கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே, வணக்கம்.
சென்ற பதிவான முன்னோட்டம் - ரகசிய ஏஜன்ட் ரஜினிகாந்த் காமிக்ஸ் பலருடைய வரவேற்பை பெற்று இருப்பது கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். குறிப்பாக கும்மி அடித்து விளையாடிய பதிவர்களுக்கு. இருந்தாலும் யாராலும் சரியான விடையை கண்டு பிடிக்க முடியவில்லை என்பது சற்று வருத்தமான விடயமே.
குறிப்பாக நம்முடைய காமிக்ஸ் பதிவர்கள். இருந்தாலும் இது ஒரு மொக்கை கதை என்பதாலும் வெளி வந்த இதழும் ஒரு மொக்கை (ஆகி விட்ட) இதழ் என்பதாலும் தான் இந்த தேக்கம் என்பது என்னுடைய கருத்து.
இந்த கதை சிறுவர் இதழ் பூந்தளிர்'ல் வெளிவந்தது. ஆனால், இந்த கதை வெளி வந்த போது திரு வாண்டுமாமா அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டதால் ரூபன் என்பவர் தான் பொறுப்பு ஆசிரியர் ஆக இருந்தார். அவரை குறை ஏதும் சொல்ல இயலாது. எனென்றால் ஒரு மகத்தான மனிதரை யாராலும் அவ்வளவு சுலபத்தில் REPLACE செய்ய இயலாது (இதற்கான தமிழ் வார்த்தை என்ன?). முடியுமா என்ன?
இந்த கால கட்டத்தில் வெளிவந்த பூந்தளிர் இதழ்கள் யாவும் சுமாராகவே இருக்கும். இந்த கதை ஒரு சிறப்பான மொக்கை கதை ஆகும். ரஜினி காந்த் அவர்கள் அடுத்து அடுத்து மொக்கை படங்களை கொடுத்து வந்த வேளையில் (பாண்டியன், உழைப்பாளி,ETC) தான் இந்த காமிக்ஸ்'ம் வந்தது. இதற்காக கதை ஆசிரியர்கள் எந்த காபிரெய்ட் உரிமையையும் பெற்று இருக்க மாட்டர்கள் என்பது என்னுடைய எண்ணம். இப்போது இது நடக்காது. எனென்றால் திரு சௌந்தர்யா ரஜினி காந்த் அவர்கள் சூப்பர் ஸ்டார் அவர்களை காபிரெய்ட் செய்து விட்டார்கள். இதனை நமது தலை சிறந்த காமிக்ஸ் நண்பர் எப்படி கவனிக்காமல் விட்டார்?
இதன் மூலம் ஹிந்தி மொழியில் வெளிவந்த ஸ்டார் காமிக்ஸ் ஆகும். இந்த புத்தகத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் திரு அமிதாப்பச்சன் அவர்களை ஒரு காமிக்ஸ் நாயகனாக கொண்டு பல கதைகள் வந்தன. இதில் அவர் பெயர் சுப்ரீமோ ஆகும்.
Tuesday, February 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நண்பரே,
ReplyDeleteஒரு வழியாக பதிலைக்கூறி சில பக்கங்களின் ஸ்கேன்களையும் போட்டு எங்களை மகிழ்ச்சிப்படுத்தி விட்டீர்கள்.
இதெல்லாம் ஒர் பரபரப்பு தானே, ஏன் மொக்கை பதிவு என்று பெயர் சூட்டுகிறீர்கள். எனக்கு நீங்கள் பூந்தளிரில் வெளிவந்த ஒர் சித்திரக்கதையினை தெரியப்படுத்தியுள்ளீர்களே! எனவே இது மொக்கைப்பதிவு கிடையாது என்பது என் தாழ்மையான கருத்து.
அடுத்த பதிவின் முன்னோட்டம் எப்போது வெளியாகும்? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
உற்சாகத்துடன் தொடருங்கள்.
இந்த மாதிரி ஒரு காமிக்ஸ் வந்த மேட்டர் ரஜினிக்கு தெரியுமான்னு தெரியல. ஆனா ரஜினி சிகரட்ட தூக்கி வாயில போடுறத அன்புமணி ராமதாஸ் பாத்திருந்தாருன்னா என்ன நடந்திருக்குமோ தெரியல?
ReplyDelete// ரஜினி காந்த் அவர்கள் அடுத்து அடுத்து மொக்கை படங்களை கொடுத்து வந்த வேளையில் (பாண்டியன், உழைப்பாளி,ETC) தான் இந்த காமிக்ஸ்'ம் வந்தது.//
முற்றிலும் உண்மை.
அடுத்து நீங்கள் போடப் போவது என்ன வேதாளரா? மாண்ட்ரேக்கா? மாடஸ்டியா? அனேகமாக வேதாளராகத் தான் இருக்கும்.
தொடர்ந்து தூள் கிளப்புங்கள்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
From The Desk Of Rebel Ravi:
ReplyDeletegreat post. never knew such things happened in tamil comics. how many stories got published with rajini?
Rebel Ravi,
Change is the Only constant thing in this world.
நண்பரே,
ReplyDeleteநீங்கள் தெரிந்து தான் இந்த பதிவை இன்று வெளி இட்டீர்களா என்று தெரிய வில்லை. இன்று உலக புகை இலை எதிர்ப்பு நாள். அதுவும் ரஜினி காந்த் போன்ற நடிகர்கள் எல்லாம் இதுவரியில் தங்களுடைய ரசிகர்களுக்கு நல்லது எதுவும் செய்தது கிடையாது. இப்பவும் அவர்கள் சிகரெட்டை தூக்கி போடுவது எல்லாம் இஷ்டைல் என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் அப்போது தான் திருந்துவார்கள் என்று தெரிய வில்லை.
அன்பரே,
ReplyDeleteநல்ல பதிவு. பல விஷயங்களை தெரிந்து கொண்டோம்.
அடுத்த பதிவு எப்போது? அது கமல் ஹாசன் காமிக்ஸ்'ஐ பற்றியதா?
நன்றி.
அம்மா ஆசை இரவுகள் விசிறி.
அருமை. மிகவும் அருமை. மிக, மிக அருமை.
ReplyDeleteமன்னிக்கவும். என்னுடைய கணினியில் ஏதோ கோளாறு. அறுவை என்று அடித்தால் இப்படி வருகிறது.
பூந்தளிர் என்று கூறிய பிறகு தான் இந்த புத்தகம் என்னிடமும் கை வசம் உள்ள விஷயம் உறைத்தது... மொக்கை கதைகளை வெளியிட்டு வந்த் கால கட்டம் என்பதால், அதை இன்று வரை நான் பிரித்து கூட பார்த்தது இல்லை :) காமிக்ஸ் பற்றி அகராதியே தெரியாத யாரோ கிறுக்கி உள்ளது போல தெரிகிறது... அதற்க்கு சிகரம் வைத்து போல ரஜினியை அடிபடையாக கொண்ட சிதிரகதை என்று ஒரு துணை கூறு வேறு. மொக்கை காமிக்ஸில் இந்த பதிவு இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.... ககொகு அன்பரே, நீங்கள் உங்கள் பாணியான காமிக்ஸ் படத்தையே தொடருங்கள்.
ReplyDeleteREPLACE = "இடத்தை இட்டு நிரப்புவது" என்று கூறலாமே?
காமிக்கியல்
அய்யா,
ReplyDeleteஉங்களுக்கு எதற்கு இந்த வீண் விளையாட்டு? வழக்கம் போல அருமையான காமிக்ஸ் படங்களை தொடருங்கள் அய்யா.
செழி
Hi,
ReplyDeleteYou post have attracted rajinifans.com. Check the link
http://www.rajinifans.com/detailview.php?title=1028
நல்ல பாத்திரம். சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தைத்தான் காபிரைட் வாங்க வைத்திருக்கிறார்கள்.
ReplyDeleteசீக்ரெட் ஏஜெண்ட் சிவாஜிராவ்,
எழுச்சி நாயகன் எந்திரன்,
எந்திர மனிதன் ரோபோ,
மின்னல் மனிதன் படையப்பா
இது போன்று பல பாத்திரங்கள் இருக்கின்றன