கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,
வணக்கம்.
சமீப காலங்களில் என்னால் வலையுலகம் பக்கமே வர இயலவில்லை. மன்னிக்கவும். அதற்குள் பார்த்தால் என்னவெல்லாமோ நடந்து இருக்கிறது. தமிழ் காமிக்ஸ் உலகின் முடி சூடிய மன்னரை காணவில்லை. அவருக்கு தொடர்ந்து விண்ணப்பங்கள் அனுப்பிக் கொண்டே இருக்கிறேன்.
இந்த தருணத்தில் தான் இந்த கதையை படித்தேன். இந்த கதையை விட இதன் பின்புலம் எனக்கு மிகவும் பிடித்தமான் ஒன்றாகும். விடா முயற்சிக்கு விக்கிரமாதித்தனை உதாரணம் கூறுவது அம்புலிமாமா கதை மூலம் தான் பிரபலம் அடைத்தது என்பதை கூறவும் வேண்டுமா என்ன?
ஓவியர் ஷங்கர் அவர்களின் கைவண்ணத்தில் வரையப் பட்ட அம்புலிமாமா விக்கிரமாதித்தன் கதையின் முதல் பக்கங்கள் மற்றும் அந்த வசனமும் ஓவியமும் யாராலும் மறக்க இயலாது. இந்த கதையில் இருக்கும் சித்திரங்கள் அவற்றில் ஒரு பங்கு அளவுக்கு கூட இல்லை என்றாலும் இந்த கதை தொடர் காமிக்ஸ் வடிவத்தில் வந்தது என்பதை சரித்திரத்தில் கூற இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விட்டதால் இந்த பதிவு இடப் படுகிறது.
இந்த கதைத் தொடர் சிறுவர் இலக்கியத்தில் மிகவும் புகழ் பெற்றதோடில்லாமல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றும் கூட. ஏனெனில், ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு கருத்து சொல்லப் பட்டு இருக்கும். அதன் மூலம் சிறுவர்களுக்கு நீதி போதனை புகட்ட இது ஒரு சிறந்த ஊடகமாக உபயோகப் படுத்தப் பட்டு வந்தது.
இதன் மூலம் சொல்லப் படும் கருத்துக்கள் சிறுவர்களின் மனதில் ஆழ இடம் பிடித்தது என்பது மறுக்க இயலாத உண்மை ஆகும். நண்பர் அய்யம்பாலயத்தார் அவர்களை அம்புலிமாமா தொடரின் விக்கிரமாதித்தன் கதைகளை பற்றிய ஒரு ஆய்வுக்கு அழைக்கிறேன்.
அடுத்த காமிக்ஸ் பதிவு மூலம் உங்களை சந்திக்கிறேன், விரைவில்.
நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.
அருமை. நீண்ட நாள் கழித்து வந்ததால் ரத்தின சுருக்க பதிவோ?
ReplyDeleteரமேஷ்
காமிக்ஸ் பிரியரே,
ReplyDeleteஎங்கே நீங்களும் வனவாசம் சென்று விட்டீரோ என்று இருந்தேன். நல்ல வேளை.
நல்ல முயற்சி. ஆனால் படங்களும், எழுத்துக்களும் இந்த முயற்சியை பாழ் செய்து விட்டன.
உண்மையில் இது போன்ற கதைகளை காமிக்ஸ் வடிவில் சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் இந்த மாதிரி இல்லாமல் இன்னமும் சற்று நல்ல முறையில் செய்ய வேண்டும்.
தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
THanks for this info.
ReplyDeleteby the way, which book/comics/magazine is this one?
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteகடைசி வரை இது எந்த புத்தகத்தில் இருந்து ஸ்கான் செய்யப் பட்டவை என்பதை சொல்லவே இல்லையே?
நோக்கம் நல்லதாக இருந்தாலும் அதனை செயல்படுத்திய விதம் மனதை நோக செய்கின்றது.
தரம் என்பது கிலோ என்ன விலை என்று வினவும் வகையில் இவை உள்ளது.
அதைப் போலவே அம்புலிமாமா ஓவியர் ஷங்கருடன் இந்த ஓவியங்களை இணைத்து பார்க்கவே முடியாது. அவருடைய ஓவியங்களில் பின்புலத்துக்கு மிகுந்த சிரத்தை கொண்டு வரைந்து இருப்பார்.
ReplyDeleteதரையில் இருக்கும் புல், பூண்டு போன்றவற்றையும் கூட அவர் சிறப்பாக வரைந்து இருப்பார். இந்த ஓவியர் யார் என்பது தெரிய வந்ததா?
ஐயன்மீர்,
ReplyDeleteஒலக காமிக்ஸ் ரசிகர் செய்ய வேண்டிய பணியை நீங்கள் ஏன் செய்கிறீர்கள்? இது ஒரு சிறந்த மொக்கை கதையாக எனக்கு படுகிறது. கருத்து தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்
காமிக்ஸ் பிரியரே,
ReplyDeleteஎனக்கு ஒரு சந்தேகம்.
வேதாளத்தினை என் ஒரு டிராகன் போல வரைந்தார்கள் என்பதை எனக்கு கேட்டு சொல்வீர்களா?
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்
I think it is from "COMIC WORLD" tamil edition. Am i right?
ReplyDeleteசிவ,
ReplyDeleteஇப்போதுதான் நினைவுக்கு வருகிறது. ஆம், இது கொமிக் வார்ல்ட் என்ற புத்தகத்தில் இருந்து தான் வந்தது.
நன்றி சிவ. நினைவு படுத்தியதற்கு.
ReplyDeleteதொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
never heard such a comics or series. thanks for sharing.
ReplyDeletereminds me of the good old ambulimama days when they used to be in such a high quality unlike the present day trash.
ReplyDeleteசிறுவயதில் களவாக அப்பாவிடம் பணம் திருடி அம்புலிமாமா வாங்கி இந்த கதை வாசிக்கும் ஞாபகம் மீள வருகின்றது.
ReplyDeleteஅருமையான பதிவிற்கு நன்றி நண்பரே. தொடர்ந்து பதியுங்கள்
Mr. J Comics
சிறுவயதில் படித்த விக்கிரமாதித்தன் கதைகளை நினைவு படுத்தியதற்கு நன்றி காமிக்ஸ் பிரியன் அவர்களே. நான் விக்கிரமாதித்தன் கதைகளை முழு புத்தகமாக படித்து உள்ளேன். ஆனால் காமிக்ஸ் வடிவத்தில் பார்த்தித்த்ில்லை நன்றி
ReplyDeleteLovingly,
Limat
Browse Comics
My father(Mr. S.Swaminathan) i sthe one who was writing and editing the stories of "ambulimama" till 2000.One Mr.Shankar and Mr.chitra were doing the drawings for the stories.If you would like to know more in detail u can contact him at his residence 6/3 Gangotri apartments,6th cross street,Trustpuram,Kodambakkam,Chennai 600 024)
ReplyDeleteI am the son of Sankar, the long term artist of Chandamama (Ambulimama in Tamil). I do know my father's drawings and these are not his. They are from other magazine and not from Ambulimama. If any one has noticed intently, they could find that these stories were referred as "Kalpana Vethal Stories" - as a fine print. The reason for this, is that the actual Vethal stories were limited. In the early 50s and 60s, they were exhausted and Chandamama management wanted to continue providing entertainment further. I have read both the original Vethal stories (called Periya Ezuthu Vikaramadithan Kathaigal - means - Big Letter Vikramadithan stories) and even sometimes asked my father why the closing is different. That is the time I learnt that these were "Imaginary Vethal Stories". My father is 92 and still manages to draw once in a way. We have lost the collection of the magazines during one of the floods in Chennai and I am actually looking for old magazines to digitize and put on web. Any one having the old Ambulimama magazine may contact me at Sivarkkamani@yahoo.com. Thanks.
ReplyDelete