Wednesday, April 14, 2010

தங்க ராஜா

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,

வணக்கம். 

இன்று தமிழ் புத்தாண்டு நாள் மற்றும் அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள். அதுமட்டுமில்லாமல் இன்றுதான் நம்முடைய நண்பர் கிங் விஸ்வாவின் பிறந்த நாளும்கூட. அதனால் பதிவுலகில் ஒரு களை கட்ட ஆரம்பித்து இருக்கிறது. என்னுடைய பங்கிற்கு நானும் ஒரு பதிவினை இடலாம் என்று நினைத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போதுதான் நம்முடைய ஒலக காமிக்ஸ் ரசிகரின் அப்பதிவினை பார்த்தவுடன் எனக்கு அந்த தங்க ராஜா (கோல்ட் பிங்கர்) பற்றிய பதிவினையே இடலாம் என்று முடிவெடுத்தேன். இதோ அந்த பதிவு: 

 

ராணி காமிக்ஸ் - சாகச வீரர் ஜேம்ஸ் பான்ட் - தங்க ராஜா - கோல்ட் பிங்கர் படத்தின் காமிக்ஸ் வடிவம்
Rani Comics 007 James Bond Thanga Raja

இந்த தங்க ராஜா கதை என்னை மிகவும் கவர்ந்த கதையாகும். இதில் வரும் வில்லனின் கையாள் ஒருவனிடம் இரும்பால் ஆன ஒரு தொப்பி இருக்கும். அதனைக் கொண்டு அவன் பலரை கொள்வான். அவனிடம் ஜேம்ஸ் பாண்ட் மோதும் காட்சிகள் இன்றும் என் கண் முன் நிற்கின்றன.

முதன்முதலில் கோல்ட் பிங்கர் தினசரியில் தொடராக வந்தபோது வந்த முதல் பக்கம்.

Daily Express Strip_Goldfinger_title Rani Comics Thanga Raja

இந்த கதையை ஆங்கிலத்தில் படிக்க நீங்கள் அமேசான் வலைத்தளத்தில் தேடினால் வாங்கலாம். இல்லையெனில் பெரிய புத்தக கடைகளில் இருக்கும், உதாரணமாக லேண்ட் மார்க்.

தங்க ராஜா - கோல்ட் பிங்கர் - கதை புத்தகமாக டைட்டன் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டு வந்துள்ளது

Gold Finger Book 1

இந்த தங்க ராஜா என்ற கதையானது இயான் பிளெம்மிங் எழுதிய கோல்ட் பிங்கர் என்ற ஆங்கில நாவலை தழுவியே காமிக்ஸ் வடிவமாக மாற்றப்பட்டது. இதோ அந்த நாவலின் பல விதமான அட்டைப்படங்கள்.

Gold Finger Book 2 Gold Finger Book 3 Gold Finger Book 5
Goldfinger poster 16 Gold Finger Book 4 Gold Finger Book 6

இது போல சில டைஜெஸ்ட்டுகளும்  ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. படித்து மகிழுங்கள். ஒன்று தெரியுமா? மாடஸ்டி பிளேயசி ஆங்கில நாவல்கள் உலகிலேயே இந்தியாவில் மட்டுமே கிடைக்கும், பெங்குவின் புத்த பதிப்பகத்தினரால்.

Gold Finger Book 7

அடுத்தபடியாக இந்த கோல்ட் பிங்கர் காமிக்ஸை மொழியாக்கம் செய்து பல உலக மொழிகளில் வந்த காமிக்ஸ்களின் அட்டைப்படங்கள்.

Daily Express Strip_Goldfinger_title Rani Comics Thanga Raja Denmark02-cover Daily Express Strip_Goldfinger_title Rani Comics Thanga Raja Sweden1971_1_cover

ஒரு விஷயத்தினை நன்றாக கவனியுங்கள் - அந்த காலத்தில் Gold ginger hero ஷான் கானரியை மனதில் கொண்டே இந்த காமிக்ஸ்களின் அட்டைப்படங்கள் வரையப்பட்டு இருக்கின்றன.

Daily Express Strip_Goldfinger_title Rani Comics Thanga Raja Chile13_cover Daily Express Strip_Goldfinger_title Rani Comics Thanga Raja Brazil01-cover

அடுத்தபடியாக அந்த தங்க ராஜாவை படமாக காண்போம். இதோ கோல்ட் பிங்கர் படத்தின் திரைப்பட போஸ்டர்கள். ஆங்கிலம் மற்றும் பல உலக மொழிகளில்

goldfinger-poster 1 goldfinger Poster 2 Goldfinger poster 5
goldfinger Poster 3 Goldfinger poster 4 Goldfinger poster 6
Goldfinger poster 7 Goldfinger poster 10 Goldfinger poster 9
Goldfinger poster 8 Goldfinger poster 12 Goldfinger poster 15
Goldfinger poster 14 Goldfinger poster 18 Goldfinger poster 17
Goldfinger poster 13 Goldfinger poster 19 goldfinger-poster 1

புதிய வாசகர்கள் என்னுடைய பழைய பதிவுகளை தெரிந்து கொள்ள,

எனது முந்தைய பதிவில் வந்த பட விபரங்கள்

1. டெக்ஸ் வில்லர் படம் - லார்ட் ஆப் த டீப்

2. குண்டன் பில்லி - மினி லயன் ஹீரோ படங்கள்

3. டேன்ஜர் டையபாலிக் - லயன் காமிக்ஸ் ஹீரோ படம்

4. மதி இல்லா மந்திரி (அ) இஸ்நோகுட் - திரைப்படம்

5. ரன்-டன்-ப்ளான்:லக்கிலுக்’ன் சக பாத்திரம்

6. சிஸ்கோ கிட் - அருமையான கௌபாய் படம்

7. விஸ்கி - சுஸ்கி மினி லயன் காமிக்ஸ் அறிமுகம்

8. ராணி காமிக்ஸ் வேட்டை வீரர் டேவிட்

காமிக்ஸ் சினிமா அல்லாத என்னுடைய பிற பதிவுகள்

1. ரகசிய ஏஜன்ட் ரஜினி காந்த் பூந்தளிர் காமிக்ஸ்

2.லயன் காமிக்ஸ் இதில் வராத ஸ்பைடரின் எழுத்து கதை

3. தினத் தந்தி பேப்பரில் வந்த ஏஜன்ட் காரிகனின் முழு வண்ண கதை

4. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் காமிக்ஸ் கதை

அடுத்த காமிக்ஸ் பதிவு மூலம் உங்களை சந்திக்கிறேன், விரைவில்.

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.

Related Posts Widget for Blogs by LinkWithin