Wednesday, June 10, 2009

பிலிப் காரிகன் - தினத் தந்தி காமிக்ஸ் - பயங்கரவாதி டாக்டர் செவனின் ஜென்ம எதிரி

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,

வணக்கம்.

மன்னிக்கவும். பணிமாற்றம் காரணமாக நான் பதிவுகள் இடாமல் இருந்தேன். நேற்று என்னுடைய வலையுலக காமிக்ஸ் குருவாகிய பயங்கரவாதி டாக்டர் செவனின் பிறந்த நாள் என்று கேள்விப் பட்ட உடனே அவருக்கு ஒரு ஸ்பெஷல் பதிவு இட வேண்டும் என்று நினைத்தேன்.

இவருடைய பிறந்த நாள் பற்றி முதலிலேயே தெரிந்து இருந்தால் நிச்சயமாக இதனை விட சிறப்பாக செய்து ஒரு சூப்பர் ஸ்பஷல் பதிவை இட்டு இருக்கலாம், ஆனால் என்ன செய்வது? பதிவுகளை பார்த்து தான் அவருடைய பிறந்த நாள் பற்றி தெரிந்து கொண்டேன். அதனால் அடுத்த வருடம் கண்டிப்பாக நல்ல ஒரு பதிவு நிச்சயம் என்று இப்போதே உறுதி அளிக்க முடியும். 

வழமையாக என்னுடைய பதிவுகளில் காமிக்ஸ் சார்ந்த படங்களை பற்றி எழுதப்பட்டு இருக்கும். ஆனால், காரிகன் சம்பந்தப் பட்ட அந்த பழைய தொலைக் காட்சி தொடரை நான் இன்னமும் டவுன்லோட் செய்ய தேடிக் கொண்டே இருப்பதால் அதனை பற்றி பதிவிட இயலாது. 

இதுவரையில் இரண்டு பிலிப் காரிகன் தொலைகாட்சி தொடர்கள் வந்து உள்ளன. ஒன்று 1937ல வந்தது. இரண்டாவது 1945இல வந்தது. அவற்றை பற்றிய சுட்டிகள் கொடுத்து உள்ளேன். தெரிந்து கொள்ளுங்கள்.வேறு என்ன செய்யலாம்? என்று ஆழ்ந்த சிந்தனையில் இருந்த போது தான் இந்த பதிவை பற்றி யோசித்தேன்.

 

மறுபடியும் பணி மாற்றம் காரணமாக என்னுடைய பொருட்களை எல்லாம் சீரமைத்துக் கொண்டு இருந்த போதுதான் இந்த பதிவு சார்ந்த கதை எனக்கு கிடைத்தது (சென்ற முறை இப்படி செய்யும்போது கிடைத்த காமிக்ஸ் பதிவு). பிறகுதான் யோசித்தேன் - பயங்கரவாதி டாக்டர் செவனுக்கு பிறந்த ஆள் பரிசாக பிலிப் காரிகன் கதையை தவிர வேறென்ன தர இயலும்? அதுவும் இந்த கதையை (சிலர் படித்து இருந்தாலும்) கண்டிப்பாக யாரிடமும் இருக்காது என்று உறுதியாக என்னால் கூற முடியும். 

தொண்ணுத்தி ஒன்றில் தான் முதன் முதலில் தினத்தந்தி (எனக்கு தெரிந்து) ஞாயிற்று கிழமைகளில் காமிக்ஸ் தொடரை வெளியிட ஆரம்பித்தது. அப்போது தான் நான் தினசரிகளை படிக்க ஆரம்பித்தேன். அதனால் இந்த கதையை என்னால் மிகவும் நினைவில் இருத்திக் கொள்ள முடிந்தது. இதற்க்கு பின்னர் மந்திரவாதி மாண்ட்ரேக் கதைகளை (மொத்தம் மூன்று) தினத் தந்தி வெளியிட்டது. அதன் பின்னர் என்ன காரணமோ தெரியவில்லை, காமிக்ஸ் தொடர்களை வெளியிடுவதை நிறுத்தி விட்டார்கள். இப்போதும் இதனை போன்று காமிக்ஸ் கதைகள் எதுவும் வருவது இல்லை. தினத் தந்தியிலும் சரி, மற்ற தினசரிகளிலும் சரி. சரி இந்த கதையை பற்றி பார்ப்போம். பெயரிடப் படாத இந்த கதை சரியாக பத்தொன்பது வருடங்களுக்கு முன்பு (1990) வந்தது. இதனை வண்ணத்தில் பார்த்து ஏமாந்து விடாதீர்கள். இது உண்மையில் ஒரு டெய்லி ஸ்டிரிப் மட்டுமே. வண்ணக் கலவை தினத் தந்தி குழுமத்தினரின் கைங்கர்யம்.

 

பிலிப் காரிகன் - தினத் தந்தி -சி.ஐ. டி காரிகன் - ஞாயிறு மலர் - சண்டே ஸ்டிரிப் - பகுதி : 1

01

பிலிப் காரிகன் - தினத் தந்தி -சி.ஐ. டி காரிகன் - ஞாயிறு மலர் - சண்டே ஸ்டிரிப் - பகுதி : 2

02

பிலிப் காரிகன் - தினத் தந்தி -சி.ஐ. டி காரிகன் - ஞாயிறு மலர் - சண்டே ஸ்டிரிப் - பகுதி : 3

03

பிலிப் காரிகன் - தினத் தந்தி -சி.ஐ. டி காரிகன் - ஞாயிறு மலர் - சண்டே ஸ்டிரிப் - பகுதி : 4

04

பிலிப் காரிகன் - தினத் தந்தி -சி.ஐ. டி காரிகன் - ஞாயிறு மலர் - சண்டே ஸ்டிரிப் - பகுதி : 5

05

பிலிப் காரிகன் - தினத் தந்தி -சி.ஐ. டி காரிகன் - ஞாயிறு மலர் - சண்டே ஸ்டிரிப் - பகுதி : 6

06

பிலிப் காரிகன் - தினத் தந்தி -சி.ஐ. டி காரிகன் - ஞாயிறு மலர் - சண்டே ஸ்டிரிப் - பகுதி : 7

07

பிலிப் காரிகன் - தினத் தந்தி -சி.ஐ. டி காரிகன் - ஞாயிறு மலர் - சண்டே ஸ்டிரிப் - பகுதி : 8

08

பிலிப் காரிகன் - தினத் தந்தி -சி.ஐ. டி காரிகன் - ஞாயிறு மலர் - சண்டே ஸ்டிரிப் - பகுதி : 9

09

பிலிப் காரிகன் - தினத் தந்தி -சி.ஐ. டி காரிகன் - ஞாயிறு மலர் - சண்டே ஸ்டிரிப் - பகுதி :10

10

பிலிப் காரிகன் - தினத் தந்தி -சி.ஐ. டி காரிகன் - ஞாயிறு மலர் - சண்டே ஸ்டிரிப் - பகுதி :11

11

பிலிப் காரிகன் - தினத் தந்தி -சி.ஐ. டி காரிகன் - ஞாயிறு மலர் - சண்டே ஸ்டிரிப் - பகுதி :12

12

பிலிப் காரிகன் - தினத் தந்தி -சி.ஐ. டி காரிகன் - ஞாயிறு மலர் - சண்டே ஸ்டிரிப் - பகுதி :13

13

பிலிப் காரிகன் - தினத் தந்தி -சி.ஐ. டி காரிகன் - ஞாயிறு மலர் - சண்டே ஸ்டிரிப் - பகுதி :14

14

பிலிப் காரிகன் - தினத் தந்தி -சி.ஐ. டி காரிகன் - ஞாயிறு மலர் - சண்டே ஸ்டிரிப் - பகுதி :15

15

பிலிப் காரிகன் - தினத் தந்தி -சி.ஐ. டி காரிகன் - ஞாயிறு மலர் - சண்டே ஸ்டிரிப் - பகுதி :16

16

பிலிப் காரிகன் - தினத் தந்தி -சி.ஐ. டி காரிகன் - ஞாயிறு மலர் - சண்டே ஸ்டிரிப் - பகுதி :17

17

பிலிப் காரிகன் - தினத் தந்தி -சி.ஐ. டி காரிகன் - ஞாயிறு மலர் - சண்டே ஸ்டிரிப் - பகுதி :18

18

பிலிப் காரிகன் - தினத் தந்தி -சி.ஐ. டி காரிகன் - ஞாயிறு மலர் - சண்டே ஸ்டிரிப் - பகுதி :19

19

பிலிப் காரிகன் - தினத் தந்தி -சி.ஐ. டி காரிகன் - ஞாயிறு மலர் - சண்டே ஸ்டிரிப் - பகுதி :20

20

பிலிப் காரிகன் - தினத் தந்தி -சி.ஐ. டி காரிகன் - ஞாயிறு மலர் - சண்டே ஸ்டிரிப் - பகுதி :21

21

பிலிப் காரிகன் - தினத் தந்தி -சி.ஐ. டி காரிகன் - ஞாயிறு மலர் - சண்டே ஸ்டிரிப் - பகுதி :22

22

இந்த தொடரை வரைந்தவர் மிகவும் புகழ் பெற்ற ஓவியர் ஆன ஜார்ஜ் இவான்ஸ் ஆகும்.டெர்ரி அண்ட் தி பைரேட்ஸ் தொடர் பற்றி அறிந்தவர்கள் இவரை சுலபத்தில் மறக்க மாட்டார்கள். இவர் அலெக்ஸ் ரேமன்ட் அவர்களுக்கு அடுத்த படியாக காரிகனை வரைய வந்து தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் வரைந்தார். இவர் வரையும் துறையில் இருந்து ஓய்வு பெற்றது காமிக்ஸ் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும் - ஏனென்றால் இவருடன் பிலிப் காரிகனும் ஓய்வு பெற்று விட்டார். ஆம், 1996 முதல் பிலிப் காரிகன் கதைகளுக்கு மங்களம் பாடியாகி விட்டது.

Georgeevans இவர் கடைசியாக ஒரே ஒரு முறை மட்டும் 2001ல ஒரு பிளாஷ் கார்டன் கதையில் (சண்டே ஸ்டிரிப்) ஒருPhil Vs Flash சர்பிரைஸ் ஆக (Guest Entry) காரிகனை மீண்டும் கொண்டு வந்தார்.அந்த ஒரு நாளைக்கான படங்களை வரைந்ததும் இவரே. அது தான் இவர் கடைசியாக வரைந்த காரிகன் ஸ்டிரிப். அந்தோ பரிதாபம், இந்த ஸ்பெஷல் ஸ்டிரிப் வந்த சில நாட்களிலேயே ஜார்ஜ் இவான்ஸ் இறந்து விட்டார். அந்த ஒரு சண்டே ஸ்டிரிப் கதையை நானும் மாங்கு, மாங்கென்று தேடிக் கொண்டு இருக்கிறேன். அவ்வளவு சுலபத்தில் கிடைக்க மாட்டேன்கிறது. ஆனால் பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்கள் அனுப்பிய மின் அஞ்சல் மூலம் அந்த கதையை பெற்றுக் கொண்டேன். நன்றி தலைவரே. இதோ அதில் இருந்து ஒரு முக்கியமான காட்சி.

மதிப் பிற்குரிய பயங்கரவாதி டாக்டர் செவனுக்கு மறுபடியும் ஒரு முறை உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அடுத்த காமிக்ஸ் படம் மூலம் உங்களை சந்திக்கிறேன், முடிந்தால் விரைவில். நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.

 

பதிவு Related சுட்டிகள்:

முத்து விசிறியின் காரிகன் குறித்த முத்தான பதிவு

சீக்ரெட் எஜன்ட் பிலிப் காரிகன் பற்றிய விக்கிபீடியா குறிப்பு

சீக்ரெட் எஜன்ட் பிலிப் காரிகன் 1937 தொலைக்காட்சி தொடர் பற்றிய விக்கிபீடியா குறிப்பு

சீக்ரெட் எஜன்ட் பிலிப் காரிகன் 1945 தொலைக்காட்சி தொடர் பற்றிய விக்கிபீடியா குறிப்பு

சீக்ரெட் எஜன்ட் பிலிப் காரிகன் ஓவியர் ஜார்ஜ் இவான்ஸ் பற்றிய விக்கிபீடியா குறிப்பு

புதிய வாசகர்கள் என்னுடைய பழைய பதிவுகளை தெரிந்து கொள்ள,

எனது முந்தைய பதிவில் வந்த பட விபரங்கள்

1. டெக்ஸ் வில்லர் படம் - லார்ட் ஆப் த டீப்

2. குண்டன் பில்லி - மினி லயன் ஹீரோ படங்கள்

3. டேன்ஜர் டையபாலிக் - லயன் காமிக்ஸ் ஹீரோ படம்

4. மதி இல்லா மந்திரி (அ) இஸ்நோகுட் - திரைப்படம்

5. ரன்-டன்-ப்ளான்:லக்கிலுக்’ன் சக பாத்திரம்

6. சிஸ்கோ கிட் - அருமையான கௌபாய் படம்

7. விஸ்கி - சுஸ்கி மினி லயன் காமிக்ஸ் அறிமுகம்

8. வேதாளன் - 1943 தொலைக் காட்சி தொடர்

27 comments:

  1. காமிக்ஸ் பிரியர்,

    மீ த ஃபர்ஸ்ட்டு!

    பயங்கரவாதி டாக்டர் சேவனின் பிறந்த நாள் பதிவாக பிலிப் காரிகன் கதை. நல்ல சிந்தனை.

    நீங்கன் குறிப்பிட்ட அந்த மாண்ட்ரேக் கதை என்னிடம் உள்ளது. (தினத்தந்தி - வாரமலர் - மந்திரவாதி மாண்டிரிக்).

    ஆனால் இப்படி ஒரு கதை வந்ததை கருத்தில் கொண்டு, அதனையும் பத்திரமாக சேகரித்து வைத்து இருந்த உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

    சூப்பர்.

    ReplyDelete
  2. காமிக்ஸ் பிரியரே,

    ஜஸ்ட்டு மிஸ்ஸு! மீ த செகண்டு!

    தினத் தந்தியில் இது போன்ற காமிக்ஸ் கதைகள் வெளிவந்தது எனக்கு தெரியாத ஒரு விஷயம்! அதுவும் எனது பரம வைரியான காரிகனின் கதை வந்துள்ளதென்பது இரட்டிப்புத் தித்திப்பு!

    இது போன்ற அரிய பொக்கிஷங்களை உங்களின் சேகரிப்பில் நீங்கள் பத்திரமாக வைத்திருப்பதைக் கண்டு பொறாமை கலந்த மகிழ்ச்சி!

    லேட்டாக வந்தாலும் உங்களின் பிறந்த நாள் பரிசு லேட்டஸ்ட்டாக வந்துள்ளது! உவகை கலந்த நன்றி!

    ஜார்ஜ் ஈவான்ஸ், அலெக்ஸ் ரேமண்ட் வரைந்த காரிகன் கதைகளை விட அல் வில்லியம்ஸன் வரைந்த கதைகளே காமிக்ஸ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவையாகும்!

    அல் வில்லியம்ஸன் வரைந்த ‘வைரஸ்-X' கதையைப் பற்றிய ‘முத்து விசிறி’யின் இடுகையைப் படிக்க இங்கே 'க்ளிக்'கவும்!

    உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் சிலபல ‘லிங்க்’குகளை அனுப்பியுள்ளேன்! என்சாய்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  3. நன்றி King Viswa.

    தினத்தந்தி குழுமத்தினரின் பேப்பர் குவாலிடி பற்றி தெரியுமல்லவா? இந்த கதையில் முன் பக்க இரு வண்ணம் அப்படியே காமிக்ஸ் உள்ள பக்கத்தில் பதிந்து இருக்கும். கடைசி பகுதி மட்டும் தான் சற்று சுமாராக இருந்தது. அதனால் அப்படியே அளித்து உள்ளேன்.

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.

    ReplyDelete
  4. தலைவரே,

    அல் வில்லியம்ஸன் பற்றி ஒரு பெரிய புத்தகமே எழுதும் அளவிற்கு நான் தயாராக உள்ளேன். என்னுடைய மனம் கவர்ந்த ஒவிவியர்களில் இவர் முதன்மையாக இருப்பவர்.

    அவருடைய திறமையை பற்றி நாள் முழுவதும் சிலாகித்துக் கொண்டே இருக்கலாம்.

    முத்து விசிறியின் பதிவுக்கான லிங்க்'ஐ கொடுக்க மறந்து விட்டேன். இப்போது அதனை சரி செய்தாகி விட்டது.

    உங்கள் மின் அஞ்சலுக்கு நன்றி தலைவரே.

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.

    ReplyDelete
  5. //இது போன்ற அரிய பொக்கிஷங்களை உங்களின் சேகரிப்பில் நீங்கள் பத்திரமாக வைத்திருப்பதைக் கண்டு பொறாமை கலந்த மகிழ்ச்சி!//

    ஏதேது, விட்டால் இதற்காகவே அடிக்கடி இடமாற்றம் செய்ய வேண்டும் போல இருக்கிறதே?

    ஒவ்வொரு முறை வீடு மாறும்போதும் புத்தகங்களை என்னுடனே எடுத்து சென்று விடுவேன். அப்படி அடுக்கும்போது இவை எல்லாம் கிடைக்கின்றன.

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.

    ReplyDelete
  6. காமிக்ஸ் பிரியர்,

    காரிகனின் கதைகளில் சித்திரங்களின் தரத்தை பொறுத்த அளவில், அல் வில்லியம்ஸன் சிறப்பான இடத்தை பிடிப்பார். ஆனால், கதையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டால் மெல் கிராப்ஸ் ஒரு அசைக்க முடியாத இடத்தை பிடிப்பார். டஷீல் ஹம்மாந்து அவர்களுக்கு பிறகு காரிகன் கதைகளில் மிக முக்கியமான நபர் இந்த மெல் கிராப்ஸ் ஆவார்.

    லயன் காமிக்ஸ் "மாண்டவன் மீண்டான்" வரும் என்று நானும் ஒரு காரிகன் முன்னோட்டம் மற்றும் விமர்சனத்தோடு காத்து இருக்கிறேன். வரட்டும், ஒரு கை பார்த்து விடலாம்.

    ReplyDelete
  7. (1) உங்களுடைய சிக்னேச்சர் லைன் நன்றாக இருக்கிறது. இதனை எழுதியவர் என்னுடைய இயக்குனர்-நண்பர் இதனை கவனிக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.

    (2) இட மாற்றம் ஒரு கடினமான விஷயம். என்னால் அடிக்கடி ஒரு வார - இரு வார பயணங்களையே தாங்க முடிவதில்லை என்றால் உங்களைப் போல மாறுவது உண்மையில் கடினமே. இருந்தாலும் நீங்கள் கூறுவது போல, இதனைப் போன்ற அரிய காமிக்ஸ் கிடைக்கும் என்றால் (ஹீ ஹீ ஹீ) நீங்கள் மாறுவதில் தவறே இல்லை.

    (3) உங்களின் பதிவால் எனக்கு அடுத்த தேடல் வேட்டை ஆரம்பம் ஆகி விட்டது. என்னிடம் இந்த தினத் தந்தி வெளியிட்ட மந்திரவாதி மாண்டிரிக் (அப்படித்தான் அவர்கள் பெயரிட்டார்கள் - மொக்கை ராணி காமிக்ஸ் போல) இருந்தது. என்னுடைய நண்பன் வீட்டில் தினத் தந்தி பத்திரிக்கையை ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் வாங்குவார்கள். அவன் இந்த கதையை என்னிடம் காட்டியதில் இருந்து நானும் ஒரு முழு மாண்டிரிக் கதையை கல்லேக்ட் செய்தேன். இப்போது அதனை தேட ஆரம்பித்து விட்டேன்.

    ReplyDelete
  8. பகுதி எட்டு, மூன்றாவது வரிசை, இரண்டாவது பேனல்.

    பகுதி பத்து, மூன்றாவது வரிசை, இரண்டாவது பேனல்.

    பகுதி பத்தொன்பது, இரண்டாவது வரிசை, முதல் பேனல்.

    இந்த மூன்று பேணல்களையும் நன்றாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

    ஒவ்வொரு ஓவியருக்கும் பிடித்தமான சில ஆங்கிள் உண்டு. அதனை ஒரு ரேபடிஷன் ஆகவே வரைந்து தள்ளுவார்கள். புகழ் பெற்ற ரோமெரோ அவர்கள் பாணியில் ஒரே ஒரு ஆங்கிள் அனைவராலும் பாராட்டப் படும்,

    அதாவது சுருட்டை முடி கொண்ட வில்லன் தன்னுடைய இரண்டு கைகளையும் உயர்த்தி வசனம் பேசுவதை லோயர் ஆங்கிளில் இருந்து வரைவார் ரோமெரோ. இதனை பல மாடஸ்டி கதைகளில் நீங்கள் காணலாம் (லயன் காமிக்ஸ் முதல் இதழில் கூட இது போன்ற ஒரு காட்சி வரும்).

    அதனைப் போல ஓவியர் ஜார்ஜ் இவான்ஸ் அவர்களுக்கும் நான் மேலே குறிப்பிட்ட இந்த மூன்று வகை ஆங்கில்களே பிடிக்கும் போல. அதனால் அவரது பெரும்பான்மையான கதைகளில் இது போல காட்சிகளை அமைத்து வரைந்து விடுவார். (பார்க்க - லயன் காமிக்ஸ் மர்ம முகமூடி, இரத்தமில்லா யுத்தம், ஒரு பனிமலை பயங்கரம்).

    மற்றபடி,பதிவு சூப்பர். ஒரிஜினல் அக்மார்க் சொந்தப் பதவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  9. சி.ஐ.டி காரிகன் என்று தலைப்பை போட்டு அருகிலேயே ஒரு கன்'ஐ வரைந்த அந்த லே அவுட் ஆர்டிஸ்ட்'ஐ பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

    ReplyDelete
  10. விஸ்வா அவர்களே,

    ஏற்கனவே மெல் கிராப்ஸ் பற்றி நீங்கள் கூறி இருப்பதை நானும் படித்தேன். சிடிசன் அஜித் போல தனி ஆளாக இருந்த காரிகனை ஒரு குடும்பம், காதலை, நண்பி உள்ள ஒரு மனிதனாக மாற்றியது இந்த மெல் கிராப்ஸ் தான்.

    அவரின் படங்கள் அந்த கால பாணியில் சிறந்து விளங்கும். அதனை ரசிக்கவே ஒரு ரசனை வேண்டும்.

    ReplyDelete
  11. விஸ்வா அவர்களே,

    அந்த மாண்டிரிக் கதைகள் (மூன்றுமே) என்னிடமும் இருக்க வேண்டும். ஆனால் காலப் போக்கில் அவை எவ்விடத்தில் இருக்கின்றன என்பது நினைவில்லை. கேரளாவில் இருக்கும் என்னுடைய அண்ணனிடம் விசாரிக்க வேண்டும்.

    இட மாற்றம் எனக்கு பரவாயில்லை. என்னுடைய குடும்பத்தார்க்கே சற்று சிரமாக உள்ளது. என்ன செய்வது?

    ReplyDelete
  12. ஒலக காமிக்ஸ் ரசிகர்,

    இத்தனை நாட்களாக உங்களை இழஅந்து இருந்த தமிழ் காமிக்ஸ் உலகிற்கு மீண்டும் நீங்கள் வந்து இருப்பது ஒரு புத்துணர்வை கொடுக்கின்றது. குறிப்பாக உங்களின் மாறுபட்ட ஆனால் சரியான கருத்துக்கள் யாவுமே அருமை. நீங்கள் ஒரு காமிக்ஸ் களஞ்சியம் (இயக்குனர் களஞ்சியம் அல்ல).

    இந்த ஆங்கில விஷயம் பற்றி நான் யோசிக்கவே இல்லை. ஆனால், சமீபத்தில் தான் மாடஸ்டி கதைகள் சிலவற்றை படித்தேன். ரோமெரோ வரைந்தவை அவை. இப்போது நீங்கள் கூறியதின் மகத்துவத்தை உணருகிறேன். தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை வாரி வழங்குங்கள்.

    ReplyDelete
  13. ஒலக காமிக்ஸ் ரசிகரே,

    //சி.ஐ.டி காரிகன் என்று தலைப்பை போட்டு அருகிலேயே ஒரு கன்'ஐ வரைந்த அந்த லே அவுட் ஆர்டிஸ்ட்'ஐ பாராட்டாமல் இருக்க முடியவில்லை// நீங்கள் கூறிய பிறகு தான் அந்த விஷயத்தையும் உன்னிப்பாக பார்த்தேன். மேகலா காமிக்ஸ் ஒன்றில் வருவதைப் போல, கூறிய கழுகுப் பார்வை உங்களுக்கு.

    இந்த லே அவுட் விஷயத்தில் தினத்தந்தி குழுமத்தினர் ஒரு பல்கலைக் கழகமாக விளங்கினர்.

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.

    ReplyDelete
  14. தோழர்,

    அற்புதமான பதிவு. யாருமே யோசித்து பார்க்காத ஒரு ஆங்கிள் (கமெண்டுகளை படித்து விட்டதால் இப்படி ஆங்கிள், மாடல் என்று தானாக வருகிறது).

    இந்த பதிவில் இருந்து ஒரு விஷயம் தெரிகிறது. மூலை முடுக்கில் காமிக்ஸ் வந்து இருந்தாலும் அதனை எல்லாம் நீங்கள் விடுவதில்லை என்பது தேள்ளத்த் தெளிவாக விளங்குகிறது.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  15. காமிக்ஸ் பிரியர்,

    ஒரு விஷயம் இப்போது தான் விளங்குகிறது. இந்த வண்ணக் கலவையை பார்த்து விட்டு தான் ராணி காமிக்ஸ் இதழிலும் கூட வண்ணம் செய்து இருப்பார்கள்.

    ஒன்று - இந்த வண்ணக் கலவையை செய்தவர் ராணி காமிக்ஸ் இதழிலும் தன்னுடைய கை வரிசையை காட்டி இருக்க வேண்டும்.

    அல்லது - இந்த வண்ணக் கலவையை முன்மாதிரியாகக் கொண்டு ராணி காமிக்ஸ் நிர்வாகிகள் பணி புரிந்து இருக்க வேண்டும்.

    புலா சுலாகி,
    கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

    ReplyDelete
  16. இந்த கதைய படிக்கும்போது அப்படியே மற்றுமொரு ராணி காமிக்ஸ் படிக்கும் ஒரு வேதனை கிடைத்தது. கண்டிப்பாக இதனை மொழி மாற்றம் செய்தவர் (ஆமாம், இதனை எல்லாம் மொழி ஆக்கம் என்று சொல்லவா முடியும்?) நம்ம ஆமாம் சாமி கோஷ்டியை சார்ந்தவராக இருப்பார்.

    பின் குறிப்பு: தோரணை, செம ரோதனை.

    ஜுடோ ஜோஸ்.
    Judo Josh can delete the Recycling Bin.

    ReplyDelete
  17. புலா சுலாகி அவர்களே,

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    இந்த ஒருமுறை தான் நான் இப்படி பதிவு இடுவேன். பிறகு வழமை போல காமிக்ஸ் படங்கள் தான் என்னுடைய நோக்கம்.

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.

    ReplyDelete
  18. ஜுடோ ஜோஸ் அவர்களே,

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ரோதனை என்று தெரிந்தும் சோதனை முயற்சியை மேற்க கொண்ட உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை.

    உங்களின் பெங்களூரு பயணத்தைப் பற்றி படித்தேன். ரசித்தேன்.

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.

    ReplyDelete
  19. பூங்காவனம்,

    அடுத்த விசிட் அங்கே தான்.

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.

    ReplyDelete
  20. காமிக்ஸ் பிரியரே,

    ஒர் பிலிப் காரிகன் கதையை உங்கள் தயவால் படிக்க முடிந்தது அதற்கு நன்றி.

    உன் ஜோக் தான் அதிக வேதனையைத் தருகிறது/ரொம்ப பழசுன்னா செத்துப் போய் இருக்குமே என்ற காரிகனின் கமெண்ட்கள் சூப்பர்.

    உங்கள் பாணியிலிருந்து சற்று மாறினாலும் சிறப்பான பதிவே, உங்களை ஒர் பதிவின் மூலம் மீண்டும் சந்திப்பதும் மகிழ்வான ஒர் விடயம்.

    உற்சாகத்துடன் தொடருங்கள் உங்கள் அதிரடிகளை.

    ReplyDelete
  21. ராணிக்காமிக்ஸ் தவிர தினத்தந்தி குழுமத்தில் வெளிவந்த எந்த காமிக்ஸ் படைப்புகளையும் நான் ஏறெடுத்து பார்த்ததில்லை. நீங்கள் என்னவென்றால் வார இணைப்பில் வெளிவந்த காமிக்ஸ் ஸ்டிரிப்புகளை கூட சேகரித்து வைத்துள்ளீர்கள். குப்பையிலும் மாணிக்கம் கிடைக்கும் என்ற உங்களின் நம்பிக்கையை பாராட்டுகிறேன்.

    தினத்தந்திக்கு முன்னர் 80களில் தினமணி மாண்ரேக் கதைகளை வெள்ளிமணியிலும், தாமரையின் சூப்பர் தும்பி கதைகளை தினமணிக்கதிரிலும் மிகுந்த தரத்துடன் வெளியிட்டுள்ளது. அதேபோல் குமுதம் ஒரு பக்க காமிக்ஸ்களை தரமாக வெளியிட்டுள்ளது.

    உலகக் காமிக்ஸ் ரசிகனின்
    //சி.ஐ.டி காரிகன் என்று தலைப்பை போட்டு அருகிலேயே ஒரு கன்'ஐ வரைந்த அந்த லே அவுட் ஆர்டிஸ்ட்'ஐ பாராட்டாமல் இருக்க முடியவில்லை// பின்னூட்டத்திற்கு நீங்கள்

    // நீங்கள் கூறிய பிறகு தான் அந்த விஷயத்தையும் உன்னிப்பாக பார்த்தேன். மேகலா காமிக்ஸ் ஒன்றில் வருவதைப் போல, கூறிய கழுகுப் பார்வை உங்களுக்கு.// என்று பதில் அளித்துள்ளீர்கள்.

    உங்களில் யார் யாரை அல்லது இரண்டு பேரும் சேர்ந்து தினத்தந்தியின் லே’அவுட் ஆர்ட்டிஸ்டை காலாய்க்கிறீர்களா என்று தெரியவில்லை!

    இன்றும் அன்றும் பேப்பர் தரத்திலும் சரி லே’அவுட் விஷயத்திலும் சரி மோசமான தரத்திற்கு முன்னுதாரணம் தந்தி குழுமம்தான் (ஆமா சாமியிடம் இருந்து தப்பித்த பிறகு குடும்பப் பத்திரிக்கை ராணி தற்போது நல்லதொரு லே’அவுட்டுடன் வருவது சற்றே ஆறுதல் தரும் செய்தி!)

    துப்பாக்கி விஷத்தில் கூட அது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. வரையப்பட்ட துப்பாக்கி என்ன வகை என்று படம் பார்த்து கூறுங்களேன் பார்க்கலாம். இரண்டு கெட்டான் போல இல்லை!

    நல்லதொரு பதிவிற்கும் படிக்கும் விதத்தில் ஸ்கான்களை படைத்திட்டமைக்கும் நன்றிகள். (மொழி மாற்றம் தான் ஏமாற்றம். படிக்க பொறுமை இல்லை ஐயா...!)

    ReplyDelete
  22. அய்யம்பாளையம் வெங்கி அவர்களே,

    //இன்றும் அன்றும் பேப்பர் தரத்திலும் சரி லே’அவுட் விஷயத்திலும் சரி மோசமான தரத்திற்கு முன்னுதாரணம் தந்தி குழுமம்தான் (ஆமா சாமியிடம் இருந்து தப்பித்த பிறகு குடும்பப் பத்திரிக்கை ராணி தற்போது நல்லதொரு லே’அவுட்டுடன் வருவது சற்றே ஆறுதல் தரும் செய்தி!)//

    முற்றிலும் உண்மை. அதுவும் ராமஜெயம் என்ற ஒரு தனி மனிதர் முயற்சியாலே ராணி காமிக்ஸ் கூட ஓரளவு (நன்றாக கவனிக்கவும் - ஓரளவு) தரத்துடன் வந்தது. ஆனால், அவருக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா? தந்தி குழுமத்தினருடன் நடந்த நீதிமன்ற வழக்குகளால் மனமுடைந்தது தான். சமீபத்தில் தான் அந்த வழக்கு முடிந்தது. மற்ற விவரங்களை முழு பதிவாக தெரிவிக்கிறேன், காலம் வரும்போது.

    ராணி பத்திரிக்கையை நீங்கள் இவ்வளவு கூர்மையாக கவனிப்பீர்கள் என்று எனக்கு தெரியாது. சுமார் பதினெட்டு மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் அது. இப்போது அந்த பத்திரிக்கையின் விற்பனையும் உயர்ந்து உள்ளது என்பது கூடுதல் தகவல்.

    ஆ. மா.சாமி அவர்களின் கருத்து (ராணி காமிக்ஸ்'ஐ பொறுத்த வரையில்) இதுதான்: அவர் அங்கே ஒரு ஆசிரியர் மட்டுமே. முதலாளி அல்ல. அவர் அங்கு பணி புரிந்தவர் மட்டுமே. திரு விஜயன் அவர்களைப் போல முதலாளி அல்ல.அதனால் அவரால் அங்கு ஒன்றும் செய்ய இயலவில்லை. அவர் ஒரு கட்டுண்ட புலி. கதை கூட அவரால் சுதந்திரமாக செலக்ட் செய்ய முடியவில்லை. மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பிறகு "கட்டாயத் தமிழ்" ராணி காமிக்ஸ்'ல் புகுத்தப் பட்டு படிக்கும் ரசனையையே கொன்று விட்டார்கள்.

    ReplyDelete
  23. 'சி.ஐ.டி' 'சி.ஐ.டி' ன்னு தமிழ் காமிக்ஸ்களில் சொல்றாங்களே... அதுக்கு என்ன அர்த்தம்-?
    மெய்யாலுமே இது ஒரு அறியா வினாதான். தெரிந்து கொள்ளலாமே என்றுதான் கேட்கிறேன் ஐயா!

    ReplyDelete
  24. அய்யம்பாளையம் கவர்னர் அவர்களே,

    C.I.D என்றால் Criminal Investigation Department எனபதின் சுருக்கம் ஆகும். முதன் முதலில் இவர்கள் இங்கிலாந்தில் இருந்த ஸ்பெஷல் போலீஸ படை ஆகும். இவர்களுக்கும் மற்ற போலீஸ படையினருக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் இவர்கள் சீருடை அணிய வேண்டியது இல்லை.

    ஆட்சி முறையில் நாம் நம்முடைய முந்தைய ஆட்சியாளர்களையே (British) பின் பற்றியதால் நாமும் அப்படியே அமல் படுத்தி விட்டோம்.

    அந்த டிபார்ட்மென்ட் என்பதை தான் சுருக்கமாக இப்படி C.I.D என்று கூறுகிறார்கள்.

    ReplyDelete
  25. நன்றி அய்யம்பாளையம் சார் மற்றும் விஸ்வா.

    காமிக்ஸ் பிரியன்.
    இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
    காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

    ReplyDelete
  26. காமிக்ஸ் பிரியனே ,
    கலக்கி விட்டீர்கள் ! காரிகன் கதை தமிழில் அதுவும் கலரில் தினத்தந்தி வெளியிட்டது பற்றி நான் கேள்வி ப்பட்டது கூட இல்லை . அனைத்து ஸ்கேன் படங்களையும் டவுன்லோட் செய்து pdf ஆக மாற்றி படித்தேன் . மிக்க நன்றி . இது போல் மற்ற கதைகள் இருந்தால் பதிவிடுங்களேன்.

    Lovingly,
    Lucky Limat
    Browse Comics

    ReplyDelete

உங்கள் கருத்து எப்படி இருந்தாலும் கண்டிப்பாக பகிர்ந்துகொண்டே தீரவேண்டும், கருத்தே இல்லை என்றாலும் கூட அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related Posts Widget for Blogs by LinkWithin