Friday, July 31, 2009

விக்கிரமாதித்தனும் வேதாளமும் - மனம் தளராமல் முயற்சித்தல்

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,

வணக்கம்.

சமீப காலங்களில் என்னால் வலையுலகம் பக்கமே வர இயலவில்லை. மன்னிக்கவும். அதற்குள் பார்த்தால் என்னவெல்லாமோ நடந்து இருக்கிறது. தமிழ் காமிக்ஸ் உலகின் முடி சூடிய மன்னரை காணவில்லை. அவருக்கு தொடர்ந்து விண்ணப்பங்கள் அனுப்பிக் கொண்டே இருக்கிறேன்.

இந்த தருணத்தில் தான் இந்த கதையை படித்தேன். இந்த கதையை விட இதன் பின்புலம் எனக்கு மிகவும் பிடித்தமான் ஒன்றாகும். விடா முயற்சிக்கு விக்கிரமாதித்தனை உதாரணம் கூறுவது அம்புலிமாமா கதை மூலம் தான் பிரபலம் அடைத்தது என்பதை கூறவும் வேண்டுமா என்ன?

ஓவியர் ஷங்கர் அவர்களின் கைவண்ணத்தில் வரையப் பட்ட அம்புலிமாமா விக்கிரமாதித்தன் கதையின் முதல் பக்கங்கள் மற்றும் அந்த வசனமும் ஓவியமும் யாராலும் மறக்க இயலாது. இந்த கதையில் இருக்கும் சித்திரங்கள் அவற்றில் ஒரு பங்கு அளவுக்கு கூட இல்லை என்றாலும் இந்த கதை தொடர் காமிக்ஸ் வடிவத்தில் வந்தது என்பதை சரித்திரத்தில் கூற இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விட்டதால் இந்த பதிவு இடப் படுகிறது.

விக்கிரமாதித்தனும் வேதாளமும் தொடர் - வேதாள கதைகள் - பக்கம் :1

King Vikram & Vetal

விக்கிரமாதித்தனும் வேதாளமும் தொடர் - வேதாள கதைகள் - பக்கம் :2

King Vikram & Vetal 2

விக்கிரமாதித்தனும் வேதாளமும் தொடர் - வேதாள கதைகள் - பக்கம் :3

King Vikram & Vetal 3

விக்கிரமாதித்தனும் வேதாளமும் தொடர் - வேதாள கதைகள் - பக்கம் :4

King Vikram & Vetal 4

இந்த கதைத் தொடர் சிறுவர் இலக்கியத்தில் மிகவும் புகழ் பெற்றதோடில்லாமல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றும் கூட. ஏனெனில், ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு கருத்து சொல்லப் பட்டு இருக்கும். அதன் மூலம் சிறுவர்களுக்கு நீதி போதனை புகட்ட இது ஒரு சிறந்த ஊடகமாக உபயோகப் படுத்தப் பட்டு வந்தது.

இதன் மூலம் சொல்லப் படும் கருத்துக்கள் சிறுவர்களின் மனதில் ஆழ இடம் பிடித்தது என்பது மறுக்க இயலாத உண்மை ஆகும். நண்பர் அய்யம்பாலயத்தார் அவர்களை அம்புலிமாமா தொடரின் விக்கிரமாதித்தன் கதைகளை பற்றிய ஒரு ஆய்வுக்கு அழைக்கிறேன்.

அடுத்த காமிக்ஸ் பதிவு மூலம் உங்களை சந்திக்கிறேன், விரைவில்.

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.

Saturday, July 4, 2009

கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் காமிக்ஸ் கதை

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,

வணக்கம்.

டீசர் ஆக இட்டு இருந்த பதிவை பார்த்து உண்மையை கண்டு பிடித்த திரு ஒலக காமிக்ஸ் ரசிகருக்கு நன்றி.ஆம், இன்று என்னுடைய பிறந்த நாள்தான். அதனால் இன்று எனக்கு மிகவும் பிடித்த ஒரு எழுத்தாளரை பற்றி பதிவிடுகிறேன்.

ஆண்டு சரியாக நினைவில்லை - 1985 ஆக இருக்கலாம். நான் அப்போது கல்கண்டு வார இதழின் தொடர் வாசகன். அதில் திரு லேனா தமிழ்வாணன் அவர்கள் ஜூனியர் என்ற பெயரில் கேள்வி பதில் பகுதியை வழங்கி வந்தார். மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் லேனா அவர்கள் கூறியவற்றை கண்மூடி ஏற்றுக் கொள்ளும் வாசகர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவன்.

ஒருமுறை இப்படி ஒரு கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் திரு ராஜேஷ்குமார் அவர்களைப் பற்றி குறிப்பிட்டு இருந்தார். அதுவரையில் நானும் அவர் கதைகளை படித்து வந்தேன். ஆனால் தனி கவனம் எதுவும் செலுத்தியது கிடையாது. ஆனால் இந்த பதிலுக்கு பின்னர் ராஜேஷ் குமார் அவர்களின் கதைகளை தேடிபிடித்து படிக்க ஆரம்பித்தேன்.

அடுத்த வருடம், திரு அசோகன் அவர்கள் கிரைம் நாவல் என்று ஒன்றை ஆரம்பித்து மாத நாவல் உலகில் புரட்சி செய்தார். அந்த கிரைம் நாவலில் திரு ராஜேஷ் குமார் அவர்கள் மாதா மாதம் தொடர்ந்து எழுதினார். எழுதுகிறார். எழுதுவார். அவரின் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் என்னவெனில் ஒவ்வொரு கதையிலும் ஏதாவது ஒரு புதிய விடயத்தை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களின் அறிவை கூட்டும் வகையில் கதைகள் இருப்பதே ஆகும்.

 
கடந்த முறை வீட்டை சீர் செய்யும்போதே இந்த புத்தகம் எனக்கு கிட்டைத்தது. இதனை என்னுடைய பிறந்த நாளில் தான் இட வேண்டும் என்று இத்தனை நாள் காத்து இருந்தேன். இதோ அந்த நாளும் வந்து விட்டதால் இந்த கதையை உங்களுக்கு வழங்குகிறேன்.
 
இந்த கதை கல்கி விடுமுறை மலர் 1983ல வந்தது. விலை ஆறு ருபாய். புத்தக அளவு (புதிய வாசகர்களுக்கு) இந்தியா டுடே சைஸ். நம்முடைய பாஷையில் சொல்வதானால் மெகா டிரீம் ஸ்பெஷல் சைஸ். 320 பக்கங்கள் (அதில் பல பக்கங்கள் முழு வண்ணத்தில்). இதில் பட்டுக் கோட்டை பிரபாகரின் முழு நாவலும் ஒன்று இருந்தது.
 

கல்கி விடுமுறை மலர் 1983 - ராஜேஷ் குமார் காமிக்ஸ் சிறுகதை - ஓவியம் புஜ்ஜாய் - பக்கம் 1

Page 1a

கல்கி விடுமுறை மலர் 1983 - ராஜேஷ் குமார் காமிக்ஸ் சிறுகதை - ஓவியம் புஜ்ஜாய் - பக்கம் 2

page 2

கல்கி விடுமுறை மலர் 1983 - ராஜேஷ் குமார் காமிக்ஸ் சிறுகதை - ஓவியம் புஜ்ஜாய் - பக்கம் 3

page 3

கல்கி விடுமுறை மலர் 1983 - ராஜேஷ் குமார் காமிக்ஸ் சிறுகதை - ஓவியம் புஜ்ஜாய் - பக்கம் 4

page 4

இந்த கதை ஒரு சிறுகதை ஆகும். இதில் வரும் காட்சிகள் ஒரு சீ.ஐ.டி ராபின் கதையை நினைவு படுத்துகின்றன (முத்து காமிக்ஸ்).

இந்த கதையை படிக்கும் சிலர் என்னடா கதை இப்படி மொக்கையாக இருக்கிறதே என்றும் நினைக்கலாம். ஆனால் நண்பர்களே, கதை வெளிவந்த ஆண்டை சற்று கவனியுங்கள். இருபத்தியாறு வருடங்களுக்கு முன்பு இப்படிப் பட்ட கதைகள் எல்லாம் புதுமையே.

இந்த படங்களை வரைந்த திரு புஜ்ஜாய் அவர்களும் ஒரு சிறந்த ஓவியரே. இவரின் கைவண்ணத்தில் பல அற்புதமான சித்திரங்களை நான் கோகுலம், ரத்னபாலா, அமித் காமிக்ஸ் - சங்கர்லால் கதைகள் என்று பல தளங்களில் ரசித்து இருக்கிறேன். மிகச் சிறந்த ஒரு ஓவியர். அய்யம்பாளயத்தார் இவரையும் சற்று கவனித்து ஒரு பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

புதிய வாசகர்கள் என்னுடைய பழைய பதிவுகளை தெரிந்து கொள்ள,

எனது முந்தைய பதிவில் வந்த பட விபரங்கள்

1. டெக்ஸ் வில்லர் படம் - லார்ட் ஆப் த டீப்

2. குண்டன் பில்லி - மினி லயன் ஹீரோ படங்கள்

3. டேன்ஜர் டையபாலிக் - லயன் காமிக்ஸ் ஹீரோ படம்

4. மதி இல்லா மந்திரி (அ) இஸ்நோகுட் - திரைப்படம்

5. ரன்-டன்-ப்ளான்:லக்கிலுக்’ன் சக பாத்திரம்

6. சிஸ்கோ கிட் - அருமையான கௌபாய் படம்

7. விஸ்கி - சுஸ்கி மினி லயன் காமிக்ஸ் அறிமுகம்

காமிக்ஸ் சினிமா அல்லாத என்னுடைய பிற பதிவுகள்

1. ரகசிய ஏஜன்ட் ரஜினி காந்த் பூந்தளிர் காமிக்ஸ்

2.லயன் காமிக்ஸ் இதில் வராத ஸ்பைடரின் எழுத்து கதை

3. தினத் தந்தி பேப்பரில் வந்த ஏஜன்ட் காரிகனின் முழு வண்ண கதை

அடுத்த காமிக்ஸ் படம் மூலம் உங்களை சந்திக்கிறேன், விரைவில்.

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.

ஜூலை நான்கு சிறப்பு பதிவு - கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ் குமாரின் காமிக்ஸ் கதை

ஜூலை மாதம் நான்காம் தேதி என்ன ஸ்பெஷல்? என்று தானே கேட்கிறீர்கள்.

அந்த விடையை யூகிக்க உங்களுக்கு நான் பதினெட்டு மணி நேர அவகாசம் தருகிறேன். இந்த பதிவும் ஜூலை நான்காம் தேதியின் விவரமும் நாளை மாலை ஆறு மணிக்கு.

சரியாக சொல்பவர்களுக்கு ஒரு சிறப்பு பரிசு உண்டு.
Type in your answers NOW........
Related Posts Widget for Blogs by LinkWithin