Friday, March 19, 2010

ராணி காமிக்ஸ் வேட்டை வீரர் டேவிட் பாத்திரத்தில் நடித்த நடிகர் மரணம்

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,

வணக்கம்.

சமீப காலங்களில் பணிச்சுமை காரணமாக என்னால் பதிவுகள் இடவோ அல்லது கமெண்டுகள் இடவோ இயலவில்லை. சக காமிக்ஸ் நண்பர்கள் மன்னிக்கவும். ஆனால், விபத்தினால் ஒரு கையுடன் நம்முடைய ஓலைக காமிக்ஸ் ரசிகர் தினமும் ஒரு பதிவினை இடும்போது நாம் ஒரு குரும்பதிவாவது இட்டே தீரவேண்டும் என்று முடிவெடுத்து விட்டு இன்று இந்த பதிவினை ஆரம்பிக்கிறேன். இனிமேல் வாரம் ஒரு பதிவினையும் இட்டு விடுவது என்ற தீர்மானத்தையும் இங்கு முன்வைக்கிறேன்.

நேற்று வழமை போல வலைதளங்களில் ஊர்ந்துகொண்டு இருந்தபோது நான் படித்த ஒரு தகவல் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அதாவது பெஸ் பார்க்கர் (Fess parker) என்ற ஹாலிவுட் நடிகர் சிவப்ராப்தி பெற்றார் என்பதே அந்த தகவல்.

fess

யார் இந்த நடிகர் என்று நினைப்பவர்களுக்கு ஒரு சிறு நினைவூட்டல். லயன் காமிக்ஸின் ஐம்பதாவது இதழ் டிராகன் நகரம் ஆகும். திகில் காமிக்ஸின் ஐம்பதாவது இதழ் கூட டெக்ஸ் வில்லரின் ஸ்பெஷல் இதழே ஆகும். ஆனால் ராணி காமிக்ஸின் ஐம்பதாவது இதழ் ஒரு சராசரியான கதையே. ஸ்பெஷல் அல்ல. அந்த ஐம்பதாவது புத்தகத்தினை பற்றிய விவரங்கள் இதோ:

ராணி ஐம்பதாவது இதழ் - பூனைத் தீவு - வேட்டை வீரர் டேவிட் - அட்டை

ராணி ஐம்பதாவது இதழ் - பூனைத் தீவு - வேட்டை வீரர் டேவிட் - முதல் பக்கம் 

Rani comics cover 1st page

இந்த இதழை பற்றிய ஒரு முழு நீள விமர்சனத்திற்கு கிங் விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகின் இந்த பதிவினை படிக்கவும்: டேவி குரோக்கட்

அவரைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள – Wikipedia

வால்ட் டிஸ்னி படங்களில் நடித்த பெஸ் பார்க்கர் பற்றி தெரிந்து கொள்ள – Wikipedia

Part 1 – King of wild life frontier -  IMDB Link

Part 2 – Davy crockett and the river pirates - IMDB Link

இதோ அந்த படங்களின் டிவிடி கவர் படங்கள்:

Davy Crockett King of Wild Frontier DVD Cover Davy Crockett River Pirates DVD Cover

First Film: Not available                                                                          Part 1        Part 2      Part 3  Part 4

                                                                                                                       Part 5        Part 6      Part 7  Part 8

உண்மையில் இந்த படங்களின் டவுன்லோட் லின்க்குகள் வலைதளங்களில் கிடைக்கின்றன. என்னுடைய நேரமின்மை காரணமாக முதல் பட டவுன்லோடுகளை அளிக்க இயலாமைக்கு வருந்துகிறேன். மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் அந்த படங்கள். நண்பர்கள் லக்கி லிமட், ரமேஷ், ரவீந்தர் போன்றவர்களில் லிங்க் உள்ள யாராவது ஒருவர் இதனை இங்கு தருவித்தால் மற்றவர்களும் பார்த்தது மகிழலாம், (நானே டவுன்லோட் செய்து தான் பார்த்தேன்).

புதிய வாசகர்கள் என்னுடைய பழைய பதிவுகளை தெரிந்து கொள்ள,

எனது முந்தைய பதிவில் வந்த பட விபரங்கள்

1. டெக்ஸ் வில்லர் படம் - லார்ட் ஆப் த டீப்

2. குண்டன் பில்லி - மினி லயன் ஹீரோ படங்கள்

3. டேன்ஜர் டையபாலிக் - லயன் காமிக்ஸ் ஹீரோ படம்

4. மதி இல்லா மந்திரி (அ) இஸ்நோகுட் - திரைப்படம்

5. ரன்-டன்-ப்ளான்:லக்கிலுக்’ன் சக பாத்திரம்

6. சிஸ்கோ கிட் - அருமையான கௌபாய் படம்

7. விஸ்கி - சுஸ்கி மினி லயன் காமிக்ஸ் அறிமுகம்

காமிக்ஸ் சினிமா அல்லாத என்னுடைய பிற பதிவுகள்

1. ரகசிய ஏஜன்ட் ரஜினி காந்த் பூந்தளிர் காமிக்ஸ்

2.லயன் காமிக்ஸ் இதில் வராத ஸ்பைடரின் எழுத்து கதை

3. தினத் தந்தி பேப்பரில் வந்த ஏஜன்ட் காரிகனின் முழு வண்ண கதை

4. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் காமிக்ஸ் கதை

அடுத்த காமிக்ஸ் பதிவு மூலம் உங்களை சந்திக்கிறேன், விரைவில்.

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்

26 comments:

  1. மீ த ஃபர்ஸ்ட்டு!

    வெல்கம் பேக்!

    பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  2. அடச்சே ஜஸ்ட்டு மிஸ்ஸு!

    மீ த செகண்டு அண்டு த தர்டு ஆல்ஸோ!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  3. இந்த சரித்திர சம்பவம் (அலமோ யுத்தம்) தொடர்பான இன்னொரு திரைப்படத்தை நீங்கள் தவறாமல் காண வேண்டுமென பரிந்துரைக்கிறேன்!

    அது ஹாலிவுட் கெளபாய் சூப்பர் ஸ்டார் ஜான் வெய்ன் இயக்கி நடித்த த அலமோ (THE ALAMO) திரைப்படமே ஆகும்!

    பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் நிறைந்த இந்தத் திரைப்படத்தின் தீம் இசை மிகவும் பிரபலம்!

    இந்த இசையின் பாதிப்பிலேயே செர்ஜியோ லியோனி தனது டாலர் திரைப்படங்களுக்கு (க்ளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்தவை) இசையமைக்குமாறு இசை மேதை என்னியோ மோரிக்கோனேவை கேட்டுக் கொண்டார்!

    ஹாலிவுட் பேரரசு க்வெண்டின் டாராண்டினோ கூட தனது சமீபத்திய படமான இங்குளோரியஸ் பாஸ்டெர்ட்ஸ்-க்கு இந்த இசையைதான் டைட்டில் போடும்போது சுட்டு உபயோகித்திருப்பார்!

    படத்திற்கான சுட்டி:

    http://en.wikipedia.org/wiki/The_Alamo_(1960_film)

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  4. ஆனால் தயவு செய்து யாரும் 2004-ல் வெளிவந்த அலமோ படத்தை பார்த்து விடாதீர்கள்!

    இதில் டேவி குரோக்கட் கோழை போல எதிரிகளிடம் சரணடைந்து மானமிழந்து மரணமடவது போல் படமாக்கப் பட்டிருக்கும்!

    இது கிட்டத்தட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரிடம் தூக்கு தண்டனைக்கு முன் உயிர் பிச்சை கேட்டு மன்றாடினார் என்று சொல்வது போல் ஆகும்! படம் ஊத்தி மூடிக் கொண்டது என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  5. சொல்ல மறந்தேவிட்டேன்!

    அண்ணாருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலி!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  6. காமிக்ஸ் பிரியரே,
    வாரம்தோறும் உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  7. காமிக்ஸ் பிரியரே,

    நானும் வந்து விட்டேன்.

    // பணிச்சுமை காரணமாக என்னால் பதிவுகள் இட// சொல்லவே வேண்டாம். என்னாலும்கூட பதிவுகளை இடவே நேரமில்லை. சில சிறப்பு பதிவுகளை எல்லாம் மிஸ் செய்துவிட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன், என்ன செய்வது?

    பதிவு அருமை. நல்லதொரு தகவல்.

    ReplyDelete
  8. அண்ணாருக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலி!

    இந்த படங்களை நான் பார்க்கவில்லை எனினும், ஜான் வெய்ன் படங்களின் தீவிர ரசிகன் என்ற முறையில் கூறுகிறேன் - தி சர்ச்சர்ஸ் படத்திற்கு பிறகு (எல் லோபோ த்ரிலஜியை விட்டு விட்டு) நான் ரசித்தது பார்த்த படங்களில் இதுவும் (அலோமோ) ஒன்று. மிஸ் பண்ணக் கூடாத அமெரிக்க வரலாற்றுப்படம்.

    ஜான் வெய்ன் படங்களுக்கும் தமிழ் காமிக்ஸ் கதைகளுக்கும் உள்ள உறவினை பற்றிய பதிவினை விரைவில் எதிர்பாருங்கள்.

    ReplyDelete
  9. இதோ நானும் வொச்சேசி (ச்சே) வந்து விட்டேன். இந்த உகாதி பதிவிட்டதில் இருந்து தெலுகு வார்த்தைகளே வருகிறது.

    அன்னாருக்கு எங்களுடைய ஆழ்ந்த அஞ்சலி.

    ReplyDelete
  10. வழக்கமாக டாக்டர் செவன் தான் இந்த மாதிரி இரங்கல் தகவலை வெளியிடுவார். இப்போது நீங்களா?

    ReplyDelete
  11. //ஹாலிவுட் பேரரசு க்வெண்டின் டாராண்டினோ //

    இதனை நான் வன்மையாக கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்.

    ReplyDelete
  12. நாங்க எல்லாம் லேட்ட வந்தாலும் லேடஸ்ட வருவோம்... பெஸ் பார்க்கர் பற்றிய தகவலுக்கு நன்றி... டோர்றேன்ட் லிங்க் கிடைத்துள்ளது... ஆனால் தரம் பற்றி தெறியவில்லை...
    இதில் ஐந்து படங்கள் உள்ளன.. பார்த்து ரசிங்கள்...

    http://thepiratebay.org/torrent/3962144/DAVY_CROCKETT_1-5_%28Disneyland_1954%29_%5Bretr0tv%5D

    ReplyDelete
  13. very sad to know. never saw this film.

    hope his soul rests in peace.

    ReplyDelete
  14. thanks for the info on the films.

    i loved the rani comics stories.

    ReplyDelete
  15. காமிக்ஸ் ப்ரியரே
    நீங்கள் குறிப்பிட்டுள்ள படங்கள் எதையும் பார்க்கும் வாய்ப்புகள் இல்லை. எனினும் ராணிக்காமிக்ஸின் பூனைத் தீவு அருதையானதொரு கதை!

    ReplyDelete
  16. //பகிர்வுக்கு நன்றி said...
    பகிர்வுக்கு நன்றி

    பகிர்ந்தமைக்கு நன்றி said...
    பகிர்ந்தமைக்கு நன்றி//

    சார்,

    யார் சார் நீங்க? என்ன சார் வேணும்? கிண்டல் பண்றீங்களா இல்ல உண்மையில் சொல்றீங்களா என்றே தெரியலையே?

    ReplyDelete
  17. டவுன்லோட் லின்க்குகள் வழங்கிய டாக்டர் செவன் மற்றும் ரமேஷ் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  18. from cyprus krieshna

    20 /06 /11 அன்று அனுப்பப்பட்ட கிங் விஸ்வா பற்றிய தகவலுக்கான பதில் பெறப்பட்டதால் அத் தகவலை மீள பெற்று கொள்கிறேன் . அத் தகவலை அனுப்பியதற்கு வருந்துகிறேன் .

    ReplyDelete

உங்கள் கருத்து எப்படி இருந்தாலும் கண்டிப்பாக பகிர்ந்துகொண்டே தீரவேண்டும், கருத்தே இல்லை என்றாலும் கூட அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related Posts Widget for Blogs by LinkWithin