Wednesday, November 24, 2010

சிஸ்கோ கிட் சாகசம் - தி டாக் ஸ்டோரி (The Dog Story, 1950)

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே, 

வணக்கம். நீண்ட நாட்கள் கழித்து இன்று மறுபடியும் ஒரு காமிக்ஸ் சம்பந்தப்பட்ட சினிமா பதிவின் மூலம் உங்களை சந்திக்கிறேன். இந்த பதிவானது சென்ற வாரமே இடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் சில மொக்கை காரணங்களால் என்னால் சென்ற வாரம் இந்த பதிவினை இட முடியவில்லை. மன்னிக்கவும். சென்ற ஆண்டு ஒரு சிஸ்கோ கிட் பட விவரங்களை அளித்து உங்களிடம் ஒரு பதிவினை முன்மொழிந்தேன். அதனை தொடர்ந்து சென்ற வாரம் ஒரு அருமையான சிஸ்கோ கிட் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து இதோ இன்னுமொரு சிஸ்கோ கிட் படம் பற்றிய பதிவு. இனிமேல் தொடர்ந்து இது போன்ற பதிவுகளை படிக்க வேண்டுமென்றால் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.காமிக்ஸ் சம்பந்தப்பட்ட பல படங்களை பார்த்து வைத்துள்ளேன். அவற்றையும் சீக்கிரமாகவே எழுதி தள்ளிவிடலாம். என்னுடைய பழைய சிஸ்கோ கிட பதிவில் இருந்து சில வரிகள்:

o henry சிஸ்கோ கிட்  - ஒரு அறிமுகம்: சிஸ்கோ கிட் பிரபல சிறுகதை எழுத்தாளர் ஒ.ஹென்றி அவர்களால் 1907'ல் உருவாக்கப் பட்ட ஒரு கற்பனை கதாபாத்திரம். இவரின் பின்புலம் என்னவென்றால் சிஸ்கோ கிட் ஒரு மெக்சிகன் கௌபாய் என்பதே.சிஸ்கோ கிட் என்ற இந்த கதாபாத்திரத்தை மைய்யமாக வைத்து இதுவரையில் மொத்தம் இருபத்தி மூன்று திரைப் படங்களும் ஐந்து தொலைக் காட்சி தொடர்களும் உருவாக்கப் பட்டு உள்ளன.

ஆரம்ப கால கட்டத்தில் சிஸ்கோ கிட் கருப்பு வெள்ளை திரைப் படங்களில் மட்டுமே வந்தார் (பெரிய கண்டுபிடிப்பு என்று சிலர் கூறுவது கேட்கிறது).பின்னர் காலப்பயணத்தில் கருப்பு வெள்ளை படங்கள் கலர் படங்களாக மாறின. முதன் முதலில் சிஸ்கோ கிட் ஒரு காமிக்ஸ் கதையில் தோன்றியது 1944'ல் ஆகும். அந்த காமிக்ஸ் பதிப்பகத்தின் பெயர் பெய்லி ஆகும். ஆனால் ஒரே ஒரு இதழுடன் அந்த தொடர் நின்று விட்டது. பின்னர் 1950'ல் பிரபல டெல் காமிக்ஸ் நிர்வாகத்தினர் இந்த கதை தொடருக்கு புத்துயிர் கொடுத்து 41 கதைகளை தொடர்ந்து எட்டு வருடங்கள் வெளியிட்டனர்

ஆனால் சிஸ்கோ கிட் காமிக்ஸ் கதைகளின் பொற்காலம் என்று கூறப்படும் காலம் 1961 முதல் 1967 வரைதான். எனென்றால் அப்போதுதான் மிகவும் புகழ் பெற்ற ஜோஸ் லுயிஸ் சாலினாஸ் என்பவர் தன்னுடைய அற்புதமான சித்திரங்களால் பலரின் மனதை கொள்ளை கொண்டார்.ஆனால், இவரை தவிர வேறு யாருமே சிஸ்கோ கிட் என்று கூறும்போது நமது நினைவுக்கு வர மறுப்பார்கள். அது தான் ஜோஸ் லுயிஸ் சாலினாஸ் அவர்களின் சிறப்பு அம்சம்.

முத்து காமிக்ஸ் தான் சிஸ்கோ கிட் காமிக்ஸ் கதைகளை முதலில் வெளியிட்டது என்று நினைத்தால் அது தவறு ஆகும். ஏனென்றால் மாலைமதி காமிக்ஸ் A.F.I என்ற காமிக்ஸ் நிறுவனத்தினர் சிஸ்கோ கிட் கதைகளை வெளியிட்டு விட்டனர். தமிழில் வந்த சில சிஸ்கோ கிட் கதைகளின் அட்டைப்படங்கள்: உபயம் - முத்து விசிறி மற்றும் பயங்கரவாதி மருத்துவர் ஏழு.

KUGAIYIL ORU PEN M072 (1) RC125-001
MuthuComics200MarmaSurangam tamil-comic-6 tamil-comic-13

A.F.I Comics - இந்த காமிக்ஸ் பற்றி கூற எனக்கு போதிய அனுபவம் இல்லாததால் அவற்றை டீலில் விட்டு விட்டு மற்ற கதைகளை பற்றி பார்போம். மாலைமதி காமிக்ஸ் நிறுவனத்தினர் முதலில் மாதம் இருமுறையும் பின்னர் வாரம் ஒருமுறையும் காமிக்ஸ்'களை வெளியிட்டனர். அவற்றில் முறையே
+ இண்டேர்பால் ஜானி ஹஸார்ட்
+ ரிப் கிர்பி
+ பிலிப் காரிகன்
Kisco Kid கிஸகோ கிட் (ஆம், சிஸ்கோ கிட்'ஐ தான் அப்படி வெளியிட்டனர்) ஆகிய நால்வரின் கதைகளே பெரும்பான்மையாக வரும். மாலைமதியில் வந்த பெரும்பான்மையான கதைகளை நமது ராணி மற்றும் முத்து காமிக்ஸில் வெளியிட்டு விட்டனர். இருந்தாலும்கூட மாலைமதியில் படிப்பதும், முத்துவில் படிப்பதும் தனி தனி சுகங்கள். ராணியில் படிப்பது சோதனை. ஏனென்றால் ராணியில் சிஸ்கோ கிட் என்ற பெயரை அவர்கள் சூப்பர் ஸ்டார் டிஸ்கோ என்று மாற்றி கதையமைதிருந்தனர். 

சிஸ்கோ கிட்- படங்களில்: 1907ம் ஆண்டு ஒ.ஹென்றி அவர்களால் எழுதப்பட்ட “தி காபலேரோஸ்  வே" என்ற சிறுகதையில் விளையாட்டாக பலரை கொள்ளும் ஒரு பாத்திரமாக அறிமுகம் ஆகிய சிஸ்கோ கிட், பின்னர் ஒரு மெக்சிகன் கவ் பாய் ஹீரோவாக மாறியது தனி கதை. முதலில் “தி காபலேரோஸ்  வே" என்ற பெயரிலேயே 1914ம் ஆண்டு முதல் சிஸ்கோ கிட் படம் வெளியானது. அதன் பின்னர் பல படங்கள் வெளியாகியது. அவற்றில் குறிப்பிடத்தக்கது "இன் ஓல்ட் அரிசோனா" என்ற படமாகும். இந்த படம் 1929ம் ஆண்டு வெளியானது. அவுட் டோரில் படமாக்கப்பட்ட முதல் பேசும்படம் இதுதான். இந்த படத்தில் சிஸ்கோ கிட் ஆக நடித்த வார்னர் பாக்ஸ்டர் அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை வென்றதும், படத்தை முதலில் ஒரிஜினலாக நடித்து (சிஸ்கோ கிட் வேடத்தில்) இயக்கவிருந்த ராவுல் வால்ஷ் படத்த்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும்போது ஒரு முயலால் ஒரு கண்ணை இழந்ததும் மற்ற முக்கியமான சம்பவங்கள்.   

தொடர்ந்து பல வருடங்களாக பல சிஸ்கோ கிட் படங்கள் வந்து வசூலில் சாதனை புரிந்தன. 1939ம் ஆண்டு ஒரு முக்கியமான ஆண்டாகும். அந்த ஆண்டுதான் சிஸ்கோ கிட் அவர்களிற்கு முதன் முதலாக ஒரு சக தோழன் வந்தார் (நன்பேண்டா). தி ரிடர்ன் அப் தி சிஸ்கோ என்ற படத்தில் வந்த கோர்டிட்டோ (குண்டுப்பையன் என்று பொருள்) தான் சிஸ்கோவின் ஜோடி. பின்னர் 3 ஆண்டுகள் இவர்கள் இனிவரும் ஜோடியாக பல படங்களில் நடித்து வந்தனர். 

Duncan Renaldo Signed Photo இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் வந்த சிஸ்கோ கிட் படங்களில் இரண்டு பெரிய மாற்றங்கள் இருந்தன. சிஸ்கோவாக டங்கன் ரேனால்டோ அவர்கள் நடிக்க ஆரம்பித்தது ஒன்று. கோர்டிட்டோ பாத்திரத்திற்கு பதிலாக "பான்ச்சோ" என்ற பாத்திரம் வந்தது (மெகா சீரியல்களில் இனி இவருக்கு பதிலாக இவர் என்பது போல ஒரு கதாபாதிரதிற்க்கு பதிலாக இன்னொரு பாத்திரம்). இவர்கள் ஐந்து வருடங்கள் ஜோடியாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தனர். பின்னர் முதன்முறையாக 1950ல் அரை மணி நேரம் ஓடும் தொலைகாட்சி தொடர் எடுக்கப்பட்டபோது டங்கன் ரேனால்டோவும், லியோ கேரில்லோவுமே நடித்தனர். 156 பாகங்கள் கொண்டு இந்த தொலைகாட்சி தொடர் 6 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடியது. 

இனிமேல் நாம் இந்த பதிவின் திரைப்படத்திற்கு செல்வோம்: தி டாக் ஸ்டோரி The Dog Story என்ற இந்த படமானது 1950ஆம் ஆண்டு வெளிவந்தது. இது இந்த ஆண்டு வெளிவந்த தொலைகாட்சி தொடரின் பதினேழாவது பாகம் ஆகும். ஒவ்வொரு பாகமும் அரைமணி நேரம் இருக்குமாறு அமைந்திருக்கும். இன்மேல் இந்த படத்தின் ஆரம்பத்திற்கு செல்வோம். இனிமேல் படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் நீங்கள் ரசிக்குமாறு நான் புகைப்படங்களாக வழங்கி உள்ளேன் (கூடவே என்னுடைய மொக்கை கமென்ட்டரியும் வேறு)

சிஸ்கோ கிட அறிமுகம்

நடிகர்களின் பெயர்கள் டங்கன் ரோனல்ட் சிஸ்கோ கிட ஆகவும்,லியோ கேரில்லோ பாஞ்சோ ஆகவும் நடிக்கின்றனர். Hank Patterson As தங்க வேட்டையர்  John Weaver மற்றும் அவரது அருமை நாய். மகள் வருவதை கடிதம் மூலம் தெரிந்து  கொள்கிறார். 
1 2 3
Tristram Coffin As வில்லன் டூட் கொட்ர்ல் மற்றும் Zon Murray As அவனது அடியாள் ஒமாஹா எஜமானனுக்காக தண்ணீர் எடுக்க செல்கிறது விசுவாசமான நாய்.  தங்க வேட்டையனை வேட்டையாட செல்லும் கயவர்கள் 
4 5 6
வில்லன்கள் அப்பாவி வேட்டையனை மடக்குகின்றனர்.  சமாளித்துக்கொண்டு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வேட்டையாடவந்த கயவர்களை மடக்குகிறார்.  பின்னர் நடக்கும் துப்பாக்கி சூட்டில் தங்க வேட்டையரை கயவர்கள் கொன்று விடுகின்றனர். 
7 8 9
அந்த கயவர்களை உக்கிரமாக தாக்குகிறது அந்த தங்க வேட்டையரின் நாய். அதனை சுட்டு விட்டு தப்பியோடிவிடுகின்றனர். கோச்சு வண்டியில் தங்கவேட்டையரின் மகள் நகருக்கு தந்தையை காண வருகிறார், கூடவே நம்ம ஹீரோக்களும் ஆஜராகிறார்கள். வில்லன்கள் நகருக்கு வருகின்றனர்.சுடப்பட்ட நாயானது தொடர்ந்து வந்து வில்லனை தாக்குகிறது.சிஸ்கோ நாயை கண்ட்ரோல் செய்கிறார்.
10 11 12
நாயை கொல்ல வில்லன் முயலும்போது சிஸ்கோ தடுத்து, நாய் என் உன்னையே தாக்கவேண்டும் என்று கேட்கிறார். வில்லன் ஆத்திரமடைகிறான்.  அவனை விட வேகமாக துப்பாக்கியை தூக்கும் சிஸ்கோ,அவனை பயம்கொள்ள வைக்கிறார்.
உண்மையை கண்டறிவேன் என்றும் சொல்கிறார்.
தங்கவேட்டையரின் மகள் நாயை காப்பாற்றியதற்கு நன்றி சொல்கிறார்.சிஸ்கோ வந்துவிட்டார்,இனி அவர் பார்த்துகொள்வார் என்று ஸ்டேஷன் எஜன்ட் சொல்கிறார்.
13 14 15

என்னடா, ரெகுலர் தமிழ் மசாலா படம் போலவே இருக்கே என்று தோன்றுகிறதா? தமிழ் என்றில்லை, உலகின் எல்லா மொழிகளிலும் இந்த மாதிரி மசாலா படங்கள் கல் தோன்றி முன் தோன்றா காலத்தில் இருந்தே வந்துக்கொண்டிருக்கின்றன.

இதனைப்போலவே ஒரு தமிழ்படத்தை பார்த்துள்ளேன். பெயர்தான் ஞாபகம் வர மறுக்கிறது. தேவர் பில்ம்ஸ் படம் என்று நினைக்கிறேன். இந்த பதிவை படிக்கும் வாசகர்கள் யாருக்கேனும் அந்த தமிழ் படம் நினைவுக்கு வந்தால் தவறாமல் தெரிவிக்கவும்.

ஸ்டேஷன் ஏஜென்ட்டிடம் சிஸ்கோ தங்க வேட்டையரின் கொலையாளியை கண்டறிவதாக உறுதியளிக்கின்றனர். 

குண்டடிபட்ட அந்த நாய்க்கு முதலுதவி அளிக்க முடிவெடுக்கின்றனனர், செவ்விந்தியர்களின் மூலிகை மூலம்.  விரைவில் காயங்கள் முற்றிலுமாக ஆறி விடுகின்றன. நாயும் நடக்க ஆரம்பித்து விடுகிறது. 
16 17 18
தன்னை வெறும் பாஞ்சோ என்றழைக்காமல் டாக்டர் பாஞ்சோ என்று கூறுமாறு பாஞ்சோ சொல்கிறார்.  நாய்க்கு காயம் ஆரியதை கண்டு சிஸ்கோ மகிழ்கிறான், இனி வில்லன்களை தேடலாமே?  அதே சமயம் நாயால் காயம் பட்ட வில்லனும் முதலுதவி பெறுகிறான். 
19 20 21
இதற்க்கு மேலும் சிஸ்கோ உயிரோடிருந்தால் ஆபத்து என்று முடிவெடுக்கின்றனர்.கிளம்புகின்றனர். நாய் குறைத்து அவர்களின் வருகையை உணர்த்துகிறது.புக்  வருவதற்கு முன்பே முன்னோட்டம் போடுவது போல. அதற்குள் வில்லன்கள் கனவுகளின் காதலரின் தொடர் பதிவுகள் போல குண்டு மழை பொழிய ஆரம்பித்து விடுகின்றனர்.
22 23 24
நமது ஹீரோக்களும் சளைக்காமல் பதிலடி கொடுக்கின்றனர், பதிவுகளில் வரும் கமெண்ட்டுகளை போல.  பதிலடிக்கு பயந்த வில்லன்கள் ஆளை விட்டால் போதும்டா சாமி என்று தப்பியோடி விடுகின்றனர். தப்பியோடும் வில்லன்களை நாய் துரத்துகிறது. அதனை தொடர்ந்து சிஸ்கொவும் பான்சொவும் புயலென வருகின்றனர்.
25 26 27
நாய், நேராக வில்லனின் ஆபீசுக்கு போகிறது. சிஸ்கோ அவர்களை கேள்வியால் குடைகிறார்.  நாய் துரத்தியதால் நாங்கள் குற்றவாளியல்ல, ஆதாரம் என்ன உள்ளது என்று வில்லன் கேட்கிறான் ஆதாரத்துடன் வருவதாக சிஸ்கோ சவால் விடுகிறான். பாஞ்சோ ஆமோதிக்கிறான் 
28 29 30

இதற்க்கு பிறகு நடந்தது என்ன என்பதை சின்னத்திரையில் காண்க. மொத்தக்கதையையும் சொல்லிவிட்டால் இன்டிரெஸ்ட் இருக்காதில்லையா? அதான் இப்படி. படமானது மொத்தமே இருபத்தி நாலு நிமிடங்கள் தான். ஆகையால் ஜாலியாக இதனை பார்த்து ரசியுங்கள். லிங்க் இதோ: 

படத்தை ஆன் லைனில் முழுவதுமாக பார்க்க: http://www.freemoviescinema.com/

படத்தின் விவரங்களை அறிந்து கொள்ள: http://www.tradebit.com

படத்தின் பெயர் : தி டாக் ஸ்டோரி The Dog Story

வருடம் : முதல் சீசன், பதினேழாம் பாகம் (Season 1, Episode 17)

ஓடும் நேரம் : 00:24:41

ஒளிபரப்பான நாள்: 26, December 1950.

இயக்குனர் : ஆல்பர்ட் ஹெர்மன்

தயாரிப்பாளர்: வால்டர் ச்விம்மர்

குழுமம்: ZTV Television Programs, Inc.

Cast:
Duncan Renaldo...............The Cisco Kid
Leo Carrillo..................Pancho
Tanis Chandler...............Melinda Weaver
Zon Murray...................Henchman Omaha
Tristram Coffin..............Dude Cottrell
Hank Patterson...............John Weaver
Kenne Duncan.................Station Agent.

இதற்க்கு முந்தைய எனது சிஸ்கோ கிட் பதிவினை படிக்க: சிஸ்கோ கிட் படம்

முத்து விசிறியின் முத்தான சிஸ்கோ கிட் பதிவினை படிக்க: சிஸ்கோ கிட் காமிக்ஸ் கதை

புதிய வாசகர்கள் என்னுடைய பழைய பதிவுகளை தெரிந்து கொள்ள,

 

எனது முந்தைய பதிவில் வந்த பட விபரங்கள்

1. டெக்ஸ் வில்லர் படம் - லார்ட் ஆப் த டீப்

2. குண்டன் பில்லி - மினி லயன் ஹீரோ படங்கள்

3. டேன்ஜர் டையபாலிக் - லயன் காமிக்ஸ் ஹீரோ படம்

4. மதி இல்லா மந்திரி (அ) இஸ்நோகுட் - திரைப்படம்

5. ரன்-டன்-ப்ளான்:லக்கிலுக்’ன் சக பாத்திரம்

6. சிஸ்கோ கிட் - அருமையான கௌபாய் படம்

7. விஸ்கி - சுஸ்கி மினி லயன் காமிக்ஸ் அறிமுகம்

8. ராணி காமிக்ஸ் வேட்டை வீரர் டேவிட்

9. ராணி காமிக்ஸ் ஜேம்ஸ் பான்ட் கதை தங்க ராஜா

காமிக்ஸ் சினிமா அல்லாத என்னுடைய பிற பதிவுகள்

1. ரகசிய ஏஜன்ட் ரஜினி காந்த் பூந்தளிர் காமிக்ஸ்

2.லயன் காமிக்ஸ் இதில் வராத ஸ்பைடரின் எழுத்து கதை

3. தினத் தந்தி பேப்பரில் வந்த ஏஜன்ட் காரிகனின் முழு வண்ண கதை

4. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் காமிக்ஸ் கதை

அடுத்த காமிக்ஸ் பதிவு மூலம் உங்களை சந்திக்கிறேன், விரைவில்.

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.

Related Posts Widget for Blogs by LinkWithin