Friday, August 28, 2009

XIII இரத்தப் படலம் 2010 மே மாதம் வெளியாகும் - அதிகாரபூர்வமான அறிவிப்பு

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,

வணக்கம்.

இந்த பதிவின் தலைப்பை பார்த்து அதிர்ச்சி அடைய வேண்டாம் தோழர்களே. முழுமையான தகவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த பதிவு நம்முடைய லயன் காமிக்ஸ் ஜம்போ ஸ்பெஷல் குறித்த வெளியீடு அல்ல.

ஆங்கிலத்தில் சினிபுக் நிறுவனதினாரால் ரத்தப் படலம் அடுத்த ஆண்டு மே மாதம் முதல மாதம் ஒரு பாகமாக அனைத்து பாகங்களையும் (பத்தொன்பது) தனியாக வெளியிட ஒப்பந்தம் செய்து முடித்து அதனை பற்றிய அதிகாரபூர்வமான வெளியீட்டை அவர்களின் தளத்தில் வெளியிட்டு உள்ளனர். இங்கே கிளிக் செய்து அதனை படிக்கவும்.


என்னை பொறுத்த வரையில் அவர்கள் நான்காம் பாகத்தில் இருந்து ஆரம்பிப்பது அவர்களின் நிறுவனத்துக்கு நல்லது. ஏனென்றால், இதுவரையில் ஆங்கிலத்தில் இந்த தொடரை இரண்டு நிறுவனத்தினர் வெளியிட முயன்று உள்ளனர். அவர்கள் இருவருமே மூன்று பாகம் தான் வெளியிட முடிந்தது. அதன் பிறகு அவர்கள் நிறுவனங்கள் அடைந்த கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.

உண்மையில் சொன்னால் பதிமூன்று (13 - XIII) எப்படி ஒரு ராசியில்லாத எண்ணோ, அதனைப் போலவே தான் இந்த கதையை பிரசுரிக்க முயல்கிறவர்கள் அனைவருமே கஷ்டப் படுகிறார்கள். நம்முடைய லயன் காமிக்ஸ் எடிட்டரும் கூட எவ்வளவோ முயல்கிறார். ஆனால், முடியவில்லை. இன்னமும் கூட அறுநூரை தாண்டவில்லையாம் முன்பதிவு எண்ணிக்கை.

கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒரு புத்தகம் சினி புக் மூலம் வாங்கினால் (அதாவது அந்த புத்தகங்கள் இந்தியா வந்தால்) அதன் குறைந்த பட்ச விலை இருநூறு ரூபாயாக இருக்கும். அப்படியானால் பதினெட்டு பாகங்களுக்கு கணக்கு போட்டு பாருங்கள். ஆனால், நம்முடைய லயன் காமிக்ஸ் ஆசிரியர் அந்த பதினெட்டு பாகங்களையும் வெறும் இருநூறு ரூபாய்க்கே தருகிறார். ஆனாலும் அதனை வாங்க நம்மில் பலருக்கு மனம் வரவில்லை. என்ன கொடுமை ஐயா இது?

தொலைகாட்சி தொடராகவும் இந்த கதை வந்தது என்பதை கிங் விஸ்வா அவர்களின் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். இன்னமும் பார்க்கவில்லை. குறுந்தகடு வரவில்லையாம். காத்திருக்கிறேன்.

தரவிரக்கம் செய்ய Mega Up-Load Links:

http://www.megaupload.com/?d=BYEO6MA9

http://www.megaupload.com/?d=6NGO2PBA

 

Iceberg 1 Front Cover Sevinthiya Kudiyiruppu Wrapper-I

படங்கள் உபயம் - கிங் விஸ்வா'வின் தமிழ் காமிக்ஸ் உலகம்.

இந்த கதை தொடர் இலங்கையில் இருந்து வந்த ஐஸ்பர்க் காமிக்ஸ் மூலமும் வெளிவந்தது என்பது குறிப்பிடத் தக்கது. நண்பர் விஸ்வா அதனை பற்றி பதிவிட்டதன் மூலமே தெரிந்து கொள்ள முடிந்தது.

அடுத்த காமிக்ஸ் பதிவு மூலம் உங்களை சந்திக்கிறேன், விரைவில்.

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.

26 comments:

  1. நான் கூட உண்மையில் அவ்வளவு தாமதம் ஆகிவிடுமோ என்று பயந்து கொண்டே வந்து பார்த்தால் இது சினி புக் பற்றிய பதிவு. எனினும் வரவேற்கத்தக்க ஒரு விடயம்.

    தொடருங்கள் உங்கள் பதிவுகளை.

    தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
    தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

    ReplyDelete
  2. அந்த தொலைக் கட்சி தொடர் அந்த அளவுக்கு ஒன்றும் பிரம்மாதமாக இல்லை. பாகம் ஐந்தை ஒரேயடியாக முழுங்கி விட்டார்கள்.

    தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
    தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

    ReplyDelete
  3. got shocked when i saw the title in the side bar.

    ha ha ha, very nice and timely reminder about the pricings.

    hey, just now completed the latest lucky luke book from cine book. will be posting it after i do

    a. iznogoud review
    b. clifton review and
    c. another golden oldie comics from India.

    ReplyDelete
  4. thanks for the download links, though.

    ReplyDelete
  5. காமிக்ஸ் பிரியரே,

    சினிபுக் ஏன் இதுவரை XIII தொடரை வெளியிடவில்லை என்பது மனதில் ஒர் கேள்வியாகவே இருந்தது, பின்பு சினிபுக் பற்றி நன்கு தெரிந்த நண்பர் ஒருவர் அத்தொடரின் உரிமைகளை வாங்குவதற்கான ஏற்பாடுகள் சினிபுக்கால் நடத்தப்பட்டு வருகிறது என்பதை அறியத் தந்தார்.

    உங்கள் பதிவின் வழி அது நிறைவேறி விட்டது என்பதை அறிந்து கொண்டேன்.

    லயன் காமிக்ஸ் குறித்து எனக்கு எந்தவிதத்திலும் ஆட்சேபணை இல்லை. இருப்பினும் காமிக்ஸ் ரசிகர்கள் XIII ஐ வண்ணத்தில் படிப்பது ஒர் வித்தியாசமான அனுபவத்தை அவர்களிற்கு தரும்.

    வான்ஸின் ஓவியங்களை வண்ணத்திலும், கறுப்பு வெள்ளையிலும் ஒப்பிட்டுப்பாருங்கள்[ விஸ்வா கூட இதனை அவர் தன் பதிவில் பனிநிறைந்த மலை நகரம் ஒன்றைக் காட்டி தெளிவு படுத்தியிருப்பார் என நினைக்கிறேன்] அது உங்களிற்கு தரும் உணர்வுகள் நிச்சயம் வேறுபடும்.

    சினிபுக் XIIIஐ வெளியிடுவது லயன் காமிக்ஸை தன் ராட்சஸ ஸ்பெசலை முன் கூட்டி வெளியிட தூண்டும் வாய்ப்புக்கள் உண்டு. நீங்கள் கூறியபடி மாதம் ஒரு ஆல்பம் எனில் 2011 மார்ச்சில்தான் சினிபுக் 10வது ஆல்பத்தை வெளியிடும்- பொதுவாக இரு ஆல்பங்களை கொண்ட தொகுதிகளாக வெளியிடுவது அவர்கள் வழக்கம்- லயன் முந்திக் கொள்ளும் என்றே கருதுகிறேன்.

    13 ராசியில்லா நம்பர் இல்லாமலிருக்கலாம், ஆனால் XIII டார்கோ[ட்] வின் பொன் வாத்து. ஆக்டோபரில் இரினா குறித்த ஆல்பம் வெளியாகிறது. சினிபுக் வெற்றி பெறும் என்பது என் கருத்து. பொறுத்திருந்து பார்ப்போம்.

    நல்லதோர் பதிவு தொடருங்கள் உங்கள் அதிரடிகளை.

    ReplyDelete
  6. காமிக்ஸ் பிரியனே ,
    ஒரு நிமிடம் என்னை கதி கலங்க செய்து விட்டீர்கள் . Cinebook XIII தொடரை வெளிஇடுவது மகிழ்ச்சியே . ஆனால் நான் மிகவும் எதிர்பார்பது லயன் காமிக்ஸ் Collector's ஸ்பெஷல் தான் .

    நானும் XIII TV தொடரை பார்த்தேன் . என்னை ஒன்றும் அவ்வளவாக அது ஈர்க்கவில்லை . இன்றையை காலத்திற்கு ஏற்ப எடுத்திருப்பார்கள் .

    அன்புடன் ,
    லக்கி லிமட்
    காமிக்ஸ் உலவல்

    ReplyDelete
  7. (Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...
    நான் கூட உண்மையில் அவ்வளவு தாமதம் ஆகிவிடுமோ என்று பயந்து கொண்டே வந்து பார்த்தால் இது சினி புக் பற்றிய பதிவு. எனினும் வரவேற்கத்தக்க ஒரு விடயம்)

    இது போல பலரை உடனடியாக பார்க்க செய்யவே இந்த குறும்பு தலைப்பு. மன்னிக்கவும்.

    ReplyDelete
  8. (Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...
    அந்த தொலைக் கட்சி தொடர் அந்த அளவுக்கு ஒன்றும் பிரம்மாதமாக இல்லை. பாகம் ஐந்தை ஒரேயடியாக முழுங்கி விட்டார்கள்.)

    தொலைக்காட்சி தொடருக்கு பெரிய அளவில் பட்ஜெட் கிடையாது என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். வால் கில்மருக்கு வேறு வயதாகி விட்டதால் மொக்கையாக இருக்கிறார்.

    ReplyDelete
  9. Vedha: it was the intention of me to make sure everyone checks the post by seeing the title alone. sorry had i managed to trouble you.

    your next set of posts are very interesting. please continue.

    ReplyDelete
  10. (கனவுகளின் காதலன் said...
    காமிக்ஸ் பிரியரே,
    சினிபுக் ஏன் இதுவரை XIII தொடரை வெளியிடவில்லை என்பது மனதில் ஒர் கேள்வியாகவே இருந்தது, பின்பு சினிபுக் பற்றி நன்கு தெரிந்த நண்பர் ஒருவர் அத்தொடரின் உரிமைகளை வாங்குவதற்கான ஏற்பாடுகள் சினிபுக்கால் நடத்தப்பட்டு வருகிறது என்பதை அறியத் தந்தார்.)

    அது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை நண்பரே. தொடர்ந்து அவர்களது தளத்தை கவனித்தாலே அவர்கள் தரும் தகவலை கொண்டு இப்படி "நன்கு தெரிந்து" கொள்ளலாம். இப்போது கூட அவர்கள் ஏதோ ஒரு காம்ப்ரமைஸ் செய்தே வெளியிடுகிறார்கள்.

    ReplyDelete
  11. கனவுகளின் காதலனே,

    கருப்பு வெள்ளைக்கும் வண்ணத்தில் படிப்பதற்கும் உண்மையில் நிறைய வித்தியாசம் இருந்தாலும் economies of scale அதனை மட்டுப் படுத்துகிறது. இந்த இருநூறு ரூபாய்க்கே இங்கே அவர் லாட்டரி அடிக்கிறார். இந்த நிலையில் அவர் முழு வண்ணத்தில் வெளியிட வேண்டுமானால் அவர் சினி புக் போல ருபாய் மூவாயிரத்து ஐந்நூறு என்று நிர்ணயிக்க வேண்டும். அதனை ஆங்கிலத்தில் வாங்க பலர் தயாராக இருப்பார்கள். தமிழில் வாங்க யார் இருக்கிறார்கள்?

    பதிமூன்று என்பது அதன் ஒரிஜினல் பதிப்பகத்திற்கு மிகவும் ராசியான என்னே. ஆனால் அதனை மொழி பெயர்த்து வெளியிடுபவருக்கே இத்தனை சிரமங்கள்.

    ReplyDelete
  12. லக்கி லிமட்,

    பதிவின் தலைப்புக்கு மன்னிக்கவும். நானும் லயன் காமிக்ஸ் புத்தகத்திற்கே காத்துக் கொண்டு இருக்கிறேன். நமது தாய் மொழியில் படிப்பதே ஒரு அலாதி சுகம் அல்லவா?

    தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  13. காமிக்ஸ்பிரியரே,

    என் நண்பர் என்னைவிட சினிபுக் குறித்து நன்கு தெரிந்தவர் என்பது எனக்கு கம்பசூத்திரம் அல்ல.

    சினிபுக் தளத்தில் தகவல் வருமுன்பாகவே,[ உங்கள் பதிவின் பின் சென்று பார்த்ததில்] ஒரு மாதகாலம் முன்பாகவே அவர் இத்தகவலை எனக்கு தெரிவித்திருந்தார்.

    "நன்கு தெரிந்து" கொள்வது இதுதான் என்று நான் நினைக்கிறேன். என் நண்பர் "நன்கு தெரிந்து" கொண்டவராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. அது எல்லாரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டியதில்லை என்பதையும் உணர்கிறேன்.

    இருநூறு ரூபாய்க்கு லாட்டரி அடிக்கிறார் எனில் அதில் வாசகர்களிற்கு மட்டும் தான் பங்கு உண்டு என்று நீங்கள் உண்மையாகவே கருதுகிறீர்களா?

    3500 ரூபாய்க்கு தமிழில் காமிக்ஸ் என்ன பிரபல எழுத்தாளர் எழுதிய புத்தகத்தையே வாங்க தமிழ் வாசகர்கள் தயாராக இருப்பார்களா தெரியாது, உண்மையில் இந்தியப் பெறுமதி 470 ரூ கொண்ட சினிபுக்குகளையே வாசகர்கள் இந்தியாவில் 200ற்கு வாங்கிக் கொள்ள முடிகிறது. திரு. விஜயன் மட்டுமல்ல, சினிபுக்கும் வாசகர்களை தெரிந்துதான் வைத்திருக்கிறது.

    ReplyDelete
  14. கனவுகளின் காதலனே,

    மன்னிக்கவும். நான் கூறியதை நீங்கள் தவறான முறையில் புரிந்து கொண்டீர்களோ என்பதே என் எண்ணம். "நன்கு தெரிந்து" என்பது ஒரு வார்த்தை பிரயோகம். அதனை இந்த அளவுக்கு நீங்கள் எடுத்துக் கொண்டது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

    ஏனென்றால் மே மாத இறுதியில் எடுக்கப் பட்ட ஒரு பேட்டியில் சினி புக் நிறுவன தலைவர் இதனை கூறி இருந்தார். மேலும் இங்கிலாந்தில் நடந்த ஒரு புத்தக கண்காட்சியில் இதனை அவர் மேடையேறி (ஜூன் மாதம்) கூறி இருந்தார். அந்த முயற்சிகளை அப்போதே பலர் அறிவார்கள். மேலும் நான் கூட இதனை கூறி இருக்கலாம், ஆனால் அதிகார பூர்வமான அறிவிப்பு நேற்று தான் வந்தது. அதனால் தான் நேற்று இந்த பதிவை இட்டேன்.

    மற்றபடி நான் உங்களையோ, உங்கள் நண்பரையோ புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  15. //3500 ரூபாய்க்கு தமிழில் காமிக்ஸ் என்ன பிரபல எழுத்தாளர் எழுதிய புத்தகத்தையே வாங்க தமிழ் வாசகர்கள் தயாராக இருப்பார்களா தெரியாது, உண்மையில் இந்தியப் பெறுமதி 470 ரூ கொண்ட சினிபுக்குகளையே வாசகர்கள் இந்தியாவில் 200ற்கு வாங்கிக் கொள்ள முடிகிறது. திரு. விஜயன் மட்டுமல்ல, சினிபுக்கும் வாசகர்களை தெரிந்துதான் வைத்திருக்கிறது//

    என்பது கோடி அளவில் மார்கெட் சைஸ் கொண்ட தமிழ் புத்தக உலகில் (தினசரி, வார, மாத, இதழ்களை தவிர்த்து பதிப்பகத்தாரை மட்டும் கொண்டது இந்த கணக்கு) ருபாய் மூவாயிரத்து ஐந்நூறு என்பது சற்று பெரிய தொகை தான். ஆனால் தனி புத்தகமாக இதனை பார்த்தால் ருபாய் முநூற்றி ஐம்பது (இரண்டு பாகங்கள்).

    சுமார் இருபது சதவீதம் லாபம் எடுக்கும் பதிப்பகங்கள் ஆண்டுக்கு பதினைந்து சதவீதம் வளர்ச்சி கொண்டுள்ள நடைமுறையில் இந்த விலை விகிதம் சாத்தியமே. இதுவரையில் திறமையான மார்கெட்டிங் செய்த பதிப்பகம் ஏதாவது உள்ளதா என்று கூறுங்கள்.

    நண்பரே, சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் மிகப் பெரிய பத்திரிக்கை / பதிப்பக குழுமத்தில் இருந்து வெளியே வந்து தனி நிறுவனம் ஆரம்பிக்க நினைத்தேன். நண்பர்கள் முயற்சியால் அது தடை பட்டு உள்ளது. இந்த ஆண்டு டிஸ்டிரிபியுஷன் ஆரம்பிக்கலாம் என்று சினி புக் நிறுவனத்தினரிடம் பேசியும் இருந்தேன். நிதி நிலைமை கைகூடவில்லை, சினி புக் நிறுவனத்தினர் உண்மையில் அடுத்த கட்டத்திற்கு போனாலும், அவர்களும் சில இடங்களில் சறுக்கியே உள்ளனர். இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் அவர்களின் புத்தகங்கள் முன்னணி கடைகளில் கிடைப்பதில்லை என்பதே இதற்க்கு சான்று.

    ReplyDelete
  16. //இருநூறு ரூபாய்க்கு லாட்டரி அடிக்கிறார் எனில் அதில் வாசகர்களிற்கு மட்டும் தான் பங்கு உண்டு என்று நீங்கள் உண்மையாகவே கருதுகிறீர்களா?//

    வாசகர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லாத எந்த ஒரு ஊடகமும் விஷத்தை போன்றதே. உதாரணமாக சண் குழுமத்தினர் தமிழ் தொலைகாட்சி நேயர்களை இன்னனும் அதல பாதாளத்திர்ற்கு கொண்டு செல்கின்றனர்.

    இதில் லயன் காமிக்ஸ் நிறுவனமும் விதி விலக்கல்ல. தன்னுடைய வாசகர்களை அடுத்த கட்ட நிலைமைக்கு கொண்டு செல்லாமல் இன்னமும் அவர்கள் யோசித்துக் கொண்டே இருக்கின்றனர். சமீபத்திய உதாரணம் - விலையை நிர்ணயம் செய்வதில் உள்ள சிக்கல்களும் அவர்கள் எடுத்த முடிவும். வாசகர்கள் பங்கு என்பது எதுவரையில்? அதனால் உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். இதில் முழுக்க முழுக்க ஆசிரியரின் பங்கே தவிர வாசகர்களின் பங்கு இல்லை.

    ReplyDelete
  17. காமிக்ஸ் பிரியரே,

    என் கருத்திற்கு மனமுவந்து பதில் தந்திருப்பதற்கு முதலில் என் மனமார்ந்த நன்றிகள்.

    உங்கள் பதிலைப் படித்தபின் மனதில் தோன்றியதை அப்படியே எழுதினேன். வேறு எந்தக் காரணமும் இல்லை. நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமும் இல்லை.

    தமிழ் பதிப்புலகம் குறித்து எனக்கு அதிகம் தெரியாது, ஆயினும் தங்கள் புத்தகங்கள் விற்கவில்லையே என்று புலம்பும் ஆசிரியர்களையும், பதிப்பகங்களையும்தான் பெரும்பாலும் காணக்கூடியதாக இருக்கிறது. விதிவிலக்கு காலச்சுவடு பதிப்பகம், தங்கள் புத்தகம் நன்றாக விற்கிறது என்று கூறுகிறார்கள்.

    சினிபுக்கிற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அமெரிக்காவில் ஐரோப்பிய காமிக்ஸ் புத்தகங்களிற்குரிய வரவேற்பு எப்படி இருக்கிறது என்பது உங்களிற்குத் தெரியும். எனவே அமெரிக்க சந்தை என்பது அவர்களால் வெல்லப்படமுடியாத ஒன்றாகவே போய்விடலாம். இருப்பினும் இந்தியாவில் சினிபுக் நிலைபெற வேண்டுமென நான் விரும்புகிறேன். அவர்கள் மூலமாவது வாசகர்கள் அடுத்தகட்டத்திற்கு செல்லட்டும்.

    உண்மையைக் கூறுங்கள், நெடுநாள் ரசிகர்களையும், கிளாசிக் கதை காதலர்களையும் தவிர அண்மையில் வெளியாகிய லயன், முத்துக் காமிக்ஸ் இதழ்கள் ஒர் புதிய வாசகனை அடுத்த வெளியீட்டை வாங்கத்தூண்டுமா?

    உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். தளராதீர்கள், வெற்றி உங்களிற்கே.

    ReplyDelete
  18. நண்பரே,

    தலைப்பை இப்படி வைத்து ஒரேயடியாக பயமுறுத்தி விட்டீரே? இருந்தாலும் பயனுள்ள தகவல்.

    பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  19. லயன் காமிக்ஸ் ஜம்போ ஸ்பெஷல் பொங்கலுக்கு சிறப்பு இதழாக வருவதாக ஒரு உறுதிப் படுத்தப் படாத தகவல். வந்தால் நலம். நண்பர்கள் கூறியதைப் போல நமது தாய் மொழியில் படிப்பதில் உள்ள சுகமே தனி.

    ReplyDelete
  20. தலைப்பைப் பார்த்து ஓடி வந்து வாசித்தால் அப்படியா சங்கதி என்று ஆகிவிட்டது. இந்தியாவில் ரூபா 200 இலங்கையை வந்தடைய இலங்கைப் பணம் ரூபா 1000ஐ தொடும். தகவலுக்கு நன்றி நண்பரே

    Mr J Comics

    ReplyDelete
  21. thanks for the info, mate.

    ReplyDelete
  22. Any update reg Lion XIII special??

    ReplyDelete
  23. நன்கு தெரிந்த நண்பர்September 3, 2009 at 12:32 PM

    who am i?

    ReplyDelete
  24. நண்பரே,

    இந்த தகவலுக்கு நன்றி. அடுத்து எப்போது நீங்கள் காமிக்ஸ் பற்றிய திரைப் படங்களை பதிவிடப் போகிறீர்கள் என்று சொல்லுங்களேன்?

    அடுத்ததாக ஒரு சிறிய விளம்பரம் - நானும் ஒரு பிளாக் ஆரம்பித்து இருக்கிறேன். ஒரு முறை பாருங்களேன்?

    காமிக்ஸ் காதலன்
    பொக்கிஷம் - நீங்கள் விரும்பிய சித்திரக் கதை பககங்கள்
    யார் இந்த மரண அடி மல்லப்பா?

    ReplyDelete
  25. இணையத்தில் இந்தப்புத்தகங்களை வாசிக்க ஏதாவது வ்ழி சொல்லுங்களேன் தயவு செய்து மிகவும் உபயோகமாக இருக்கும்!!

    ReplyDelete

உங்கள் கருத்து எப்படி இருந்தாலும் கண்டிப்பாக பகிர்ந்துகொண்டே தீரவேண்டும், கருத்தே இல்லை என்றாலும் கூட அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related Posts Widget for Blogs by LinkWithin