வணக்கம்.
சமீபத்தில் நான் என்னுடைய புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்தபோது பல பெட்டிகளை ஆராய்ந்ததால் நிறைய நேரம் செலவானது. ஆனால், அந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏனெனில், பல பழைய புத்தகங்கள் சிக்கின. அவற்றில் ஒன்று மிகவும் அதிசயதக்க வகையில் இருந்தது.
ஒரு மாதத்திற்கு முன் கிங் விஸ்வா அவர்களின் பதிவில் காந்தி அடிகளை பற்றி காமிக்ஸ் வருவதாக எழுதி இருந்தார். அதன் பின்னுட்ட பகுதியில் ஜோஸ் அவர்கள் ரஜினி அவர்களை மைய்யமாக கொண்ட ஒரு நாவலை பற்றி எழுதி இருந்தார். அவரும் காமிக்ஸ் பற்றி கேட்டு இருந்தார். (ரஜினியை கதாநாயகனாக கொண்டு ஒரு நாவல் வெளிவந்தது. காமிக்ஸ்ம் கூடவா? ஆனால் நாவல் முயற்சி வெற்றி பெற வில்லை) என்பதே அவரின் பின்னுட்டம். இதோ அந்த பதிவின் சுட்டி: கிங் விஸ்வா.
தற்பொழுது காமிக்ஸ் வலை பூக்களில் முன்னோட்டம் அளிப்பது வழமையாக உள்ளது. கிங் விஸ்வா அவர்களும், ரபிஃ ராஜா அவர்களும், ஒலக காமிக்ஸ் ரசிகனும் சைடு பார்'இல் முன்னோட்டம் பகுதியை வைத்து உள்ளனர். ஆனால், திரு கனவுகளின் காதலன் அவர்கள் இவர்களை எல்லாம் விட ஒரு படி முன்னே போய் முன்னோட்டம் இடுவதையே ஒரு பதிவாக போட்டு நம்மை எல்லாம் அசத்துகிறார். அதனால், நானும் என் பங்கிற்கு ஒரு முன்னோட்டம் இடுகிறேன்: ரகசிய ஏஜன்ட் ரஜினி.
இந்த கதை எந்த இதழில் வெளி வந்தது என்பதே ஒரு போட்டி கேள்வி ஆகும். பல விஷயங்களில் சிறந்து விளங்கும் காமிக்ஸ் டாக்டர், முத்து விசிறி, கிங் விஸ்வா, ராஜா, கனவுகளின் காதலன், ஜோஸ், ஒலக காமிக்ஸ் ரசிகன் போன்றவர்களின் காமிக்ஸ் அனுபவத்திற்கு இதெல்லாம் சர்வ சாதரணம் என்பதை நான் நன்கு அறிவேன். இருந்தாலும் இது என்னுடைய கன்னி முயற்சி என்பதால் மன்னிக்கவும்.
நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும். மீண்டும் சந்திப்போம். விரைவில்.
நண்பரே,
ReplyDeleteரகசிய ஏஜண்ட் ரஜினி. தலைப்பே ச்ச்சும்மா அதிருதில்ல.
முன்னோட்டம் போடுவதெல்லாம் காமிக்ஸ் காதலர்களின் ஆர்வத்தினை பெருக்கிடத்தானே. முன்பு ஆனந்த விகடன், குமுதம் இதழ்களிலெல்லாம் முன்னோட்டம் போட்டுக் கலக்குவார்கள். இப்போது அது அரிதாகவே உள்ளது.முன்னோட்டத்தில் எனக்கு அலாதியான பிரியம் உண்டு எனவேதான் என் பதிவுகளின் முன் முன்னோட்டம் இடுவதை இப்போது வழக்கமாக்கியிருக்கிறேன்.
உங்கள் போட்டி கேள்வியின் விடை எனக்குத் தெரியாது என்பதே உண்மை. ஆனால் ஏதாவது செய்து எனக்கு பரிசு தந்து விடுங்கள். குங்குமம் அல்லது குங்கும குழும இதழ்களில் வெளியாகியிருக்கலாம் என்பது என் ஊகம்.
பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
உற்சாகத்துடன் தொடருங்கள்.
காமிக்ஸ் பிரியரே,
ReplyDeleteசிறப்பாக இருந்தது இந்த முன்னோட்டம். ஆனால் இது எந்த இதழ் என்பது எனக்கும் தெரிய வில்லை. ஆனால், இதனை ஏதோ ஒரு மாலை நாளிதழில் பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பாக பார்த்ததாக நினைவு. எனக்கு சரியாக தெரிய வில்லை.
செழி.
கனவுகளின் காதலனே,
ReplyDeleteஎன்ன ஒரு ஆச்சர்யம். உங்களுக்கே இது தெரிய வில்லையா? அப்படியானால் இந்த பதிவு பாதி வெற்றி அடைந்து விட்டதாக கருதுகிறேன்.
செழி, உங்களின் கருத்தும் தவறு.
அன்பரே,
ReplyDeleteஇது மஜா டைம்ஸ் எனும் மாலை மலர் பல்லாங்குழி சிறப்பிதழ் வெளியிட்டபோது வெளியான அறிவிப்பு ஆகும்.
தயவு செய்து விடையைக்கூறுங்கள், தவிக்க விடாதீர்கள்.
எலே, யாருலே அது? நம்ம தலைவர் படத்த போட்டு கேள்வி கேக்குறது? நல்ல கேக்குறாங்க டீடைலு. இதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன். வேணுமுன்னா என்னுடைய செகரெட்டரி பூங்காவனம் அம்மாள்'இடம் கேளுங்கள்.
ReplyDeleteபேப்பர் குவாலிட்டி'யை வைத்து பார்த்தல் ஏதோ தினத்தந்தி சம்பந்தப் பட்டது போல தெரிகிறது.
எங்களின் உலகத்தரம் வாய்ந்த பத்திரிக்கையின் பெயரை குலைக்க யாரோ சில அயல் நாட்டு விஷமிகள் செய்த சதி இது. இந்த மொக்கை கதைக்கும் எங்களின் உலகத்தரம் வாய்ந்த பத்திரிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ReplyDeleteமஸா டைம்ஸ் ஆசிரியர் அவர்கட்கு,
ReplyDeleteஐயா, தங்கள் உலகத்தரம் வாய்ந்த இதழிற்கு ஸந்தா கட்டி விட்டு தவிக்கும் பாவி நான், முதலில் பல்லாங்குழி நஸாவின் சுழி அனுபவங்கள் எனும் தொடரை வழங்குவதாக முன்னோட்டம் இட்டு பின் அதனை எங்கள் கண்களில் காட்டவேயில்லை, அதன் பின் வந்தது தான் ரகஸிய ஏஸண்ட் ரஸினி படக்கதையின் முன்னோட்டம். அதைனையும் எங்கள் அன்பர் வெளியிட்டு உங்கள் முகத்திரையினை கிழிக்க முயலும்போது அவதூறு பேசுவதாக எழுதுகிறீர்கள்.
உங்களின் பேனாவிற்குத்தான் மனஸாட்சி இல்லையெனினும் உங்களிற்காவது அது இருக்கும் என எண்ணுகிறேன். விரைவில் உண்மைகள் வெளிவரும் ஸத்யம் வெல்லும்.
சத்யம் ஒரு மொக்கை படம்.
ReplyDeleteactually, அது வந்து என்னன்னா, it's A Comics. அது ஒரு படக்கதை. இதை சித்திரக்கதை என்றும் சொல்லலாம். அல்லது படங்களால் கூறப்படும் கதை என்றும் சொல்லலாம். You Can Say. நீங்கள் சொல்லலாம்.
ReplyDeleteBut, ஆனால் You Should Uderstand One Thing. நீங்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
என்னுடைய Comics / படக்கதை / சித்திரக்கதை'யும் வந்து இருக்கிறது.
சூப்பர் ஸ்டார் காமிக்ஸ் வந்தா பதிவு போடுறீங்க!
ReplyDeleteஆனா, என் மகன் ‘லிட்டில் சூப்பர் ஸ்டார் - சிம்பு’ காமிக்ஸ் ‘டி.ராஜேந்தரின் உஷா’வில் வந்ததே, அதப் பத்தி ஏண்டா யாருமே பதிவு போட மாட்டேங்குறீங்க!
தமிழண்டா!
லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு!
காமிக்ஸ் பதிவு போடாட்டி வரும் உனக்கு வம்பு!
ஏ! டண்டனக்கா! ஏ! டனக்குனக்கா!
நான் இந்த துண்ட தோள்ல போட்டா, தீர்ப்பு சொல்லப் போறேன்னு அர்த்தம்.
ReplyDeleteஅதே துண்ட தூக்கி போட்டா, தூள் கிளப்ப போறேன்னு அர்த்தம்.
இங்க வந்து கமெண்ட் போட்டா மொக்கையை நிறுத்துங்க'ன்னு அர்த்தம்.
இது சிறுவர் மலரில் வந்த கதை.
அஹ்ங்..
என்னது, நாகேஷ் செத்துட்டாரா?
ReplyDeleteஎன்றா பசுபதி. என்ன சொல்றான் இவன்?
//இது சிறுவர் மலரில் வந்த கதை.//
ReplyDeleteகொஞ்சம் கூட சாத்தியமே இல்லாத ஒரு விஷயத்த நீங்க சொல்றீங்க!
IT IS HIGHLY IMPOSSIBLE!
ஹே, என்ன நடக்குது இங்கே?
ReplyDeleteநான் எல்லாத்தையும் என்னோட லாப் - டாப்'ல பாக்குறேன். ஆனா, இந்த கதையை மட்டும் பாக்க முடியல.
ஹே, எனக்கு புரியல. எனக்கு தெரியல.
கிளம்பிட்டாங்கையா, கிளம்பிட்டாங்க.
ReplyDeleteஎஜமான்,
ReplyDeleteஎண்ணிட்டேனுங்கோ. மொத்தம் பதினஞ்சு கமெண்ட் இருக்கு.
அட, நீங்க தான் சும்மா என்றா பசுபதி, என்றா பசுபதி'ன்னு சொல்றீங்களே. அதன்.
முகமில்லா ககொகு அவர்களே, புது வீட்டில் சொவ்கரியமாக குடி புகுந்து விடீர்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆவலை தூண்டும் விதமாக ஒரு பதிவு. ஜோஸ் அன்பர் கூறியது போல, பத்திரிக்கை காகித தரத்தை வைத்து பார்க்கையில் இது தின தந்தி குளுமதினருடைய எதோ மொக்கை இதழ் என்று தெரிகிறது..... ராணி கோமிச்சோ இல்லை சிறுவர் மலரிலோ இது வந்து இருக்க முடியாது, என்பதை தவிர நான் ஒன்றும் அறியேன்.... உங்கள் பதிவை மற்றவர்கள் போல ஆர்வமுடன் எதிர் பார்கிறேன். புது வீட்டில் ஜாலியுடன் கூடவே, இந்த ஜோளியை மறந்து விடாதீர்கள்.
வீடு மாறுவதில் இப்படி ஒரு சவ்கரியம் கூட இருக்கிறதா.... பல அறிய பதிவுகளை இனிமேல் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கலாம் :)
ரஃபிக் ராஜா
காமிக்கியல்
பி.கு: (திரும்பவுமா, என்று கூவதீர்கள்) வலைப்பதிவு அன்பர்கள் கும்மி எடுக்க தற்போது தேர்ந்தடுது உள்ள பதிவு ககொகு தான் போல.... ஏனோ இந்த கும்பல்களுக்கு பின் 1 அல்லது 2 பேர் தான் மொத்தம் இருப்பார்கள் என்று எண்ணுகிறேன்... (ஆமா இவரு பெரிய ஷேக்ஸ்பியர்.. சீ.... ஷெர்லோக் ஹோல்ம்ஸ்... என்று குக்குரல்கள் எழுவது கேக்கிறது... பொறுத்து ஆளுங்கள் கும்மியோரே)
நான் ஒருத்தன் இங்கே இருக்கும்போது யாருப்பா அது? என்னோட பேர மிஸ்-யூஸ் பண்றது? அதுக்கு பதிலா அந்த மிஸ்ஸ யூஸ் பண்ணலாமே?
ReplyDeleteஅய்யன்மீர்,
ReplyDeleteஇந்த கதை மின்மினி என்ற இதழில் வந்ததா? அதே இதழில் தான் ஆரம்பத்தில் ரிப்போர்ட்டர் ஜானி என்ற பெயரில் வரும் திகில் காமிக்ஸ் ஹீரோ கதையும் வந்தது.
அம்மா ஆசை இரவுகள் விசிறி.
யோவ்,
ReplyDeleteஆள் ஆளுக்கு இப்படியே வெட்டியா கதை சொன்ன எப்படி? யாராவது சரியான பதில் சொல்லுங்கப்பா.
இன்னிக்கு நான் பம்ப் செட்'ல குளிக்கும்போது எனக்கு யாரவது போன் பண்ணி இருந்தா, அயம் சாரி. நான் உங்க கால்'அ அட்டன்ட் பண்ணல.
பம்ப் செட்'ல குளிச்ச பட்டிக் காட்டு பையன்.
நண்பர்களே
ReplyDeleteஇந்த அறிவிப்பு வந்தது 'பூந்தளிர்' இதழில்.
2 கதைகள் வந்ததாக நினைவு..
சொல்லப்போனால் மிகவும் நன்றாகவே இருந்தது..