Wednesday, April 14, 2010

தங்க ராஜா

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,

வணக்கம். 

இன்று தமிழ் புத்தாண்டு நாள் மற்றும் அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள். அதுமட்டுமில்லாமல் இன்றுதான் நம்முடைய நண்பர் கிங் விஸ்வாவின் பிறந்த நாளும்கூட. அதனால் பதிவுலகில் ஒரு களை கட்ட ஆரம்பித்து இருக்கிறது. என்னுடைய பங்கிற்கு நானும் ஒரு பதிவினை இடலாம் என்று நினைத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போதுதான் நம்முடைய ஒலக காமிக்ஸ் ரசிகரின் அப்பதிவினை பார்த்தவுடன் எனக்கு அந்த தங்க ராஜா (கோல்ட் பிங்கர்) பற்றிய பதிவினையே இடலாம் என்று முடிவெடுத்தேன். இதோ அந்த பதிவு: 

 

ராணி காமிக்ஸ் - சாகச வீரர் ஜேம்ஸ் பான்ட் - தங்க ராஜா - கோல்ட் பிங்கர் படத்தின் காமிக்ஸ் வடிவம்
Rani Comics 007 James Bond Thanga Raja

இந்த தங்க ராஜா கதை என்னை மிகவும் கவர்ந்த கதையாகும். இதில் வரும் வில்லனின் கையாள் ஒருவனிடம் இரும்பால் ஆன ஒரு தொப்பி இருக்கும். அதனைக் கொண்டு அவன் பலரை கொள்வான். அவனிடம் ஜேம்ஸ் பாண்ட் மோதும் காட்சிகள் இன்றும் என் கண் முன் நிற்கின்றன.

முதன்முதலில் கோல்ட் பிங்கர் தினசரியில் தொடராக வந்தபோது வந்த முதல் பக்கம்.

Daily Express Strip_Goldfinger_title Rani Comics Thanga Raja

இந்த கதையை ஆங்கிலத்தில் படிக்க நீங்கள் அமேசான் வலைத்தளத்தில் தேடினால் வாங்கலாம். இல்லையெனில் பெரிய புத்தக கடைகளில் இருக்கும், உதாரணமாக லேண்ட் மார்க்.

தங்க ராஜா - கோல்ட் பிங்கர் - கதை புத்தகமாக டைட்டன் பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டு வந்துள்ளது

Gold Finger Book 1

இந்த தங்க ராஜா என்ற கதையானது இயான் பிளெம்மிங் எழுதிய கோல்ட் பிங்கர் என்ற ஆங்கில நாவலை தழுவியே காமிக்ஸ் வடிவமாக மாற்றப்பட்டது. இதோ அந்த நாவலின் பல விதமான அட்டைப்படங்கள்.

Gold Finger Book 2 Gold Finger Book 3 Gold Finger Book 5
Goldfinger poster 16 Gold Finger Book 4 Gold Finger Book 6

இது போல சில டைஜெஸ்ட்டுகளும்  ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. படித்து மகிழுங்கள். ஒன்று தெரியுமா? மாடஸ்டி பிளேயசி ஆங்கில நாவல்கள் உலகிலேயே இந்தியாவில் மட்டுமே கிடைக்கும், பெங்குவின் புத்த பதிப்பகத்தினரால்.

Gold Finger Book 7

அடுத்தபடியாக இந்த கோல்ட் பிங்கர் காமிக்ஸை மொழியாக்கம் செய்து பல உலக மொழிகளில் வந்த காமிக்ஸ்களின் அட்டைப்படங்கள்.

Daily Express Strip_Goldfinger_title Rani Comics Thanga Raja Denmark02-cover Daily Express Strip_Goldfinger_title Rani Comics Thanga Raja Sweden1971_1_cover

ஒரு விஷயத்தினை நன்றாக கவனியுங்கள் - அந்த காலத்தில் Gold ginger hero ஷான் கானரியை மனதில் கொண்டே இந்த காமிக்ஸ்களின் அட்டைப்படங்கள் வரையப்பட்டு இருக்கின்றன.

Daily Express Strip_Goldfinger_title Rani Comics Thanga Raja Chile13_cover Daily Express Strip_Goldfinger_title Rani Comics Thanga Raja Brazil01-cover

அடுத்தபடியாக அந்த தங்க ராஜாவை படமாக காண்போம். இதோ கோல்ட் பிங்கர் படத்தின் திரைப்பட போஸ்டர்கள். ஆங்கிலம் மற்றும் பல உலக மொழிகளில்

goldfinger-poster 1 goldfinger Poster 2 Goldfinger poster 5
goldfinger Poster 3 Goldfinger poster 4 Goldfinger poster 6
Goldfinger poster 7 Goldfinger poster 10 Goldfinger poster 9
Goldfinger poster 8 Goldfinger poster 12 Goldfinger poster 15
Goldfinger poster 14 Goldfinger poster 18 Goldfinger poster 17
Goldfinger poster 13 Goldfinger poster 19 goldfinger-poster 1

புதிய வாசகர்கள் என்னுடைய பழைய பதிவுகளை தெரிந்து கொள்ள,

எனது முந்தைய பதிவில் வந்த பட விபரங்கள்

1. டெக்ஸ் வில்லர் படம் - லார்ட் ஆப் த டீப்

2. குண்டன் பில்லி - மினி லயன் ஹீரோ படங்கள்

3. டேன்ஜர் டையபாலிக் - லயன் காமிக்ஸ் ஹீரோ படம்

4. மதி இல்லா மந்திரி (அ) இஸ்நோகுட் - திரைப்படம்

5. ரன்-டன்-ப்ளான்:லக்கிலுக்’ன் சக பாத்திரம்

6. சிஸ்கோ கிட் - அருமையான கௌபாய் படம்

7. விஸ்கி - சுஸ்கி மினி லயன் காமிக்ஸ் அறிமுகம்

8. ராணி காமிக்ஸ் வேட்டை வீரர் டேவிட்

காமிக்ஸ் சினிமா அல்லாத என்னுடைய பிற பதிவுகள்

1. ரகசிய ஏஜன்ட் ரஜினி காந்த் பூந்தளிர் காமிக்ஸ்

2.லயன் காமிக்ஸ் இதில் வராத ஸ்பைடரின் எழுத்து கதை

3. தினத் தந்தி பேப்பரில் வந்த ஏஜன்ட் காரிகனின் முழு வண்ண கதை

4. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் காமிக்ஸ் கதை

அடுத்த காமிக்ஸ் பதிவு மூலம் உங்களை சந்திக்கிறேன், விரைவில்.

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.

18 comments:

  1. மறந்தே போய்விட்டேன்.

    தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மீ த ஃபர்ஸ்ட்டு!

    அனைவருக்கும் அம்பேத்கர் தின, தமிழ் புத்தாண்டு, விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  3. ஆங்கில ஜேம்ஸ்பாண்ட் காமிக்ஸ் (டைட்டன் புக்ஸ் வெளியீடு) ஃப்ளிப்கார்ட்டிலும் கிடைக்கின்றன! இந்திய ரசிகர்கள் பயன்படுத்திக்கொள்ள!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  4. நண்பரே,


    சிறப்பான பதிவு. படத்தையோ அல்லது காமிக்சையோ விமர்சனம் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  5. நண்பர்கள் அனைவருக்கும் விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. நண்பரே,

    புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள். ஜேம்ஸ்பாண்ட் என்றால் பரபர சாகஸம் மட்டுமல்ல கிளுகிளு கவர்ச்சியும் என்பதை பறைசாற்றுகின்றன போஸ்டர்கள். சிறப்பான தெரிவு. ஏதாவது ஒரு படத்திலாவது விஸ்வாவின் தலையை ஒட்டி வைத்துப் பார்க்க மனம் துடிக்கிறது :))

    ReplyDelete
  7. கலக்குது போங்க. படங்கள் அருமை........

    ReplyDelete
  8. wow,,,,,,,,,,,,,,,,,,,,

    that's all i can say. if i have anything to search for goldfinger, i can digg it here. right?

    so much of info.

    ReplyDelete
  9. happy Tamil new year to one and all.

    ReplyDelete
  10. சிறப்பு பதிவிட்டமைக்கு நன்றி திரு காமிக்ஸ் பிரியரே.

    தொடர்ந்து வரும் உங்கள் ஆதரவுக்கு நன்றி.

    ReplyDelete
  11. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  12. காமிக்ஸ் ப்ரியரே!

    கிங் விஸ்வாவின் பிறந்தநாளையும் தமிழ் புத்தாண்டையும் மக்கள் கொண்டாடும் இந்த வேளையில் பார்க்க திகட்டாத (!) படங்களை படைத்திட்ட உங்களுக்கு எனது நன்றி! அட்டகாசம் போங்கள்!

    ReplyDelete
  13. காமிக்ஸ் பிரியரே.

    அருமையான பதிவு. சூப்பர் படங்கள். நல்ல தகவல்கள்.

    ReplyDelete
  14. நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் அம்பேத்கார் தின வாழ்த்துக்கள்.

    நண்பர் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. Hi friend.A new post has been upped.Please do visit and spread the word..

    சிறை மீட்டிய சித்திரக் கதை.......

    http://illuminati8.blogspot.com/2010/05/blog-post_28.html

    kindly delete this comment after reading...

    ReplyDelete
  16. From The Desk Of Rebel Ravi:

    comics fan,

    nice post. good collection of 007 materials in one post. amazing dedicative research work you have done. keep it up.

    Rebel Ravi,
    Change is the Only constant thing in this world.

    ReplyDelete
  17. நண்பரே,

    வலையுலகிற்கு புதியவனான என்னுடைய ஜேம்ஸ் பாண்ட் குறித்த புதிய வலைத்தளம், தமிழில் - உங்கள் ஆதரவை நாடி.

    http://007intamil.blogspot.com/2010/06/x.html

    ReplyDelete

உங்கள் கருத்து எப்படி இருந்தாலும் கண்டிப்பாக பகிர்ந்துகொண்டே தீரவேண்டும், கருத்தே இல்லை என்றாலும் கூட அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related Posts Widget for Blogs by LinkWithin