Friday, March 20, 2009

சுஸ்கி-விஸ்கி மினி லயன் மூலம் அறிமுகம் ஆன அற்புத தொடர்

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,

வணக்கம்.

நெடு நாட்களாக வீட்டு பணிச்சுமை காரணமாக பதிவுகள் இட இயலவில்லை. மன்னிக்கவும். அதனை சரி செய்ய, முன் போலவே காமிக்ஸ் திரைப்படம் ஒன்றினை பதிவாக இடுவதே சரி என்று தோன்றியது. அதனால் தான் நான் எண்ணி வைத்து இருந்த இரண்டு பதிவுகளை இடாமல், இந்த திரைப்பட பதிவை இடுகிறேன்.

மினி லயன் காமிக்ஸ் மூலமாக உலகத்தின் சில அரிய காமிக்ஸ் படைப்புகளை திரு விஜயன் அவர்கள் நமக்கு அறிமுகம் செய்து வைத்து இருந்தார். இந்த கதைகள், இந்தியாவிலேயே, ஏன் ஆசியாவிலேயே (?!?) தமிழ் மொழியில் தான் வெளியிடப் பட்டன என்பது தமிழர்களாகிய நமக்கு பெருமை சேர்க்கும் விடயம் ஆகும். அந்த அரிய கதாபாத்திரங்களில் ஒன்று சுஸ்கி மற்றும் விஸ்கி ஆகும். தமிழில் இது வரை வந்த சுஸ்கி மற்றும் விஸ்கி கதைகளின் பட்டியல் இதோ:

எண் இதழ் தலைப்பு புத்தக அளவு புத்தக அமைப்பு விலை
1 ஜூனியர் லயன் & மினி லயன் ஒரு பேரிக்காய் போராட்டம் பாக்கெட் சைஸ் முழு வண்ணம் Rs 2.50
2 மினி லயன் ராஜா, ராணி & ஜாக்கி B-5 நார்மல் சைஸ் இரு வண்ணக் கலவை Rs 2.00
3 மினி லயன் பயங்கரப் பயணம் B-5 நார்மல் சைஸ் இரு வண்ணக் கலவை Rs 2.00

Willy_Vandersteen இதில் கொடுமையான விடயம் என்னவெனில் என்னிடம் இந்த மூன்று புத்தகங்களில் ஒன்று கூட இப்போது கைவசம் இல்லை என்பது தான். என்ன செய்வது? அதனால் என்னை நானே சமாதானம் செய்து கொள்ள இந்த தொடரின் ஆங்கிலத்தில் வந்த கதைகள் அனைத்தையும் என்னுடைய நண்பர் ஒருவர் மூலம் சிங்கப்பூரில் இருந்து வரவழைத்து வாங்கிவிட்டேன்.

இந்த படத்தில் இருப்பவர் தான் சுஸ்கி மற்றும் விஸ்கி கதைகளின் கதாசிரியர் வில்லி வாண்டர்ஸ்டீன் (Feb 15, 1913 – Aug 28, 1990). ஐம்பது வருடங்களாக இவரின் காமிக்ஸ் புத்தகங்கள் உலக அளவில் இருநூறு மில்லியன் புத்தகங்கள் விற்கப் பட்டுள்ளன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இவரின் சுஸ்கி மற்றும் விஸ்கி கதை புத்தகங்களே இப்போதும் வருடத்திற்கு ஐந்து மில்லியன் வரை விற்பனையாகின்றன. முதன் முதலில்  சுஸ்கி மற்றும் விஸ்கி கதைகள் வெளிவந்தது 1945ம் ஆண்டு ஆகும். அன்று முதல் இன்று வரை சுஸ்கி மற்றும் விஸ்கி  கதைகள் மொத்தம் 308 வெளிவந்தது உள்ளன. உலக நாடுகளில் பலவற்றிலும், பல மொழிகளிலும் வெளி வந்த ஒரு கதை சுஸ்கி மற்றும் விஸ்கி ஆகும். இதோ அந்த தொடரின் மொழி பெயர்ப்பு விவரங்கள்:

S.No Country Language Character Title
1 Dutch (Origin) Dutch Suske & Wiske
2 Africa Afrikaans Neelsie & Miemsie
3 Taiwan Taiwanese Dada & Beibei
4 China Mandarin Bo bu & Bo be te
5 Denmark Danish Finn & Fiffi (later: Bob & Bobette)
6 Finland Finnish Anu & Antti
7 France French Bob & Bobette
8 Germany German Ulla & Peter (later: Bob & Babette/Suske & Wiske/Frida & Freddie)
9 Rome Greek Bobi & Lou
10 Indonesia Indonesian Bobby & Wanda
11 Italy Italian Bob & Bobette
12 Japan Japanese Susuka & Wisuka
13 Norway Norwegian Finn & Fiffi
14 Portugal Portuguese Bibi & Baba
15 Brazil Brazil Zé & Maria
16 Spain Spanish Bob & Bobet
17 South Africa Swahili Bob & Bobette
18 Sweden Swedish Finn & Fiffi
19 Tibet Tibetan Baga & Basang
20 Brittan English Spike & Suzy
21 U.S.A English Bob & Bobette / Willy & Wanda
22 India Tamil Suski & Wiski

இப்போது இந்த பதிவின் மையக்கருவான சுஸ்கி & விஸ்கி காமிக்ஸ் திரைப்படத்திற்கு வருவோம். த டார்க்  டையமண்ட் என்ற பெயரில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தின் டீ.வீ.டி'யின் முன் பக்க மற்றும் பின் பக்க படங்கள்:

சுஸ்கி & விஸ்கி: த டார்க்  டையமண்ட் பட டீ.வீ.டி'யின் முன் பக்கம் 
front cover
சுஸ்கி & விஸ்கி: த டார்க்  டையமண்ட் பட டீ.வீ.டி'யின் பின் பக்கம்
back cover

கதை: சுஸ்கி & விஸ்கி தங்களின் குழுவினரோடு சம்மர் விடுமுறையை கழிக்க நெதர்லாண்ட் நாட்டில் உள்ள ஒரு மர்ம எஸ்டேட்டுக்கு செல்கின்றனர். அங்கு அகதா ஆண்டி ஒரு மர்ம கருப்பு வைரத்தின் வசியத்தில் மயங்கி தன்னுடைய சுயநிலையை இழக்கின்றார். இப்போது அகதா ஆண்டியை காப்பற்ற வேண்டிய பொறுப்பு நம்முடைய கதாநாயகர்கள் மேல் விழுகின்றது.

அவர்கள் அந்த கருப்பு வைரத்தின் பின்புலத்தை ஆராய்ச்சி செய்து அது பதினைந்தாம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு விசித்திர மந்திரவாதியின் பிடியில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். ( AlChemist = மந்திரவாதி, சரிதானே?)

அந்த வைரத்தின் மேல் ஒரு சாபம் இருக்கின்றதையும், அதன் வசியத்தில் தான் அகதா ஆண்டி இருப்பதையும் அவர்கள் கண்டறிகின்றனர். பின்னர், அந்த கருப்பு வைரத்தின் வசியக் கட்டில் இருந்து அகதா ஆண்டியை காப்பாற்ற வேண்டுமெனில் அந்த மந்திரவாதியால் தான் முடியும் என்பதை கண்டுபிடிக்கும் நமது சாகசக் குழுவினர் ஒரு ரகசியத் திறப்பின் மூலம் பதினைந்தாம் நூற்றாண்டிற்கே செல்கின்றனர். பின்னர் அங்கு நடக்கும் சாகசங்களும், வியத்தகு சம்பவங்களும் படத்தின் பிற்பகுதியை அமைக்கின்றன.

படத்தின் சில காட்சிகள்:

                 சுஸ்கி & விஸ்கி              விஸ்கி                   சுஸ்கி & விஸ்கி
suswis1-kl joeri2 09-kl
அகதா ஆண்டி &  ஆர்வில் அங்கிள்              சுஸ்கி ஷூடிங்கில் ஒரு காட்சி
01-kl bokrijk01-kl arno1-kl
ஷூடிங்கில் ஒரு காட்சி சுஸ்கி & விஸ்கி குழுவினர் சுஸ்கி & விஸ்கி குழுவினர்
bokrijk04-kl huijbergen01-kl persantw2-kl

இனி இந்த படத்தின் விமர்சனத்திற்கு வருவோம்:

* படத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று படமாக்கப்பட்ட இடங்கள் ஆகும். மிகவும் சிறப்பான லொகேஷன்களில் படமாக்கப்பட்டு உள்ளது இந்த திரைப் படம். படத்திற்கு வலுவூட்டும் காரணி இதுவே ஆகும்.

* முடிந்த வரை காமிக்ஸ் கதாபாத்திரங்களை நிஜ வாழ்வில் கொண்டு வர முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டு இருகின்றனர். சுஸ்கி & விஸ்கி குழுவினர் நீங்கள் காமிக்ஸ் கதைகளில் எப்படி படித்தீர்களோ அப்படியே இருப்பார்கள்.

* தயவு செய்து இந்த கதையின் பின்புலம் தெரியாமல் இந்த படத்தை பார்க்க வேண்டாம். எனென்றால் இந்த படத்தில் பல திரைக்கதை குறைபாடுகள் இருப்பதால் இந்த கதையை படித்து உணர்ந்தவர்கள் மட்டுமே இந்த படத்தை ரசிக்க முடியும்.

* தயவு செய்து ஹாலிவூட் படங்களை போன்ற ஸ்பெஷல் எபெக்டுகளை எதிர்பார்க்க வேண்டாம். இந்த படம் ஒரு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப் பட்ட படம் ஆகும்.

* படத்தின் அகஷன் காட்சிகள் மிகவும் குறைவு என்பதோடில்லாமல் அவை படமாக்கப்பட்ட விதமும் சரி இல்லை. ஒரு காமிக்ஸ் படத்திற்கு எப்போதும் அகஷன் காட்சிகள் சிறப்பாக இருக்க வேண்டும்.

* இந்த படத்தின் டீ.வீ.டி உங்களுக்கு இலவசமாக கிடைத்தாலும் வாங்கி விடாதீர்கள். எனென்றால் இதில் உங்களின் பொறுமையை சோதிக்கும் பல "சிறப்பு அம்சங்கள்" உள்ளன. உதாரணமாக முதல் பத்து நிமிடங்களுக்கு பிறகு ஒரு காட்சியில் சுமார் நான்கு நிமிடங்களுக்கு நீங்கள் ஒரு கதவை தொடர்ந்து பார்க்க வேண்டி இருக்கும். நானும் அந்த கதவில் ஏதோ ஒரு சிறப்பு அம்சம் இருக்கும் என்று எண்ணி தொடர்ந்து பார்த்தேன். ஒன்றும் இல்லை. கேமராவை ஆப் செய்ய மறந்து விட்டார்கள் போல இருக்கிறது. இதைப் போல தொடர்ந்து வரும் காட்சிகளில், தரை (இரண்டு நிமிடங்கள்), அறையின் மேற்க்கூரை (மூன்று நிமிடங்கள்)   என்று என்னுடைய பொறுமையை தொடர்ந்து சோதித்தால் அதனை நிறுத்தி விட்டேன். மன்னிக்கவும்.

* சுஸ்கி - நடிப்பும் அதற்கேற்ற அருமையான நடிகர் தேர்வும் இந்த பாத்திரத்தை நிறைவு செய்கின்றன. ஆனால் விஸ்கி'யைவிட வயதில் சிறியவனாக இருப்பது ஒரு குறை. இதை குறை என்று கூறுவதை விட, விஸ்கி பாத்திரத்தின் தேர்வு குறை என்று கூறுவதே சாலச்சிறந்தது.

* விஸ்கி - சுஸ்கி'யைவிட வயதில் மூத்து இருப்பதை விட வேறொரு பெரிய குறை உள்ளது. ம், அதை எப்படி சொல்வது? சரி, இப்படி சொன்னால் சரியாக இருக்கும்: விஸ்கி பாத்திரம் ஒரு சிறுமி ஆகும். இந்த படத்தில் ஒரு இளம் பெண் தான் அந்த பாத்திரத்தை ஏற்று இருக்கிறார். அதுவே ஒரு குறை. வாசகர்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.

* அகதா ஆண்டி - அய்யகோ, இதை விட கொடுமை வேறு எதுவும் இல்லை. எனென்றால், இந்த பாத்திரத்தை ஏற்று நடித்து இருப்பது ஒரு ஆண் நடிகர் ஆவார். வேறென்ன சொல்ல?

* ஆர்வில் அங்கிள் - படத்தின் ஆரம்பத்திலேயே இவர் "நான் வர மாட்டேன், நான் வர மாட்டேன்" என்று சொல்கிறார். அதை கேட்டு நாமும் இந்த படத்திற்கு செல்லாமல் (பார்க்காமல்) இருந்து இருக்க வேண்டும்.

* வில்பர் - மிகவும் சரியான தேர்வு. ஆனால், காமிக்ஸ் புத்தகத்தை கூர்ந்து படிக்கும் வாசகர்களுக்கு வில்பர் எப்போதும் கண்ணை மூடிக் கொண்டே இருப்பது நன்கு தெரியும். ஆனால், படத்தில் அப்படி இல்லை.

  • என் கருத்து: மோசமான இயக்கமும், தரமற்ற எடிட்டிங்'ம் ஒரு நல்ல படத்தை இப்படி "சுமார்" என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டது.
  • எனது ரேட்டிங்: ********** (5/10). 
ஒரிஜினல் கதை புத்தகத்தின் முன் அட்டை படத்தின் போஸ்டர் விளம்பரம் 
cover-album poster1-kl

படவிவரங்கள்:

டைட்டில் : த டார்க்  டையமண்ட
வருடம் : 18th Feb 2004
ஓடும் நேரம் : 85 நிமிடங்கள்
மொழி : பெல்ஜியம் / ஜெர்மனி
சப்-டைட்டில் : துரதிர்ஷ்டவசமாக, இல்லை
இயக்கம் : Rudi Van Den Bossche

கதை: Patricia Beysens & Ilse Somers
இசை : Brian Clifton
ஒளிப்பதிவு : Gerd Schelfhout
எடிட்டிங் : Ludo Troch

இந்த பதிவை நான்கு வாரங்களுக்கு முன்னர் இட்டு இருந்தால் (18th Feb 2009) சிறப்பு பதிவு  என்று கூறி தூள் கிளப்பி இருக்கலாம். என்ன செய்வது? தாமதம் என்ற கொடிய வியாதிக்கு நான் ஆளாகி பல மாமாங்கம் ஆகி விட்டதே?

தொடர்புடைய இணைய தளங்கள்:

IMDB விபரங்கள் & பட கலெக்க்ஷன் விபரங்கள்
பட விவரங்களை தெரிந்து கொள்ள Home Page
டவுன்லோட் செய்ய RapidShare

டவுன்லோட் செய்ய Torrent
மேலும் விபரங்களுக்கு

Wikipedia தகவல்கள்

ஸ்க்ய்லைன் என்டர்டைன்மென்ட் மற்றும் கோ-டூன், லக்ஸ் அனிமேஷன், பாஸ் பிராஸ், வாட் புரடக்ஷன்ஸ் ஆகியவற்றின் கூட்டு தயாரிப்பில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் மொத்தம் பதிமூன்று படங்களை தயாரித்து வெளியிட ஒப்பந்தம் முடிவு செய்யப் பட்டு உள்ளது. இதன் முதல் முயற்சியாக த டெக்சாஸ் ரேஞ்சர்ஸ் என்ற கதையை அனிமேஷன் படமாக இந்த வருடம் ஜூன் மாதம் வெளியிட உள்ளனர். இனிமேல் ஒவ்வொரு வருடமும் ஒரு படம் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

த டெக்சாஸ் ரேஞ்சர்ஸ் படத்தின் விளம்பரம்  ஒரிஜினல் கதை புத்தகத்தின் முன் அட்டை
De_Texas_Rakkers 125.DE_T.PDF-000

Directed by: Mark Mertens & Wim Bien
Produced by: Eric Wirix
Written by : Dirk Nielandt/Guy Mortier/Eric Wirix
Distributed by: Bridge Entertainment Group
Release date(s):  Belgium June 17, 2009
Running time: 86 minutes
Country: Belgium/Netherlands/Luxembourg
Language: Dutch/French
Official Website: http://lukeandlucymovie.com/en/index.html

என்னுடைய பழைய பதிவுகளை இந்த இடைப் பட்ட காலத்தில் பார்த்த நான் மிகவும் வருத்தமுற்றேன். காமிக்ஸ் டாக்டர், ரபிஃக் ராஜா, விஸ்வாஜி, கனவுகளின் காதலன் போன்றவர்கள் மிகவும் சிரத்தையுடன் அழகாக ஒரு ஆராய்ச்சி கட்டுரை போல சிறப்பாக பதிவுகள் இடும்போது என்னுடைய பதிவுகள் அனைத்தும் கற்றுக்குட்டியின் பதிவுகள் போல தோன்றின (அது என்னவோ உண்மை தானே?).

அதனால் இந்த பதிவை மிகவும் சிரத்தையுடன் (எழுத்துப்பிழை, பொருட்பிழை இல்லாமல்), சிறப்பான லே-அவுட் வடிவத்தில் ஒரு முழுமையான பதிவாக  அமைத்து உள்ளேன். வாசகர்கள் படித்து விட்டு தங்களின் மேலான கருத்தை சொன்னால் மிகவும் மகிழ்வேன். இந்த பதிவை என்னுடைய பிளாக் குருவான திரு காமிக்ஸ் டாக்டர் அவர்களுக்கு சமர்பிக்கிறேன்.

புதிய வாசகர்கள் என்னுடைய பழைய பதிவுகளை தெரிந்து கொள்ள,

விரைவில் அடுத்த காமிக்ஸ் படம் மூலம் உங்களை சந்திக்கிறேன்.

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.

மீண்டும் சந்திப்போம், விரைவில்.

பின் குறிப்பு: இந்த பதிவு சார்பாக வந்த பிற காமிக்ஸ் பதிவுகள்

புருனோ ப்ரேசில் - முதலை பட்டாளம் - மினி லயன் காமிக்ஸ்

19 comments:

  1. ககொகூ நன்பரே,

    சுஸ்கி விஸ்கி பள்ளி பருவத்தில் நான் மிகவும் ரசித்து படித்த புத்தகம். மினி லயனில் வெளிவந்த எல்லா கதைகளையும் நான் படித்த நியாபகம் இருந்தாலும், என் மனதில் இன்றும் நிற்கும் கதை "ராஜா ராணி ஜாக்கி" காரணம் மிக எளிது, அது ஒன்று மட்டுமே இன்றும் என் சேகரிப்பில் இருக்கும் புத்தகம். மற்ற புத்தகங்களையும் சேர்க்க நான் செய்யாத காரியமே இல்லை. ஆனாலும் தமிழ் காமிக்ஸ் ப்ளாக்குகள் மூலம் அதிகரம் பிரபலமாயிருக்கும் இத்தருணத்திற்கு பிறகு அதை சேர்ப்பிக்க முடியும் என்று எனக்கு தோனவில்லை. அனேகமாக உங்களை பின்பற்றி அந்த ஆங்கில பிரதிகளை கையகபடுத்த முயல்கிறேன்.

    உங்கள் பதிவின் மூலம் இப்படத்தை பார்க்கும் எண்ணத்தை ஒதுக்க செய்து விட்டீர்கள். எவ்வளவோ நல்ல படங்கள் இன்னும் பார்க்காமல் தூங்கி கொண்டு இருக்கும் போது, இப்படி மொக்கை படத்தை பார்த்து, என் மண்டைய பிய்த்து கொள்வதில் இருந்து என்னை காப்பாற்றியதற்கு நன்றி. ஏனோ, ஐரோப்பா புகழ் பெற்ற ஐரோப்பா காமிக்ஸ் கதாநாயகர்களை பற்றி படம் எடுக்க முனையும் போது, சிறு பட்ஜெட் மற்றும் திறமை இல்லாத டைரக்டர், நடிகர்களுடன் மட்டும் ஐரோப்பிய படாதிபதிகள் முயல்வது ஏனென்று புரியவில்லை. அமெரிக்க காமிக்ஸ் பட தயாரிப்பாளர்களிடம் இவர்கள் கற்க வேண்டிய விஷயம் எவ்வளவோ உண்டு.

    உங்கள் பாணிக்கு திரும்பி சுஸ்கி விஸ்கி படத்துடன் ஒரு முழுமையான பதிவை இட்டிருப்பதற்கு வாழ்த்துகள். தமிழ் காமிக்ஸ் பதிவர்கள் அனைவரும் வித்தியாசமான முறையில் பதிவுகள் இட ஆரம்பித்து இருப்பது, ஒரு வரவேற்கத்தக்க விஷயம். காமிக்ஸ் பதிவர்கள் தங்கள் வலைப்பூவில் பதிவுகள் இடுவதோடு நில்லாமல், அவ்வப்போது சக பதிவர்கள் இடும் பதிவுகளிலும் தங்கள் நேரத்திற்கேற்ப கருத்தை பதிவதை, ஒரு கொள்கையாக கொள்ள வேண்டும் என்பதே எனது அவா. நீங்களும் அதை பின்பற்றும் வரை, நீங்கள் இடும் அனைத்து பதிவுகளும் ஆர்வலர்கள் மத்தியில் உரிய மரியாதையை அடையும். அதனால் மற்றவர்கள் பதிவை விட உங்கள் பதிவு எவ்விதத்திலும் குறைந்தது என்ற எண்ணத்தை விட்டொழித்து உங்கள் பதிவு வேட்டை உற்சாகத்துடன் வெளியிடுங்கள்.

    கூடவே நீங்கள் செய்ய வேண்டிய இன்னொன்று, பிண்ணூட்டம் இடும் அனைவருக்கும் அதே பதிவில் பதில் பிண்ணூட்டத்தை இடுவதை பழகி கொள்ள வேண்டும். அவர்கள் நேரத்திற்கு குடுக்க படி வேண்டிய மரியாதை அது தான்.

    கூடவெ முன்பே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் கருத்து பெட்டிக்கு மேல் உள்ள வாக்கியம், இல்ல டைப் பண்ண தெரியாத ஷோலே படத்துல வர்ற தாகூர்'ஆ? என்று இருப்பதற்கு பதிலாக, இல்ல டைப் பண்ண முடியாத ஷோலே படத்துல வர்ற தாகூர்'ஆ? என்று இருப்பது தானே சரி :)

    ReplyDelete
  2. நண்பர் ரபிஃக் ராஜா அவர்களே,

    கருத்து தெரிவித்தமைக்கு நன்றி. உங்களின் வேண்டுகோளை அடியேன் ஏற்று கொள்கிறேன். இப்போது கமெண்ட் பாக்ஸில் நீங்கள் சொன்னபடியே மாற்றி விட்டேன்.

    காமிக்ஸ் பிரியன்.

    ReplyDelete
  3. அருமை நண்பரே,

    விழாது பறக்கப் தெரிந்த பறவைக் குஞ்சு உண்டா என்ன, நானும் உங்களைப் போல் கற்றவன் தானே. அருமையான லே அவுட், உங்களிற்கேயுரிய மொழி நடை என அசத்த ஆரம்பித்து விட்டீர்கள். தொடருங்கள் சகா உங்கள் அதிரடியை.

    சுஸ்கி,விஸ்கி கதைகள் எதையும் நான் படித்ததேயில்லை. அவர்களை அறிமுகம் செய்து வைத்ததிற்கு என் நன்றிகள்.எப்படி உங்களால் பொறுமையாக உங்கள் அமைதியை சோதிக்கும் படங்களினைப் பார்க்க முடிகிறது.உங்களால் நெதர்லாந்து மொழியினைப் புரிந்து கொள்ள முடியுமா? டிவிடிக்களின் கவர்கள் அம்மொழியில் தானே உள்ளன.

    ரஃபிக்,டாக்7,விஸ்வாவின் பதிவுகள் உண்மையிலேயே உலகத்தரம் வாய்ந்தவை என்பது உண்மை. அன்பரே, அடியேன் இன்னமும் அந்த உயரத்திற்கு செல்லவில்லை என்பதும் உண்மை.

    காமிக்ஸ் வலைப்பூக்களின் பிதாமகன்களில் ஒருவரான நண்பர் ரஃபிக் எழுதிய அனைத்துமே உங்கள் வலைப்பூவை எங்கோ எடுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை. அய்யய்யோ தமிழ் வாத்தியார் ரஃபிக் இனி என் பதிவுகளிலும் பிழைகளினை சுட்டிக்காட்டுவாரே என்பதை நினைத்தால் பயம்ம்மாக இருக்கிறது.

    பாப் & பாபெட்டை இங்கு தேடிப்பார்க்கிறேன்.கிடைத்தால் அதன் பெருமை உங்களிற்கு தான். உற்சாகத்துடன் தொடருங்கள்.

    ReplyDelete
  4. காமிக்ஸ் பிரியரே,

    பிடியுங்கள் பாராட்டை. நீஎங்கள் இட்ட பதிவுகளிலேயே இந்த பதிவு தான் தலை சிறந்த பதிவு ஆகும். சிறப்பான கோர்வை, சிறந்த அமைப்பு, சீரிய தகவல் கோர்வை, சிறப்பான விமர்சனம் என்று அனைத்து விதத்திலும் இந்த பதிவு சிறந்து உள்ளது.

    நீங்கள் விக்கிபீடியா குறிப்பில் சென்று மாற்றங்களை செய்து விடுங்கள். அதைப் போலவே அங்கு சுச்கீ மற்றும் விஸ்கீ'யின் பெயர் தவறாக இருக்கும் (தமிழ் மொழியில்). அதனையும் மாற்றி விடுங்கள். நீங்கள் மற்ற பதிவர்களின் முன் உங்களை கம்பேர் செய்ய வேண்டாம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரு சிறப்பு அம்சம் உண்டு.

    உங்களின் சிறப்பு அம்சம் என்னவெனில், தமிழ் காமிக்ஸ் குறித்த படங்களின் விவரங்கள் சேகரித்து அதனை பதிவாக இடுதல். உங்கள் பதிவுகளில் வருன் செய்திகள் (என்பது சதவீதம் வரை) எனக்கு புதிய தகவல்கள். தொடருங்கள் உங்களின் சேவையை.

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  5. க கொ க கூ காமிக்ஸ் பிரியன் அவர்களே,

    முழுமையான பதிவு. தொடர்ந்து இதனை போலவே பதிவிட்டு எங்களை பரவசப் படுத்துங்கள். குறிப்பாக உங்களின் DVD விமர்சனம் அருமை.

    சுஸ்கி மற்றும் விஸ்கி'யின் கதை அட்டைப் படம் முதலைப் பட்டாளம் பதிவில் இருக்கிறது. நீங்கள் அதனை உபயோகப் படுத்தி இருக்கலாம்.


    தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் அறுந்த நரம்புகள் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) கதை முழுவதுமே கவிதைகள் நிரம்பிய ஒன்றாகும். இதனை உங்களுக்கு பிடித்ததில் வியப்பேதும் இல்லை.

    புலா சுலாகி.

    ReplyDelete
  6. லெட் த கும்மி ஸ்டார்ட்.

    --
    பூங்காவனம்,
    எப்போதும் பத்தினி.

    ReplyDelete
  7. பேராண்டிகளா, முத்தாத நகைக்கு கோன் ஐஸ் குடுத்ததில, கிடைச்ச பகீர் செய்திய கேளுங்கப்பா.

    அகொதீக நாட்டாமை, காமிக்ஸ் மருத்துவரு, புதுசா வாங்கின டூ வீலர்ல பூங்காவனத்த ஏத்திகிட்டு ஜாலி டூர் போறாராம். பூங்காவனத்தின் வித்தைகளில மயங்கிப்போன அந்த மகாராசன் தன் கழகத்தையும், அதன் கண்மணிகளையும் க்ளீனா மறந்துட்டாராம். என்னைக் கொஞ்சம் மாத்தி
    உன் நெஞ்சில் என்னை சாத்தி
    என டூவீலர் ரிமிக்ஸ் பாட்டு தூள் பறக்குதாம்.

    இதக்கேட்டு எனக்கு நெஞ்சு வலியே வந்திருக்கும், ந்ல்ல வேளை முத்தாத நகை கோன் ஐஸை பிடிச்சிருந்ததை ரசிச்சுக்கிட்டு இருந்ததாலே தப்பிச்சேன். இந்த காத்தவ்வும், ஷங்கரு பயலும் என்ன செய்யப்போறாங்களோ தெரியலயே. நான் என் ஸ்டண்டு மாஸ்டரு விஸ்வாவப் பாக்கப் போறேன்,

    ReplyDelete
  8. From The Desk Of Rebel Ravi:

    dear friend,

    you are doing a terrific job. i have been searching for the very sa,e movie foe so many months, ever since i came to know about this in wikipedia. unfortunately, there was no link for this in either wikipedia or imdb search.

    you have done it. thanks.
    Rebel Ravi,
    Change is the Only constant thing in this world.

    ReplyDelete
  9. very very good post. keep it up.

    ReplyDelete
  10. ஐயா,

    உங்களை நான் மிகவும் கடுமையாக விமர்சித்து இருந்தேன். இப்போது அவை அனைத்தையும் வாபஸ் வாங்கி கொள்கிறேன். மன்னிக்கவும். நீங்கள் உங்கள் பாணியிலேயே சிறந்து விளங்குகிறீர்கள். தொடருங்கள் உங்கள் அட்டகாசமான பதிவுகளை.

    இந்த படங்களை எல்லாம் எங்கு பிடிக்கிறீர்கள்? அந்த இணைய தளம் (www.superherolives.com) மிகவும் உபயோகமாக இருக்கின்றது.

    செழி,
    ஐயம் பேக். (பேக்கு இல்லீங்கோ, பேக்).

    ReplyDelete
  11. //விஸ்கி - சுஸ்கி'யைவிட வயதில் மூத்து இருப்பதை விட வேறொரு பெரிய குறை உள்ளது. ம், அதை எப்படி சொல்வது? சரி, இப்படி சொன்னால் சரியாக இருக்கும்: விஸ்கி பாத்திரம் ஒரு சிறுமி ஆகும். இந்த படத்தில் ஒரு இளம் பெண் தான் அந்த பாத்திரத்தை ஏற்று இருக்கிறார். அதுவே ஒரு குறை. வாசகர்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்// இந்த விஷயத்தை எப்படி வயகரா தாத்தா கவனிக்காமல் விட்டார்? அவர் கவனித்து இருந்தால்,

    மாம்பழமாம் மாம்பழம், மல்கோவா மாம்பழம்

    என்ற பாடலை பாடி இருப்பார்.

    வயகரா பாட்டி.

    ReplyDelete
  12. அடியே கிழவி இப்ப பாடுறேன் கேட்டுக்க,

    இலந்தைப் பயம்
    இலந்தைப் பயம் யேஏஏஏஏஏஏஏஎ

    செக்க சிவந்த பழம்
    நல்ல தேனாட்டம் இனிக்கும் பழம்

    ReplyDelete
  13. யோவ், தாத்தா

    இது உனக்கே நல்ல இருக்க? வர வர உம்முடைய அட்டுழியங்களின் அளவு அதிகரித்து கொண்டே போகிறது (நமிதாவோட மா... போல).

    வீட்டுக்கு வாருமையா, வச்சுக்குறேன்.

    ReplyDelete
  14. அய்யா காமிக்ஸ் பிரியரே,

    இந்த சின்ன-பெரிய விஷயத்தை கூடவா கூர்ந்து கவனித்து எழுதுவது? இதற்க்கு முன்பு கிங் விஸ்வா அவர்கள் ஒரு ஜேம்ஸ் பான்ட் காமிக்ஸ் பற்றி எழுதும்போது கதை அட்டையில் வரும் பெண்ணின் ஸ்கர்ட்'ஐ பற்றி எழுதி இருப்பார். நிங்கள் இப்படி.

    இந்த காமிக்ஸ் உலகம் எங்கே போகுதோ, அட ஆண்டவனே?

    செழி.

    ReplyDelete
  15. ஏய் கியவி, இன்னிக்கு நைட் அய்யா வூட்டிற்கு வர மாட்டார்டி. என் ஸ்டண்டு மாஸ்டரு விஸ்வா கூட நமிதா மா பார்கப் போறோம்டி. அத நெனைச்சா எனக்கு இப்பவே உடல் விறைக்குதே.

    ReplyDelete
  16. கீழே விழுகிறான் வியாபாரி,
    கீழ்தர மிட்டாய் வியாபாரி.
    மோசடி மிட்டாய் விற்குமவன்
    மோசடி இனிமேல் பலிக்காது.

    என்னுடைய அடுத்த பதிவின் முன்னோட்டம் இது.

    கெஸ் செய்ய முடிகிறதா? இது காமிக்ஸ் சம்பந்தப் பட்ட பதிவு தான், சந்தேகமில்லை.

    இன்னுமொரு Clue வேண்டுமானால் கொடுக்கிறேன்:

    ஒட்டி விளையாடு கண்மணியே,
    கை தட்டி விளையாடு கண்மணியே.
    ஒட்டிடு, ஒட்டிடு சிந்தித்து ஒட்டிடு.
    சிறப்புடன் ஒட்டிடு, சீக்கிரம் ஒட்டிடு.

    செழி.

    ReplyDelete
  17. Hello brother.. thanks for this blog...

    can you tell me titles which are published in English.

    Please also tell me the publication name.....

    ReplyDelete
  18. http://blogintamil.blogspot.com/2009/04/blog-post_09.html

    ReplyDelete
  19. னாலும் தமிழ் காமிக்ஸ் ப்ளாக்குகள் மூலம் அதிகரம் பிரபலமாயிருக்கும் இத்தருணத்திற்கு பிறகு அதை சேர்ப்பிக்க முடியும் என்று எனக்கு தோனவில்லை. அனேகமாக உங்களை பின்பற்றி அந்த ஆங்கில பிரதிகளை கையகபடுத்த முயல்கிறேன்." Ditto. Nan romba late sir. I vaugely remember raja rani jakki kadhai. Seetukattu raja mattum ninaiviruku. Intha puththagatha inayathula tedakuda mudiyala .thalaippu marantiten. Tharseyala than comics ulagam blogspot la kandipudicen. Udane padikkanum nu iruku.aaana kidaikka matenguthe :-(

    ReplyDelete

உங்கள் கருத்து எப்படி இருந்தாலும் கண்டிப்பாக பகிர்ந்துகொண்டே தீரவேண்டும், கருத்தே இல்லை என்றாலும் கூட அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related Posts Widget for Blogs by LinkWithin