கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,
வணக்கம்.
சமீப காலங்களில் பணிச்சுமை காரணமாக என்னால் பதிவுகள் இடவோ அல்லது கமெண்டுகள் இடவோ இயலவில்லை. சக காமிக்ஸ் நண்பர்கள் மன்னிக்கவும். ஆனால், விபத்தினால் ஒரு கையுடன் நம்முடைய ஓலைக காமிக்ஸ் ரசிகர் தினமும் ஒரு பதிவினை இடும்போது நாம் ஒரு குரும்பதிவாவது இட்டே தீரவேண்டும் என்று முடிவெடுத்து விட்டு இன்று இந்த பதிவினை ஆரம்பிக்கிறேன். இனிமேல் வாரம் ஒரு பதிவினையும் இட்டு விடுவது என்ற தீர்மானத்தையும் இங்கு முன்வைக்கிறேன்.
நேற்று வழமை போல வலைதளங்களில் ஊர்ந்துகொண்டு இருந்தபோது நான் படித்த ஒரு தகவல் என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. அதாவது பெஸ் பார்க்கர் (Fess parker) என்ற ஹாலிவுட் நடிகர் சிவப்ராப்தி பெற்றார் என்பதே அந்த தகவல்.
யார் இந்த நடிகர் என்று நினைப்பவர்களுக்கு ஒரு சிறு நினைவூட்டல். லயன் காமிக்ஸின் ஐம்பதாவது இதழ் டிராகன் நகரம் ஆகும். திகில் காமிக்ஸின் ஐம்பதாவது இதழ் கூட டெக்ஸ் வில்லரின் ஸ்பெஷல் இதழே ஆகும். ஆனால் ராணி காமிக்ஸின் ஐம்பதாவது இதழ் ஒரு சராசரியான கதையே. ஸ்பெஷல் அல்ல. அந்த ஐம்பதாவது புத்தகத்தினை பற்றிய விவரங்கள் இதோ:
ராணி ஐம்பதாவது இதழ் - பூனைத் தீவு - வேட்டை வீரர் டேவிட் - அட்டை | ராணி ஐம்பதாவது இதழ் - பூனைத் தீவு - வேட்டை வீரர் டேவிட் - முதல் பக்கம் |
இந்த இதழை பற்றிய ஒரு முழு நீள விமர்சனத்திற்கு கிங் விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகின் இந்த பதிவினை படிக்கவும்: டேவி குரோக்கட்
அவரைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள – Wikipedia
வால்ட் டிஸ்னி படங்களில் நடித்த பெஸ் பார்க்கர் பற்றி தெரிந்து கொள்ள – Wikipedia
Part 1 – King of wild life frontier - IMDB Link
Part 2 – Davy crockett and the river pirates - IMDB Link
இதோ அந்த படங்களின் டிவிடி கவர் படங்கள்:
உண்மையில் இந்த படங்களின் டவுன்லோட் லின்க்குகள் வலைதளங்களில் கிடைக்கின்றன. என்னுடைய நேரமின்மை காரணமாக முதல் பட டவுன்லோடுகளை அளிக்க இயலாமைக்கு வருந்துகிறேன். மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் அந்த படங்கள். நண்பர்கள் லக்கி லிமட், ரமேஷ், ரவீந்தர் போன்றவர்களில் லிங்க் உள்ள யாராவது ஒருவர் இதனை இங்கு தருவித்தால் மற்றவர்களும் பார்த்தது மகிழலாம், (நானே டவுன்லோட் செய்து தான் பார்த்தேன்).
புதிய வாசகர்கள் என்னுடைய பழைய பதிவுகளை தெரிந்து கொள்ள,
எனது முந்தைய பதிவில் வந்த பட விபரங்கள்
1. டெக்ஸ் வில்லர் படம் - லார்ட் ஆப் த டீப்
2. குண்டன் பில்லி - மினி லயன் ஹீரோ படங்கள்
3. டேன்ஜர் டையபாலிக் - லயன் காமிக்ஸ் ஹீரோ படம்
4. மதி இல்லா மந்திரி (அ) இஸ்நோகுட் - திரைப்படம்
5. ரன்-டன்-ப்ளான்:லக்கிலுக்’ன் சக பாத்திரம்
6. சிஸ்கோ கிட் - அருமையான கௌபாய் படம்
7. விஸ்கி - சுஸ்கி மினி லயன் காமிக்ஸ் அறிமுகம்
காமிக்ஸ் சினிமா அல்லாத என்னுடைய பிற பதிவுகள்
1. ரகசிய ஏஜன்ட் ரஜினி காந்த் பூந்தளிர் காமிக்ஸ்
2.லயன் காமிக்ஸ் இதில் வராத ஸ்பைடரின் எழுத்து கதை
3. தினத் தந்தி பேப்பரில் வந்த ஏஜன்ட் காரிகனின் முழு வண்ண கதை
4. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் காமிக்ஸ் கதை
அடுத்த காமிக்ஸ் பதிவு மூலம் உங்களை சந்திக்கிறேன், விரைவில்.
நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்