Saturday, January 3, 2009

டேன்ஜர் டையபாலிக் - லயன் காமிக்ஸ் அறிமுகம் செய்து வைத்த அற்புத ஹீரோ

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,

வணக்கம்.

அனைவருக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த பதிவில் நான் கூறப் போகும் புத்தகம் சற்று வித்தியாசமான ஒன்று ஆகும். சில கதாநாயகர்கள் பல கதைகளில் வந்தாலும் நம்முடைய மனதை கவர மாட்டர்கள் (உதாரணம் - பெருச்சாளி பட்டாளம்). ஆனால் சில கதை நாயகர்கள் ஒரே ஒரு கதையில் வந்தாலும் அவர்களின் தாக்கம் நம்முடைய மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும். அந்த வரிசையில் எனக்கு பல நாட்களாக ஒரே ஒரு கதை நாயகனை பற்றியே எண்ணம்: அவர் தான் டேன்ஜர் டையபாலிக். இந்த கதை லயன் காமிக்ஸ்'ன் நாற்பத்தி இரண்டாவது இதழில் வந்ததாக நினைவு. என்னிடம் உள்ள புத்தகம் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளதால் புத்தக எண்ணை சரி பார்க்க இயலவில்லை.


இத்தாலியின் மிலன் நகரை சேர்ந்த கியுஸ்ஸாநி சகோதரிகள் (ஏஞ்சலா மற்றும் லுசியானா கியுஸ்ஸாநி) தான் இந்த டேன்ஜர் டையபாலிக் என்ற கதைநாயகனை உருவாக்கியவர்கள். அறுபதுகளில் (1961-62) இத்தாலியில் மிகவும் புகழ் பெற்ற புமேட்டோ நீரோ - Fumetto Nero (இருண்ட சித்திரக் கதைகள் - Black Comics) என்ற வரிசையில் டேன்ஜர் டையபாலிக் தான் முதன்மையானவர். இதன் பின்னர் பல எதிர் நாயகர்கள் தோன்றினர்.

நீங்கள் கூர்ந்து கவனித்தால், குற்ற அரசன் ஸ்பய்டர் (Spider) கூட டேன்ஜர் டையபாலிக் போலவே தோன்றுவார்.ஆனால், இந்த கதையும் வேறு ஒரு கதையில் இருந்து தழுவப்பட்டது தான். ஆம், 1912'ல் பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளியான பாண்டோமாஸ் (Fantomas) என்ற படத்தின் நாயகனின் தழுவலே டேன்ஜர் டையபாலிக் ஆகும். இந்த படத்தின் இயக்குனர் லூயிஸ் பியுலாடே ஆவார். இதை பற்றி ஏன் முத்து விசிறி தனியே ஒரு பதிவு இடக்கூடாது? இதோ அந்த புத்தகத்தின் முதல் இதழின் அட்டைப் படம். இந்த புத்தகம் மிகவும் அரிய புத்தகம் ஆகும் (எப்படி நம்முடைய முத்து காமிக்ஸ்'இன் முதல் இதழ் ஒரு கிடைத்தற்கரிய புத்தகமோ அதைப்போல).

Diabolik Comics Cover - First Issue
இதோ உங்கள் பார்வைக்கு பல டேன்ஜர் டையபாலிக் இதழின் அட்டைப் படங்கள்:

Diabolik Comics Cover 1

Diabolik Comics Daily Calendar Cover 2

Diabolik Comics Cover 3

Diabolik Comics Cover 4
Diabolik Comics Cover 5

Diabolik Comics Cover 6

Diabolik Comics Cover 7

Diabolik Comics Cover 8
என்னுடைய புத்தகத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாலும், மேலும் அந்த பக்கங்களை ஸ்கான் செய்து வெளி இட்டால் லயன் காமிக்ஸ் தரப்பில் இருந்து ஆட்சேபனை வெளிவரலாம் என்பதாலும் நான் டேன்ஜர் டையபாலிக் கதையின் ஸ்கான்'களை இடவில்லை. மன்னிக்கவும்.
இந்த டேன்ஜர் டையபாலிக் கதையின் இத்தாலிய புத்தகத்தின் சில பக்கங்கள் உங்களின் மேம்பட்ட பார்வைக்கு:

Diabolik Comics Inner Page 1
Diabolik Comics Inner Page 2

Diabolik Comics Inner Page 3
Diabolik Comics Inner Page 4

Diabolik Comics Inner Page 5

Diabolik Comics Inner Page 6
வழமை போல இந்த பதிவும் காமிக்ஸ் சம்பத்தப் பட்ட ஒரு படத்தை பற்றியது தான். ஆம், அறுபதுகளில் வெளிவந்த மிகப் புகழ் பெற்ற படம் டேன்ஜர் டையபாலிக். இந்த படத்தை திரு மரியோ பாவா அவர்கள் 1968'இல் இயக்கினர். இதோ, அந்தப் படத்தின் விளம்பர போஸ்டர். கண்டு களியுங்கள் நண்பர்களே.
Diabolik Movie Teaser Poster
படத்தின் மற்றும் பலவிதமான போஸ்டர்கள். இவை எல்லாம் சற்று கடினமான தேடலிலும் நண்பர் ஒருவரின் உதவியாலும் எனக்கு கிடைத்தவை.
Diabolik Movie Poster 1

Diabolik Movie Poster 2

Diabolik Movie Poster 3
இந்த படம் டீவீடி'யாகவும் வெளிவந்தது. இதோ அவற்றின் விபரங்கள்:

Diabolik DVD Cover 1

Diabolik DVD Cover 2
படத்தின் ஏனைய விபரங்கள்:
Directed by : Mario Bava
Produced by : Dino De LaurentiisBruno Todin
Written by : Mario BavaBrian DegasTudor GatesDino Maiuri
Starring : John Phillip LawMarisa MellMichel PiccoliTerry-Thomas
Music by : Ennio Morricone
Cinematography : Antonio RinaldiMario Bava (uncredited)
Editing by : Romana Fortini
Distributed by : Paramount Pictures
Release date(s) : January 24, 1968
Running time : 100 min
Country : Italy/United States
Language : ItalianEnglish
படத்தின் ஆரம்ப காட்சிகளில் டேன்ஜர் டையபாலிக் தோன்றும் கட்டம் எனக்கு பிடித்தமான ஒன்றாகும். இதோ, அவருடைய பல கருப்பு உடைகளில் ஒன்று.
டேன்ஜர் டையபாலிக் ஸ்பீட் போட்'ல் தப்பிக்கும் காட்சி மயிர் கூச்செறிய வைக்கும்.

டேன்ஜர் டையபாலிக் பதுங்கி இருக்கும் இடம் இது தான். செயற்கை ஆக உருவாக்கப்பட்ட புல் தரையை பாருங்கள். என்ன ஒரு புத்திசாலித்தனம்?
அந்த பதுங்கு தளத்தின் உள்ளே இந்த விஞ்சான விந்தையை காணுங்கள். கதவுகளும் பாறை போலவே இருக்கின்றன. இதை எல்லாம் பார்க்கும் பொது மந்திரவாதி மாண்டிரெக் தான் நினைவில் வருகிறார். அவருடைய அரண்மனையும் இப்படி தான் பல தடைகளை மீறி இருக்கும்.
டேன்ஜர் டையபாலிக் உடைய காதலி ஈவா கான்ட் இவர் தான். இவர் பல முறை டேன்ஜர் டையபாலிக்'கை காப்பாற்றி இருக்கிறார். பல வித்தியாசமான சிகை அலங்காரத்தில் வந்து ஏமாற்றுவது இவருக்கு கை வந்த கலை.
இந்த பதுங்கு தளம் பல உள்-கட்டுமானங்களை கொண்டது. இதை எல்லாம் பார்க்கும் போது எனக்கு தோன்றுவது ஒரே ஒரு கேள்விதான்: இதை யார் கட்டி இருப்பார்கள்? யார் அந்த மேஸ்திரி? கொத்தனார்கள் யார், யார்? சித்தாள்கள் யார், யார்? அவர்கள் யாருமே ஒரு கேள்வி கூட கேட்க வில்லையா? (அதைப் போல பேட்மேன் இருப்பிடமும் என்னுடைய கேள்விக் கணையில் உள்ளது).
இந்த ரகசிய லாக்கர் தான் டேன்ஜர் டையபாலிக்'கின் பல பொக்கிஷங்களை உள்ளடக்கியது. இதில் உள்ள சிறப்பு அம்சம் என்ன வென்றால், சுழலும் சக்கரம் ஆகும். அதனை விளக்கும் தமிழ் ஆளுமை எனக்கு இல்லாததால் தயவு செய்து இந்த படத்தை டவுன்லோட் செய்து பார்க்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
இது அவரின் குளியலறை. இங்கு போட்டோ'வில் எந்த மாற்றமும் செய்யவில்லை. முன்கூட்டியே சமயோசிதமாக "தக்க" இடங்களில் கண்ணாடியே தெளிவாக பார்க்க முடியாதமாறு செய்துள்ளார்.
இந்த குளியலறை பெண்கள் மற்றும் ஆண்கள் என்று இரண்டு வகையில் கட்டப் பட்டு உள்ளது. கூர்ந்து நோக்கினால் தெரியும், என்ன வித்தியாசம் என்று.

மிகப் பெரிய சுழலும் படுக்கை-மெத்தை இது. திருடப்பட்ட பணத்தை எப்படி இறைத்து விளையாடுகின்றனர் பாருங்கள்.
இது தேவை இல்லாமல் வரும் ஒரு கிளப் காட்சி.
பின்னர் தொலைக்காட்சி பார்த்து கொண்டு இருக்கும்போது அதில் விலை உயர்ந்த ஒரு வைர நேக்லேஸ் பற்றி ஒரு செய்தி வருகிறது. அதை கண்டவுடன் டேன்ஜர் டையபாலிக்'கின் காதலி அதனை அடைய துடிக்கிறாள்.

இதோ டேன்ஜர் டையபாலிக் கிளம்பி விட்டார் அதை கொள்ளை அடிக்க.
இதோ, டேன்ஜர் டையபாலிக் உடன் அவர் காதலியும் கொள்ளை அடிக்க ரெடி ஆகி கிளம்பி விட்டனர்.
அந்த வைரங்கள் இந்த கோபுரத்தில் தான் வைக்கப்பட்டு உள்ளன. இதோ, டேன்ஜர் டையபாலிக் விசேட கையுறை அணிந்து உள்ளே நுழைந்து விட முயற்சி செய்கிறார்.
டேன்ஜர் டையபாலிக் உள்ளே நுழைந்து விட்டார்.
வைரங்களை கொள்ளை அடித்து விட்டு ஓடும்போது அவரை எதிரிகள் பார்த்து விட்டனர். அதனால் தப்பிக்க முயற்சி செய்கின்றனர்.

இந்த சாதனத்தை உபயோகப்படுத்த முயற்சி செய்கின்றனர்.

டேன்ஜர் டையபாலிக்'கின் காதலியை எதிர் கும்பல் ஆட்கள் கடத்தி கொண்டு சென்று விடுகின்றனர். அதனால் டேன்ஜர் டையபாலிக் அவர்களை நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகிறது.
இந்த கட்டத்துக்கு பின்னர் கடும் சண்டை நடக்கின்றது. டேன்ஜர் டையபாலிக் இறந்தது போல நடித்து எதிரிகாய் ஏமாற்றி விடுகிறார். பின்னர் பிணவறையில் அவர் தன்னுடைய மூச்சை அடக்கும் கலை மூலம் உயிர் பெற்று தப்பித்து விடுகிறார்.

அந்த துணிகர கட்டத்திற்கு பின்னர், போலிஸ் படை அவரை பிடிக்க ஒரு சிறப்பு திட்டம் இடுகின்றனர். அதன் அடிப்படை என்னவென்றால் ஒரு ரயில் முழுவதும் தங்கம் உள்ளடக்கி வருகின்ற செய்தியை போலீசார் பரப்புகின்றனர். அதனை டேன்ஜர் டையபாலிக் கைப்பற்றியதும் அவரின் ரகசிய மறைவிடத்தை கண்டு பிடிக்கவே இந்த சதி வேலை. டேன்ஜர் டையபாலிக் அந்த தங்க ரயிலை கைப் பற்றி விடுகிறார்.
இந்த தங்க ரயிலை திறக்க முடியாததால், அதனை உருக்கி எடுக்க டேன்ஜர் டையபாலிக் முயற்சி செய்கிறார்.
திடீரென்று போலீசார் வரும் சத்தம் கேட்கிறது. அந்த தங்க ரயில் ஒரு பொறி ஆகும். அதனுள்ளே மறைத்து வைக்கப் பட்டு இருந்த ரகசிய ட்ரான்ஸ்மீடர் மூலம் போலீசார் அங்கு வருகின்றனர்.

உயர் அழுத்தம் காரணமாக அந்த தங்க ரயில் வெடித்து தங்கம் கரைந்து விடுகிறது.

தங்கத்தில் உறைந்த டேன்ஜர் டையபாலிக்'கை போலீசார் அவர் இறந்து விட்டதா நினைத்து விட்டு விட்டு செல்கின்றனர். ஆனால் அவர் தன்னுடைய காதலியை பார்த்து கண் சிமிட்டுவதாக படம் முடிவடைகின்றது. அதன் மூலம் இது டேன்ஜர் டையபாலிக்'கின் மற்றுமொரு தப்பிக்கும் யுத்தி என்பது தெளிவாக புரிகின்றது.
படத்தை பற்றிய மற்ற தகவல்கள்:
இந்தப் படத்தை வாய்ப்பு கிடைப்பவர்கள் தவறாது பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மறக்காமல் உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமாக இட்டுச்செல்லுங்கள். இந்தப் பதிவை பொறுமையுடன் படித்ததற்கு நன்றி!
இது போன்ற பதிவுகளை மேலும் தொடரலாமா என கருத்துரையிடுங்களேன்? தயவு செய்து உங்களின் கருத்துகளை பதிவு செய்து கழக கண்மணிகளாக மாறுங்கள்.

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும். இப்போதைக்கு அவ்வளவுதான், மீண்டும் சந்திப்போம். விரைவில்.

11 comments:

  1. நண்பரே,

    d.diabolique ஐ பற்றி தேடிப்பிடித்து படிவிட்டுள்ளீர்கள். அட்டைப்படங்களில் ஒன்று தினக் காட்டியாகும்.

    நீங்கள் சொந்தமாக வீடு கட்டுவதால் தான் BATMAN D DIABOLIQUE MANDRAKE ஆகியோரின் கொத்தானர்களை தேடுகிறீர்களா அல்லது எதிர்காலத்தில் சூப்பர் ஹீரோவாகும் திட்டம் ஏதாவது உண்டா.

    அதிகளவு படங்கள், அளவிற்கு மீறினால்.....
    மீறாது பாத்திடுங்கள்.

    பட போஸ்டர்களை தேடி வெளியிட்டதிற்கு பாராட்டுக்கள்.

    குளியலறை கண்ணாடிச்சுவரில் உள்ள சில ரசனையற்ற தன்மைகள் இப்படத்தினை பார்க்கும் ஆவலை போக்கி விட்டது.

    உற்சாகத்துடன் தொடருங்கள்.

    ReplyDelete
  2. க.கொ.க.கூ அன்பரே,
    தாங்கள் யாரோ எவரோ, யாம் அறியோம். ஆனால், தற்போது நீங்கள் இடும் பதிவுகள் எல்லாம் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. தங்களின் ரசனை மிகவும் சிறப்பாக உள்ளது.

    ஒன்று கவனித்தீர்களா, உங்களின் சமீப இடுகைகள் எல்லாம் காமிக்ஸ் சம்பந்தப் பட்ட திரைப் படங்களை பற்றியே அமைந்து உள்ளது. மிகவும் நன்றி. தொடர்ந்து பதிவிடுவீர்கள் என்றே நம்புகிறேன்.

    ஒரு சிறிய ஆலோசனை: எழுத்துப் பிழைகள் ஏதும் இல்லாமல் பார்த்து கொள்ளுங்களேன் தங்களின் அடுத்த பதிவிலிருந்து?

    ஒரு சிறிய கேள்வி: தாங்கள் இலங்கையை சேர்ந்தவரா?

    நன்றியுடன்,

    கிங் விஸ்வா.

    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  3. நண்பரே,

    நல்ல பதிவு. நிறைய தகவல்களை தேடி சேகரித்துள்ளீர்கள். படங்களை குறைத்திருக்கலாம்.

    உங்கள் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டில் கண்டிப்பாக பல மர்ம அறைகள் வைத்திருப்பீர்கள் என நாங்கள் அனைவரும் நம்புகிறோம்.

    ReplyDelete
  4. நான் எண்ணியவரை 51 படங்கள் உள்ளன இந்த பதிவில். எனக்கு தெரிந்த வரையில் முத்து விசிறியை விட அதிக படங்களை ஒரே பதிவில் இட்ட பதிவர் நீங்கள் தான். பிடியுங்கள் பாராட்டை.

    மற்றபடி இந்த பதிவும் உங்கள் முந்தைய பதிவை போலவே சிறப்பாக உள்ளது. இந்த நாட்காட்டியை பார்த்தல் அது இந்த வருடத்தின் பொது வந்ததாக உள்ளது. அப்படி எனில் இப்போதும் இந்த கதா நாயகனை கொண்டு கதைகள் வருகின்றன என்பதே உண்மை. ஆனால் நம்முடைய ஆசிரியர் என் இதை போட மறுக்கிறார் என்பது தான் என்னுடைய கேள்வி.

    அம்மா ஆசை இரவுகள் விசிறி.

    ReplyDelete
  5. ககொகு அன்பரே, நான் முன் கூறியது போல தாங்கள் எல்லரயுடைய வலைபூவிலும் வருகை தந்து கருத்துகள் பதிந்ததற்கு நன்றி. அதன் தொடர்ச்சியே என்னுடைய இந்த கருத்தோவியம்.

    டயபோலிக் ஒரு முறை லயனில் தோன்றி இருந்தாலும், நினைவில் தங்கும் ஒரு கதாபாத்திரம். முகமூடி வீரர்களின் பொற்காலம் இல்லையா அது.... ஆனாலும் கதையோட்ட்டத்தில் அப்படி ஒரு தாக்கத்தை அவர் ஏற்படுத்தி விடவில்லை. விஜயன் தொடர்ந்து அவரை உபயோகபடுத்தாமல் இருந்ததற்கும் அதுவே காரணமாக இருக்க முடியும்.

    மற்றபடி, காண கிடைக்கா போஸ்டர்களை தேடி பதிந்தமைக்கு நன்றி. ஆனாலும் படங்கள் உங்கள் எழுத்துக்களை விட அதிகமாக இருக்கிறது..... அதை குறைத்து, உங்கள் எழுத்துகளில் அதிக விசயங்களுடன் பதிந்தால் நன்று. கூடவே, வலைப்பூவின் வடிவமைப்பை சற்று பெரியாதாக்கினால் தகும்.

    ரஃபிக் ராஜா
    ராணி காமிக்ஸ் & காமிக்கியல்

    ReplyDelete
  6. அய்யா புண்ணியவானே
    நீங்க யாரோ என்னமோ எனக்கு தெரியாது. ஆனா நீங்க ரொம்ப நல்லா இருக்கணும். காமிக்ஸ் மீதான உங்களுடைய ஆர்வம் பிரம்மிக்க வைக்கிறது. நண்பரே, எத்தனை ஆர்வம் இருந்தால் இவ்வளவு சிரமப்பட்டு இருப்பீர்கள். அருமையாக உள்ளது.

    ReplyDelete
  7. இந்த கதையை நான் படித்தது இல்லை, உங்கள் பதிவை பார்த்து பிறகு என்னுள் மிகுந்த ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள், இந்த புத்தகத்தை தேடி பிடிக்க போகிறேன்

    நன்றாக எழுதி உள்ளீர்கள்.. தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே..

    ReplyDelete
  8. வணக்கம்,

    டேஞ்சர் டயபாலிக் பற்றி சிறப்பான பதிவிட்டதற்குப் பிடியுங்கள் பாராட்டுக்களை!

    படத்தை நானும் பார்த்துள்ளேன். அந்தக் குளியலறை மற்றும் பணம் குவிந்த படுக்கையறை காட்சிகள் மனதை விட்டகல மறுக்கின்றன! ஹீரோயின் வேறு செம்ம கட்டை!

    எண்ணியோ மோரிகோனே-வின் (குட், பேட், அக்ளி படத்திற்கு மறக்கமுடியாத இசையமைத்தவர் இவரே) சிறப்பான இசையும் படத்திற்கு வலு சேர்க்கிறது.

    க்ளைமாக்ஸில் வரும் தங்கக் குழம்பு காட்சி தமிழ் படங்களில் பல முறை காப்பியடிக்கப் பட்டு விட்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஜேம்ஸ் பாண்டாக நடித்த ஒரு படத்தில் இந்த காட்சி வந்ததாக ஞாபகம்.

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  9. hiya,
    you have been updating the movie frontier of the comics books that we have loved in tamil. thanks for doing so.

    by the way, the links for downloading billy is not working. can you help me out?

    ReplyDelete
  10. Its amazing that you have sincerely collected/followed up so much info abt our favourite comics. I am a passionate reader of our good ol' Lion, Muthu, Thigil, Comic Classics and other foreign comics.

    Thank you so much. Great job and keep it up.

    Regards,
    Periyar

    ReplyDelete
  11. படிக்க படிக்க சுவாரசியமாக இருந்தது. எந்திர உலகில் தொலைந்து போன காமிக்ஸ் கள் பற்றி அற்புத பதிவு

    ReplyDelete

உங்கள் கருத்து எப்படி இருந்தாலும் கண்டிப்பாக பகிர்ந்துகொண்டே தீரவேண்டும், கருத்தே இல்லை என்றாலும் கூட அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related Posts Widget for Blogs by LinkWithin