கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,
வணக்கம்.
சமீப காலங்களில் பணிச்சுமை காரணமாக என்னால் பதிவுகள் இடவோ அல்லது கமெண்டுகள் இடவோ இயலவில்லை. சக காமிக்ஸ் நண்பர்கள் மன்னிக்கவும். இந்த ஒரு செய்தியை கேள்விப்பட்டவுடன் என்னால் பதிவிடாமல் இருக்க இயலவில்லை. மணிரத்தினத்தின் நாயகன் படத்தில் வரும் இந்த வசனத்திற்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று வினவ வேண்டாம். முழவதுமாக படிக்கவும். பின்னர் இருக்கும் தொடர்பை நீங்களே உணர்வீர்கள்.
ஒரு நூலகத்தில், அதுவும் சிறுவர்கள் சரளமாக வந்து செல்லும் ஒரு நூலகத்தில் உள்ள ஒரு காமிக்ஸ் புத்தகத்தை மற்றவர்களை படிக்க விடாமல் செய்ததற்காக நூலகர் ஒருவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். சரி, தன்னுடைய கடமையில் இருந்து தவறியதற்காக அவரை வேலையிலிருந்து எடுத்து விட்டார்கள் என்று தானே நினைக்கிறீர்கள்? ஒரு பார்வையில் அவர் செய்தது சரிதான் என்றாலும் அவர் தன்னுடைய பார்வையில் சமுதாய பொறுப்புணர்ச்சியோடு செயல்பட்டார் என்று அவருடைய ஊர்க்கார்கள் அவரை பாராட்டுகிறார்கள்.
என்ன ஒரே குழப்பமாக இருக்கிறதா? சரி, சரி விளக்கமாக சொல்கிறேன். லீக் ஆப் எக்ஸ்ட்ராஆர்டினரி ஜென்டில்மேன் என்ற கதை உங்களுக்கு தெரியும்தானே? ஒரு மொக்கை படம்கூட வந்ததே? ஆம், அதே தான். அந்த படத்தை சார்ந்த கதையை ஒரு காமிக்ஸ் புத்தக தொடராக வெளியிட்டு வருகின்றனர். அதில் நான்காம் பாகம் தான் பிளாக் டாச்சியர் என்ற புத்தகம். அந்த புத்தகம் தான் நூலகத்தில் வைக்கப் பட்டு இருந்தது. ஒரு காமிக்ஸ் புத்தகம் நூலகத்தில் இருந்தால் தவறில்லை என்று தானே சொல்கிறீர்கள். ஆம், தவறில்லை தான். ஆனால் அந்த சிறுவர்கள் நூலகத்தில் இந்த புத்தகம் இருந்தது தவறாகும் என்று இந்த நூலகருக்கு பட்டது. ஏனென்றால் அந்த புத்தகத்தில் பல பக்கங்கள் முழு நிர்வாண காட்சிகள் இருக்கின்றன. அதனை சிறுவர்கள் படித்தால் அவர்கள் மனம் அலைபாயும் என்ற சிந்தனையில் அந்த நூலகர் நூலக அதிகாரிகளிடம் அந்த புத்தகத்தை நூலகத்தில் இருந்து நீக்க கோரினார்.
ஆனால், விருதுகள் வாங்கிய ஒரு புத்தகத்தை (2007 ஆம் ஆண்டின் சிறந்த காமிக்ஸ்) நீக்க நிர்வாகம் மறுத்து விட்டது. அதனால் மனம் நொந்த நூலகர் அந்த புத்தகத்தை தொடர்ந்து தானே எடுத்து சென்றார். பல மாதங்களாக அவரே ஒரு புத்தகத்தை தொடர்ந்து சென்றதை நூலக நிர்வாகிகள் கண்டித்தனர். பின்னர் வேறு ஒரு வாசகர் அந்த புத்தகத்தை படிக்க கோரி அதனை வான்டட் லிஸ்ட்டில் சேர்த்தார். ஆனால், நூலகர் ஆகியதால் இருக்கும் விசேஷ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த முயற்சியை தடுத்து விட்டார். ஏனென்றால் அந்த புத்தகத்தை கோரியது ஒரு பனிரெண்டு வயது சிறுமி.
இந்த விடயத்தை கேள்விப்பட்ட நிர்வாகம் அவரை வேலையில் இருந்து நீக்கி விட்டது. இப்போது சொல்லுங்கள், அந்த நூலகர் நல்லவரா கெட்டவரா?
வலையுலகிற்கு மீண்டும் வருக! வருக! வந்து மீண்டும் அற்புத பதிவுகளிட்டு எங்களை ஆனந்தத்தில் ஆழ்த்துக!
ReplyDeleteஅப்புறம், பை த வே, மீ த ஃபர்ஸ்ட்டு!
தலைவர்,
அ.கொ.தீ.க.
நண்பர் காமிக்ஸ் பிரியர் அவர்களே,
ReplyDeleteநல்ல தலைப்பு. அந்த நூலகர் செய்தது சரியே என்று எண்ணுகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்
என்றா பசுபதி,
ReplyDeleteஅந்த நூலகன் செஞ்சது சரிதான்னு நான் தீர்ப்பு சொல்றேண்டா.
நாட்டாமை அவர்களே,
ReplyDeleteஅது என்ன மரியாதை இல்லாமல் நூலகன் என்று சொல்லி இருக்கிறீர்கள்? நூலகர் தானே சரி?
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்
சரிதான்.
ReplyDeleteஇதுக்கெல்லாம் பஞ்சாயித்தா?
விடுங்கப்பு. நான் நாட்டாமை என்பதால் உரிமை எடுத்து நூலகன் என்று கூறினேன்.
வெல்கம் பேக். தொடர்ந்து பதிவிடுங்கள்.
ReplyDeleteamazing story. the librarian has to be appreciated for her societal responsiblity.
ReplyDeletekindly post more regularly, esp on the comics movies topic.
ReplyDeleteHi,
ReplyDeletenew comic blogspot.
thecowboycomics.blospot.com
please visit and comment
காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், அரிசிப் பொங்கல், வீட்டுப் பொங்கல், ஹோட்டல் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteதமிழ் காமிக்ஸ் உலக வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய உளம் கனிந்த மனவமுவர்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஒலக காமிக்ஸ் ரசிகன்,
100% உண்மையான பதிவுகள்.
காமிக்ஸ் வேட்டைக்காரன் - பாகம் இரண்டு
தமிழ் காமிக்ஸ் உலகில் காணவே கிடைக்காத பல அரிய காமிக்ஸ் புத்தகங்களின் அருமையான அணிவகுப்பு. எண்பதுகளிலும் தொன்னுருகளிலும் வெளிவந்த சிறந்த தமிழ் காமிக்ஸ் கதைளின் விவரங்கள்.இரும்புக்கை மாயாவிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பற்றிய செய்திகள். பல அரிய புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு விருந்தாக உள்ளன.
உங்க அளவுக்கு எழுத முடியலைன்னாலும் ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு V FOR VENDETTA பத்தி ஒரு போஸ்ட் ஒன்னு எழுதி இருக்கேன்.....
ReplyDeleteவந்து அவசியம் பாத்துட்டு போங்க தல....
காமிக்ஸ் நண்பர்களே,
ReplyDeleteவேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு வந்து சென்னையில் கிடைக்கும் பல நூறு அரிய காமிக்ஸ் புத்தகங்களை கொள்ளையடித்து, அதனை பதுக்கி செல்கின்றனர். ஆனால் சென்னையில் இருக்கும் பல காமிக்ஸ் ரசிகர்கள் தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை, தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று அவதிப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு வழியே இல்லையா?
புஷ்பவதி பூங்காவனத்தின் புதையல்கள்
இன்ஸ்பெக்டர் இன்பராஜின் விசாரணை - காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1
காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1