Thursday, January 22, 2009

மதி இல்லா மந்திரி (அ) இஸ்நோகுட் - ஒரு அரசியல் வித்தகர்

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,

வணக்கம். அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துக்கள். இரத்தப் படலம் என்ற அற்புதமான கதையை தழுவி எடுக்கப் பட்ட ஒரு தொலைக் காட்சி தொடரை பற்றி நான் பதிவிட இருந்தேன். ஆனால் நமது காமிக்ஸ் உலகின் முடி சூடிய மன்னர் கிங் விஸ்வா அவர்கள் அதனை பற்றி அனைத்து தகவல்களுடன் பதிவிட்டு விட்டதால், நான் வேறு ஒரு பதிவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.

நான் மற்ற வலை ரோஜாக்களில் (நன்றி - பங்கு வேட்டையர்) கமெண்ட் இடுவது இல்லை என்ற ஒரு (உண்மையான) குற்றசாட்டு இருப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் நான் என்னுடைய வீட்டின் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்ததால் எந்த வலைப் பதிவையும் என்னால் படிக்க இயலவில்லை. மன்னிக்கவும்.

இந்த பதிவை நான் சற்று அவசரத்தில் இடுவதால் தீர்கமாக ஆராய இயலவில்லை. மன்னிக்கவும். நம்முடைய மினி லயன் காமிக்ஸ் புத்தகத்தில் வர வேண்டிய ஒரு கதை ஆகும். ஆனால் அந்த புத்தகம் நின்று விட்டதால் லயன் காமிக்ஸ்'ல் இந்த அற்புதமான கதாபாத்திரம் தோன்றினார்.


இந்த கதாபாத்திரத்தை உருவாக்கியவர் நமக்கு எல்லாம் நன்கு பரிச்சயம் ஆன ஆஸ்ட்ரிக்ஸ் மற்றும் லக்கிலுக் ஆகிய பாத்திரங்களின் மூலகர்த்தா கோச்சினி ஆவார். ஆனால் இந்த தொடருக்கு படம் வரைந்தது ஜான் டபரி என்பவர் ஆவார். 1961ல் ரெகார்ட் என்ற இதழில் தான் முதன் முதலில் மதி இல்லா மந்திரி தோன்றினார். சில வருடங்கள் பின், ரெகார்ட் இதழ் நின்று விட்டது. அதனால் இரு வருடங்கள் வராமல் இருந்த மதி இல்லா மந்திரி தொடர் பின்னர் 1968ல் பைலட் என்ற மாத இதழ் மூலம் மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்த தொடரின் ஆரம்பமே ஒரு நம்ப முடியாத கதை ஆகும். முதலில் ஒரு துப்பறியும் காமெடி கதையை தான் இந்த இருவரும் இணைந்து வெளியிடுவதாக இருந்தது. ஆனால், சிறுவர்களுக்கான ஒரு சம்மர் கேம்பில் மத்திய வேலையில் கூறப்பட்ட ஒரு சிறுவர் கதையின் ஆரம்ப வரிகளை கொண்டே இந்த கதை எழுதப்பட்டது என்பது பலருக்கு தெரியாது.
கோச்சினி இருக்கும் வரை வெளி வந்த கதைகள் 13 ஆகும். அவர் இயற்கை எய்த பின் டபரி வெளியிட்ட கதைகள் 14 ஆகும். ஆக மொத்தம் மதி இல்லா மந்திரியின் கதைகள் மொத்தம் 27 ஆகும். இதை தவிர 1995'இல் புருனோ பியாங்கி'இன் இயக்கத்தில் ஒரு கார்டூன் தொடரும் வெளிவந்தது.
கோச்ச்சினி எழுதிய கதைகள் அனைத்தும் மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்ய இயலாததாக கருதப் பட்டது. ஏனெனில் இந்த கதைகளில் உள்ள நகைச்சுவை அனைத்தும் வார்த்தை விளையாட்டுகளால் நிறைந்தவை. எனவே இவற்றை தமிழில் (எனக்கு தெரிந்த வரை ஆசியாவில்) முதன் முறையாக மொழி மாற்றம் செய்து அற்புதமாக கொண்டு வந்த திரு விஜயன் அவர்களை என்றென்றும் மறக்க இயலாது.


இயக்குனர் : Patrick Braoudé
படம் வெளியானது: 9 February 2005
இஸ்நோகுட் : Michaël Youn
சுல்தான் ஹாருன் : Jacques Villeret
இஸ்நோகுட்'ன் அடிமை : Arno Chevrier
மதி இல்லா மந்திரியின் பொக்கிஷக் கூடம் : பிரத்யேக வலை தளம்
மதி இல்லா மந்திரி படம் டவுன்லோட் செய்ய: இந்த பக்கம் பாருங்கோ
மதி இல்லா மந்திரி பட விபரங்கள் பற்றி அறிய: இங்கு வாருங்கள்
மதி இல்லா மந்திரி விபரங்கள் டவுன்லோட் செய்ய : இங்கு குத்துங்கள் மதி இல்லா மந்திரி டவுன்லோட் செய்ய: இங்கே கிளிக் செய்யவும்
மதி இல்லா மந்திரி காமிக்ஸ் டவுன்லோட் செய்ய: இங்கே கிளிக் செய்யவும்

இந்தப் படத்தை வாய்ப்பு கிடைப்பவர்கள் தவறாது பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மறக்காமல் உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமாக இட்டுச்செல்லுங்கள். இந்தப் பதிவை பொறுமையுடன் படித்ததற்கு நன்றி!

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும். மீண்டும் சந்திப்போம். விரைவில்.

9 comments:

  1. அய்யா க.கொ.க.கூ. அன்பரே,

    காமிக்ஸ் வலையுலகில் உங்களுக்கு என்று தனியிடம் உருவக்கிக் கொண்டு தொடர்ந்து அதிரடிப் பதிவுகளை இட்டு வருகிறீர்கள்! வாழ்த்துக்கள்!

    தெரியாத பல அரிய காமிக்ஸ் பற்றிய திரைப்படங்களைப் பற்றி தகவல்களை அள்ளித் தருவதில் உம்மை மிஞ்ச ஆளில்லை.

    இந்தப் படம் ஆங்கிலத்தில் உள்ளதா என சந்தேகம் எழுகிறது! தீர்த்து வைக்கவும்! ஆங்கில சப்-டைட்டிலாவது உள்ளதா?

    கிங் விஸ்வா, நீங்கள் ஏன் க.கொ.க.கூ.வை முந்திக் கொண்டு பதிவிட்டீர்கள்! பாவம் அவர்! (ஹீ!ஹீ!ஹீ!)

    தொடர்ந்து கலக்குங்கள்!

    பை தி வே. மீ த ஃபர்ஸ்ட்டு!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  2. அன்பரே,

    சிறப்பான தேடலுடன், அருமையான பதிவு. தொடர்ந்து கலக்குங்கள். சில கருத்துக்களை இடுகிறேன் தவறாக எண்ணாதீர்கள்.

    இஸ்னோகுட்டின் கடைசி ஆல்பம் அதாவது 28 வது ஆல்பம் ஆக்டோபர் 2008ல் வெளியாகியுள்ளது, விரைவாக பதிவிட்டபடியால் அது உங்கள் கண்களிலிருந்து தப்பியிருக்கலாம்.தலைப்பு கலீஃபின் 1001 இரவுகள்.சிறுவர்களிற்கு வழங்கப்படும் கிறிஸ்மஸ் பண்டிகை பரிசுகளில் இடம்பெற வேண்டியே வருட இறுதி வெளியீடு என்பது நண்பர்களிற்கு கூறத்தேவையில்லை.

    படத்தினை பார்த்திருக்கிறேன், காரணம் 1- சதி செய்யும் மந்திரியாக வரும் மிக்கேல் யூன், இவர் எப்படிப்பட்டவர் என்றால் , கையில் ஒர் ஒலிபெருக்கியில் கத்திக்கொண்டே வீதிகளில் நிர்வாணமாக ஓடக்கூடியவர். அவர் அப்படி செய்த அட்டகாசங்கள் யாவும் அவர் தொகுத்து வழங்கிய தொலைக்காட்ச்சி நிகழ்சிக்காகத்தான்.பிரான்ஸின் M6 சேனலின் MATIN6 நிகழ்சிக்காக அவர் செய்த கோமாளிக்கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

    2-JACQUES VILLERET. பிரென்சு வெகுஜன சினிமாவின் அற்புதமான கலைஞன். அப்பாவி கலிஃப் பாத்திரத்திற்கு இவரை விட யாரும் பொருந்துவார்களோ தெரியாது. 2 வாரங்களின் முன்பு இவரின் A CRIME IN PARADISE எனும் திரைப்படத்தினை தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்தார்கள், கொடுமையான மனைவியினிடம் வேதனைப்படும் அப்பாவி கணவனாக வெளுத்து வாங்கியிருப்பார் ஜக் வில்லரே. தான் வளர்க்கும் ஆடுகளிற்கு கதை சொல்லும் காட்சி.. சொல்ல வார்த்தைகள் இல்லை.

    இருப்பினும் கலிஃபின் இடத்தில் கலிஃப் படம் சுமார் ரகமே. பெரிதான வெற்றியும் கிட்டவில்லை.

    முத்து, லயன் காமிக்ஸ்கள் தமிழிற்கு வழங்கியுள்ள கதைகள் சிறப்பானவையே அப்பட்டியலில் இஸ்னோகுட் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.

    இவ்வாறான சிறப்பான பதிவுகளை தொடர்ந்து வழங்கிடுங்கள் என வேண்டுகிறேன்.

    உற்சாகத்துடன் தொடருங்கள்.

    ReplyDelete
  3. க.கொ.க.கூ நண்பரே,

    மிகவும் நன்றி. இப்படி ஒரு படம் வந்து இருப்பதை எங்களுக்கு தெரியப் படுத்தியதற்கு.

    //இரத்தப் படலம் என்ற அற்புதமான கதையை தழுவி எடுக்கப் பட்ட ஒரு தொலைக் காட்சி தொடரை பற்றி நான் பதிவிட இருந்தேன். ஆனால் நமது காமிக்ஸ் உலகின் முடி சூடிய மன்னர் கிங் விஸ்வா அவர்கள் அதனை பற்றி அனைத்து தகவல்களுடன் பதிவிட்டு விட்டதால், நான் வேறு ஒரு பதிவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது// + //கிங் விஸ்வா, நீங்கள் ஏன் க.கொ.க.கூ.வை முந்திக் கொண்டு பதிவிட்டீர்கள்! பாவம் அவர்//

    முகமில்லா மாயாவியாக நீங்கள் இருப்பதால் ஏற்படும் இன்னல்களில் இதுவும் ஒன்று. நீங்கள் யார், என்ன என்பது தெரிந்து, நாம் அடுத்து என்ன பதிவு இட போகிறோம் என்பதை நாம் கலந்து (தொலைபேசியில்) பேசி இருந்தால் இந்த சிரமத்தை தவிர்த்து இருக்கலாம். இருந்தாலும் நீங்கள் இந்த பதிவை தான் இடப் போகிறேன் என்று தெரிந்து இருந்தால் நான் அந்த பதிவை இட்டு இருக்க மாட்டேன். மன்னியுங்கள்.

    காமிக்ஸ் என்பது ஒரு மாபெரும் கடல். அதில் நீங்கள் மீன் பிடிக்கும் இடத்தில் நான் வந்து மீன் பிடிக்காமல் பார்த்து கொள்வேன். எனக்கென்று ஒரு சுறாவோ, திமிங்கிலமோ இல்லாமலா போய் விடும்?

    அடுத்த முறை பதிவிடும்போது சற்று நிதானமாக இடுங்கள். ஏனென்றால் உங்கள் தனித்திறமை நீங்கள் செய்யும் இந்த ஆராய்ச்சி மற்றும் காமிக்ஸ் + படங்கள் குறித்தான உங்கள் ரசனையே ஆகும். எனவே அதனை தொடருங்கள். நீங்கள் இட்ட பதிவுகள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்.

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  4. Iznogud - Carobni stroj
    Code:
    http://rapidshare.com/files/91997543/Carobni_stroj.rar

    Iznogud - Car carolije, Carobna pesma, Dan ludih, Duh iz ogledala, Dvojnici, Formula nevidljivosti, Glava Velikog Mogula, Gledi, pa se sledi, Izbori u kalifatu, Iznogudov povratak, Jaja43aja, Lavirint, Na krstarenju, Nesrecni pozlatar, Nevidljiva opasnost
    Code:
    http://rapidshare.com/files/92012505/Iznogud_1.rar

    Iznogud - Ostrvo ljudozdera, Ostrvo suvenira, Placenici, Poklon, Poverljivi ljudi, Poziv na megdan, Put u Nedodjin, Sargarepa za Iznoguda, Sesir, Skiptar, Sluzbeni put, Strasna zverka, Tatarski talisman, Uspeh, Velika zbrka, Zaba u Kalifatu, Zagonetni otrovi
    Code:
    http://rapidshare.com/files/92028836/Iznogud_2.rar

    ReplyDelete
  5. VERY GOOD POST ON THIS CHARACTER. THERE WAS A CARTOON SERIES WHICH WAS BROADCASTED IN INDIA ALSO IN HE LATE 90S. CAN YOU GET ME THE LINK FOR THAT CARTOON SERIES?

    ReplyDelete
  6. From The Desk Of Rebel Ravi:

    you have been introducing all comics related movies to us. thanks for that.

    what is in store now?

    Rebel Ravi,
    Change is the Only constant thing in this world.

    ReplyDelete
  7. Hiya,

    very well research again to dig down these wonderful comics related movies to all of us. thanks to you anonymous friend.

    ReplyDelete
  8. படத்தின் டவுன்லோட் விபரங்களை வழங்கிய பெயரில்லா நண்பருக்கு நன்றி.

    கிங் விஸ்வா.

    ReplyDelete
  9. cinebookindia 12 புத்தகங்களை வெளியிட்டுள்ளார்கள். அனைத்தையும் வாங்க வேண்டும்.

    ReplyDelete

உங்கள் கருத்து எப்படி இருந்தாலும் கண்டிப்பாக பகிர்ந்துகொண்டே தீரவேண்டும், கருத்தே இல்லை என்றாலும் கூட அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related Posts Widget for Blogs by LinkWithin