Wednesday, March 30, 2011

அறிஞர் அண்ணா வெளியிட்ட காமிக்ஸ்

திராவிட திம்மிகளே, தேர்தல் நேரத்தில் உங்களுக்கு ஒரு பரிசு: அறிஞர் அண்ணா வெளியிட்ட காமிக்ஸ்

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,

வணக்கம். தேர்தல் கலை கட்ட ஆரம்பித்து இருக்கும் இந்த நேரத்த்தில் இந்த கிடைத்தற்கரிய பொக்கிஷமாக இந்த புத்தகம் என்னுடைய கண்ணில் பட்டது. அறிஞர் அண்ணா அவர்கள் ஆசிரியராக இருந்து வெளியிட்ட காஞ்சி என்ற இதழைப்பற்றி அனைவருக்கும் தெரிந்து இருக்கும். அந்த காஞ்சி இதழின் 1966ம் ஆண்டின் பொங்கல் மலரில் வந்த காமிக்ஸ் வடிவக்கதையே கள்வனின் மகன். எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகிய கலித்தொகையின் காட்சிகளை படக்கதை வடிவில் அளிக்கப்பட்ட முயற்சியே இந்த கள்வனின் மகன் என்ற கதை.

கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் 150 பாடல்கள் உள்ளன. கலித்தொகை இரு பாடல்களின் உதவியுடன் தொகுக்கப்பட்டுள்ளது. கலித்தொகை நூலில் உள்ள

  • பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவர் / எழுதியவர் பெருங்கடுங்கோ (35 பாடல்கள்)
  • குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவர் / எழுதியவர் கபிலன் (29 பாடல்கள்)
  • மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் / எழுதியவர் மருதன் இளநாகன் (35 பாடல்கள்)
  • முல்லைத்திணைப் பாடல்களைப் பாடியவர் / எழுதியவர் சோழன் நல்லுருத்திரன் (17 பாடல்கள்)
  • நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர் / எழுதியவர் நல்லந்துவன் (33 பாடல்கள்)

நமக்கு கதையாக வந்துள்ள இந்த பகுதியானது கலித்தொகையில் 103ஆவது பாடலாக பாடப்பெற்றது. அது எப்படி என்று கேட்பவர்களுக்கு - முதலில் இந்த கதையை படியுங்கள். பின்னர் அது எப்படி கலித்தொகையில் 103ஆவது பாடலாக பாடப்பெற்றது என்பதை விளக்குகிறேன்.

அறிஞர் அண்ணா வெளியிட்ட காமிக்ஸ் - காஞ்சி புத்தகத்தில் கலித்தொகை காட்சிகள் படக்கதை

1
2
கடைசி படத்தில் தோழி தலைவியிடம் ஏறு தழுவ ஏற்பாடு செய்வதாக கூறுகிறாள் அல்லவா? அந்த ஏறு தழுவுதல் கலித்தொகையில் 103வது பாடலாக பாடப்பெற்றுள்ளது. 

ஏறு தழுவுதல் என்றால் என்ன என்பதை என்னால் முடிந்த அளவுக்கு விளக்க முயல்கிறேன்: ஆயர்கள் புலி முதலிய கொடிய விலங்குகளிடமிருந்து தம் பசு முதலிய இனங்களைக் காக்க வேண்டிய நிலையில் இருந்தனர். மேலும் நாட்டின் எல்லைப் பகுதி காடு. பகைவரின் தாக்குதலுக்கு முதலில் உட்படுவதும் அப்பகுதியே, ஆதலால் அவர்கள் வீரம் உடையவராக விளங்க வேண்டியிருந்தது. எனவே ஆயர், தம் மகளை மணக்க வரும் ஆடவர் வீரம் மிக்கவராய் விளங்க வேண்டும் என எண்ணினர். அதன் காரணமாக ஏறு தழுவும் நிகழ்ச்சியை ஏற்படுத்தினர்.ஏறு தழுவுதல் என்பது சீறிப் பாயும் காளைகளைத் தழுவி அடக்குதல் ஆகும். ஆயர் ஏறுகளின் கொம்பைக் கூர்மையாகச் சீவிப் பரந்த வெளியான ஏறு தழுவும் இடத்தில் விடுவர். இளைஞர் போட்டி போட்டு ஏறு தழுவ முயல்வர். ஏறு தழுவிய ஆயனுக்குத் தம் பெண்ணை மணம் முடித்துத் தருவர்.

கதை இப்படியாக ஒரு முக்கியமான இடத்த்தில் நிற்கிறது. தோழி இந்த விஷயத்தை தலைவியிடம் கூறும்போது பின்னால் தலைவியின் தாயார் நிற்பதை கவனியுங்கள். அடுத்தது என்ன? என்ற கேள்வி இப்போதே எழுகிறது. ஆனால் என்னிடம் இந்த இதழின் அடுத்த இதழ் இல்லை. ஆகையால் இது தொடர்ச்சியாக வந்த கதையா? அல்லது ஒரே ஒரு இதழில் வந்த சோதனை முயற்சியா என்பது தெரியவில்லை. அதுவுமில்லாமல் இந்த கதையை எழுதியது யார்? ஓவியங்களை வரைந்தது யார்? இது ஒரு வகையில் பார்க்கையில் ஓவியர் ரமணி அவர்களின் கைவண்ணம் போல இருந்தாலும், ஊர்ஜிதப்படுத்தும் வரை தெரியாதல்லவா? அதுவுமில்லாமல் இது போன்ற கதைகள் காஞ்சி இதழில் தொடர்ந்தனவா? என்று பல கேள்விகள். தெரிந்தவர்கள் பதில் அளியுங்களேன்.

அடுத்ததாக சீக்ரெட் ஏஜென்ட் காரிகன் அவர்களை பற்றிய முழு நீள பதிவுடன்  வருகிறேன் (பயங்கரவாதி டாக்டர் செவன் உஷார்).

புதிய வாசகர்கள் என்னுடைய பழைய பதிவுகளை தெரிந்து கொள்ள,

எனது முந்தைய பதிவில் வந்த பட விபரங்கள்

1. டெக்ஸ் வில்லர் படம் - லார்ட் ஆப் த டீப்

2. குண்டன் பில்லி - மினி லயன் ஹீரோ படங்கள்

3. டேன்ஜர் டையபாலிக் - லயன் காமிக்ஸ் ஹீரோ படம்

4. மதி இல்லா மந்திரி (அ) இஸ்நோகுட் - திரைப்படம்

5. ரன்-டன்-ப்ளான்:லக்கிலுக்’ன் சக பாத்திரம்

6. சிஸ்கோ கிட் - அருமையான கௌபாய் படம்

7. விஸ்கி - சுஸ்கி மினி லயன் காமிக்ஸ் அறிமுகம்

8. ராணி காமிக்ஸ் வேட்டை வீரர் டேவிட்

9. ராணி காமிக்ஸ் ஜேம்ஸ் பான்ட் கதை தங்க ராஜா

காமிக்ஸ் சினிமா அல்லாத என்னுடைய பிற பதிவுகள்

1. ரகசிய ஏஜன்ட் ரஜினி காந்த் பூந்தளிர் காமிக்ஸ்

2.லயன் காமிக்ஸ் இதில் வராத ஸ்பைடரின் எழுத்து கதை

3. தினத் தந்தி பேப்பரில் வந்த ஏஜன்ட் காரிகனின் முழு வண்ண கதை

4. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் காமிக்ஸ் கதை

அடுத்த காமிக்ஸ் பதிவு மூலம் உங்களை சந்திக்கிறேன், விரைவில்.

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.

Related Posts Widget for Blogs by LinkWithin