Showing posts with label King Viswa. Show all posts
Showing posts with label King Viswa. Show all posts

Wednesday, April 14, 2010

தங்க ராஜா

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,

வணக்கம். 

இன்று தமிழ் புத்தாண்டு நாள் மற்றும் அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள். அதுமட்டுமில்லாமல் இன்றுதான் நம்முடைய நண்பர் கிங் விஸ்வாவின் பிறந்த நாளும்கூட. அதனால் பதிவுலகில் ஒரு களை கட்ட ஆரம்பித்து இருக்கிறது. என்னுடைய பங்கிற்கு நானும் ஒரு பதிவினை இடலாம் என்று நினைத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போதுதான் நம்முடைய ஒலக காமிக்ஸ் ரசிகரின் அப்பதிவினை பார்த்தவுடன் எனக்கு அந்த தங்க ராஜா (கோல்ட் பிங்கர்) பற்றிய பதிவினையே இடலாம் என்று முடிவெடுத்தேன். இதோ அந்த பதிவு: 

 

ராணி காமிக்ஸ் - சாகச வீரர் ஜேம்ஸ் பான்ட் - தங்க ராஜா - கோல்ட் பிங்கர் படத்தின் காமிக்ஸ் வடிவம்
Rani Comics 007 James Bond Thanga Raja

இந்த தங்க ராஜா கதை என்னை மிகவும் கவர்ந்த கதையாகும். இதில் வரும் வில்லனின் கையாள் ஒருவனிடம் இரும்பால் ஆன ஒரு தொப்பி இருக்கும். அதனைக் கொண்டு அவன் பலரை கொள்வான். அவனிடம் ஜேம்ஸ் பாண்ட் மோதும் காட்சிகள் இன்றும் என் கண் முன் நிற்கின்றன.

முதன்முதலில் கோல்ட் பிங்கர் தினசரியில் தொடராக வந்தபோது வந்த முதல் பக்கம்.

Daily Express Strip_Goldfinger_title Rani Comics Thanga Raja

இந்த கதையை ஆங்கிலத்தில் படிக்க நீங்கள் அமேசான் வலைத்தளத்தில் தேடினால் வாங்கலாம். இல்லையெனில் பெரிய புத்தக கடைகளில் இருக்கும், உதாரணமாக லேண்ட் மார்க்.

தங்க ராஜா - கோல்ட் பிங்கர் - கதை புத்தகமாக டைட்டன் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டு வந்துள்ளது

Gold Finger Book 1

இந்த தங்க ராஜா என்ற கதையானது இயான் பிளெம்மிங் எழுதிய கோல்ட் பிங்கர் என்ற ஆங்கில நாவலை தழுவியே காமிக்ஸ் வடிவமாக மாற்றப்பட்டது. இதோ அந்த நாவலின் பல விதமான அட்டைப்படங்கள்.

Gold Finger Book 2 Gold Finger Book 3 Gold Finger Book 5
Goldfinger poster 16 Gold Finger Book 4 Gold Finger Book 6

இது போல சில டைஜெஸ்ட்டுகளும்  ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. படித்து மகிழுங்கள். ஒன்று தெரியுமா? மாடஸ்டி பிளேயசி ஆங்கில நாவல்கள் உலகிலேயே இந்தியாவில் மட்டுமே கிடைக்கும், பெங்குவின் புத்த பதிப்பகத்தினரால்.

Gold Finger Book 7

அடுத்தபடியாக இந்த கோல்ட் பிங்கர் காமிக்ஸை மொழியாக்கம் செய்து பல உலக மொழிகளில் வந்த காமிக்ஸ்களின் அட்டைப்படங்கள்.

Daily Express Strip_Goldfinger_title Rani Comics Thanga Raja Denmark02-cover Daily Express Strip_Goldfinger_title Rani Comics Thanga Raja Sweden1971_1_cover

ஒரு விஷயத்தினை நன்றாக கவனியுங்கள் - அந்த காலத்தில் Gold ginger hero ஷான் கானரியை மனதில் கொண்டே இந்த காமிக்ஸ்களின் அட்டைப்படங்கள் வரையப்பட்டு இருக்கின்றன.

Daily Express Strip_Goldfinger_title Rani Comics Thanga Raja Chile13_cover Daily Express Strip_Goldfinger_title Rani Comics Thanga Raja Brazil01-cover

அடுத்தபடியாக அந்த தங்க ராஜாவை படமாக காண்போம். இதோ கோல்ட் பிங்கர் படத்தின் திரைப்பட போஸ்டர்கள். ஆங்கிலம் மற்றும் பல உலக மொழிகளில்

goldfinger-poster 1 goldfinger Poster 2 Goldfinger poster 5
goldfinger Poster 3 Goldfinger poster 4 Goldfinger poster 6
Goldfinger poster 7 Goldfinger poster 10 Goldfinger poster 9
Goldfinger poster 8 Goldfinger poster 12 Goldfinger poster 15
Goldfinger poster 14 Goldfinger poster 18 Goldfinger poster 17
Goldfinger poster 13 Goldfinger poster 19 goldfinger-poster 1

புதிய வாசகர்கள் என்னுடைய பழைய பதிவுகளை தெரிந்து கொள்ள,

எனது முந்தைய பதிவில் வந்த பட விபரங்கள்

1. டெக்ஸ் வில்லர் படம் - லார்ட் ஆப் த டீப்

2. குண்டன் பில்லி - மினி லயன் ஹீரோ படங்கள்

3. டேன்ஜர் டையபாலிக் - லயன் காமிக்ஸ் ஹீரோ படம்

4. மதி இல்லா மந்திரி (அ) இஸ்நோகுட் - திரைப்படம்

5. ரன்-டன்-ப்ளான்:லக்கிலுக்’ன் சக பாத்திரம்

6. சிஸ்கோ கிட் - அருமையான கௌபாய் படம்

7. விஸ்கி - சுஸ்கி மினி லயன் காமிக்ஸ் அறிமுகம்

8. ராணி காமிக்ஸ் வேட்டை வீரர் டேவிட்

காமிக்ஸ் சினிமா அல்லாத என்னுடைய பிற பதிவுகள்

1. ரகசிய ஏஜன்ட் ரஜினி காந்த் பூந்தளிர் காமிக்ஸ்

2.லயன் காமிக்ஸ் இதில் வராத ஸ்பைடரின் எழுத்து கதை

3. தினத் தந்தி பேப்பரில் வந்த ஏஜன்ட் காரிகனின் முழு வண்ண கதை

4. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் காமிக்ஸ் கதை

அடுத்த காமிக்ஸ் பதிவு மூலம் உங்களை சந்திக்கிறேன், விரைவில்.

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.

Friday, March 19, 2010

ராணி காமிக்ஸ் வேட்டை வீரர் டேவிட் பாத்திரத்தில் நடித்த நடிகர் மரணம்

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,

வணக்கம்.

சமீப காலங்களில் பணிச்சுமை காரணமாக என்னால் பதிவுகள் இடவோ அல்லது கமெண்டுகள் இடவோ இயலவில்லை. சக காமிக்ஸ் நண்பர்கள் மன்னிக்கவும். ஆனால், விபத்தினால் ஒரு கையுடன் நம்முடைய ஓலைக காமிக்ஸ் ரசிகர் தினமும் ஒரு பதிவினை இடும்போது நாம் ஒரு குரும்பதிவாவது இட்டே தீரவேண்டும் என்று முடிவெடுத்து விட்டு இன்று இந்த பதிவினை ஆரம்பிக்கிறேன். இனிமேல் வாரம் ஒரு பதிவினையும் இட்டு விடுவது என்ற தீர்மானத்தையும் இங்கு முன்வைக்கிறேன்.

நேற்று வழமை போல வலைதளங்களில் ஊர்ந்துகொண்டு இருந்தபோது நான் படித்த ஒரு தகவல் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அதாவது பெஸ் பார்க்கர் (Fess parker) என்ற ஹாலிவுட் நடிகர் சிவப்ராப்தி பெற்றார் என்பதே அந்த தகவல்.

fess

யார் இந்த நடிகர் என்று நினைப்பவர்களுக்கு ஒரு சிறு நினைவூட்டல். லயன் காமிக்ஸின் ஐம்பதாவது இதழ் டிராகன் நகரம் ஆகும். திகில் காமிக்ஸின் ஐம்பதாவது இதழ் கூட டெக்ஸ் வில்லரின் ஸ்பெஷல் இதழே ஆகும். ஆனால் ராணி காமிக்ஸின் ஐம்பதாவது இதழ் ஒரு சராசரியான கதையே. ஸ்பெஷல் அல்ல. அந்த ஐம்பதாவது புத்தகத்தினை பற்றிய விவரங்கள் இதோ:

ராணி ஐம்பதாவது இதழ் - பூனைத் தீவு - வேட்டை வீரர் டேவிட் - அட்டை

ராணி ஐம்பதாவது இதழ் - பூனைத் தீவு - வேட்டை வீரர் டேவிட் - முதல் பக்கம் 

Rani comics cover 1st page

இந்த இதழை பற்றிய ஒரு முழு நீள விமர்சனத்திற்கு கிங் விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகின் இந்த பதிவினை படிக்கவும்: டேவி குரோக்கட்

அவரைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள – Wikipedia

வால்ட் டிஸ்னி படங்களில் நடித்த பெஸ் பார்க்கர் பற்றி தெரிந்து கொள்ள – Wikipedia

Part 1 – King of wild life frontier -  IMDB Link

Part 2 – Davy crockett and the river pirates - IMDB Link

இதோ அந்த படங்களின் டிவிடி கவர் படங்கள்:

Davy Crockett King of Wild Frontier DVD Cover Davy Crockett River Pirates DVD Cover

First Film: Not available                                                                          Part 1        Part 2      Part 3  Part 4

                                                                                                                       Part 5        Part 6      Part 7  Part 8

உண்மையில் இந்த படங்களின் டவுன்லோட் லின்க்குகள் வலைதளங்களில் கிடைக்கின்றன. என்னுடைய நேரமின்மை காரணமாக முதல் பட டவுன்லோடுகளை அளிக்க இயலாமைக்கு வருந்துகிறேன். மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் அந்த படங்கள். நண்பர்கள் லக்கி லிமட், ரமேஷ், ரவீந்தர் போன்றவர்களில் லிங்க் உள்ள யாராவது ஒருவர் இதனை இங்கு தருவித்தால் மற்றவர்களும் பார்த்தது மகிழலாம், (நானே டவுன்லோட் செய்து தான் பார்த்தேன்).

புதிய வாசகர்கள் என்னுடைய பழைய பதிவுகளை தெரிந்து கொள்ள,

எனது முந்தைய பதிவில் வந்த பட விபரங்கள்

1. டெக்ஸ் வில்லர் படம் - லார்ட் ஆப் த டீப்

2. குண்டன் பில்லி - மினி லயன் ஹீரோ படங்கள்

3. டேன்ஜர் டையபாலிக் - லயன் காமிக்ஸ் ஹீரோ படம்

4. மதி இல்லா மந்திரி (அ) இஸ்நோகுட் - திரைப்படம்

5. ரன்-டன்-ப்ளான்:லக்கிலுக்’ன் சக பாத்திரம்

6. சிஸ்கோ கிட் - அருமையான கௌபாய் படம்

7. விஸ்கி - சுஸ்கி மினி லயன் காமிக்ஸ் அறிமுகம்

காமிக்ஸ் சினிமா அல்லாத என்னுடைய பிற பதிவுகள்

1. ரகசிய ஏஜன்ட் ரஜினி காந்த் பூந்தளிர் காமிக்ஸ்

2.லயன் காமிக்ஸ் இதில் வராத ஸ்பைடரின் எழுத்து கதை

3. தினத் தந்தி பேப்பரில் வந்த ஏஜன்ட் காரிகனின் முழு வண்ண கதை

4. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் காமிக்ஸ் கதை

அடுத்த காமிக்ஸ் பதிவு மூலம் உங்களை சந்திக்கிறேன், விரைவில்.

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்

Tuesday, April 14, 2009

The Phantom – King of the Jungle – 1943 TV Serial

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,

வணக்கம்.

மன்னிக்கவும். பணிமாற்றம் காரணமாக நான் அடுத்த மாதம் வேறிடம் செல்ல வேண்டி உள்ளது. அதன் காரணமாக மறுபடியும் பல பிரச்சினைகள், சிக்கல்கள், சோதனைகள் இதர.இதர.பணிமாற்ற உத்தரவு உறுதி ஆனதில் இருந்து மறுபடியும் பதிவிடும் எண்ணமே வரவில்லை.

ஆனால் நான் என்னுடைய சொந்தக் கதை சோகக்கதையை சொல்ல இந்த பதிவை இடவில்லை. இந்த பதிவு தமிழ் காமிக்ஸ் உலகின் முடிசூடிய மன்னர் கிங் விஸ்வா அவர்களின் பிறந்த நாள் ஸ்பெஷல் பதிவு ஆகும். இன்று (ஏப்ரல் மாதம் பதினான்காம் நாள் அவருடைய பிறந்த நாள் என்பதை முத்து விசிறி அவர்களின் ஒரு பதிவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் கூறியதை வைத்தே இந்த கணிப்பு). பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே. தொடருங்கள் உங்கள் சேவையை.

அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த பதிவு இருக்க வேண்டும் என்பதால் தமிழ் காமிக்ஸ் உலகில் அறிமுகம் ஆகிய காமிக்ஸ் ஹீரோக்களை மையமாக வைத்து வந்த திரைப் படங்களின் வரிசையில் இன்னும் பத்திற்கும் மேற்பட்டவை தயாராக உள்ள நிலையில் விஸ்வா அவர்களின் பிறந்த நாளைக்கு என்ன பதிவிடலாம் என்று யோசித்த போது தான் என்னுடைய நினைவுக்கு வந்தவர் காமிக்ஸ் உலகின் முதல் சூப்பர் ஹீரோ. ஆம், சுமார் எழுபத்தி மூன்று வருடங்களுக்கு முன்னர் முதன் முதலாக காமிக்ஸ் வடிவில் வந்து நம்மை மகிழ்வித்த வேதாளரே நமது ஹீரோ.

முதன் முதலில் அறுபதுகளின் ஆரம்பத்தில் இந்திரஜால் காமிக்ஸ் இதழில் வேதாளன் என்றும், பின்னர் அறுபதுகளின் மத்தியில் குமுதம் இதழில் முகமூடி என்றும், எழுபதுகளின் மத்தியில் முத்து காமிக்ஸ் இதழ்களில் வேதாளர் என்றும்,தொண்ணுருகளின் ஆரம்பத்தில் ராணி காமிக்ஸ் இதழில் மாயாவி என்றும் பல வகைகளில் அழைக்கப்பட்ட ஒரு கதாநாயகனை பற்றிய பதிவு இது. ஆங்கிலத்தில் பேன்டம் Phantom என்று அழைக்கப் பட்டவர் இவர். வேதாளன் இதுவரையில் இந்தியாவில் தமிழிலும் ஆங்கிலத்திலும் தோன்றியுள்ள இதழ்கள்:

வேதளனின் முதல் இந்திரஜால் காமிக்ஸ் கதை 1964 மார்ச்குமுதம் இதழ் 28th July 1966 முகமூடி முதல் பகுதி (நன்றி சாத்தான்)
Indrajal Comics 1st issue March 1964 Kumudham July 28 1966 Phantom
வேதாளனின் முதல் முத்து காமிக்ஸ் வெளியிடு N0: 58முதல் ராணி காமிக்ஸ் மாயாவி இதழ் 140 - 1st May 1990
muthu comics 58 Rani Comics 1st Pahntom May 1990
டைமண்ட் காமிக்ஸ் வேதாளன் முதல் இதழ் June 1990த இந்தியன் எக்ஸ்பிரெஸ் Egmont வேதாளன் முதல் இதழ்
Diamond Comics 1st Phantom June 1990 The Indian Express Egmont Phantom 1 2000
கோமிக் வோல்ட் முதல் இதழ் அட்டையில் வேதாளன் Oct 1998வேதாளனின் முதல்கதை கோமிக்வோல்ட் 3வது இதழ் Dec 1998
Comic World 1 1st Phantom Story Oct 1998 Comic World 3 1st Phantom Story Dec 1998

வேதாளர் - தொலைக் காட்சி தொடர் (பதினைந்து பாகங்கள்) 1943

The Phantom 1943 Serial Original DVD Cover

தொடரின் பெயர்The Phantom
ஆரம்பித்த நாள்24th Dec 1943
மொழி ஆங்கிலம்
மூலக்கதைLee Falk
திரைக்கதைMorgan Cox
தயாரிப்புColumbia Pictures

இயக்குனர்

B. Reeves Eason
மொத்த பாகங்கள்15 பாகங்கள்
நிமிடங்கள்299 நிமிடங்கள்
வேதாளர்Tom Tyler
டயானாJeanne Bates
டாக்டர் மேக்ஸ் பிரேம்மர்Kenneth MacDonald
விஞ்சானி டேவிட்சன்Frank Shannon

1943 TVS stills Scene 1 1943 TVS stills Scene 2 1943 TVS stills Scene 3

கதை: சொலோஸ் என்ற ஒரு பழங்கால நகரை கண்டுபிடிக்க புரொபெசர் டேவிட்சன் ஒரு மேப்'ஐ முழுமை செய்ய வேண்டும். மொத்தம் ஏழு துண்டுகளை ஒன்றாக சேர்த்தாலே அந்த மேப் முழுமை பெரும். புரொபெசர் டேவிட்சன் மூன்று துண்டுகளை வைத்து உள்ளார். மற்ற துண்டுகளை கண்டுபிடிக்க அவர் முயல்கிறார். அவருடைய ஆராய்ச்சி குழுவில் அவரின் அழகிய மகள் டயானா மற்றும் பலர் உள்ளனர்.

அந்த சொலோஸ் என்ற ஒரு பழங்கால நகரை டாக்டர் மேக்ஸ் பிரேம்மர் கண்டு பிடிக்க துடிக்கிறார். ஏனெனில் அந்த நகரை கண்டு பிடித்து அதனை தன்னுடைய ரகசிய ராணுவ தளமாக்க எண்ணுகிறார். அதற்க்கு தடையாக இருந்த வேதாலனை ஒரு விஷ அம்பின் மூலம் கொன்று விடுகிறார். அடுத்த வேதாளர் (இறந்த வேதாளரின் மகன்) இந்த சதி முயற்சியை எப்படி தடுக்கிறார் என்பதே கதை ஆகும்.

1943 TVS stills Scene 4 1943 TVS stills Scene 5 1943 TVS stills Scene 6

இனி இந்த படத்தின் விமர்சனத்திற்கு வருவோம்:

  • வேதாளன் கதை எழுதப்பட்டு ஏழு வருடங்களுக்குள் ஆரம்பிக்கப்பட்ட தொடர் என்பதால் நிறைய எதிர்பார்க்க வேண்டாம்.
  • மேலும் தொலைகாட்சி தொடர் என்பதால் ஒவ்வொரு வாரமும் திருப்பம் வேண்டும் என்பதால் செயற்கையாக சில சிக்கல்களையும், முடிச்சுகளையும், ஆபத்தான கட்டங்களையும் உருவாக்கி இருப்பார்கள்.
  • உதாரணமாக ஒவ்வொரு வாரத்தின் முடிவிலும் வேதாளன் ஏதாவது ஒரு ஆபத்தில் சிக்கி இருப்பார். அவரின் உயிர் ஆபத்தில் இருக்கும். சதிகாரர்களின் வலையில் (வலிய) சென்று சிக்கி இருப்பார். அந்த வாரத்தொடர் முடியும் போது திரையில் "Can the Phantom escape the clutches of the angry lion?" "Will Diana be rescued?" "Tune in next week" என்று முடியும்.
  • முக்கால்வாசி கட்டங்களில் அவரை காப்பாற்றுவது அவரது வளர்ப்பு பிராணி டெவில் ஆகும். தவறாக இருந்தாலும் கூறுவதில் தப்பில்லை. இந்த தொடரின் மொத்த நடிகர்களில் டெவில் தான் சிறப்பான் பங்களித்து உள்ளது.
1943 TVS stills Scene 7 1943 TVS stills Scene 8 1943 TVS stills Scene 9

இந்த தொடரை சிறப்பாக விளம்பரப் படுத்தி இருப்பார்கள். இப்போது வரும் படங்களில் எல்லாம் ஏதாவது ஒரு பன்ச் லைன் இருக்கும். ஆனால் இந்த விஷயத்தை ஹாலிவுட்காரர்கள் அப்போதே செய்து விட்டார்கள். இதோ அந்த தொடரின் சில பல பன்ச் லைன்கள்:

  • THE AMAZING PHANTOM COMES TO THRILLING LIFE ON THE SCREEN!
  • AMERICA'S FAVORITE CARTOON HERO...NOW ON THE SCREEN!
  • He's here...he's everywhere...STRIKING FEAR in the hearts of his country's enemies!
  • The most fantastic...most exciting serial ever made!
  • He strikes like lightning! He fights like a madman! He flies through space 1000 miles a minutes in this 1000 thrills-a-minute SERIAL!

இந்த தொடரில் சில பல முக்கிய விஷயங்கள் (என்னுடைய பார்வையில்):

  • இந்த தொடரில் வேதாளர் ஆக நடித்தவர் ஆவார்.இவரை அப்போதைய அபிஷேக்பச்சன் என்றும் கூறலாம். இவரை B கிரேட் படங்களின் கேரி கூப்பர் என்றும் கூறுவர்.
  • இந்த தொடரில் வேதாலனின் வளர்ப்பு பிராணியாக வரும் டெவில் மிகவும் பிரபலமான ஒரு விலங்கு ஆகிய Ace the Wonder Dog ஆகும். கதைப்படி டெவில் ஒரு காட்டு நரி ஆகும். ஆனால் இந்த தொடரில் அதை ஜெர்மன் ஷெப்பர்ட் ஆக மாற்றி இருப்பார்கள்.
  • இந்தக் கதை எதிர்நாயகனின் முகத்தை நன்றாக உற்று பாருங்கள். நம்முடைய இந்தியத் தொலைக்காட்சிகளில் எண்பதுகளில் The Three Stoodges என்று ஒரு தொடர் வந்தது நன்றாக நினைவிருக்கும். அந்த தொடரின் ஒரு முக்கிய நடிகர் இவர்.
  • வேதளனின் பெயர் இந்த தொடரில் Geoffrey Prescott ஆகும். நெடுநாள் வாசகர்கள் பெயரையும் மாற்றி விட்டார்களா என்று என்ன வேண்டாம். உண்மையில் அப்போது கிட் வாக்கர் என்ற பெயரை லீ பாக் சூட்டவே இல்லை. அதனால் தான் இந்த பெயர் குழப்பம்.
  • படத்தின் பகுதிகள் ஹாலிவுட்டில் படமாக்கப்பட்டன. அதனை தான் ஆப்பிரிக்க என்று நம்மிடம் தொலைக்காட்சியில் காட்டுவார்கள்.
  • Lee Falk இந்த சீரியலை பார்க்கவே இல்லையாம். முதல் பகுதியை பார்த்து மனமொடிந்து போன அவரின் கமெண்ட்:"the serial looked like it had been made in a phone booth".

Tom Tyler in Adventures of captain marvel இந்தக் கதையின் நாயகன் பற்றி சில குறிப்புகளை கண்டிப்பாக கூறியே ஆகவேண்டும் என்பதால் இந்த பின்குறிப்பு.

முத்து காமிக்ஸ் இதழ் 48ல் வந்த விசித்திர வேந்தன் கதையில் அந்த நாட்டு மன்னர் வாசினிக்கு rheumatoid arthritis என்ற நோய் இருக்கும். அந்த நோயால் பாதிக்கப் பட்டவர் தான் நம் நாயகன் Tom Tyler.

இவர் ஆரம்ப காலத்தில் பல Western வெஸ்டர்ன் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். உலகப் புகழ் பெற்ற Boris Karloff இன் மறைவுக்கு பின் அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்து பலரின் கவனத்தி கவர்ந்தார். அதனால் கேப்டன் மார்வல் என்னும் தொலைக்காட்சி தொடரில் நடித்தார். அந்த தொடரை பார்த்தே இவருக்கு வேதாளன் தொடரில் நடிக்கும் வைப்பு வழங்கப்பட்டதாம்.

இந்த வேதாளன் தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணம் Adventures Of Captan Africa(ஆம், இது ஒரு வெற்றி பெற்ற தொடர்) நமது கதாநாயகன் ஆகும். இவர் அச்சு அசலாக வேதாளனைப் போலவே இருந்ததாக பலர் கூறுவர். இந்த தொடரில் இவர் அணிந்து இருக்கும் வேதாளனின் இடை பெல்ட் இவருக்கு ஒரு ரசிகரால் அளிக்கப்பட்டதாகும். வேதாளன் தொடரில் இவர் நடிக்கிறார் என்று கேள்விப் பட்டவுடன் ஒரு வாசகர் உண்மையான கடற்கொள்ளையரின் இடை பெல்ட்'ஐ இவருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

இந்த வேதாளன் தொடர் முடிந்தவுடன் Columbia Pictures மறுபடியும் வேறொரு வேதாளன் தொடரை வெளியிட நினைத்தனர். அதனால் பத்து வருடங்கள் கழித்து King Features உடன் இருந்த ஒப்பந்தத்தை நம்பி பாதி தொடரை Tom Tylerஐ வைத்து ஷூட் செய்தும் விட்டனர். அந்த சமயத்தில் ஸ்டுடியோ சார்பாக தயாரிப்பாளர் ஆக இருந்தவர் Sam Katzman ஆவார். இவர் அந்தக் காலத்திலேயே உலகமகா கஞ்சன் என்ற பெயரை எடுத்தவர். இவரின் விலை குறைப்பை சகித்துக் கொள்ள முடியாத King Features நிறுவனத்தினர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உடன்பட மறுத்து விட்டனர். அந்த நேரத்தில் நமது Tom Tyler வேறு இறந்து விட்டார்.அதனால் கதையை மாற்றி எப்படியெல்லாம் பழைய பகுதிகளுடன் இணைக்க முடியுமோ அப்படி இணைத்து எடுத்த சீரியல் தான் இது.

கதையின் ஹீரோ வேதாளன் போலவே முகமூடி அணிந்து இருப்பார். குதிரையில் வருவார். காட்டுப் பகுதியில் தான் முழு கதையும் நடைபெறும். இவ்வாறாக பல கூறலாம். இந்த சுட்டியை கிளிக் செய்து நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள். அந்நாளில் வழக்கமாக ஒரு பதினைந்து பாக சீரியல் எடுத்தால் அதில் ஒரு பாகம் Cheating (சீட்டிங்) பாகமாக இருக்கும். அதாவது அந்த ஒரு வாரக்கதை முழுவதுமாக பிளாஷ் பேக்கிலேயே முடிந்து விடும், அப்படிப் பட்ட ஒரு வாரக் கதையை தான் தொலைக் காட்சி சொற்தொடரில் சீட்டிங் பாகம் என்று கூறுவர். ஆனால் நமது Sam Katzman அவர்களின் சீரிய கைவண்ணத்தால் இந்த பதினைந்து பாகத்தில் நான்கு பாகங்கள் சீட்டிங் பகுதிகளாக அமைந்தது.Columbia Pictures நிறுவனத்தின் கடைசி கானக சீரியலும் இதுதான்.

பாகம் தலைப்புராபிட்ஷேர் லிங்க்
Chapter : 1The Sign of the Skull

http://rapidshare.com/files/134582438/pch.01.part1.rar
http://rapidshare.com/files/134592930/pch.01.part2.rar
http://rapidshare.com/files/134595405/pch.01.part3.rar

Chapter : 2The Man Who Never Dies

http://rapidshare.com/files/134602481/pch.02.part1.rar
http://rapidshare.com/files/134608890/pch.02.part2.rar
http://rapidshare.com/files/134610575/pch.02.part3.rar

Chapter : 3A Traitor's Code

http://rapidshare.com/files/134617314/pch.03.part1.rar
http://rapidshare.com/files/134623448/pch.03.part2.rar
http://rapidshare.com/files/134624910/pch.03.part3.rar

Chapter : 4The Seat of Judgment

http://rapidshare.com/files/134630886/pch.04.part1.rar
http://rapidshare.com/files/134636659/pch.04.part2.rar
http://rapidshare.com/files/134638139/pch.04.part3.rar

Chapter : 5The Ghost Who Walks

http://rapidshare.com/files/134643504/pch.05.part1.rar
http://rapidshare.com/files/134648438/pch.05.part2.rar
http://rapidshare.com/files/134649557/pch.05.part3.rar

Chapter : 6Jungle Whispers

http://rapidshare.com/files/134654236/pch.06.part1.rar
http://rapidshare.com/files/134658556/pch.06.part2.rar
http://rapidshare.com/files/134659140/pch.06.part3.rar

Chapter : 7The Mystery Well

http://rapidshare.com/files/141971492/pch07.part1.rar
http://rapidshare.com/files/141975127/pch07.part2.rar
http://rapidshare.com/files/141975778/pch07.part3.rar

Chapter : 8In the Quest of the Keys

http://rapidshare.com/files/141979336/pch08.part1.rar
http://rapidshare.com/files/141983115/pch08.part2.rar
http://rapidshare.com/files/141983686/pch08.part3.rar

Chapter : 9The Fire Princess

http://rapidshare.com/files/142062186/pch09.part1.rar
http://rapidshare.com/files/142070515/pch09.part2.rar
http://rapidshare.com/files/142072036/pch09.part3.rar

Chapter : 10The Chamber of Death

http://rapidshare.com/files/142078862/pch10.part1.rar
http://rapidshare.com/files/142085577/pch10.part2.rar
http://rapidshare.com/files/142086640/pch10.part3.rar

Chapter : 11The Emerald Key

http://rapidshare.com/files/142093346/pch11.part1.rar
http://rapidshare.com/files/142098141/pch11.part2.rar

Chapter : 12The Fangs of the Beast

http://rapidshare.com/files/142105205/pch12.part1.rar
http://rapidshare.com/files/142110280/pch12.part2.rar

Chapter : 13The Road to Zoloz

http://rapidshare.com/files/142117781/pch13.part1.rar
http://rapidshare.com/files/142122974/pch13.part2.rar

Chapter : 14The Lost City

http://rapidshare.com/files/142131261/pch14.part1.rar
http://rapidshare.com/files/142150028/pch14.part2.rar

Chapter : 15Peace in the Jungle

http://rapidshare.com/files/142156370/pch15.part1.rar
http://rapidshare.com/files/142160651/pch15.part2.rar

நண்பர்களே, இந்த ராபிட்ஷேர் லிங்க்குகள் (உதாரணமாக முதல் பாகத்தில் மூன்று லிங்க்குகள் இருக்கும்) ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.

உதாரணம்: நீங்கள் முதல் பகுதியை பார்க்க விரும்புகிறீர்கள். அதனால் நீங்கள் மூன்று ராபிட்ஷேர் fileகளையும் டவுன்லோட் செய்ய வேண்டும். முதல் file டவுன்லோட் செய்து முடித்த உடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் fileகளை டவுன்லோட் செய்யும்போது கணினி உங்களை REPLACE file என்று கேட்கும். அப்போது நீங்கள் YES என்று கொடுத்தால் மூன்று fileகளையும் டவுன்லோட் ஆகி முதப் பகுதியை நீங்கள் பார்க்கலாம்.

என் கருத்து: Lee Falk என்ன வேண்டுமென்றாலும் கூறிக் கொள்ளட்டும். தன்னை காமிக்ஸ் ரசிகன் வெறியன் என்று கூறிக் கொள்ளும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய அற்புதமான கலைப்போக்கிஷம் இந்த தொலைக்காட்சி தொடர். பட்ஜெட் பிரச்சினை இருந்தாலும் சிறப்பான முறையில் எடுக்கப்பட்ட ஒரு தொடர். கலெக்டர்ஸ் எடிஷன்.

எனது ரேட்டிங்: ********** (8/10).

இந்த பதிவு சார்ந்த லிங்க்குகள்

சீரியல் பற்றிய விக்கிபீடியா சுட்டி

டாம் டெய்லர் பற்றிய விக்கிபீடியா சுட்டி

கேப்டன் விஜயகாந்த் ஆபிரிக்க பற்றிய விக்கிபீடியா சுட்டி

அமேசானில் வீடியோ வாங்க சுட்டி

இந்த வீடியோவை தரமிரக்கிய பிராங்க்கின் அப்னி இந்தியா லிங்க்

டீ.வீ.டி வர்டிக்ட் விமர்சனம் சுட்டி

யாகூ முவீஸ் விமர்சனம் சுட்டி

IMDB சுட்டி

இந்த பதிவை கிங் விஸ்வா அவர்களுக்கு சமர்பிக்கிறேன். Happy Birth Day King Viswa. அதே சமயத்தில் வேதாளனை பற்றி ஒரு சிறந்த பதிவு இடும்படி அவரை கேட்டுக் கொள்கிறேன்.

புதிய வாசகர்கள் என்னுடைய பழைய பதிவுகளை தெரிந்து கொள்ள,

எனது முந்தைய பதிவில் வந்த பட விபரங்கள்

1. டெக்ஸ் வில்லர் படம் - லார்ட் ஆப் த டீப்

2. குண்டன் பில்லி - மினி லயன் ஹீரோ படங்கள்

3. டேன்ஜர் டையபாலிக் - லயன் காமிக்ஸ் ஹீரோ படம்

4. மதி இல்லா மந்திரி (அ) இஸ்நோகுட் - திரைப்படம்

5. ரன்-டன்-ப்ளான்:லக்கிலுக்’ன் சக பாத்திரம்

6. சிஸ்கோ கிட் - அருமையான கௌபாய் படம்

7. விஸ்கி - சுஸ்கி மினி லயன் காமிக்ஸ் அறிமுகம்

அடுத்த காமிக்ஸ் படம் மூலம் உங்களை சந்திக்கிறேன், முடிந்தால்.

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.

Related Posts Widget for Blogs by LinkWithin