Tuesday, April 14, 2009

The Phantom – King of the Jungle – 1943 TV Serial

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,

வணக்கம்.

மன்னிக்கவும். பணிமாற்றம் காரணமாக நான் அடுத்த மாதம் வேறிடம் செல்ல வேண்டி உள்ளது. அதன் காரணமாக மறுபடியும் பல பிரச்சினைகள், சிக்கல்கள், சோதனைகள் இதர.இதர.பணிமாற்ற உத்தரவு உறுதி ஆனதில் இருந்து மறுபடியும் பதிவிடும் எண்ணமே வரவில்லை.

ஆனால் நான் என்னுடைய சொந்தக் கதை சோகக்கதையை சொல்ல இந்த பதிவை இடவில்லை. இந்த பதிவு தமிழ் காமிக்ஸ் உலகின் முடிசூடிய மன்னர் கிங் விஸ்வா அவர்களின் பிறந்த நாள் ஸ்பெஷல் பதிவு ஆகும். இன்று (ஏப்ரல் மாதம் பதினான்காம் நாள் அவருடைய பிறந்த நாள் என்பதை முத்து விசிறி அவர்களின் ஒரு பதிவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் கூறியதை வைத்தே இந்த கணிப்பு). பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே. தொடருங்கள் உங்கள் சேவையை.

அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த பதிவு இருக்க வேண்டும் என்பதால் தமிழ் காமிக்ஸ் உலகில் அறிமுகம் ஆகிய காமிக்ஸ் ஹீரோக்களை மையமாக வைத்து வந்த திரைப் படங்களின் வரிசையில் இன்னும் பத்திற்கும் மேற்பட்டவை தயாராக உள்ள நிலையில் விஸ்வா அவர்களின் பிறந்த நாளைக்கு என்ன பதிவிடலாம் என்று யோசித்த போது தான் என்னுடைய நினைவுக்கு வந்தவர் காமிக்ஸ் உலகின் முதல் சூப்பர் ஹீரோ. ஆம், சுமார் எழுபத்தி மூன்று வருடங்களுக்கு முன்னர் முதன் முதலாக காமிக்ஸ் வடிவில் வந்து நம்மை மகிழ்வித்த வேதாளரே நமது ஹீரோ.

முதன் முதலில் அறுபதுகளின் ஆரம்பத்தில் இந்திரஜால் காமிக்ஸ் இதழில் வேதாளன் என்றும், பின்னர் அறுபதுகளின் மத்தியில் குமுதம் இதழில் முகமூடி என்றும், எழுபதுகளின் மத்தியில் முத்து காமிக்ஸ் இதழ்களில் வேதாளர் என்றும்,தொண்ணுருகளின் ஆரம்பத்தில் ராணி காமிக்ஸ் இதழில் மாயாவி என்றும் பல வகைகளில் அழைக்கப்பட்ட ஒரு கதாநாயகனை பற்றிய பதிவு இது. ஆங்கிலத்தில் பேன்டம் Phantom என்று அழைக்கப் பட்டவர் இவர். வேதாளன் இதுவரையில் இந்தியாவில் தமிழிலும் ஆங்கிலத்திலும் தோன்றியுள்ள இதழ்கள்:

வேதளனின் முதல் இந்திரஜால் காமிக்ஸ் கதை 1964 மார்ச்குமுதம் இதழ் 28th July 1966 முகமூடி முதல் பகுதி (நன்றி சாத்தான்)
Indrajal Comics 1st issue March 1964 Kumudham July 28 1966 Phantom
வேதாளனின் முதல் முத்து காமிக்ஸ் வெளியிடு N0: 58முதல் ராணி காமிக்ஸ் மாயாவி இதழ் 140 - 1st May 1990
muthu comics 58 Rani Comics 1st Pahntom May 1990
டைமண்ட் காமிக்ஸ் வேதாளன் முதல் இதழ் June 1990த இந்தியன் எக்ஸ்பிரெஸ் Egmont வேதாளன் முதல் இதழ்
Diamond Comics 1st Phantom June 1990 The Indian Express Egmont Phantom 1 2000
கோமிக் வோல்ட் முதல் இதழ் அட்டையில் வேதாளன் Oct 1998வேதாளனின் முதல்கதை கோமிக்வோல்ட் 3வது இதழ் Dec 1998
Comic World 1 1st Phantom Story Oct 1998 Comic World 3 1st Phantom Story Dec 1998

வேதாளர் - தொலைக் காட்சி தொடர் (பதினைந்து பாகங்கள்) 1943

The Phantom 1943 Serial Original DVD Cover

தொடரின் பெயர்The Phantom
ஆரம்பித்த நாள்24th Dec 1943
மொழி ஆங்கிலம்
மூலக்கதைLee Falk
திரைக்கதைMorgan Cox
தயாரிப்புColumbia Pictures

இயக்குனர்

B. Reeves Eason
மொத்த பாகங்கள்15 பாகங்கள்
நிமிடங்கள்299 நிமிடங்கள்
வேதாளர்Tom Tyler
டயானாJeanne Bates
டாக்டர் மேக்ஸ் பிரேம்மர்Kenneth MacDonald
விஞ்சானி டேவிட்சன்Frank Shannon

1943 TVS stills Scene 1 1943 TVS stills Scene 2 1943 TVS stills Scene 3

கதை: சொலோஸ் என்ற ஒரு பழங்கால நகரை கண்டுபிடிக்க புரொபெசர் டேவிட்சன் ஒரு மேப்'ஐ முழுமை செய்ய வேண்டும். மொத்தம் ஏழு துண்டுகளை ஒன்றாக சேர்த்தாலே அந்த மேப் முழுமை பெரும். புரொபெசர் டேவிட்சன் மூன்று துண்டுகளை வைத்து உள்ளார். மற்ற துண்டுகளை கண்டுபிடிக்க அவர் முயல்கிறார். அவருடைய ஆராய்ச்சி குழுவில் அவரின் அழகிய மகள் டயானா மற்றும் பலர் உள்ளனர்.

அந்த சொலோஸ் என்ற ஒரு பழங்கால நகரை டாக்டர் மேக்ஸ் பிரேம்மர் கண்டு பிடிக்க துடிக்கிறார். ஏனெனில் அந்த நகரை கண்டு பிடித்து அதனை தன்னுடைய ரகசிய ராணுவ தளமாக்க எண்ணுகிறார். அதற்க்கு தடையாக இருந்த வேதாலனை ஒரு விஷ அம்பின் மூலம் கொன்று விடுகிறார். அடுத்த வேதாளர் (இறந்த வேதாளரின் மகன்) இந்த சதி முயற்சியை எப்படி தடுக்கிறார் என்பதே கதை ஆகும்.

1943 TVS stills Scene 4 1943 TVS stills Scene 5 1943 TVS stills Scene 6

இனி இந்த படத்தின் விமர்சனத்திற்கு வருவோம்:

  • வேதாளன் கதை எழுதப்பட்டு ஏழு வருடங்களுக்குள் ஆரம்பிக்கப்பட்ட தொடர் என்பதால் நிறைய எதிர்பார்க்க வேண்டாம்.
  • மேலும் தொலைகாட்சி தொடர் என்பதால் ஒவ்வொரு வாரமும் திருப்பம் வேண்டும் என்பதால் செயற்கையாக சில சிக்கல்களையும், முடிச்சுகளையும், ஆபத்தான கட்டங்களையும் உருவாக்கி இருப்பார்கள்.
  • உதாரணமாக ஒவ்வொரு வாரத்தின் முடிவிலும் வேதாளன் ஏதாவது ஒரு ஆபத்தில் சிக்கி இருப்பார். அவரின் உயிர் ஆபத்தில் இருக்கும். சதிகாரர்களின் வலையில் (வலிய) சென்று சிக்கி இருப்பார். அந்த வாரத்தொடர் முடியும் போது திரையில் "Can the Phantom escape the clutches of the angry lion?" "Will Diana be rescued?" "Tune in next week" என்று முடியும்.
  • முக்கால்வாசி கட்டங்களில் அவரை காப்பாற்றுவது அவரது வளர்ப்பு பிராணி டெவில் ஆகும். தவறாக இருந்தாலும் கூறுவதில் தப்பில்லை. இந்த தொடரின் மொத்த நடிகர்களில் டெவில் தான் சிறப்பான் பங்களித்து உள்ளது.
1943 TVS stills Scene 7 1943 TVS stills Scene 8 1943 TVS stills Scene 9

இந்த தொடரை சிறப்பாக விளம்பரப் படுத்தி இருப்பார்கள். இப்போது வரும் படங்களில் எல்லாம் ஏதாவது ஒரு பன்ச் லைன் இருக்கும். ஆனால் இந்த விஷயத்தை ஹாலிவுட்காரர்கள் அப்போதே செய்து விட்டார்கள். இதோ அந்த தொடரின் சில பல பன்ச் லைன்கள்:

  • THE AMAZING PHANTOM COMES TO THRILLING LIFE ON THE SCREEN!
  • AMERICA'S FAVORITE CARTOON HERO...NOW ON THE SCREEN!
  • He's here...he's everywhere...STRIKING FEAR in the hearts of his country's enemies!
  • The most fantastic...most exciting serial ever made!
  • He strikes like lightning! He fights like a madman! He flies through space 1000 miles a minutes in this 1000 thrills-a-minute SERIAL!

இந்த தொடரில் சில பல முக்கிய விஷயங்கள் (என்னுடைய பார்வையில்):

  • இந்த தொடரில் வேதாளர் ஆக நடித்தவர் ஆவார்.இவரை அப்போதைய அபிஷேக்பச்சன் என்றும் கூறலாம். இவரை B கிரேட் படங்களின் கேரி கூப்பர் என்றும் கூறுவர்.
  • இந்த தொடரில் வேதாலனின் வளர்ப்பு பிராணியாக வரும் டெவில் மிகவும் பிரபலமான ஒரு விலங்கு ஆகிய Ace the Wonder Dog ஆகும். கதைப்படி டெவில் ஒரு காட்டு நரி ஆகும். ஆனால் இந்த தொடரில் அதை ஜெர்மன் ஷெப்பர்ட் ஆக மாற்றி இருப்பார்கள்.
  • இந்தக் கதை எதிர்நாயகனின் முகத்தை நன்றாக உற்று பாருங்கள். நம்முடைய இந்தியத் தொலைக்காட்சிகளில் எண்பதுகளில் The Three Stoodges என்று ஒரு தொடர் வந்தது நன்றாக நினைவிருக்கும். அந்த தொடரின் ஒரு முக்கிய நடிகர் இவர்.
  • வேதளனின் பெயர் இந்த தொடரில் Geoffrey Prescott ஆகும். நெடுநாள் வாசகர்கள் பெயரையும் மாற்றி விட்டார்களா என்று என்ன வேண்டாம். உண்மையில் அப்போது கிட் வாக்கர் என்ற பெயரை லீ பாக் சூட்டவே இல்லை. அதனால் தான் இந்த பெயர் குழப்பம்.
  • படத்தின் பகுதிகள் ஹாலிவுட்டில் படமாக்கப்பட்டன. அதனை தான் ஆப்பிரிக்க என்று நம்மிடம் தொலைக்காட்சியில் காட்டுவார்கள்.
  • Lee Falk இந்த சீரியலை பார்க்கவே இல்லையாம். முதல் பகுதியை பார்த்து மனமொடிந்து போன அவரின் கமெண்ட்:"the serial looked like it had been made in a phone booth".

Tom Tyler in Adventures of captain marvel இந்தக் கதையின் நாயகன் பற்றி சில குறிப்புகளை கண்டிப்பாக கூறியே ஆகவேண்டும் என்பதால் இந்த பின்குறிப்பு.

முத்து காமிக்ஸ் இதழ் 48ல் வந்த விசித்திர வேந்தன் கதையில் அந்த நாட்டு மன்னர் வாசினிக்கு rheumatoid arthritis என்ற நோய் இருக்கும். அந்த நோயால் பாதிக்கப் பட்டவர் தான் நம் நாயகன் Tom Tyler.

இவர் ஆரம்ப காலத்தில் பல Western வெஸ்டர்ன் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். உலகப் புகழ் பெற்ற Boris Karloff இன் மறைவுக்கு பின் அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்து பலரின் கவனத்தி கவர்ந்தார். அதனால் கேப்டன் மார்வல் என்னும் தொலைக்காட்சி தொடரில் நடித்தார். அந்த தொடரை பார்த்தே இவருக்கு வேதாளன் தொடரில் நடிக்கும் வைப்பு வழங்கப்பட்டதாம்.

இந்த வேதாளன் தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணம் Adventures Of Captan Africa(ஆம், இது ஒரு வெற்றி பெற்ற தொடர்) நமது கதாநாயகன் ஆகும். இவர் அச்சு அசலாக வேதாளனைப் போலவே இருந்ததாக பலர் கூறுவர். இந்த தொடரில் இவர் அணிந்து இருக்கும் வேதாளனின் இடை பெல்ட் இவருக்கு ஒரு ரசிகரால் அளிக்கப்பட்டதாகும். வேதாளன் தொடரில் இவர் நடிக்கிறார் என்று கேள்விப் பட்டவுடன் ஒரு வாசகர் உண்மையான கடற்கொள்ளையரின் இடை பெல்ட்'ஐ இவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

இந்த வேதாளன் தொடர் முடிந்தவுடன் Columbia Pictures மறுபடியும் வேறொரு வேதாளன் தொடரை வெளியிட நினைத்தனர். அதனால் பத்து வருடங்கள் கழித்து King Features உடன் இருந்த ஒப்பந்தத்தை நம்பி பாதி தொடரை Tom Tylerஐ வைத்து ஷூட் செய்தும் விட்டனர். அந்த சமயத்தில் ஸ்டுடியோ சார்பாக தயாரிப்பாளர் ஆக இருந்தவர் Sam Katzman ஆவார். இவர் அந்தக் காலத்திலேயே உலகமகா கஞ்சன் என்ற பெயரை எடுத்தவர். இவரின் விலை குறைப்பை சகித்துக் கொள்ள முடியாத King Features நிறுவனத்தினர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உடன்பட மறுத்து விட்டனர். அந்த நேரத்தில் நமது Tom Tyler வேறு இறந்து விட்டார்.அதனால் கதையை மாற்றி எப்படியெல்லாம் பழைய பகுதிகளுடன் இணைக்க முடியுமோ அப்படி இணைத்து எடுத்த சீரியல் தான் இது.

கதையின் ஹீரோ வேதாளன் போலவே முகமூடி அணிந்து இருப்பார். குதிரையில் வருவார். காட்டுப் பகுதியில் தான் முழு கதையும் நடைபெறும். இவ்வாறாக பல கூறலாம். இந்த சுட்டியை கிளிக் செய்து நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள். அந்நாளில் வழக்கமாக ஒரு பதினைந்து பாக சீரியல் எடுத்தால் அதில் ஒரு பாகம் Cheating (சீட்டிங்) பாகமாக இருக்கும். அதாவது அந்த ஒரு வாரக்கதை முழுவதுமாக பிளாஷ் பேக்கிலேயே முடிந்து விடும், அப்படிப் பட்ட ஒரு வாரக் கதையை தான் தொலைக் காட்சி சொற்தொடரில் சீட்டிங் பாகம் என்று கூறுவர். ஆனால் நமது Sam Katzman அவர்களின் சீரிய கைவண்ணத்தால் இந்த பதினைந்து பாகத்தில் நான்கு பாகங்கள் சீட்டிங் பகுதிகளாக அமைந்தது.Columbia Pictures நிறுவனத்தின் கடைசி கானக சீரியலும் இதுதான்.

பாகம் தலைப்புராபிட்ஷேர் லிங்க்
Chapter : 1The Sign of the Skull

http://rapidshare.com/files/134582438/pch.01.part1.rar
http://rapidshare.com/files/134592930/pch.01.part2.rar
http://rapidshare.com/files/134595405/pch.01.part3.rar

Chapter : 2The Man Who Never Dies

http://rapidshare.com/files/134602481/pch.02.part1.rar
http://rapidshare.com/files/134608890/pch.02.part2.rar
http://rapidshare.com/files/134610575/pch.02.part3.rar

Chapter : 3A Traitor's Code

http://rapidshare.com/files/134617314/pch.03.part1.rar
http://rapidshare.com/files/134623448/pch.03.part2.rar
http://rapidshare.com/files/134624910/pch.03.part3.rar

Chapter : 4The Seat of Judgment

http://rapidshare.com/files/134630886/pch.04.part1.rar
http://rapidshare.com/files/134636659/pch.04.part2.rar
http://rapidshare.com/files/134638139/pch.04.part3.rar

Chapter : 5The Ghost Who Walks

http://rapidshare.com/files/134643504/pch.05.part1.rar
http://rapidshare.com/files/134648438/pch.05.part2.rar
http://rapidshare.com/files/134649557/pch.05.part3.rar

Chapter : 6Jungle Whispers

http://rapidshare.com/files/134654236/pch.06.part1.rar
http://rapidshare.com/files/134658556/pch.06.part2.rar
http://rapidshare.com/files/134659140/pch.06.part3.rar

Chapter : 7The Mystery Well

http://rapidshare.com/files/141971492/pch07.part1.rar
http://rapidshare.com/files/141975127/pch07.part2.rar
http://rapidshare.com/files/141975778/pch07.part3.rar

Chapter : 8In the Quest of the Keys

http://rapidshare.com/files/141979336/pch08.part1.rar
http://rapidshare.com/files/141983115/pch08.part2.rar
http://rapidshare.com/files/141983686/pch08.part3.rar

Chapter : 9The Fire Princess

http://rapidshare.com/files/142062186/pch09.part1.rar
http://rapidshare.com/files/142070515/pch09.part2.rar
http://rapidshare.com/files/142072036/pch09.part3.rar

Chapter : 10The Chamber of Death

http://rapidshare.com/files/142078862/pch10.part1.rar
http://rapidshare.com/files/142085577/pch10.part2.rar
http://rapidshare.com/files/142086640/pch10.part3.rar

Chapter : 11The Emerald Key

http://rapidshare.com/files/142093346/pch11.part1.rar
http://rapidshare.com/files/142098141/pch11.part2.rar

Chapter : 12The Fangs of the Beast

http://rapidshare.com/files/142105205/pch12.part1.rar
http://rapidshare.com/files/142110280/pch12.part2.rar

Chapter : 13The Road to Zoloz

http://rapidshare.com/files/142117781/pch13.part1.rar
http://rapidshare.com/files/142122974/pch13.part2.rar

Chapter : 14The Lost City

http://rapidshare.com/files/142131261/pch14.part1.rar
http://rapidshare.com/files/142150028/pch14.part2.rar

Chapter : 15Peace in the Jungle

http://rapidshare.com/files/142156370/pch15.part1.rar
http://rapidshare.com/files/142160651/pch15.part2.rar

நண்பர்களே, இந்த ராபிட்ஷேர் லிங்க்குகள் (உதாரணமாக முதல் பாகத்தில் மூன்று லிங்க்குகள் இருக்கும்) ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.

உதாரணம்: நீங்கள் முதல் பகுதியை பார்க்க விரும்புகிறீர்கள். அதனால் நீங்கள் மூன்று ராபிட்ஷேர் fileகளையும் டவுன்லோட் செய்ய வேண்டும். முதல் file டவுன்லோட் செய்து முடித்த உடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் fileகளை டவுன்லோட் செய்யும்போது கணினி உங்களை REPLACE file என்று கேட்கும். அப்போது நீங்கள் YES என்று கொடுத்தால் மூன்று fileகளையும் டவுன்லோட் ஆகி முதப் பகுதியை நீங்கள் பார்க்கலாம்.

என் கருத்து: Lee Falk என்ன வேண்டுமென்றாலும் கூறிக் கொள்ளட்டும். தன்னை காமிக்ஸ் ரசிகன் வெறியன் என்று கூறிக் கொள்ளும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய அற்புதமான கலைப்போக்கிஷம் இந்த தொலைக்காட்சி தொடர். பட்ஜெட் பிரச்சினை இருந்தாலும் சிறப்பான முறையில் எடுக்கப்பட்ட ஒரு தொடர். கலெக்டர்ஸ் எடிஷன்.

எனது ரேட்டிங்: ********** (8/10).

இந்த பதிவு சார்ந்த லிங்க்குகள்

சீரியல் பற்றிய விக்கிபீடியா சுட்டி

டாம் டெய்லர் பற்றிய விக்கிபீடியா சுட்டி

கேப்டன் விஜயகாந்த் ஆபிரிக்க பற்றிய விக்கிபீடியா சுட்டி

அமேசானில் வீடியோ வாங்க சுட்டி

இந்த வீடியோவை தரமிரக்கிய பிராங்க்கின் அப்னி இந்தியா லிங்க்

டீ.வீ.டி வர்டிக்ட் விமர்சனம் சுட்டி

யாகூ முவீஸ் விமர்சனம் சுட்டி

IMDB சுட்டி

இந்த பதிவை கிங் விஸ்வா அவர்களுக்கு சமர்பிக்கிறேன். Happy Birth Day King Viswa. அதே சமயத்தில் வேதாளனை பற்றி ஒரு சிறந்த பதிவு இடும்படி அவரை கேட்டுக் கொள்கிறேன்.

புதிய வாசகர்கள் என்னுடைய பழைய பதிவுகளை தெரிந்து கொள்ள,

எனது முந்தைய பதிவில் வந்த பட விபரங்கள்

1. டெக்ஸ் வில்லர் படம் - லார்ட் ஆப் த டீப்

2. குண்டன் பில்லி - மினி லயன் ஹீரோ படங்கள்

3. டேன்ஜர் டையபாலிக் - லயன் காமிக்ஸ் ஹீரோ படம்

4. மதி இல்லா மந்திரி (அ) இஸ்நோகுட் - திரைப்படம்

5. ரன்-டன்-ப்ளான்:லக்கிலுக்’ன் சக பாத்திரம்

6. சிஸ்கோ கிட் - அருமையான கௌபாய் படம்

7. விஸ்கி - சுஸ்கி மினி லயன் காமிக்ஸ் அறிமுகம்

அடுத்த காமிக்ஸ் படம் மூலம் உங்களை சந்திக்கிறேன், முடிந்தால்.

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.

29 comments:

  1. இந்த பதிவில் இருக்கும் முத்து காமிக்ஸ் ஸ்கான் காமிக்ஸ் டாக்டர் அவர்களின் தளத்தில் இருந்து எடுக்கப் பட்டது. மேலே குறிப்பிட மறந்து விட்டேன்.

    பயங்கரவாதி டாக்டர் செவன் என்னை மன்னித்து கொல்லாமல் விடுவாராக.

    காமிக்ஸ் பிரியன்.

    ReplyDelete
  2. வேதாளரை பற்றி பதிவிட்டு கலக்கிவிட்டீர்கள். லிங்க் கொடுத்ததற்கு மிக்க நன்றி . கிங் விஸ்வா அவர்களின் பிறந்த நாளுக்கு சிறந்த பதிவு . நான் முகமூடி காமிக்ஸ் ராணி காமிக்ஸில் மட்டுமே படித்துள்ளேன் . மற்ற பதிப்புகளை பற்றி அருமையாக கூறீநீர்கள்.அடுத்த பதிவு முடிந்தால் என்றால் என்ன அர்த்தம் தோழரே?

    Lucky Limat

    ReplyDelete
  3. அன்பரே,

    மிகவும் சிரத்தையாக தேடி, வேதாள மயாத்மாவின் முதல் சீரியலை பற்றி பதிவிட்டுள்ளீர்கள் பாராட்டுக்கள்.

    இந்திரஜாலின் முதழ் வேதாளன் காமிக்ஸ் இதழைக் காண்பது இதுவே முதல் முறை, அதற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    1966ல் குமுதம் இதழ் பக்கம் அருமை, நன்றி திரு. சாத்தான்+ காமிக்ஸ் பிரியன்.

    டிவி சீரியலில் இருக்கும் வேதாள மயாத்மா, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்திருப்பார் போல. பயமுறுத்துகிறார். படங்களில் புஷ்டியாக ஹீரோ போல் தென்படுவது டெவில் தான்.

    அனைத்து லிங்குகளிற்கும் நன்றி. இடமாற்றம் உங்கள் பதிவுகளைப் பாதிக்காது இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

    உற்சாகத்துடன் தொடருங்கள்

    ReplyDelete
  4. க கொ க கு / காமிக்ஸ் பிரியர்,

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    வேதாளன் படம் என்றவுடன் நான் கூட ஏதோ பில்லி சேன் நடித்த மொக்கை படத்தை பற்றி தான் இருக்கும் என்று நம்பி வந்தேன். ஆனால், அதிசயம். நல்ல பதிவு..

    அதுவும் வேதாளன் பற்றிய அனைத்து விவரங்களும் ஒரே இடத்தில்.

    அந்த முதல் இந்திரஜால் காமிக்ஸ் பற்றி நான் ஒரு பதிவு இடுகிறேன், மிக விரைவில்.

    படத்தின் மேல் விவரங்கள், வசனங்கள், விமர்சனங்கள், காட்சிகள் என்று தூள் கிளப்பி விட்டேர்கள்.

    வாழ்த்துக்கள். தொடருங்கள் என்று சொல்ல நினைத்தால், நீங்கள் "முடிந்தால் பதிவிடுகிறேன்" என்று கூருகிரீர்தல்.

    நண்பரே, தொடர்ந்து பதிவிடுங்கள். காலம் ஒரு நாள் மாறும், அதில் நம் கஷ்டம் எல்லாம் தீரும் என்று கண்ணதாசன் பாடி இருக்கிறார்.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  5. நண்பரே, அந்த கொமிக் வோல்ட் பற்றி சிறிது மேல்விவரங்கள் தர முடியுமா?

    தமிழில் எத்தனை புத்தகங்கள் வந்தன என்று?

    என்னுடைய மின்னஞ்சல் முகவரி: pulasulaki@gmail.com

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  6. தமிழில் வேறு சில இதழ்களிலும் வேதாளன் வந்ததாக நினைவு.

    சரி பாருங்களேன்.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  7. வணக்கம் காமிக்ஸ் பிரியரே,

    அற்புதமான பதிவு! வர வர உங்களின் பதிவுகள் மெருகேறிக் கொண்டே வருகின்றன என நான் என்னுகையில் திடீரென இனி பதிவிடுவது சந்தேகம் என குண்டைத் தூக்கிப் போடுகிறீர்கள்!

    உங்கள் புதிய பணியிடத்தில் நீங்கள் நல்லபடியாக செட்டிலாகி விரைவில் தமிழ் காமிக்ஸ் வலையுலகிற்கு திரும்பி வர வேண்டும் என்பதே என் அவா!

    வேதாளர் பற்றி அருமையாகப் பதிவிட்டுள்ளீர்கள்! பில்லி ஃஜேன், காத்த்ரின் ஃஜீட்டா ஜோன்ஸ் நடித்த மொக்கைப் படத்தை பற்றியும் நீங்கள் பதிவிட்டிருக்கலாம்! பதிவு நிறைவடைந்திருக்கும்!

    ரொம்ப நாளாக அந்தப் படத்தின் டவுன்லோடை தேடிக் கொண்டிருக்கிறேன்! முடிந்தால் உதவிடுங்களேன்!

    ஆனால் இங்கு நான் ஒரு சிறு பிழை ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும், நீங்கள் தவறாக என்னவில்லையெனில்!

    வேதாளர் சீரியலை நீங்கள் தொலைக்காட்சித் தொடர் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள்! ஆனால், அது டிவி தொடரல்ல! ஏனெனில் 1943-ல் டிவி இல்லை.

    மூவீ சீரியல் என்ற கான்செப்ட் அப்போது பிரபலம். டிவி தொடர் போலவேதான், ஆனால் சினிமாத் தியேட்டருக்குச் சென்று பார்க்க வேண்டும்! வாராவாரம் சனிக்கிழமைகளில் பகல் காட்சிகளில் இந்தத் தொடர்கள் காட்டப்படும்!

    இதில் ஃப்ளாஷ் கார்டன், வேதாளர், மாண்ட்ரேக், காரிகன் உட்பட பல நாயகர்களின் சீரியல்கள் வந்துள்ளன!

    இது போன்ற சீரியல்களுக்கு உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குனர்களாகிய ஜார்ஜ் லூகஸ், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், க்வெண்டின் டாராண்டினோ போன்றோர் தீவிர ரசிகர்கள்! அவர்களது படங்களிலும் இந்த தொடர்களின் பாதிப்புகள் இருக்கும்!

    மேலும் தகவல்கள் அறிய இங்கே ‘க்ளிக்’கவும்!

    முகமூடி வேதாளன் படத்தைச் சுட்டுப் போட்டதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை. இனையத்தில் யாருக்கும் எதுவும் சொந்தமில்லை! சுடும் போது எனக்கும் ஒரு சுட்டி மட்டும் கொடுத்தால் மிகவும் நன்றியுடையவனாயிருப்பேன்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  8. ஹலோ,

    //கேப்டன் விஜயகாந்த் ஆபிரிக்க பற்றிய விக்கிபீடியா சுட்டி// இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    ஆப்பிரிக்கா மக்கள் சங்கத்த தலைவர்.

    ஆப்பிரிக்கா நல வாழ்வு மைய்யம்.

    நம்பர் ஆறு, ஆப்பிரிக்கா குறுக்கு சந்து, ஆப்பிரிக்கா பஸ் ஸ்டாண்டு,

    ஆப்பிரிக்கா.

    ReplyDelete
  9. தோழர் காமிக்ஸ் பிரியர்,

    முதலில் என்னுடைய நன்றிகள். என்னுடைய பிறந்த நாளை பற்றி குறிப்பிட்டு இருந்தமைக்கு.

    உங்களின் சென்ற பதிவே இதுவரை நீங்கள் இட்ட பதிவில் டாப் என்று நான் என்னியபோதில் இந்த பதிவு.

    மிக மிக முழுமையாக அனைத்து விஷயங்களையும் எடுத்தாளப்பட்ட ஒரு பதிவு என்று இதனை கூறலாம். குறை சொல்ல ஒன்றுமே இல்லை (காமிக்ஸ் டாக்டர் குறிப்பிட்ட விஷயம் நீங்கலாக - அந்த விஷயம் எனக்கு இன்றுதான் தெரியும்).

    நல்ல பதிவு.

    ஆனால், என்னுடைய பிறந்த நாளில் ஒரு துக்க செய்தியாக உங்களின் இந்த வார்த்தைகள்: அடுத்த காமிக்ஸ் படம் மூலம் உங்களை சந்திக்கிறேன், முடிந்தால்.

    உங்களின் கவலைகள் எல்லாவற்றையும் கடந்து வர வாழ்த்துக்கள்.

    கிங் விஸ்வா.

    ReplyDelete
  10. தோழர் காமிக்ஸ் பிரியர்,

    முதலில் என்னுடைய நன்றிகள். என்னுடைய பிறந்த நாளை பற்றி குறிப்பிட்டு இருந்தமைக்கு.

    உங்களின் சென்ற பதிவே இதுவரை நீங்கள் இட்ட பதிவில் டாப் என்று நான் என்னியபோதில் இந்த பதிவு.

    மிக மிக முழுமையாக அனைத்து விஷயங்களையும் எடுத்தாளப்பட்ட ஒரு பதிவு என்று இதனை கூறலாம். குறை சொல்ல ஒன்றுமே இல்லை (காமிக்ஸ் டாக்டர் குறிப்பிட்ட விஷயம் நீங்கலாக - அந்த விஷயம் எனக்கு இன்றுதான் தெரியும்).

    நல்ல பதிவு.

    ஆனால், என்னுடைய பிறந்த நாளில் ஒரு துக்க செய்தியாக உங்களின் இந்த வார்த்தைகள்: அடுத்த காமிக்ஸ் படம் மூலம் உங்களை சந்திக்கிறேன், முடிந்தால்.

    உங்களின் கவலைகள் எல்லாவற்றையும் கடந்து வர வாழ்த்துக்கள்.

    கிங் விஸ்வா.

    ReplyDelete
  11. //காத்த்ரின் ஃஜீட்டா ஜோன்ஸ் நடித்த மொக்கைப் படத்தை//

    இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நம்ம ஆளு இருந்தா அது எப்படி மொக்கைப் படம் ஆகும்?

    ஜுடோ ஜோஸ்
    Judo Josh can set ants on fire with a magnifying glass. At night.

    ReplyDelete
  12. காமிக்ஸ் டாக்டரே,

    //உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குனர்களாகிய ஜார்ஜ் லூகஸ், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், க்வெண்டின் டாராண்டினோ// இப்போதாவது உண்மையை ஒப்பௌக் கொண்டமைக்கு நன்றி.

    க்வெண்டின் டாராண்டினோ ஒரு உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குனர் என்பதில் இரு வேறு கருத்திருக்க முடியாது.

    கிங் விஸ்வா.

    ReplyDelete
  13. கிங் விஸ்வா,

    க்வெண்டின் டாராண்டினோ ஒரு உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குனர் என்றுதான் குறிப்பிட்டுள்ளேனே தவிர, அவர் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்று நான் எங்கேயுமே கூறவில்லையே!

    பேரரசு போன்றோர் கூட நம்மூரில் புகழ்பெற்றவர்கள் தானே! இவர் ஒரு ஹாலிவுட் பேரரசு! (நன்றி : ஜூடோ ஜோஷ்)

    அதுமட்டுமில்லாமல் ஜார்ஜ் லூகஸ் கூட ஒரு உலகப்புகழ் பெற்றத் தலைசிறந்த மொக்கை இயக்குனராவார்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  14. நண்பர் லக்கி லிமட்,

    //அடுத்த பதிவு முடிந்தால் என்றால் என்ன அர்த்தம் தோழரே?// நான் வேறொரு இடம் வேலை காரணமாக மாறிச்செல்கிறேன். அதனால் தான் அப்படி கூறினேன்.

    ReplyDelete
  15. கனவுகளின் காதலனே,

    //இந்திரஜாலின் முதழ் வேதாளன் காமிக்ஸ் இதழைக் காண்பது இதுவே முதல் முறை, அதற்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்// வேண்டுமெனில் கூறுங்கள் அதனை தரவிரக்கம் செய்ய லிங்க் அனுப்புகிறேன்.

    //இடமாற்றம் உங்கள் பதிவுகளைப் பாதிக்காது இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்// நானும் அப்படியே வேண்டுகிறேன்.

    பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  16. நண்பர் புலா சுலாகி,

    //வேதாளன் படம் என்றவுடன் நான் கூட ஏதோ பில்லி சேன் நடித்த மொக்கை படத்தை பற்றி தான் இருக்கும் என்று நம்பி வந்தேன்// அந்தப் படத்தை பற்றி விரைவில் பதிவிடுகிறேன்.ஆனால் அது மொக்கை படம் அல்ல என்பது என்னுடைய கருத்து. பதிவை பார்த்தால் நீங்களும் புரிந்து கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.

    //வேதாளன் பற்றிய அனைத்து விவரங்களும் ஒரே இடத்தில்// நன்றி.

    அவரை பற்றி ஒரு முழு பட்டியல் தயார் செய்து வருகிறேன். விரைவில் அதனையும் இடுகிறேன்.

    //அந்த கொமிக் வோல்ட் பற்றி சிறிது மேல்விவரங்கள் தர முடியுமா?// அந்த புத்தகம் ஒரு தவறான கான்செப்ட். விவரங்களை தருகிறேன்.

    //தமிழில் வேறு சில இதழ்களிலும் வேதாளன் வந்ததாக நினைவு// ஆமாம், முத்து மினி காமிக்ஸ் இதழில் வந்தது. ஒரே ஒரு கதை. முதல் வேதாலனின் கதை என்று. அதுதான் முத்து மினி காமிக்ஸ் இதழின் கடைசி புத்தகம்.

    முத்து மினி காமிக்ஸ் பற்றிய முத்து விசிறியின் பதிவு சுட்டி இங்கே: http://muthufanblog.blogspot.com/2006_04_01_archive.html

    //கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்// நல்ல கொள்கை.

    ReplyDelete
  17. தலைவரே,

    //அற்புதமான பதிவு! வர வர உங்களின் பதிவுகள் மெருகேறிக் கொண்டே வருகின்றன// நன்றி. என்னுடைய ஜென்மம் சாபல்யமடைந்தது.

    //உங்கள் புதிய பணியிடத்தில் நீங்கள் நல்லபடியாக செட்டிலாகி விரைவில் தமிழ் காமிக்ஸ் வலையுலகிற்கு திரும்பி வர வேண்டும் என்பதே என் அவா!// நன்றி தலைவரே.

    //வேதாளர் பற்றி அருமையாகப் பதிவிட்டுள்ளீர்கள்! பில்லி ஃஜேன், காத்த்ரின் ஃஜீட்டா ஜோன்ஸ் நடித்த மொக்கைப் படத்தை பற்றியும் நீங்கள் பதிவிட்டிருக்கலாம்! பதிவு நிறைவடைந்திருக்கும்// அந்தப் படத்தை பற்றி நிறைய விளக்க வேண்டி இருப்பதால் அது ஒரு தனிப் பதிவு தலைவரே.

    //ரொம்ப நாளாக அந்தப் படத்தின் டவுன்லோடை தேடிக் கொண்டிருக்கிறேன்! முடிந்தால் உதவிடுங்களேன்!// அனுப்பி இருக்கிறேன். சரி பாருங்கள். இல்லைஎனில் மறுபடியும் வேறொரு லிங்க் அனுப்புகிறேன்.

    //இங்கு நான் ஒரு சிறு பிழை ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும், நீங்கள் தவறாக என்னவில்லையெனில்// இதில் தவறு ஒன்றும் இல்லை தலைவரே. தாராளமாக.

    //ஏனெனில் 1943-ல் டிவி இல்லை// மன்னியுங்கள் தலைவரே. மகத்தான பிழை செய்து விட்டேன். இந்தப் பதிவை நான் தயார் செய்தது மூன்று மாதங்களுக்கு முன் (மதி இல்ல மந்திரி பதிவு இட்ட போது). அப்போது அதைப் பற்றி படித்தேன். ஆனால் லிங்க்'ஐ குறிக்க மறந்து விட்டேன். இந்த பதிவிடும்போது மறந்து பொய் இமாலயத்தவறு செய்து விட்டேன்.

    //சுடும் போது எனக்கும் ஒரு சுட்டி மட்டும் கொடுத்தால் மிகவும் நன்றியுடையவனாயிருப்பேன்!// கண்டிப்பாக.

    ReplyDelete
  18. கிங் விஸ்வா,

    //என்னுடைய பிறந்த நாளை பற்றி குறிப்பிட்டு இருந்தமைக்கு// அப்போதுதானே என்னுடைய பிறந்த நாளைக்கு நீங்கள் பதிவிடுவீர்கள்?!?

    நகைவுக்கு கூறினேன்.

    //உங்களின் சென்ற பதிவே இதுவரை நீங்கள் இட்ட பதிவில் டாப் என்று நான் என்னியபோதில் இந்த பதிவு// நன்றி. இன்னும் நன்றாக பதிவிட முயல்கிறேன்.

    //உங்களின் கவலைகள் எல்லாவற்றையும் கடந்து வர வாழ்த்துக்கள்// நன்றி.

    ReplyDelete
  19. ஆப்பிரிக்கா மக்கள் சங்கத்த தலைவர்,

    வந்தமைக்கு நன்றி.

    கேப்டன் அவர்களின் அகில உலக தலைமை ரசிக மன்ற உப தலைவன் நான். மறந்து விடாதீர்கள்.

    ReplyDelete
  20. ஜுடோ ஜோஸ்,

    //இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நம்ம ஆளு இருந்தா அது எப்படி மொக்கைப் படம் ஆகும்?// ஆமாம். நான் கூட அந்தப் படத்தை பற்றி பத்விட்டு அந்தக் கருத்தை போக்கி விடுகிறேன்.

    ReplyDelete
  21. அன்பர் ககொகு,

    காமிக்ஸ் பதிவர்களிடயே என்ன ஒரு ஒத்த எண்ணம். வேதாளர் பற்றி ஒரு பதிவில் நான் ஒரு வார காலமாக உழைத்து கொண்டிருந்தேன்... ஆனால் திடீரென்று பார்த்தால் நீங்கள் ஒரு வேதாளர் பதிவை ஏற்கனவே வெளியிட்டு விட்டீர்கள் என்று காமிக்கியிலில் உங்கள் பிண்ணூட்டத்தின் மூலம் அறிந்தேன். வழக்கமான உங்கள் சீரியல் பட பாணியினுடன் இந்த தடவை வேதாளர் தோன்றிய புத்தகங்களையும் படயலிட்டு விட்டீர்கள். சாத்தான் நண்பரின் அந்த குமுதம் தொடரை என் பதிவில் அறிமுகபடுத்த எண்ணி இருந்தேன், இப்போது இரண்டாம் இடம் தான் எனக்கு. :)

    லீ பாள்க்கின் அமர கதாபாத்திரங்களான மாயாவி மற்றும் மாண்ட்ரரேக்கை சீரியல் திரைப்படம் என்று படாதிபதிகள் சிதைத்து இருக்கின்றனர். இந்த தொடரும் அப்படியே.... முன்பு ஒரு மறை சில அத்தியாயங்கள் பார்த்தது நியாபகம் இருக்கிறது. ரவுண்ட் நெக் டைட் டீ சர்ட் போல ஒரு உடையணிந்து கொண்டு வேதாளர் சீரூடை என்று அல்டாப்பு அடித்து இருப்பார்கள். பாள்க்கை கௌரவிக்க இது வரை ஒரு முயற்சியும் யாரும் எடுக்கவில்லை என்பது சோகமான உஷயம். சீரியலை பற்றி பாள்க் கூறி கருத்தில் எனக்கு முழு உடன்பாடே.

    சீரியலின் மொத்த சுட்டிகளுக்கும் நன்றி... நேரம் கிடைக்கும் போது பொருமையாக பார்க்கலாம்.

    உண்மையிலேயே மாயாவி தோன்றிய முதல் புத்தகம் இந்த முத்து தானா... அது அட்டைபடம் போலவும் தெரியவில்லையே.... 3 வது பக்கம் என்று ஓரத்தில் இருப்பதை வைத்து சொல்கிறேன். இதுதான் முதல் முத்து வேதாளர் என்றால், இந்த இதழின் அட்டைபடம் கிடைக்குமா ?

    புதி இடமாற்றத்திற்கு பிறகு ஒரு வழியாக நிலை கொண்டு விட்டு, ஆர அமர மீண்டும் உங்கள் பதிவுகளை தொடருவீர்கள் என்பதே என்னுடைய அவா.

    ரஃபிக் ராஜாகாமிக்கியல் & ராணி காமிக்ஸ்

    ReplyDelete
  22. வேதாலரை பற்றி அனைத்து விவரங்களும் எனக்கு ஒருங்கே கிடைத்ததி மகிழ்ச்சி.

    அதுவும் நண்பர் ரஃபிக் ராஜா வேறு பதிவிடப் போகிறார் என்றால் இதை விட நல்ல விஷயம் வேறென்ன வேண்டும்?

    அந்த சீரியல் புகைப் படங்கள் அற்புதம்.

    டவுன்லோட் செய்துக் கொண்டு இருக்கிறேன். பார்த்து விட்டு வந்து மறுபடியும் உங்கள் கருத்துக்கு ஒப்புமை அளிக்கிறேன்.

    ReplyDelete
  23. கில்லாடி கிரிகிரிApril 15, 2009 at 7:59 PM

    காமிக்ஸ் பிரியர்,

    //இந்த தொடரின் மொத்த நடிகர்களில் டெவில் தான் சிறப்பான் பங்களித்து உள்ளது//

    சொல்ல ஒன்றுமே இல்லை.

    கில்லாடி கிரிகிரி

    ReplyDelete
  24. From The Desk Of Rebel Ravi:

    Dear friend,
    amazing review with such details. this is the best one for phantom.
    the 3rd part link is not opening. kindly check.

    Jai Ho.
    Rebel Ravi,
    Change is the Only constant thing in this world.

    ReplyDelete
  25. காமிக்ஸ் பிரியர்,

    அடுத்த தாக்குதல் எப்போது?

    ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    அம்மா ஆசை இரவுகள் விசிறி.

    ReplyDelete
  26. கிசு கிசு கார்னர்-2 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/05/2.html

    லெட் த கும்மி ஸ்டார்ட்.
    --
    பூங்காவனம்,
    எப்போதும் பத்தினி.

    ReplyDelete
  27. பூங்காவனம், அம்மா ஆசை இரவுகள், ரவீந்தர், Rebel ரவி, கில்லாடி கிரிகிரி,etc.

    அனைவருக்கும் நன்றி.

    இப்போதைக்கு பதிவிட இயாலாத சூழ்நிலையில் இருக்கிறேன், மன்னிக்கவும்.

    ReplyDelete

உங்கள் கருத்து எப்படி இருந்தாலும் கண்டிப்பாக பகிர்ந்துகொண்டே தீரவேண்டும், கருத்தே இல்லை என்றாலும் கூட அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related Posts Widget for Blogs by LinkWithin