Tuesday, February 10, 2009

சிஸ்கோ கிட் - தமிழ்'ல் வந்த ஒரு அருமையான கௌபாய்


கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,

வணக்கம்.

சென்ற மொக்கை பதிவான ரகசிய ஏஜன்ட் ரஜினிகாந்த் காமிக்ஸ் பலருடைய வரவேற்பை பெற்று இருப்பது கண்டு நான் மிக்கவும் மகிழ்ச்சி அடைந்தேன். அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். புத்தகத்தை வைத்துக் கொண்டு இருந்தாலும் நினைவுக்கு கொண்டு வர மறந்த நண்பர்  அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த கதை தான் என்று கூறிய நண்பர் இளவேனில் அவர்களுக்கு ஒரு பாராட்டு. தொடர்ந்து பின்னுட்டம் இட்டு வரும் அனைத்து தோழர்களுக்கும் நன்றி.

சென்ற பதிவில் கூறியதை வைத்து காமிக்ஸ் தலைவர் அவர்கள் இந்த பதிவின் நாயகனை அனுமானிக்க முயற்சி செய்தார். நல்ல முயற்சி நண்பரே. ஆனால், பதிவின் நாயகன் சிஸ்கோ கிட் ஆவார். இவரை நீங்கள் எப்படி மறந்தீர்கள் என்பது தான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

சிஸ்கோ கிட் பிரபல சிறுகதை எழுத்தாளர் ஒ.ஹென்றி அவர்களால் 1907'ல் உருவாக்கப் பட்ட ஒரு கற்பனை கதாபாத்திரம். இவரின் பின்புலம் என்னவென்றால் சிஸ்கோ கிட் ஒரு மெக்சிகன் கௌபாய் என்பதே. இதோ ஒ.ஹென்றி அவர்களின் புகைப்படம்.
நேரம் கிடைக்கின் தவறாமல் இவரது சிறுகதை தொகுப்புகளை படியுங்கள். அற்புதமான படைப்புகள் அவை. கனவுகளின் காதலன் அவர்கள் என்னுடைய கருத்தை ஆமோதிப்பார் என்று நம்புகிறேன். இவரது கதைகளின் சிறப்பு அம்சம் என்னவென்றால் அவற்றின் முடிவுகள் ஆகும். ஒவ்வொரு கதைக்கும் ஒரு எதிர்பாரா முடிவை வைத்து நம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்துவது இவருக்கு கை வந்த கலை ஆகும்.

சிஸ்கோ கிட் என்ற இந்த கதாபாத்திரத்தை மைய்யமாக வைத்து இதுவரையில் மொத்தம் இருபத்தி மூன்று திரைப் படங்களும் ஐந்து தொலைக் காட்சி தொடர்களும் உருவாக்கப் பட்டு உள்ளன. கடைசியாக சரியாக பதினைந்து வருடங்களுக்கு முன்னால் (இதை நான் டைப் செய்யும் தேதி பிப்ரவரி ஆறு) 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி ஆறாம் தேதி ஒரு தொலைக் காட்சி படம் எடுக்கப் பட்டு ஒளிபரப்பப் பட்டது. அதனை பற்றியதே இந்த பதிவு ஆகும்.

ஆரம்ப கால கட்டத்தில் சிஸ்கோ கிட் கருப்பு வெள்ளை திரைப் படங்களில் மட்டுமே வந்தார் (பெரிய கண்டுபிடிப்பு என்று சிலர் கூறுவது கேட்கிறது). இதோ அந்த அறிய புகைப் படக் காட்சிகள்:


இந்த படங்களை பார்க்கும்போது எனக்கு நம்ம ஊர் ஜேம்ஸ்பாண்ட் திரு ஜெய் ஷங்கர் அவர்களின் பல படங்கள் நினைவுக்கு வருகின்றன. எனக்கு நினைவு தெரிந்த வரையில் தமிழில் எடுக்கப் பட்ட கௌபாய் படங்கள் என்றால் அவை ஜெய் ஷங்கர் அவர்களின் படங்களே (சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களும் ஒரு சில கௌபாய் படங்களில் நடித்தார்).

பின்னர் காலப்பயணத்தில் கருப்பு வெள்ளை படங்கள் கலர் படங்களாக மாறின. இதோ அவற்றில் சில படங்கள்: இந்த படங்களை பார்த்தல் எனக்கு ஹிந்தி நடிகர் ராஜ் கபூர் (கரீனா கபூரின் தாத்தா) நினைவுக்கு வருகிறார். முதல் படத்தில் இருக்கும் நங்கை நடிகை பூஜாவை நினைவு படுத்துகிறார் (நான் கடவுள் பூஜாவை அல்ல).அதற்க்கு முந்தைய படங்களில் அழகாக இருக்கும் நடிகை பூஜாவை (ஜித்தன், ஜே ஜே, அட்டகாசம்)

மொக்கையாக இருக்கும் சிஸ்கோ படங்களும் உண்டு என்பதற்கு ஒரு நல்ல உதாரணம்
இந்த கால கட்டத்தில் வந்த சிஸ்கோ கிட் படங்கள் மிகவும் சிறந்தவையாக கருதப் படுகின்றன.
முதன் முதலில் சிஸ்கோ கிட் ஒரு காமிக்ஸ் கதையில் தோன்றியது 1944'இல் ஆகும். அந்த காமிக்ஸ் பதிப்பகத்தின் பெயர் பெய்லி ஆகும். ஆனால் ஒரே ஒரு இதழுடன் அந்த தொடர் நின்று விட்டது. பின்னர் 1950'இல் பிரபல டெல் காமிக்ஸ் நிர்வாகத்தினர் இந்த கதை தொடருக்கு புத்துயிர் கொடுத்து 41 கதைகளை தொடர்ந்து எட்டு வருடங்கள் வெளியிட்டனர்.
ஆனால் சிஸ்கோ கிட் காமிக்ஸ் கதைகளின் பொற்காலம் (நண்பர் சண்டைக்கு வரவேண்டாம்) என்று கூறப்படும் காலம் 1961 முதல் 1967 வரைதான். எனென்றால் அப்போதுதான் மிகவும் புகழ் பெற்ற ஜோஸ் லுயிஸ் சாலினாஸ் என்பவர் தன்னுடைய அற்புதமான சித்திரங்களால் பலரின் மனதை கொள்ளை கொண்டார். நண்பர்களுக்கு தெரிந்து இருக்கும் : ஒரு கதையை ஒரே ஒருவர் மட்டும் வரைவது கிடையாது. பலர் வரைவார்கள் ஆனால், ராட் ரீட்'ஐ தவிர வேறு யாருமே சிஸ்கோ கிட் என்று கூறும்போது நமது நினைவுக்கு வர மறுப்பார்கள். அது தான் ஜோஸ் லுயிஸ் சாலினாஸ் அவர்களின் சிறப்பு அம்சம்.

முத்து காமிக்ஸ் தான் சிஸ்கோ கிட் காமிக்ஸ் கதைகளை முதலில் வெளியிட்டது என்று நினைத்தால் அது தவறு ஆகும். ஏனென்றால் மாலைமதி காமிக்ஸ் A.F.I என்ற காமிக்ஸ் நிறுவனத்தினர் சிஸ்கோ கிட் கதைகளை வெளியிட்டு விட்டனர். இந்த காமிக்ஸ் பற்றி கூற எனக்கு போதிய அனுபவம் இல்லாததால் அவற்றை டீலில் விட்டு விட்டு மாற்ற கதைகளை பற்றி பார்போம்.

மாலைமதி காமிக்ஸ் நிறுவனத்தினர் முதலில் மாதம் இருமுறையும் பின்னர் வாரம் ஒருமுறையும் காமிக்ஸ்'களை வெளியிட்டனர். அவற்றில் முறையே
இண்டேர்பால் ஜானி ஹஸார்ட்
ரிப் கிர்பி
பிலிப் காரிகன்
கிஸகோ கிட் (ஆம், சிஸ்கோ கிட்'ஐ தான் அப்படி வெளியிட்டனர்)
ஆகிய நால்வரின் கதைகளே பெரும்பான்மையாக வரும்.
பின்னர் முத்து காமிக்ஸ் நிர்வாகத்தினர் சிஸ்கோ கிட் கதைகளை வெளியிட ஆரம்பித்தனர் (அந்த கால கட்டத்தில் மாலைமதி காமிக்ஸ் வருவது நின்று விட்டது). முத்து காமிக்ஸ் இதழ்களில் வந்த சிஸ்கோ கிட் கதைகள் பலவும் அருமையாக இருக்கும். என்னிடம் இப்போது பழைய இதழ்கள் இல்லாததால் திரு முத்து விசிறியின் வலை தளத்தில் இருந்து சிஸ்கோ கிட் தோன்றும் ஒரு அட்டைப் படம் இதோ உங்களின் மேம்பட்ட பார்வைக்கு:
பின்னர் ராணி காமிக்ஸ் நிர்வாகத்தினர் சிஸ்கோ கிட் கதைகளை சூப்பர் ஸ்டார் டிஸ்கோ என்ற பெயரில் வெளியிட ஆரம்பித்து சிஸ்கோ கிட் மீது எனக்கு இருந்த மரியாதையை அறவே ஒழித்து விட்டனர் (நன்றி - திரு அ.மா.சாமி). ஆவியின் கீதம் என்ற பெயரில் வந்த முத்து காமிக்ஸ் கதையை ராணி காமிக்ஸ் பேய் மனிதன் என்ற பெயரில் "கொத்து பரோட்டா" செய்த விதத்தை நண்பர் முத்து விசிறி அவர்கள் இங்கே தெளிவாக விவரிக்கிறார். படித்து உணருங்கள்.
இப்போது இந்த பதிவின் மைய்ய கரு (1994'இல் வந்த கடைசி சிஸ்கோ கிட் படம்) பற்றி பார்போம். படம் பற்றிய விபரங்கள்:

படம் பெயர் : சிஸ்கோ கிட்

வெளியான நாள்: பிப்ரவரி ஆறு, 1994.

இயக்குனர் : லுயஸ் வால்டெஸ்
கதை : மைகேல் கேன்
படம் ஓடும் நேரம் : நூறு நிமிடங்கள்
திரையிடப் பட்ட சேனல் : T.N.T
நேரம் மாலை எட்டு மணி முதல் பத்து மணி வரை

கதை நாயகன் சிஸ்கோ கிட் : ஜிம்மி ஸ்மித்ஸ்
தோழன் பாஞ்சோ : சீஸ் மரின்
கதை நாயகி சாடி பிராஸ்ட் : டாமினிக்
கர்னல் டேலக்ரைஸ்: ரான் பெர்ல்மான்
படம் பற்றிய இணைய தள விவரங்களை கீழ் காணும் தளங்களில் பார்க்கலாம்.

விக்கிபீடியா

ஐ.எம்.டீ.பி
மீண்டும் விரைவில் அடுத்த காமிக்ஸ் படம் மூலம் உங்களை சந்திக்கிறேன்.

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.

27 comments:

  1. அன்பரே,

    சபாஷ், அற்புதமான பதிவு,பின்னிப் பின்னி அழகாக அமைத்திருக்கிறீர்கள்.

    கவ்கேர்ல் படங்களான ரீவால்வர் ரீட்டா,கன்பைட் காஞ்சனா போன்ற படங்கள் எனக்கு இன்னமும் சிறிதளவு ஞாபகத்தில் உள்ளன.

    முத்துக்காமிக்ஸ் சிறப்பாக சிஸ்கோகிட் கதைகளை வெளியிட்டது என்பது உண்மையிலும் உண்மை. இந்த ஆவியின் கீதம் அட்டையும், பெயரும் என்னைப்போன்ற ஒர் சிறு குழந்தையின் மனதில் எவ்வகையான திகிலை ஏற்படுத்தியிருக்கும் என நினைத்துப்பாருங்கள்.சிலிர்க்கிறது நண்பரே.

    தொடர்ந்தும் எங்களை இன்பக்கடலில் மூழ்கடிக்க வேண்டுகிறேன். நல்ல பதிவு திருஷ்டியாக ஒர் கதாநாயகி நீராடும் படம் போட்டிருக்கலாம்.

    உற்சாகத்துடன் தொடருங்கள்.

    ReplyDelete
  2. நண்பரே,

    மிகவும் அருமையான பதிவு இது. நானும் கூட வேதாளர், மண்ட்ரக், மாடஸ்டி போன்றவற்றில் ஏதாவது ஒரு படத்தை தான் எதிர்பார்த்தேன். சற்றும் எதிர் பாராத பதிவு இது.
    ஆனால் , அருமையாக, கோர்வையாக எழுதப் பட்ட பதிவு இது. மிகவும் விளக்கமாக இருந்தது இந்த பதிவு. நீங்கள் சில விஷயங்களையும் சேர்த்து இருக்கலாம்:

    திகில் காமிக்ஸ் இதழ்களில் சிஸ்கோ கிட் கதைகள் வந்தன.

    முத்து காமிக்ஸ் இதழ் என் 200 சிஸ்கோ கிட் கதை ஆகும். மேலும் இந்த சமயங்களில் நிறைய சிஸ்கோ கிட் கதைகள் வெளி வந்தன.

    அருமையான பதிவு. தொடருங்கள்.

    அடுத்த பதிவு பற்றிய குறிப்பு எதுவும் இல்லையா?

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  3. மிஸ்டர் அனானி,

    நல்ல பதிவு சிஸ்கோ கிட்'ஐ பற்றி. ஆனாலும் எங்கள் மனதிற்கினிய சூப்பர் ஸ்டார் டிஸ்கோ அவர்களை பற்றி மேலும் சிறிதாவது எழுதி இருந்தால் நாங்கள் மகிழுந்து இருப்போம்.

    //நண்பர் முத்து விசிறி அவர்கள் இங்கே தெளிவாக விவரிக்கிறார்// என்று எழுதி விட்டு அங்கே லிங்க் எதுவுமே கொடுக்க வில்லையே? ஏன்? மறதியா?

    //ராட் ரீட்'ஐ தவிர வேறு யாருமே சிஸ்கோ கிட் என்று கூறும்போது நமது நினைவுக்கு வர மறுப்பார்கள்// யாருப்பா இது? புதுசா இருக்கார்? அவர் வரைந்த கதைகல் ஏதாவது லயன் / முத்து / ராணி காமிக்ஸ் இதழில் வந்து இருக்கிறதா?

    செழி.

    ReplyDelete
  4. மம்மி,

    இங்க வந்து பாரேன். இந்த அங்கிள் ஏதோ பேய் மனிதன், ஆவியின் கீதம் என்று ஏதோதோ போட்டு பயமுறுத்துகிறார். எனக்கும், எங்க பெரியப்பா (பூரிக் கட்டை அங்கிள்) அவருக்கும் ரொம்ப பயமா இருக்கு.

    ReplyDelete
  5. எனக்கு இன்னமும் நடுக்கம் கொறையல. பயம்மா இருக்கு.

    ReplyDelete
  6. நான் இந்தப் படத்த ஸ்டார் மூவீஸ்-ல பாத்திருக்கேன். மறுபடியும் பார்க்க டவுன்லோடு முயற்சி செய்த போது தோல்வியே மிஞ்சியது! டவுன்லோடு செய்ய லின்க்குகளை கொடுத்ததற்கு நன்றி!

    ஆனா ராஜ் கபூரை கரீனா கபூரின் தாத்தா என அடையாளம் காட்டுவதெல்லாம் கொஞ்சம் ஓவர்! இது எப்படியிருக்குன்னா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யர்ருன்னா தனுஷோட மாமனாருன்னு சொல்ற மாதிரி!

    எது எப்படியோ, மீண்டும் அருமையான ஒரு பதிவிட்டதற்குப் பிடியுங்கள் பாராட்டுக்களை!

    ஏதோ நான் தவறாக ஊகம் செய்து விட்டேன் என்பதற்காக நீங்கள் மற்ற காமிக்ஸ் படங்களைப் பற்றி பதிவிடாமல் இருந்துவிடாதீர்கள்! இதோ எனது கோரிக்கைகள்!

    வேதாளர்
    மாடஸ்டி ப்ளைஸி
    ஜேம்ஸ் பாண்ட் (பல படங்கள்)
    மாயாஜால மன்னன் மாண்ட்ரேக்
    ஃப்ளாஷ் கார்டன்
    டார்ஜான் (பல/பலான படங்கள்)

    இன்னும் பல...

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  7. நண்பர் செழி மன்னிக்கவும். இப்போது லிங்க் கொடுத்து விட்டேன்.

    மேலும் ஒரு மேல் தகவல்: சிஸ்கோ கிட் அவர்களின் தொலைக் காட்சி தொடர் 1950ல் வந்து 156 பாகங்கள் தொடர்ந்தது. இது தான் முழு வண்ணத்தில் வந்த முதல் தொலைக் காட்சி தொடர் ஆகும்.

    ReplyDelete
  8. தலைவரே,

    நீங்கள் கொடுத்து உள்ள பணியை சிரமேர்க் கொண்டு செய்கிறேன். ஆனால் அடுத்து நான் இடும் பதிவு இதில் எதுவும் இல்லை.

    நன்றி.

    ReplyDelete
  9. உலகிலேயே முதன் முறையாக ஜேம்ஸ்பாண்ட் (C.I.D. ஷங்கர், துனிவே துனை), டார்ஜான் (ஜம்பு), கெளபாய் (எங்க பாட்டன் சொத்து), ப்ரூஸ் லீ பட வில்லன் (பாயும் புலி) என பல விதமான கதாபாத்திரங்களில் நடித்தவன் நான் தான்.

    ஆனால் இந்த ஹாலிவுட் பாவிகள் சதி செய்து என்னைப் பார்த்துக் காப்பியடித்து விட்டு என் புகழ் உலகம் முழுவதும் பரவுவதை தடுத்து விட்டனர்.

    என்னை மீண்டும் நினைவு வைத்து பதிவில் குறிப்பிட்டதற்கு பாராட்டுக்கள் தம்பி!

    ReplyDelete
  10. அய்யா ஜேம்ஸ்பாண்ட் ஜெய் ஷங்கர் அவர்களே,

    எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு சாமி. படத்தோட செலவுல பாதி குதிரைகளுக்கும் அந்த கௌபாய் துணிகளுக்கும் தான் செலவு ஆச்சு.

    அப்பவே சொன்னேன். ஜெயமாலினி'யை படத்துல வச்சுக்கலாம், துணி செலவு இருக்காது (ஜெயமாலினி அந்த காலத்து நமிதா). நீங்க கேக்கலையே?

    ReplyDelete
  11. ஜேம்ஸ் பாண்ட் ஜெய் ஷங்கர் அவர்களே,

    நீங்களே வந்து என்னுடைய பதிவில் கமெண்ட் போட்டது எனக்கு பரம திருப்தி.

    தொடருங்கள்.

    ReplyDelete
  12. ஏனுங்கோ,

    தயாரிப்பாளர் சொன்னது சரி தானுங்கோ. நாம ஜெயமாலினி'யை யூஸ் பண்ணி இருக்கலாம் (படத்துல தான்).

    ReplyDelete
  13. அய்யா,

    நீங்க எல்லாம் ஜேம்ஸ்பாண்ட் ஜெய்ஷங்கர் படத்த பத்தி பேசும்போது எனக்கு ஒரு வசனம் நியாபகம் வருது சாமியோவ். ஆனா, அது எந்த படத்துல என்பது நினைவு இல்ல.

    ஜேம்ஸ்பாண்ட் ஜெய்ஷங்கர் ஒரு ஆள புடிச்சு வச்சு மெரட்டுவார். அப்போ அவன் சொல்லுவான்.

    ஆள்: தே, என்னய்யா மெரட்டுற? நான் யார் தெரியுமா? நான் சீ.ஐ.டி டா.

    உடனே ஜேம்ஸ்பாண்ட் ஜெய்ஷங்கர் அவனை விட பெரிய ஆள் என்பதை நிரூபிக்க கூறுவர்: டே, நீ சீ.ஐ.டி'ன்னா நான் டபுள் சீ.ஐ.டி டா.

    இது எப்படி இருக்கு?

    ReplyDelete
  14. நானும் ரிவால்வர் ரீடாவும் தான் ஆரம்ப கால எதிர் நாயகிகள் என்பதை மறவாதீர் தமிழ் காமிக்ஸ் சமூகமே. இதற்க்கு எல்லாம் காரணம் திருமதி பூங்காவனம் அம்மையார் எங்களுக்கு கொடுத்த பயிற்சி தான்.

    வாழ்க பூங்காவனம் மேடம்.வளர்க பூங்காவனம் மேடம்.
    பல்லேலக்க பல்லேலக்க திருச்சிக்கா மதுரைக்கா திருப்பதிக்கா?

    வாழ்க பூங்காவனம் மேடம்.வளர்க பூங்காவனம் மேடம்.
    பல்லேலக்க பல்லேலக்க திருச்சிக்கா மதுரைக்கா திருப்பதிக்கா?

    ReplyDelete
  15. ஜேம்ஸ்பாண்ட் ஜெய்ஷங்கர் தமிழில் 007-ஆக நடித்திருக்கலாம். ஆனால் உண்மையான நாட்டுபுற 007 நான் தான்.

    அப்புறம், தயவு செய்து பூங்காவனத்தின் “பெயரையும்” கெடுக்காதீர்கள்!

    ReplyDelete
  16. கண்ணாளா, வந்து விட்டீர்களா?

    உங்களை காணாமல் ஏன் உள்ளம் குமுறியது. மனம் விம்மியது. சிந்தனை பிதுங்கியது.

    வழி மேல் விழி வைத்து காத்து இருந்தேன். வந்து விட்டீர்களா?

    ReplyDelete
  17. சகோதரி பூங்கா,

    தயவு செய்து வழி மேல் விழியை வைக்க வேண்டாம். யாராவது மிதிச்சுடுவாங்க, கண்ணு. கொஞ்சம் ஒரமா வைச்சுகோடியம்மா.

    ReplyDelete
  18. அடியே பாதகி, சக்களத்தி, என் உள்ளமெனும் சமுத்திரத்தில் முத்தென முத்தம் பதித்த என் கண்ணாளனை சொந்தம் கொண்டாடும் நீ யாரடி.
    பட்சியிடம் கேள் நாம் பழகிய கதை சொல்லும்.
    நந்தவன புதர்களைக் கேள் நாம் கட்டியணைத்த கதைகள் பல சொல்லும். கோடாரிக் காம்பே, என் காதலின் குறுக்கேயா வருகிறாய். என் குறுவாளின் குறி தப்பாது. எங்கே குறி வைக்கிறேன் என்று தேடாதே அங்குதானடி அடங்காப்பிடாரி.

    ReplyDelete
  19. மேலே கருத்து விட்டவர்களிற்கும், இனிமேல் வந்து கருத்து இடப்போவர்களிற்கும்.

    நான் பாடும் மெளன ராகம் கேட்கவில்லையா
    என் காதல் பூங்காவனம் தூங்கவில்லையா
    கண்ணீரில் உன் நெஞ்சம் தேடுகின்றேன்
    கூரை மேல் தனியே பாடுகின்றேன்.

    நந்தவன புதரினுள் காதல் வாங்க சென்றேன்.
    கொத்தி விட்ட பின்பு தான் பாம்பு என்று கண்டேன்
    என் வலி சொல்லவே உயிரும் இல்லையே
    நான் ஒரு ஆவி.. காதல் கிள்ளையே
    உடல் உதிர்ந்து போனது ஆவி மட்டும் பாடுது
    கூரை என்னைக் கேள்வி கேட்குது
    கூரை இன்று கூடாகிப் போனது.

    ReplyDelete
  20. தேவதை இளம் தேவி
    உன்னைச் சுற்றும் ஆவி
    காணலான கண்ணீர் காணவில்லையா
    ஓ.. நீயில்லாமல் நானா

    ஏரிக்கரை பூவெல்லாம் எந்தன் பெயர் சொல்லாதோ
    பூ வசந்தமே நீ மறந்ததேன்
    ஆற்று மணல் மீதெங்கும் நான் வரைந்த கோலங்கள்
    தேவ முல்லையே காணவில்லையே
    இது காதல் சோதனை
    இரு கண்ணில் வேதனை
    ஒரு வானம்பாடி தேகம் வாடி பாடும் சோகம் கோடி

    (தேவதை இளம் தேவி)

    எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவதா
    விதி என்பதா சதி என்பதா
    சொந்தமுள்ள காதலியே வற்றி விட்ட காவிரியே
    உந்தன் ஆவியை நீ வெறுப்பதா
    இது கண்ணீர் ராத்திரி என் கண்ணே aadhari
    இவன் தேயும் சேதி கண்ணீர் ஜாதி
    நீதான் எந்தன் பாதி

    (தேவதை இளம் தேவி)

    படம் : ஆயிரம் நிலவே வா
    பாடியவர் : S.P.B. & குழுவினர்
    இசை : இசைஞானி இளையராஜா

    ReplyDelete
  21. சின்னப் பயலே, சின்னப் பயலே, சேதி கேளடா -
    நா சொல்லப் போற வார்த்தையை நல்லா
    எண்ணிப் பாரடா, நீ எண்ணிப் பாரடா.

    பதிவும் படிக்கணும், கமெண்ட்'உம் போடணும் அது தாண்டா வளர்ச்சி.
    இந்த பதிவை போட்டவர்களுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி.
    நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் நாலும் தரும் பயிற்சி -
    உன் நரம்போடு தான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி (சின்னப் பயலே )

    மனிதனாக வாழ்ந்திட வேணும்
    மனதில் வையடா - தம்பி, மனதில் வையடா
    வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ
    வலது கையடா - நீ வலது கையடா
    தனி உடைமை கொடுமைகள் தீர
    தொண்டு செய்யடா - நீ தொண்டு செய்யடா
    தானாய் எல்லாம் மாறும் என்பது
    பழைய பொய்யடா - எல்லாம் பழைய பொய்யடா (சின்னப் பயலே)

    வீட்டு புகை கூண்டு உச்சியில் நின்னு பேய் ஒன்னு ஆடுதுன்னு
    கமெண்ட் போடப்போகும் போது சொல்லி வைப்பாங்க -
    உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க -
    அந்த வேலையற்ற வினர்களின் முளையற்ற வார்த்தைகளை
    வேடிக்கை யாகக் கூட நம்பி விடாதே -
    உந்தன் வீட்டுக் குள்ளே பயந்து கிடந்து
    வெம்பி விடாதே - நீ வெம்பி விடாதே (சின்னப் பயலே)

    ReplyDelete
  22. என்ன நடக்குது இங்கே?

    இங்கேயும் ஒரு பாட்டு போட்டி ஆரம்பித்து விட்டார்களா என்ன?

    கும்மி அடிக்க ஒரு அளவு இல்லையா?

    கிங் விஸ்வா.
    தமிழ் காமிக்ஸ் உலகம்

    ReplyDelete
  23. தம்பி கிங் விஸ்வா,

    இதெல்லாம் எங்கள மாதிரி பெரிய பசங்க சமாச்சாரம். போய் வேற எங்கையாவது உங்க நாட்டாமை வேலையை செய்யுங்க.

    ReplyDelete
  24. என்னடா அம்பி, என்ன நடக்குது இங்கே? வேற யாரும் வந்து பின்னுட்டம் போட மாட்டாளா?

    கலி காலமடா அம்பி.

    இந்த அய்யம்பாளையம், ஜோஸ், புருனோ பிரசீல் எல்லாம் என்ன ஆனால்?

    காணாமல் போன மா டால்டன்'இன் கைப்பையை கை பற்றிய சம்பந்தி கப்ஸா கழுகு

    ReplyDelete
  25. படுபாவிகள் என்னை பற்றி இன்னும் தவறாக எழுதி வருகின்றனர்.

    ஆண் ஆதிக்கம் நிறைந்த உலகம் இது என்பதை இவர்களை போன்ற பலரும் நிரூபித்து வருகின்றனர். காதலர் தினமான நேற்றும் கூட எங்களை இந்த பாவிகள் நிம்மதியாக இருக்க விட வில்லை.

    என்ன செய்யலாம்?

    என்னுடைய நிலைமையை விளக்கி ஒரு சொந்த பதிவு இட்டு உள்ளேன். வந்து என் சோக கதாவயாவ் தெரிந்து கொள்ளுங்கள்.

    சுட்டி இங்கே: http://poongaavanamkaathav.blogspot.com/2009/02/blog-post.html

    ReplyDelete
  26. வலையுலக நண்பர்களே,

    தயவு செய்து பூவாசம் வீசும் எங்கள் வாழ்வில் புயல் வீச வைக்காதீர்கள்.

    எங்களையும் வாழ விடுங்கள்.

    காத்தவ்,
    புயல் அடிக்கும்போது பூ பறிப்பவன்.
    வெள்ளத்தில் மீன் பிடிப்பவன்.

    ReplyDelete

உங்கள் கருத்து எப்படி இருந்தாலும் கண்டிப்பாக பகிர்ந்துகொண்டே தீரவேண்டும், கருத்தே இல்லை என்றாலும் கூட அதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related Posts Widget for Blogs by LinkWithin