கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,வணக்கம்.
லக்கிலுக் படத்தினை உங்களுக்கு அறிமுகம் செய்யலாம் என்று நினைக்கும்போது நண்பர் லிமட் அவர்கள் அதனை அவருடைய வலைப்பூவில் வழங்கி விட்டதால் வேறொரு பதிவை இட வேண்டிய கட்டாயம் எனக்கு. இது அவருடைய தவறும் அல்ல. இவ்வாறு கூறுவது என்னுடைய தவறு. இனிமேல் இப்படி கூறாமல் இருக்கிறேன். ஆனால் இங்கே இப்படி கூற காரணம் என்னவெனில் இந்த பதிவில் முக்கியமான படம் எதுவும் இல்லை. மாறாக தொலைக்காட்சி தொடர் ஒன்றுதான் உள்ளது. அதனால் தான் இந்த பீடிகை. தடங்கலுக்கு மன்னிக்கவும்.
நான் முதன்முதலில் படித்த லக்கிலுக் காமிக்ஸ் புரட்சிதீ ஆகும். அருமையான இந்த கதையை படித்தவுடன் எனக்கு லக்கி லுக் மீது ஒரு காதலே வந்து விட்டது. பின்னர் லக்கி லூகின் மற்ற கதைகளை படிக்கும்போது ஒரு விஷயம் எனக்கு நன்கு புரிந்தது.


லக்கி லுக் கதைகளின் வெற்றிக்கு கதை அமைப்பும் துணை பாத்திரங்களும் எவ்வளவு முக்கியம் என்பது அவரை தவிர மற்ற பாத்திரங்களின் வெற்றியை கொண்டே கணிக்கலாம். உதாரணமாக அவரது குதிரை ஜாலி ஜம்பர், ஜோ டால்டன், ஆவரேல் டால்டன், காது கேட்காத கிழவர், ஜெயிலர், மா டால்டன். என்று பல துணை பாத்திரங்களும் சிறப்பாக இருப்பது புரியும்.


தீவிர வாசகர்கள் (கனவுகளின் காதலன்) "நண்பரே, ரின்-டின்-கேன் எங்கே?". என்று கேட்பது எனக்கு நன்றாக கேட்கிறது. நமக்கெல்லாம் ரின்-டின்-கேன் என்ற பெயரில் அறிமுகம் ஆன ரன்-டன்-ப்ளான் தான் இந்த பதிவின் நாயகன் (காமிக்ஸ் டாக்டர் மன்னிக்கவும் - இவர் அந்த நாயகன் ஜே.கே.ரித்தீஷ் இல்லை).
தன்னுடைய நிழலை விட வேகமாக சுடும் வீரன் லக்கி லுக் என்பது நமக்கு தெரியும். அவருக்கு இணையாக செயல் ஆற்றும் திறன் கொண்டது ஜாலி ஜம்பர் என்பதும் நமக்கு தெரியும். ஆனால், ரன்-டன்-ப்ளான்? இதற்க்கு ஏதாவது அடைமொழி உள்ளதா? பன்ச் வசனம் உள்ளதா?

அவ்வாறு பாயும்போது எல்லாம் தவறி கிழே விழிவது
ஆபத்து நேரங்களில் நீரில் குதிப்பது (பின்னர் லக்கிலுக் அவர்களால் முதல் உதவி பெறுவது - ஆம், உலகிலேயே நீந்த தெரியாத ஒரே நாய் இது தான்).
அற்புதமான காவல் நாயாக இருப்பது (சிறையில் இருந்து டால்டன்'கள் தப்பித்தால் பல நாட்கள் கழித்தே தெரிந்து கொள்ளும் அளவிற்கு).
மா டால்டன் அவர்களின் சொல்லுக்கு மட்டும் கீழ் படிவது
எதையுமே தவறாக புரிந்து கொள்வது (ஜோ டால்டன் இதனை விளக்க செய்யும் முயற்சியை அன்பின் அடையாளமாக எடுத்து கொள்வது)
ஜாலி ஜம்பர்'ஆல் வியப்புக்கு ஆளாவது (இப்படியும் ஜன்மங்கள் இருக்குமா என்று).
ஷிலம் பற்றிய விக்கிபீடியா குறிப்பு
கர்த்தா மொரிஸ் பற்றிய விக்கிபீடியா குறிப்பு
ரன்-டன்-ப்ளான் குறும்படம் பற்றிய ஐ.எம்.டீ.பீ இணை

இதில் மற்றுமொரு நல்ல விடயம் உள்ளது. இது ஒரு தனி தொடர் ஆகும். அதனால் இது லக்கி லுக் காமிக்ஸ் என்ற பதிப்பகத்தில் வெளியிடப் பட்டது. அதனால் செலவும் குறைவாகவே இருக்கும்.
நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.













