ்ய்ட் காலம் ப்ளாக் அமைப்பிருக்கு மாறி விடுங்கள்.

  என்னை இ-மெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 3. அன்பரே,

  ரண்டன்பிளான் பற்றி அருமையான பதிவு. அதிலும் அதுபற்றி வெளியாகியிருக்ககூடிய அனைத்து ஆல்பங்கள் மற்றும் 2 மினி பாக்கெட் காமிக்ஸ் புத்தக அட்டைப்படங்களை இட்டு ஒர் திருவிழாவே நடாத்தி இருக்கிறீர்கள்.

  அதிலும் ஆவ்ரெல்லும் ரண்டன்பிளானும் செஸ்
  விளையாடும் அட்டைப்படமும், ரண்டன்பிளான் ஒர் செம்மறி ஆட்டின் மேல் காதல் கொள்ளும் அட்டைப்படமும் அருமை.

  உண்மையிலேயே வலைப்பூ பற்றிய டெக்னிகல் சமாச்சாரங்களில் நான் இன்னும் ஓர் கத்துக்குட்டி.
  எழுத்துக்கள் தெரியும் பகுதி அகன்றதாக உள்ள ஒர் வலைப்பூ மாதிரிக்கு விஸ்வா கூறியிருப்பதை போல் மாறுவதே எனக்குத்தெரிந்து ஓர் வழி. ஆரம்பத்தில் நானும் உங்களுடையதைப் போன்றதோர் வலைப்பூ மாதிரியை உபயோகித்தது உங்களிற்கு நினைவில் இருக்கலாம்.

  உற்சாகத்துடன் தொடருங்கள்.

  ReplyDelete
 4. சொல்ல மறந்தது லக்கி காமிக்ஸ் டார்கோட் குழுவின் ஒர் உப பிரிவாகும்.

  உற்சாகத்துடன் தொடருங்கள்.

  ReplyDelete
 5. அருமையான பதிவு.

  இந்த கதை நாயகன் ரன் டன் ப்ளான் நிலையும் என்னுடைய நிலையும் ஒன்று தான்.

  பூங்காவனம்,
  காத்தவ்'ன் மனசாட்சி.

  ReplyDelete
 6. பூங்காவனம் அவர்களே,

  உங்களின் வலைப் பதிவை பார்த்து நானும் அதைப் போலவே மாற்றி விட்டேன்.

  நன்றி.

  ReplyDelete
 7. எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு கதா பாத்திரத்தை பற்றி பதிவு இட்டதிற்கு மிகவும் நன்றி. ரன் -டன்-ப்ளான் உடைய solo கதைகள் முழு நீள கதைகளா? அல்லது சிறு கதைகளா? எப்பிடி இருந்தாலும் he is welcome to lion comics. Vijayan sir, pls consider

  - SIV

  ReplyDelete
 8. அருமையான பதிவு.

  நன்றி.

  ReplyDelete
 9. மிக சிறப்பான ஒரு பதிவு. லக்கி லுக் கதைகளில் வரும் ரன் டன் பிளான் ஐ தாங்கி ஒரு காமிக்ஸ் சிதிரகதை தொடர் வெளி வருவது பாராட்ட பட வேண்டிய விசயமே. ஆனால் இவற்றை நமது லயன் காமிக்ஸில் காண்பது அரிது. லக்கி லூகின் புத்தம் புதிய சாகசங்களுக்கே இன்னும் திரு.விஜயன் உரிமை கோரி இருக்காரா என்று தெரியவில்லை.

  கண் கவர் அட்டை படங்களின் தரிசனம் தந்ததற்கு நன்றிகள். கூடவே, புதிய அகல பதிவேடு தோற்றத்துக்கு மாறியதற்கு வாழ்த்துக்கள். நான் முதலில் கூறி இருந்தபடி, உங்கள் வலைப்பூவில் இருந்த குறை அது ஒன்று தான்.

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல் & ரா-கா

  ReplyDelete
 10. super cover scans

  ReplyDelete
 11. திரு காமிக்ஸ் பிரியன் அவர்களே,

  இப்போது உங்கள் வலை ரோஜா நன்றாக உள்ளது. தொடர்ந்து இதைப் போன்ற அருமையான பதிவுகளை அளிப்பீர்கள் என்றே நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete
 12. ரன் டன் ப்ளான் பற்றிய ஒரு அருமையான பதிவு. அதுவும் அதனுடைய குணாதிசயங்களை எல்லாம் மீண்டும் படிக்கும்போது விழுந்து விழுந்து சிரித்தேன்.

  அதனுடைய நியாபகமறதி பற்றியும், பூனையை கண்டால் அமைதியாக இருப்பதை பற்றியும் கூட எழுதி இருக்கலாம்.

  இந்த அட்டை படங்கள் ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம். அனைத்தையும் ரசித்து ரசித்து பார்த்து கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு அட்டை படமும் ஒவ்வொரு கதையை சொல்கிறது.

  செழி.

  ReplyDelete
 13. காமிக்ஸ் பிரியரே,

  இப்போதுதான் உங்கள் கருத்தை பார்த்தேன்

  //(லக்கிலுக் படத்தினை உங்களுக்கு அறிமுகம் செய்யலாம் என்று நினைக்கும்போது நண்பர் லிமட் அவர்கள் அதனை அவருடைய வலைப்பூவில் வழங்கி விட்டதால் வேறொரு பதிவை இட வேண்டிய கட்டாயம் எனக்கு)// அதனால் என்ன வந்தது?

  ஒருவர் எழுதும் விஷயம் பற்றி வேறு ஒருவர் எழுதக் கூடாது என்று சட்டம் ஏதாவது உள்ளதா என்ன? லிமட் அவர்கள் விமர்சனம் எதுவும் செய்வது இல்லை. ஆனால் நீங்கள் ஒரு படத்தை எடுத்தால் அதனை பற்றிய அனைத்து விஷயங்களையும் எமக்கு தெள்ளத் தெளிவாக வழங்குகிறீர்கள். எனவே, யார் என்ன பதிவு இட்டாலும் அதனை பற்றி கவலைப் படாமல் நீங்கள் உங்கள் பணியை தொடருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  எனக்கு தெரிந்த வகையில் நீங்கள் இவ்வாறு செய்வது இரண்டாவது முறை (முதலில் விஸ்வாஜி அவர்கள் இரத்தப் படலம் படம் பற்றி எழுதியதால் நீங்கள் எழுத வில்லை).

  நீங்கள் இதனை பற்றி எல்லாம் யோசிக்க வேண்டாம். //(இது அவருடைய தவறும் அல்ல. இவ்வாறு கூறுவது என்னுடைய தவறு)// இப்படி எல்லாம் கூறுவதே பெரிய தவறு ஆகும். நீங்கள் உங்கள் பணியை தொடருங்கள்.

  நான் கடவுள் விமர்சனத்தை குமுதம் புத்தகம் எழுதி விட்டதால் ஆனந்த விகடன் எழுதாமல் விட்டு விடுமா என்ன? யார் எவ்வாறு எழுதுகிறார்கள், அவர்கள் பாணி என்ன, விமர்சனம் எப்படி உள்ளது என்பதை மக்கள் அறிய இது மற்றுமொரு சந்தர்ப்பம்.

  எனவே, நீங்கள் அவர் எழுதி விட்டார், இவர் சொல்லி விட்டார் என்று எல்லாம் யோசிக்காமல் உங்கள் பாணியில் அற்புதமான இந்த பணியை தொடருங்கள்.

  செழி.

  ReplyDelete
 14. காமிக்ஸ் பிரியரே,

  நீங்கள் இரத்தப் படலம் தொலைக்காட்சி தொடரை பதிவாக இட விரும்பினால் தயவு செய்து செய்யுங்கள். எனக்கு இதில் ஆட்சேபனை எதுவும் இல்லை. மேலும், செழி கூறியது போல இங்கே காமிக்ஸ் உலகில் பதிவுகளை யாரும் குத்தகை எடுத்துக் கொள்ளவில்லை. எனி உங்களுக்கு பிடித்த காமிக்ஸ் பற்றி நீங்கள் பதிவு இட்டு எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துங்கள்.

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete

உங்கள் கருத்து எப்படி இருந்தாலும் கண்டிப்பாக பகிர்ந்துகொண்டே தீரவேண்டும், கருத்தே இல்லை என்றாலும் கூட அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related Posts Widget for Blogs by LinkWithin