Saturday, July 4, 2009

கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் காமிக்ஸ் கதை

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,

வணக்கம்.

டீசர் ஆக இட்டு இருந்த பதிவை பார்த்து உண்மையை கண்டு பிடித்த திரு ஒலக காமிக்ஸ் ரசிகருக்கு நன்றி.ஆம், இன்று என்னுடைய பிறந்த நாள்தான். அதனால் இன்று எனக்கு மிகவும் பிடித்த ஒரு எழுத்தாளரை பற்றி பதிவிடுகிறேன்.

ஆண்டு சரியாக நினைவில்லை - 1985 ஆக இருக்கலாம். நான் அப்போது கல்கண்டு வார இதழின் தொடர் வாசகன். அதில் திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் ஜூனியர் என்ற பெயரில் கேள்வி பதில் பகுதியை வழங்கி வந்தார். மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் லேனா அவர்கள் கூறியவற்றை கண்மூடி ஏற்றுக் கொள்ளும் வாசகர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவன்.

ஒருமுறை இப்படி ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் திரு ராஜேஷ்குமார் அவர்களைப் பற்றி குறிப்பிட்டு இருந்தார். அதுவரையில் நானும் அவர் கதைகளை படித்து வந்தேன். ஆனால் தனி கவனம் எதுவும் செலுத்தியது கிடையாது. ஆனால் இந்த பதிலுக்கு பின்னர் ராஜேஷ் குமார் அவர்களின் கதைகளை தேடிபிடித்து படிக்க ஆரம்பித்தேன்.

அடுத்த வருடம், திரு அசோகன் அவர்கள் கிரைம் நாவல் என்று ஒன்றை ஆரம்பித்து மாத நாவல் உலகில் புரட்சி செய்தார். அந்த கிரைம் நாவலில் திரு ராஜேஷ் குமார் அவர்கள் மாதா மாதம் தொடர்ந்து எழுதினார். எழுதுகிறார். எழுதுவார். அவரின் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் என்னவெனில் ஒவ்வொரு கதையிலும் ஏதாவது ஒரு புதிய விடயத்தை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களின் அறிவை கூட்டும் வகையில் கதைகள் இருப்பதே ஆகும்.

 
கடந்த முறை வீட்டை சீர் செய்யும்போதே இந்த புத்தகம் எனக்கு கிட்டைத்தது. இதனை என்னுடைய பிறந்த நாளில் தான் இட வேண்டும் என்று இத்தனை நாள் காத்து இருந்தேன். இதோ அந்த நாளும் வந்து விட்டதால் இந்த கதையை உங்களுக்கு வழங்குகிறேன்.
 
இந்த கதை கல்கி விடுமுறை மலர் 1983ல வந்தது. விலை ஆறு ருபாய். புத்தக அளவு (புதிய வாசகர்களுக்கு) இந்தியா டுடே சைஸ். நம்முடைய பாஷையில் சொல்வதானால் மெகா டிரீம் ஸ்பெஷல் சைஸ். 320 பக்கங்கள் (அதில் பல பக்கங்கள் முழு வண்ணத்தில்). இதில் பட்டுக் கோட்டை பிரபாகரின் முழு நாவலும் ஒன்று இருந்தது.
 

கல்கி விடுமுறை மலர் 1983 - ராஜேஷ் குமார் காமிக்ஸ் சிறுகதை - ஓவியம் புஜ்ஜாய் - பக்கம் 1

Page 1a

கல்கி விடுமுறை மலர் 1983 - ராஜேஷ் குமார் காமிக்ஸ் சிறுகதை - ஓவியம் புஜ்ஜாய் - பக்கம் 2

page 2

கல்கி விடுமுறை மலர் 1983 - ராஜேஷ் குமார் காமிக்ஸ் சிறுகதை - ஓவியம் புஜ்ஜாய் - பக்கம் 3

page 3

கல்கி விடுமுறை மலர் 1983 - ராஜேஷ் குமார் காமிக்ஸ் சிறுகதை - ஓவியம் புஜ்ஜாய் - பக்கம் 4

page 4

இந்த கதை ஒரு சிறுகதை ஆகும். இதில் வரும் காட்சிகள் ஒரு சீ.ஐ.டி ராபின் கதையை நினைவு படுத்துகின்றன (முத்து காமிக்ஸ்).

இந்த கதையை படிக்கும் சிலர் என்னடா கதை இப்படி மொக்கையாக இருக்கிறதே என்றும் நினைக்கலாம். ஆனால் நண்பர்களே, கதை வெளிவந்த ஆண்டை சற்று கவனியுங்கள். இருபத்தியாறு வருடங்களுக்கு முன்பு இப்படிப் பட்ட கதைகள் எல்லாம் புதுமையே.

இந்த படங்களை வரைந்த திரு புஜ்ஜாய் அவர்களும் ஒரு சிறந்த ஓவியரே. இவரின் கைவண்ணத்தில் பல அற்புதமான சித்திரங்களை நான் கோகுலம், ரத்னபாலா, அமித் காமிக்ஸ் - சங்கர்லால் கதைகள் என்று பல தளங்களில் ரசித்து இருக்கிறேன். மிகச் சிறந்த ஒரு ஓவியர். அய்யம்பாளயத்தார் இவரையும் சற்று கவனித்து ஒரு பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

புதிய வாசகர்கள் என்னுடைய பழைய பதிவுகளை தெரிந்து கொள்ள,

எனது முந்தைய பதிவில் வந்த பட விபரங்கள்

1. டெக்ஸ் வில்லர் படம் - லார்ட் ஆப் த டீப்

2. குண்டன் பில்லி - மினி லயன் ஹீரோ படங்கள்

3. டேன்ஜர் டையபாலிக் - லயன் காமிக்ஸ் ஹீரோ படம்

4. மதி இல்லா மந்திரி (அ) இஸ்நோகுட் - திரைப்படம்

5. ரன்-டன்-ப்ளான்:லக்கிலுக்’ன் சக பாத்திரம்

6. சிஸ்கோ கிட் - அருமையான கௌபாய் படம்

7. விஸ்கி - சுஸ்கி மினி லயன் காமிக்ஸ் அறிமுகம்

காமிக்ஸ் சினிமா அல்லாத என்னுடைய பிற பதிவுகள்

1. ரகசிய ஏஜன்ட் ரஜினி காந்த் பூந்தளிர் காமிக்ஸ்

2.லயன் காமிக்ஸ் இதில் வராத ஸ்பைடரின் எழுத்து கதை

3. தினத் தந்தி பேப்பரில் வந்த ஏஜன்ட் காரிகனின் முழு வண்ண கதை

அடுத்த காமிக்ஸ் படம் மூலம் உங்களை சந்திக்கிறேன், விரைவில்.

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.

33 comments:

  1. மீ த ஃபர்ஸ்ட்டு!

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  2. நன்றி தலைவரே.

    இப்போது பதிவு முழுமையாக உள்ளது. படித்து பாருங்கள். கதையை பற்றிய உங்கள் கருத்தையும் சொல்லுங்கள். பிளீஸ்.

    ReplyDelete
  3. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

    இந்த வருடம் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    இதோ என்னுடைய வழக்கமான வாழ்த்து செய்தி:

    உதிப்பவை எல்லாம் உன்னதமாகட்டும்,

    விரும்பியதெல்லாம் உங்கள் வசமாகட்டும்.

    ReplyDelete
  4. காமிக்ஸ் பிரியரே,

    வேறொரு பதிவில் பிஸியாக இருப்பதால் பிறகு வந்து டீடெயில் ஆக பின்னுட்டமிடுகிறேன். (Rajesh Kumar, Asokan, Crime Novel etc)

    ReplyDelete
  5. நண்பர் காமிக்ஸ் பிரியருக்கு,

    சமீப காலங்களில் உங்கள் பதிவுகள் மிகவும் வித்தியாசமாக இருப்பதோடில்லாமல் இப்படியுமா காமிக்ஸ் வந்து உள்ளது என்று வியக்க வைக்கிறது. பாராட்டுக்கள்.

    என்னுடைய கருத்து என்னவென்றால் இப்படிப் பட்ட சரக்கு நிறைய இருந்தால் நீங்கள் காமிக்ஸ் சினிமா பதிவுகளை மறந்து விடலாம். இவற்றையே தொடரலாம்.

    மறந்தே போனேன், பிறந்த நாள் வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் அதிரடியை.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  6. நண்பர் விஸ்வா அவர்களே,

    //வேறொரு பதிவில் பிஸியாக இருப்பதால் பிறகு வந்து டீடெயில் ஆக பின்னுட்டமிடுகிறேன்//

    நீங்கள் மட்டும்தான் பதிவில் பிஸியாக இருக்கிறீர்களா என்ன?

    சூப்பர்மேன், பேட்மேன், ஸ்பைடர் மேன் என்று சூப்பர் ஹீரோக்கள் பலரை கேள்விப் பட்டு இருப்பீர்கள், படித்தும் இருப்பீர்கள்.

    ஆனால் இதுவரை உங்களுக்கு தெரியாத ஒரு காமிக்ஸ் சூப்பர் ஹீரோவை பற்றிய சிறும்பதிவு ஒன்றை இப்போது இடப் போகிறேன். படித்து மகிழுங்கள்.

    ஒலக காமிக்ஸ் ரசிகன்,
    100% உண்மையான பதிவுகள்.
    Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

    ReplyDelete
  7. நண்பரே,

    26 வருடங்களிற்கு முன்பாக இக்கதை பல ரசிகர்களை கவர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை, முன்பு ராஜேஷ்குமார் நாவல்கள் படித்திருக்கிறேன். அவருக்கென ஒர் தனி ஸ்டைலில் எழுதுவார், குறிப்பாக அவர் பாத்திரங்களின் உரையாடல்கள்.

    சுஜாதா எழுதிய நைலான் கயிறு நூல் கூட ஓவியர் ஜெயின் கை வண்ணத்தில் ஒர் சித்திரக் கதையாக வந்த ஞாபகம் உள்ளது. அதன் பிரதி உங்களிடத்தில் இருக்கிறதா.

    சிறப்பான பதிவு, உற்சாகத்துடன் தொடருங்கள்.

    ReplyDelete
  8. விஸ்வா அவர்களே,

    //பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

    இந்த வருடம் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    இதோ என்னுடைய வழக்கமான வாழ்த்து செய்தி// மிக்க நன்றி. தொடருங்கள் உங்கள் ஆதரவை.

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
    காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

    ReplyDelete
  9. விஸ்வா,

    //காமிக்ஸ் பிரியரே,

    வேறொரு பதிவில் பிஸியாக இருப்பதால் பிறகு வந்து டீடெயில் ஆக பின்னுட்டமிடுகிறேன்//

    மகிழ்வூட்டும் தகவல். பதிவு இன்றே வந்தால் சந்தோஷப் படுவேன்.

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
    காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

    ReplyDelete
  10. ஒலக காமிக்ஸ் ரசிகரே,

    //நண்பர் காமிக்ஸ் பிரியருக்கு,

    சமீப காலங்களில் உங்கள் பதிவுகள் மிகவும் வித்தியாசமாக இருப்பதோடில்லாமல் இப்படியுமா காமிக்ஸ் வந்து உள்ளது என்று வியக்க வைக்கிறது. பாராட்டுக்கள்.

    என்னுடைய கருத்து என்னவென்றால் இப்படிப் பட்ட சரக்கு நிறைய இருந்தால் நீங்கள் காமிக்ஸ் சினிமா பதிவுகளை மறந்து விடலாம். இவற்றையே தொடரலாம்.//

    நன்றி. வித்தியாசமான பதிவுகள் என்று நான் நினைக்கவே இல்லை. இவை சற்று பழைய எளிதில் கிடைக்காத காமிக்ஸ் என்றதால் பதிவிட்டேன். வேறொன்றுமில்லை.

    காமிக்ஸ் சினிமாக்கள் பல உள்ளன. விரைவில் வருகிறேன்.

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
    காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

    ReplyDelete
  11. ஒலக காமிக்ஸ் ரசிகரே,

    //ஆனால் இதுவரை உங்களுக்கு தெரியாத ஒரு காமிக்ஸ் சூப்பர் ஹீரோவை பற்றிய சிறும்பதிவு ஒன்றை இப்போது இடப் போகிறேன். படித்து மகிழுங்கள்.//

    வழமையான உங்கள் பதிவுகளே புதுமையாக த்தான் இருக்கும். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  12. ஷங்கர் அவர்களே,

    //26 வருடங்களிற்கு முன்பாக இக்கதை பல ரசிகர்களை கவர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை, முன்பு ராஜேஷ்குமார் நாவல்கள் படித்திருக்கிறேன். அவருக்கென ஒர் தனி ஸ்டைலில் எழுதுவார், குறிப்பாக அவர் பாத்திரங்களின் உரையாடல்கள்.//

    இதற்காகத் தான் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அனைத்து விஷயங்களையும் தெரிந்து, படித்து வைத்து இருக்கிறீர்கள். மற்றவர்களைப் போல விக்கி பீடியா, கூகிள் என்று தகவல்களை தேடாமல் சொந்த அனுபவங்களை வைத்து எழுதும் உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

    உண்மையில் ராஜேஷ் குமார் கதைகளை படித்தவர்களுக்கு தான் அவரின் அருமை தெரியும். உணர்வு பூர்வமான கமெண்ட் அளித்தமைக்கு நன்றி.

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
    காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

    ReplyDelete
  13. ஷங்கர்,

    //சுஜாதா எழுதிய நைலான் கயிறு நூல் கூட ஓவியர் ஜெயின் கை வண்ணத்தில் ஒர் சித்திரக் கதையாக வந்த ஞாபகம் உள்ளது. அதன் பிரதி உங்களிடத்தில் இருக்கிறதா//

    இந்த கதை தொடர்கதையாக வந்த போது நான் அவற்றை தொகுத்து பைண்டிங் செய்து வைத்து இருக்கிறேன். பின்னர் சுஜாதா மாத நாவலில் மறுபடியும் ரீ பிரிண்ட் செய்த புத்தகமும் என்னிடம் உள்ளது. ஆனால் அந்த சித்திரக் கதை விவரம் புதிது. எந்த பத்திரிகையில் வந்த தொடர் என்று கூற இயலுமா?

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
    காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

    ReplyDelete
  14. many many happy returns of the day.

    happy birth day to you sir.

    ReplyDelete
  15. காமிக்ஸ்பிரியரே, நைலான் கயிறு சித்திரக்கதையாக வந்த பிரசுரத்தின் பெயர் உண்மையிலேயே நினைவில் இல்லை. மன்னிக்கவும்.

    ராஜேஷ் குமாரின் எழுத்துக்களை தாண்டி வந்தவர்கள் இல்லை என்றே நினைக்கிறேன். காகிதப்பூ தேன் எனும் ஒர் கதையை தன் க்ரைம் கதை பாணியியிலிருந்து விடுபட்டு எழுதினார். சாவி வார இதழில் தொடராக அது வெளிவந்தது, நல்ல வரவேற்பையும் அது பெற்றது. அந்த தலைப்பை வீட்டிலிருந்த கரும்பலகையில் கிறுக்குவதே முன்பு மகிழ்ச்சி தரும் விடயமாக இருந்தது.

    அர்ஸ் ஓவியங்களில் மட்டுமல்ல தலைப்பு எழுத்துக்களிலும் தன் ஜித்து வேலைகளைக் காட்டுவார், அவரைப் போல் தலைப்பை எழுத நானும் முயல்வேன் எல்லாம் இளவயது நினைவுகள்.
    உங்கள் பதிவு பழைய நினைவுகளை அலையடிக்க செய்கிறது. நன்றி நண்பரே.

    ReplyDelete
  16. அருமையான பதிவு.

    நன்றாக இருந்தது.

    பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ராஜேஷ் குமாரை எனக்கும் பிடிக்கும். யாருக்கு தான் பிடிக்காது?

    என்னுடைய சில நண்பர்கள் ஆங்கில நாவல்களை விரும்பி படிப்பவர்கள், தவறில்லை. ஆனால் தமிழ் நாவல்காய் ஏனோ இரண்டாம் தரமாக நினைப்பவர்கள். அவர்களை சொல்லி குற்றமில்லை. எல்லாருமே ஹிப்போகிரைட்ஸ்.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
    புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்

    ReplyDelete
  17. காமிக்ஸ் ப்ரியரே!

    உங்களின் காமிக்ஸ் கனவுகள் மெய்ப்பட இந்த பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்!

    //இந்த படங்களை வரைந்த திரு புஜ்ஜாய் அவர்களும் ஒரு சிறந்த ஓவியரே. இவரின் கைவண்ணத்தில் பல அற்புதமான சித்திரங்களை நான் கோகுலம், ரத்னபாலா, அமித் காமிக்ஸ் - சங்கர்லால் கதைகள் என்று பல தளங்களில் ரசித்து இருக்கிறேன். மிகச் சிறந்த ஒரு ஓவியர். அய்யம்பாளயத்தார் இவரையும் சற்று கவனித்து ஒரு பதிவிட்டால் நன்றாக இருக்கும்.//

    உண்மைதான். தினமணிக்கதிர், தினமணி வெள்ளிமணி இதழ்களில் புஜ்ஜாய் வரைந்த மகாபாரதத் தொடர் ஒரு உன்னதான படைப்பு. அத்தொடர் ஆங்கிலத்தில் இருக்கும். அதன் தமிழாக்கத்தையும தருவார்கள். இதன் மூலம் என்னை போன்ற தமிழ் வழிக் கற்றவர்கள் ஆங்கிலம் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அத்தொடர் அமைந்தது. மேலும் சேட்டைகள் செய்யும் ஒரு நாய் கதாப்பாத்திரத்தை கூட அவர் கதிரில் படைத்து வந்தார். அந்த நாயின் சேட்டைகள் ரசிக்கத்தக்கவை. புஜ்ஜாயின் பஞ்சத்தந்திர காமிக்ஸ் கதைகள் தனிப் புத்தகங்களாக வந்துள்ளன.

    எனது காமிக்ஸ் பூக்களில் தமிழ் காமிக்ஸ் முன்னோடிகளை பதிவு செய்யும் முயற்சி தொடர்ந்து இருக்கும். நிச்சயம் நண்பர்களின் உதவியுடன் உங்களது கனவை நனவாக்க முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  18. ஆனாலும் கதையை படிக்க (இந்த வண்ணக் கலவையில்) படிக்க சற்று சிரமமாக தான் இருக்கிறது.

    ரீடிங் பேணலில் கூட வண்ணத்தை சேர்த்தது தவறு தான். செய்து விட்டார்கள். கண்ணை பறிக்கும் அந்த மஞ்சள் வண்ண பார்டர் வேறு.

    இருந்தாலும் நல்லதொரு முயற்சி. இந்த விஷயம் ராஜேஷ் குமாருக்கே நினைவிருக்காது என்று நினைக்கிறேன்.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
    புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்

    ReplyDelete
  19. ராஜேஷ் குமார் அவர்களை பற்று எழுதியமைக்கு நன்றி.

    கதை சுமார்தான், என்றாலும் காமிக்ஸ் வடிவில் வந்த கதை என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்தது. பதிவுக்கு நன்றி.

    உங்களின் அனைத்து பதிவுகளுமே சூப்பர்.

    நீங்கள் ஒரு தனிக்காட்டு ராஜா.

    ReplyDelete
  20. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    இந்த வருடம் சிறந்து விளங்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  21. காமிக்ஸ் பிரியரே,

    பதிவில் பிஸியாக இருந்ததால் முந்தைய பின்னூட்டத்தை விரிவாக இட இயலவில்லை! இதோ அதை ஈடு கட்டும் வகையில் மீண்டும் வந்து விட்டேன்!

    க்ரைம் மன்னன் ராஜேஷ் குமார் எங்க ஊர்க்காரர் என்பது நான் உள்பட கோவை நகர மக்கள் அனைவரும் பெருமைப்படும் விஷயம்!

    அதற்கேற்ற வகையில் அவரும் கோவை நகரின் பிரபல பகுதிகளில் கதைக் களத்தையமைத்து கோவை வாசிகளை மகிழ்ச்சியிலாழ்த்துவார்! ஆனால் இப்போதெல்லாம் சென்னை, தில்லி என்றுதான் கதைகள் எழுதுகிறார்! அதில் கோவை வாசிகளுக்கு கொஞ்சம் வருத்தமே!

    இக்கதையில் கூட காந்திபுரம், 7வது குறுக்கு தெரு எனக் களம் அமைத்து ஊர் ஞாபகம் வரவழைத்துவிட்டார்!

    நாவல்களை நுனிப்புல் மேய்ந்ததோடு சரி! அவற்றை சேமித்து வைத்தது கிடையாது! ரெகுலராகவும் படித்ததில்லை! இப்போது சுத்தமாக படிப்பதில்லை! ராஜேஷ் குமார், PKP, சுபா மூவரையும் சேர்த்து இதுவரை மொத்தம் 40 நாவல் கூட படித்திருக்க மாட்டேன்!

    நாவல்களைப் படித்ததில் நினைவில் நிற்பது க்ரைம் நாவலில் வரும் கோயம்பத்தூரிலிருந்து ட்ரங் கால், விவேக் பதில்கள் பகுதிகளும், சுசீலாவின் டி-ஷர்ட் வாசகங்களும்தான்!

    ஆர்வம் எல்லாம் அப்போதும், இப்போதும், எப்போதும் காமிக்ஸ் மீதுதான்! அதனாலேயே நாவல்களை தவிர்க்க வேண்டியதாயிற்று!

    மீண்டும் ஒரு முறை பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    பி.கு.:- நீங்கள் BORN ON THE FOURTH OF JULY படம் பார்த்திருக்கிறீர்களா?

    ReplyDelete
  22. ஃபுல் டவுன்லோடு போடும் புலா சுலாகி அவர்களே,

    //ஆனாலும் கதையை படிக்க (இந்த வண்ணக் கலவையில்) படிக்க சற்று சிரமமாக தான் இருக்கிறது.//

    உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்!

    வலைப்பதிவர் பாஷையில் கூறுவதாயின்...

    ரிப்பீட்டே...!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  23. காமிக்ஸ் பிரியரே,

    நான் ராஜேஷ்குமாரின் ஆரம்ப கால ரசிகன்.அவரின் வளர்ச்சியை தொடர்ந்து கவனித்து வருபவன். அவர் கதை எழுத ஆரம்பித்த நாட்களில் ராம் குமார் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். அவர் மாதாமதம் ஒரு நாவலை எழுதிக் கொண்டு இருந்தார். அந்த நாவலில் ஒரு முறை ராஜேஷ் குமாரும் ஒரு சிறுகதை எழுதி இருந்தார்.

    அப்போது அந்த ராம் குமாரின் வாசகர்கள் (இதில் எனக்கு சந்தேகமே. உண்மையில் அப்படி யாராவது இருந்தார்களா என்று) ராஜேஷ் குமாரை கண்டித்து இருந்தனர். எதற்காக தெரியுமா? ராஜேஷ்குமார் ராம்குமார் கதாபாத்திரத்தை தன்னுடைய கதையில் வரும் ஒரு நபருக்கு பெயரிட்டு விட்டாராம். அதனால் தான். பின்னர் அந்த வாசகர்களை எல்லாம் கடந்து தமிழின் முன்னணி நாவல் ஆசிரியராக வந்தவர் இவர்.

    இவரின் நேர்மையே இவருக்கு எதிரி. மற்றவர்களுக்காக தன்னுடைய கொள்கைகளை விட்டுக் கொடுக்காததால் தான் இன்னமும் அப்படியே இருக்கிறார்.

    எண்பதுகளின் கடைசியில் ஒருமுறை மட்டமான ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் ஒருவர் இவரிடம் நாவல் எழுதிக் கொடுக்க கேட்க, அப்போது நேரமின்மையால் மறுத்து விட்டார். அதற்க்கு அவர், இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது, அவரது கதைகளை அவருடைய உதவியாளர்கள் தான் எழுதுகிறார்கள் என்றெல்லாம் அவதூறு கிளப்பினார்.

    இதைஎல்லாம் கடந்து அவர் ஜெயித்ததற்கு ஆசிரியர் அசோகன் சாரும் ஒரு காரணம்.

    அவரைப் பற்றிய பதிவிற்கு நன்றி.

    அவரது முதல் கிரைம் நாவல் (1st issue of Crime Novel Published by G.A) நந்தினி 440 வோட்ஸ். நினைவிருக்கிறதா?

    ReplyDelete
  24. அருமையான பதிவு. நன்றி. கல்லூரி நாட்களை நினைவு படுத்தியது உங்கள் பதிவு.

    இப்போதெல்லாம் நாவல்கள்?

    ஹூம், அது ஒரு கனாக் காலம்.


    ஜாலி ஜம்ப்பர்
    தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

    ReplyDelete
  25. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    பல்லாண்டு வாழ்ந்து இது போல பல பதிவுகளை வழங்குக.


    ஜாலி ஜம்ப்பர்
    தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

    ReplyDelete
  26. //பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.//

    happy birth day - belated wishes.

    ReplyDelete
  27. i also like rajesh kumars novels, and pkp,suba etc.

    they are all nice when you read them in the 80s and 90s.

    ReplyDelete
  28. belated happy birth day wishes to you.

    may this yr be a good one to you.

    ReplyDelete
  29. காமிக்ஸ் பிரியரே,
    Belated Birthday Wishes
    Happy BirthDay

    ReplyDelete
  30. 'புஜ்ஜாய்' என்ற பெயரை சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நினைவில் எழவைத்துவி்ட்டீர்கள். அவரது மினிமல் பாணி வித்தியாசமானது.

    ReplyDelete
  31. இப்போது தமிழ் காமிக்ஸ் படிக்க ஏதாவது நல்ல வெப்சைட் இருக்கிறதா? ராஜேஷ்குமார் கதைகள் படிக்க http://www.emagaz.in இருக்கிறது. அங்கும் அவருடைய தமிழ் காமிக்ஸ் நாவல்கள் காணோம்..:-(

    ReplyDelete
  32. (இப்போது தமிழ் காமிக்ஸ் படிக்க ஏதாவது நல்ல வெப்சைட் இருக்கிறதா? ராஜேஷ்குமார் கதைகள் படிக்க http://www.emagaz.in இருக்கிறது. அங்கும் அவருடைய தமிழ் காமிக்ஸ் நாவல்கள் காணோம்..:-()

    Try This blog= http://pula-sulaki.blogspot.com/

    ReplyDelete

உங்கள் கருத்து எப்படி இருந்தாலும் கண்டிப்பாக பகிர்ந்துகொண்டே தீரவேண்டும், கருத்தே இல்லை என்றாலும் கூட அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related Posts Widget for Blogs by LinkWithin