Showing posts with label க.கொ.க.கூ. Show all posts
Showing posts with label க.கொ.க.கூ. Show all posts

Saturday, November 15, 2008

க.கொ.க.கூ என்றால் என்ன?


கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரதத்தின் ரத்தமே,

தமிழில் தொன்று தொட்டு வரும் காமிக்ஸ்'ஆகிய முத்துவின் முதல் இதழான 'இரும்புக்கை மாயாவி'யில் மாயாவி 'க.கொ.க.கூ.' (கடத்தல் கொலை கலகக் கூட்டமைப்பு) என்னும் இயக்கத்துக்கு எதிராக போராடுவார், இதுவே எங்கள் / நமது இயக்கமாகும். கீழே முத்து காமிக்ஸ்'இன் லோகோ உள்ளது. புதிதாக காமிக்ஸ் பற்றி படிப்பவர்கள் தெரிந்து கொள்ள இது உதவும்.



பின்னர் 'மர்மத்தீவில் மாயாவி' கதையிலும் இக்கூட்டத்தைச் சேர்ந்த 'ஸ்கார்ல்' எனும் வில்லனோடு மோதுவார். இந்த ஸ்கார்ல் தான் நமது அப்போதைய தலைவர். இதோ, அந்த கதையின் தமிழில் வந்த பதிப்பும் & ஆங்கிலத்தில் வந்த பதிப்பின் அட்டை படங்கள்.



க.கொ.க.கூ.வின் ஒரிஜினல் பெயர் 'F.E.A.R.' (Federation of Extortion, Assassination and Rebellion) என்பதாகும். இவர்கள் காமிக்ஸ் உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு அமைப்பினர் ஆவர்கள். இவர்கள் பிலீட்வே என்னும் ஒரு லண்டனை சேர்ந்த பதிப்பகத்தின் சித்திர கதைகளில் வரும் அமைப்பினர்.இது தான் முத்து காமிக்ஸ்'இன் முதல் இதழ் அட்டை படம். இந்த கதையில் தான் நமது இயக்கம் முதன்முதலில் உலகிற்கு தெரிய வர ஆரம்பித்தது.


இது, முத்து காமிக்ஸ்' பதிப்பகத்தின் ஆங்கில இதழான மோடி காமிக்ஸ்'இன் அட்டை படம். இந்த புத்தகம் மிகவும் அரிதான ஒன்றாகும்.


இந்த இதழ் தான் நாம் மேலே பாத்த இதழ்களின் அப்பா (மூலகர்த்தா). ஆம், இதுதான் மேற்கூறிய புத்தகங்களின் ஒரிஜினல்.

இது மற்றுமொரு ஆங்கில இதழின் அட்டை.

இங்கு பாருங்கள் கண்மணிகளே, இப்படி தான் நாம் நம்மை உலகிற்கு தெரிவித்தோம். ஒரு விளம்பரம்தான். உடனே உடன் பிறப்புகள் கேட்கலாம்: நெருப்பிற்கு எதற்கு தீக்குச்சி? என்று. ஆனால், இன்றைய சந்தைமயமாகிவிட்ட உலகில், விளம்பரம் இல்லாமல் எதுவுமே இல்லை.

இது மற்றுமொரு ஆங்கில இதழின் அட்டை.


வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. தயவு செய்து உங்களின் கருத்துகளை பதிவு செய்து கழக கண்மணிகளாக மாறுங்கள். நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்..
Related Posts Widget for Blogs by LinkWithin