கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,
வணக்கம்.
முதலில் நான் இந்த வலையுலக நண்பர்களுக்கு என்னுடைய மன்னிப்பை சமர்பிக்கிறேன். அந்த மன்னிப்பின் பிரதிபலிப்பே அருகில் உள்ள இந்த அறிவிப்பு. இனிமேலும் அடுத்தவரை நான் பின்தொடர போவதில்லை. என்னுடைய் சொந்தமான இடுகைகளை இனிமேல் நீங்கள் காணலாம்.
என்னுடைய சிறுவயதில் நான் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தபோது, முத்து காமிக்ஸ்'ஐ நெடு நாளாக படித்தாலும், ஏனோ எனக்கு முழு சந்தோஷம் வரவில்லை. பின்னர் லயன் காமிக்ஸ் ஆரம்பித்த போதும், மினி லயன் வெளி வந்த போதும் அதே நிலை தான். ஆனால் திகில் காமிக்ஸ் ஆரம்பித்த போது நிலைமை சற்று மாறியது. ஆனாலும் என்னுடைய அக்கா மகன் (அப்போது நான்காம் வகுப்பில் இருந்தான்) இந்த காமிக்ஸ்'ஐ படிக்க சற்று பயந்தான். ஆனால் மினி லயன் பெரிய அளவில் இரண்டு ருபாய் விலையில் வந்த போது எனக்கு மிகவும் சந்தோஷம் ஏற்பட்டது. ஏனெனில் இந்த புத்தகத்தில் தான் பலப் பல சிறு கதைகள் வந்தது. என்னுடைய அக்கா மகன் மிகவும் சந்தோஷப்பட்டான். நானும்தான்.
அதில் எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்த ஒரு கதாபாத்திரமே குண்டன் பில்லி. அனைத்து வயதினரையும் கவரும் இவனது சேட்டைகள் எங்கள் மனதை கொள்ளை கொண்டதில் வியப்பேதும் இல்லை. முதன் முதலில் பில்லி ஒரு கதையில் தோன்றி இந்த வருடம் பிப்ரவரி மாதத்தோடு நூறு வருடங்கள் ஆகின்ற வெளியில் இதைப் பற்றி ஒரு முழு இடுகை இட வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதன் விளைவே இந்த அறிக்கை.
குண்டன் பில்லி முதன் முதலில் ஒரு கதையில் தோன்றியது 1908ம் ஆண்டில்தான். பிளீட்வே குழுமத்தில் இருந்த ஒரு பத்திரிக்கையே "த மேக்னட்" (The Magnet) ஆகும். திரு பிரான்க் ரிச்சர்ட்ஸ் (Frank Richards) என்பவர்தான் இந்த கதையின் ஆசிரியர் ஆவார். இவர் தொடர்ந்து இந்த குண்டன் பில்லி தொடரை முப்பதிஒரு வருடங்கள் எழுதினார் (1908 - 1939).
குண்டன் பில்லி முதலில் கருப்பு-வெள்ளையிலேயே வெளி வந்தான். இந்த சில அறிய சித்திரங்களை பார்த்து மகிழுங்கள். இவை எல்லாம் ஆரம்ப காலத்தில் (பிரான்க் ரிச்சர்ட்ஸ் காலத்தில்) வெளி வந்த தொடர்கள்.
அந்த பள்ளியின் மேப் இதோ. இந்த பள்ளி ஒரு கற்பனை பள்ளிக்கூடம் ஆகும். இந்த ஒரு எண்ணத்தை கொண்டே குழந்தை உலகின் தலை சிறந்த எழுத்தாளராகிய திரு வாண்டுமாமா அவர்கள் குஷிவாளி ஸ்கூலில் ஹரிஷ் என்ற தொடரை ஆரம்பித்தார் என்பது என்னுடைய எண்ணம். இதனை பற்றி திரு அய்யம்பாளையம் அவர்கள் விளக்கம் அளித்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
அந்த பள்ளிக்கூடத்தின் உள் கட்டமைப்பு வரைப்படம் இதோ உங்களின் மேம்பட்ட பார்வைக்கு. இது போன்ற பள்ளிகள் நாம் படிக்கும்போது இல்லையே என நான் மிகவும் வருத்தப்பட்ட காலங்கள் உண்டு. திரு வாண்டுமாமா அவர்களை ஒரு முறை சந்தித்த போது இதனை அவரிடம் கூறி என்னுடைய நீண்ட நாள் ஆதங்கத்தை வெளியிட்டு விட்டேன்.
இந்த மேக்னெட் இதழின் சில அட்டைப்படங்கள். வாசக அன்பர்கள் ஒரு விஷயத்தை அறிய வேண்டும். பிளீட்வே குழுமத்தின் ஆரம்ப கால இதழ்களைப்ற்றிய விபரங்கள் எங்குமே தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. ஆகையால் தான் இது போன்ற தெளிவில்லாத படங்களை வெளியிட வேண்டியதாக போயிற்று. மன்னிக்கவும்.
தீவிர காமிக்ஸ் ஆய்வர்களாகிய திரு சதீஷ், முத்துபேன், விஸ்வா, அய்யம்பாளையம் போன்றவர்கள் குண்டன் பில்லி பற்றிய விபரங்களை தெரிவித்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.
திரு பிரான்க் ரிச்சர்ட்ஸ் அவர்களால் எழுதப்பட்ட குண்டன் பில்லி தொடர் மிகவும் பிரபலம் அடைந்ததால் அந்த சிறுகதைகளை எல்லாம் முழு நீள நாவல்களாக மாற்றி எழுதினார். சென்ற நூற்றாண்டின் ஆரம்ப கால கட்டத்தில் இந்த நாவல்கள் மிகவும் பிரபலம் பெற்றவை ஆகும்.
இந்த கதைகள் எதையும் நாம் படிக்க வில்லை என்பதே மிகவும் மனவருத்தம் அளிக்கும் ஒரு விஷயம் ஆகும். ஏனென்றால் இந்த கதைகள் எதையும் திரு விஜயன் அவர்கள் வெளியிடவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
இந்த நாவல்கள் பிரபலம் பெற்றதால் அவை மீண்டும் மறுபதிப்பு செய்யப்பட்டன. இவற்றையும் மீறி காமிக்ஸ் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அனைத்து சித்திரக்கதைகளும் ஒரு டைஜஸ்ட் வடிவில் வெளிவந்தது. இவையே பில்லி பண்டர்ஸ் ஓன் (Billy Bunter's Own) என்று வெளிவந்தது. இந்த கொள்கை அடிப்படையிலேயே காக்கை காளி டைஜஸ்ட் வெளிவந்ததாக நியாபகம்
திரு பிரான்க் ரிச்சர்ட்ஸ் அவர்களின் மறைவுக்கு பின்னர், திரு சார்லஸ் ஆமில்டன் (Charles Hamilton) அவர்கள் நாக்-அவுட் (Knock Out) என்ற காமிக்ஸ் இதழில் 1939ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் குண்டன் பில்லியை மைய்யமாக கொண்டு கதைகளை எழுத ஆரம்பித்தார். இந்த தொடருக்கு பிரான்க் மின்னிட் (Frank Minnit) மற்றும் ரெக் பர்லேட் (Reg Parlett) ஆகிய இருவரும் சித்திரம் வரைய ஆரம்பித்தனர். இந்த தொடர் 1963ம் ஆண்டு வரை வெளிவந்தது.
ஆனால் நம்முடைய மினி லயன் இதழில் வெளிவந்த குண்டன் பில்லியன் கதைகள் யாவும் இந்த தொடரில் கூட வெளிவரவில்லை. இந்த தொடருக்கு பின்னர் வாலியண்ட் (Valiant: 1963 - 1976) என்னும் ஒரு காமிக்ஸ் இதழில் வெளிவந்தவையே நமக்கு பரிச்சயமான தொடர் ஆகும். இதோ அந்த தொடரில் வெளிவந்த ஒரு அட்டைப்படம்.
என்ன, இந்த சித்திரங்கள் மிகவும் பரிச்சையமானவையாக தோன்றுகிறதா? அம், இவையே நமது மினி லயனில் வெளிவந்த சித்திரதொடர். ஒவ்வொரு குண்டன் பில்லி கதையும் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டவை ஆகும். எப்பொழுதும் எதையாவது தின்று கொண்டே இருக்க நினைக்கும் பில்லிக்கும் அவரது பிரின்சிபால் மற்றும் சக நண்பர்கள் உடன் ஏற்படும் வேடிக்கையான நிகழ்வுகளே வாடிக்கையாக அமைவது நமக்கு தெரிந்ததே.
பிளீட்வே குழுமத்தில் இருந்து வெளிவந்த இந்த தொடர் நெதர்லாந்து நாட்டில் மிகவும் பிரபலம் ஆனது. அதனால், பிளீட்வே குழுமத்தினர் தங்களின் அனைத்து குண்டன் பில்லி கதைகளையும் நெதர்லாந்து நாட்டிற்க்கு அனுப்பினார். அங்கு, அவை மொழி மாற்றம் செய்யப்பட்டு மிகப்பெரும் வெற்றி பெற்றன என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன? ஒரு காலகட்டத்தில் ஒரிஜினல் தொடர்கள் முடிந்ததால் நெதர்லாந்து நாட்டின் ஓவியர்கள் ஜான் வான் டேர் கூ, ஜெரார்ட் லீவர், ராபர்ட் வான் டேர் கிராப்ட் போன்றவர்கள் தொடர்ந்து வரையா ஆரம்பித்தனர். இது 1981ம் ஆண்டு வரை தொடர்ந்தது. பின்னர் பிரான்க் மின்னிட் மற்றும் ரெக் பர்லேட் ஆகியோர் வரைந்த சித்திரதொடரை மறுபதிப்பு செய்தனர். இவையும் 1991ம் ஆண்டு வரையே தொடர்ந்து. அதன் பின்னர் இந்த தொடர் வெளி வரவில்லை.
குண்டன் பில்லியன் புகழ் நெதர்லாந்து நாட்டில் உச்சத்தில் இருந்த போது 1978ம் ஆண்டு ஒரு திரைப்படம் ஆக வெளிவந்தது. இந்த திரைப்படம் Torrent-ல் டவுன் லோட் முறையில் கிடைக்கின்றது. இதோ, அந்த திரைப்படத்தின் போஸ்டர்.
படவிவரங்கள்- வருடம் : 1978
ஓடும் நேரம் : 94 நிமிடங்கள்
மொழி : டச்சு மொழி (நெதர்லாந்து)
சப்-டைட்டில் : ஆங்கிலம் இயக்கம் : ஹென்க் வான் டேர் லிண்டன்
படத்தின் பெயர் : Billie Turf-Het Dikste Studentje Ter Wereld
இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மூன்று வருடங்கள் கழித்து மற்றுமொரு திரைப்படத்தை அதே குழுவினர் இன்னுமொரு திரைப்படத்தை வெளியிட்டனர். இதோ அந்த திரைப்படத்தின் போஸ்டர்:
படவிவரங்கள்- வருடம் : 1981
ஓடும் நேரம் : 96 நிமிடங்கள்
மொழி : டச்சு மொழி (நெதர்லாந்து)
சப்-டைட்டில் : ஆங்கிலம் இயக்கம் : ஹென்க் வான் டேர் லிண்டன்
படத்தின் பெயர் : Billy Turf haantie de voorste
இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றியை அந்த திரைப்பட கம்பெனிக்கு ஈட்டியது. அதனால் அதை தொடர்ந்து ஒரு வருடம் கழித்து மற்றுமொரு திரைப்படத்தை அதே குழுவினர் இன்னுமொரு திரைப்படத்தை வெளியிட்டனர். இதோ அந்த திரைப்படத்தின் போஸ்டர்:
படவிவரங்கள்- வருடம் : 1982
ஓடும் நேரம் : 90 நிமிடங்கள்
மொழி : டச்சு மொழி (நெதர்லாந்து)
சப்-டைட்டில் : ஆங்கிலம் இயக்கம் : ஹென்க் வான் டேர் லிண்டன்
படத்தின் பெயர் : Billy Turf contra Kweel
இந்த திரைப்படங்களுக்கு எல்லாம் முன்னோடியாக தொலைக் காட்சி தொடர் ஒன்று குண்டன் பில்லியை மைய்யமாக கொண்டு வந்ததாக கேள்வி. அந்த தொடரை பற்றிய விவரங்களை என்னால் சேகரிக்க இயலவில்லை. ஆனாலும் அந்த தொடரில் பில்லி ஆக நடித்த சிறுவனின் பெயர் ஜெரால்ட் கேம்ப்யன் ஆவார். இதோ அவரின் ஒரு அறிய புகைப்படம்.
மினி லயனில் ஒரே ஒரு முறை மட்டும் பில்லியன் சகோதரி ஆன பெஸ்ஸி வந்ததாக நினைவு. தீவிர லயன் காமிக்ஸ் வாசகர்கள் பின்னுட்டம் மூலம் இதனை வெளிப்படுத்தினால் நான் மிகவும் மகிழ்வேன். இதோ, பெஸ்ஸியை மைய்யமாக கொண்டு வந்த தொடரின் கதைகள்:
இந்தப் படத்தை வாய்ப்பு கிடைப்பவர்கள் தவறாது பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மறக்காமல் உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமாக இட்டுச்செல்லுங்கள். இந்தப் பதிவை பொறுமையுடன் படித்ததற்கு நன்றி!
இது போன்ற பதிவுகளை மேலும் தொடரலாமா என கருத்துரையிடுங்களேன்? தயவு செய்து உங்களின் கருத்துகளை பதிவு செய்து கழக கண்மணிகளாக மாறுங்கள்.
நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும். இப்போதைக்கு அவ்வளவுதான், மீண்டும் சந்திப்போம். விரைவில்.
நண்பரே,
ReplyDeleteநல்ல தேடலின் பின், உங்கள் உழைப்பும் இணைந்த அருமையான பதிவு.
குண்டன் பில்லி போன்ற கதைகள் வெளியான போது லயன் காமிக்ஸ் போன்ற காமிக்ஸ்கள் எங்கள் ஊர்ப்பக்கம் வருவது நின்று போயிருந்தது.
நானும் சுஜாதா,ராஜேக்ஷ் குமார்,சாண்டில்யன் என தாவிவிட்டேன். நீங்கள் குண்டன் பில்லியை அறிமுகப்படுத்தியது போல் நாங்கள் காணத்தவறிய நாயகர்களை தயங்காது அறிமுகப்படுத்திடுங்கள்.
உற்சாகத்துடன் தொடருங்கள்.
சிறப்பான பதிவு. தொடருங்கள். ஒரே எண்ணங்களுடைய எங்கள் குழுவில் அறிமுகம் செய்து கொள்ள நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள் என தான் தெரியவில்லை?
ReplyDeleteதலைவரே!
ReplyDeleteஅசந்தால் பதிவு! குண்டன் பில்லி என்ற காமிக்ஸ் பாத்திரம் ஒரு இட நிரப்பி என்ற அளவுக்கு தான் எனக்கு தெரியும். இவ்வளவு விஷயங்கள் பில்லியின் பின்னால் இருக்கின்றனவா? பதிவின் பின்னால் உங்களின் உழைப்பு தெரிகிறது!
டாக்டர் அய்யாவை காப்பி அடிக்க மாட்டேன் என்று சொன்னது குறித்து மெத்த மகிழ்ச்சி. வாண்டுமாவின் குஷிவாலி ஹரீஷ் குறித்து நிச்சயம் பேசலாம். காமிக்ஸ் பதிவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வித தலைப்பில் பதிவுகள் இடுவது அரோக்கியமான முயற்சி.
காமிக்ஸ் பிரியரே,
ReplyDeleteநீங்கள் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு பெரிய தவறு எதுவும் செய்து விடவில்லை என்பது அடியேனின் தாழ்ந்த கருத்து. எனினும் இந்த விஷயத்தோடு சம்பந்தப்பட்ட டாக்டர் அவர்களே மேலும் இதில் கருத்து கூற இயலும்.
இப்போது இடுகைக்கு வருவோம். காமிக்ஸ் பற்றி நான் என்னுடைய நண்பர்களுடன் பேசாத நாட்களே இல்லை எனும் அளவிற்க்கு என்னுடைய வாழ்க்கை ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த ஓட்டத்தில் நான் பலருடன் உரையாடி வருகின்றேன். ஆனால் உங்களுடன் பேச ஒரு விருப்பம் உள்ளது. ஏனென்றால், எங்களில் யாருக்குமே தெரியாத இந்த ஒரு திரைப் படத்தை பற்றி நீங்கள் இவ்வளவு தெளிவாக விளக்கம்மளித்து உள்ளீர்கள். ஆச்சர்யம். ஆனால், இந்த திரைப்படத்தை எங்கே டவுன்லோடு செய்யலாம் என்பதையும் கூறி இருந்தால் நாங்கள் இன்னும் மகிழுந்து இருப்போம்.
//என்னுடைய அக்கா மகன் (அப்போது நான்காம் வகுப்பில் இருந்தான்)// இந்த மேற்க்கோளை காணும்போது நீங்கள் எங்களை விட வயதில் மூத்தவர் என்பது தெரிகின்றது. தொடருங்கள்.
கிங் விஸ்வா.
Tamil Comics Ulagam தமிழ் காமிகஸ் உலகம்
விஸ்வா கூறியது போல, மன்னிக்க வேண்டிய குற்றம் எதுவும் நீங்கள் செய்ததாகக எனக்கு தோன்றவில்லை. ஆனால் உங்களிடம் ஒரு கேள்வி:
ReplyDeleteஉங்கள் இடுகைகளை பற்றி படிக்க மற்றவர்கள் வலைபக்கத்தில் பின்னோட்டம் இடும் நீங்கள், அந்த அந்த வலை பதிவுகளில் உண்டான பதிவை பற்றி எப்போதும் கருத்தை பதியாமல் செல்வது ஏன்? எப்போதுமே வலைபக்கங்களில் பின்பற்றப்படும் ஒரு பழக்கம், தன் பதிவை ஒருவரை படிக்க கூறுமுன், அவர்கள் வலைப்பதிவில் உள்ள பதிவுகளில் பங்கேடுப்பதே ஆகும். இந்த காரணத்திற்காகவே, தங்கள் பதிவு எதிலும் இது வரை நான் இடுக்கைகள் இட்டது இல்லை.
ஆனால் எனது அபிமான கதாபாத்திரம் ஆன குண்டன் பில்லி பற்றிய இந்த பதிவை பார்த்தும் என்னுடைய கொள்கையை சற்று தழைத்து கொள்ள வேண்டி போயிற்று. நமது லயன் காமிக்ஸில் பக்க நிரப்பியாக உபயகோ படுத்தப்பட்ட அந்த கதாபாத்திரம் பின்னணியில் இவ்வளவு விஷயங்கள் இருப்பதி நினைத்தாலே, பிரமிப்பாக இருக்கிறது. அதை பற்றிய வெளிச்சம் இட்டமைக்கு நன்றி.
அட்டைப்படம் எந்த நிலையில் இருந்தால் என்ன, அதை சேகரிக்க நீங்கள் எடுத்து கொண்ட சிரமத்தை மெச்சியே ஆக வேண்டும். ஃப்லீட்வே பற்றிய எந்தவொரு பதிவும், தமிழ் காமிக்ஸ் ஆர்வலர்களின் பிடித்தமான ஒரு விசயமே.
பில்லியின் பள்ளிகூட கட்டமைப்பை பார்த்து ஆச்சர்ய படுவது சரிதான். ஆனால் இப்படி ஒரு பள்ளி நம் ஊரில் இல்லை என்று கூறுவது சரியா என்று தெரியவில்லை. ஊட்டி, மற்றும் ஹைதராபாத் சென்றிந்த பொது அங்கு இருக்கும் சில நவீன் ஆங்கில கான்வென்ட் பள்ளி கூடங்களில் இப்படிப்பட்ட அமைப்பில் சிலவற்றை பார்த்து இருக்கிறேன். முழு அளவில் இல்லாமல் போனதர்ற்கு நம் நகரங்களில் இருக்கும் இட பற்றாக்குறையே காரணம்.
குண்டன் பில்லி கதைகள் திரு.விஜயன் வெளியிடாமல் இருந்ததற்கு காரணங்கள் வுண்டு. அவை நமது மினி லைன் போன்ற வரிசையில் மட்டுமே வர தகுதி உள்ள சித்திரம். மினி லைன் நெடு காலம் வெளி வராமல் போனதால், இது போன்ற கதைகளை நாம் பார்க்க குடுத்து வைக்கவில்லை.
இத்தனை பில்லி படங்கள் வெளி வந்தாலும், ஆங்கிலத்தில் வெளியிட படாதது ஒரு குறையே. இருந்தாலும், ஆங்கில அடி கற்றைகளுடன் இதை பார்த்து விட torrent இல் தேடி பார்த்து விட வேண்டியதுதான்.
வாண்டுமாமவை சந்தித்து இருகிறீர்கள் என்பதே, ஒரு தனி செய்தி தான். அந்த சந்திப்பை பற்றி என் நீங்கள் ஒரு இடுக்கை இட கூடாது ?
மற்றபடி, தீவிர காமிக்ஸ் ஆர்வலர்கள் பட்டியலில் என்னை இருட்டடிப்பு செய்த காரணம் என்ன ? எனக்கு எதிராக தமிழ் வலைப்பூவில் சதிகாரர் கூட்டம் (??!!!) தொடங்க பட்டுவிட்டதா என்ன ??? :)
கடைசியாக, மேற்கூறியது போல உங்கள் பின்னூடங்களை சக காமிக்ஸ் பதிவர்களின் காமிக்ஸ் இடுகைகளில் இனி பார்ப்பேன் என்ற நம்பிக்கையுடன்,
ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்
Hiya,
ReplyDeleteI don’t even know how to call you as I do not know either your real name or psuedonym. Still you made imrpovements be leaps and bounds in this particular posting. Hats off to you.
Many of us thought that Billy was a Page-Filler (As commented by many others over here) only. When you know that they ran a complete series on him, makes you to wonder on the strength of the storyline and the quality of the artists.
When we read billy for the 1st time, we used to think of him as an idiotic boy who has a tendency to eat always. As you know now, the background was 1908 & medical science was just making its progress and we did not coin a disease “Eating Dis-order” then. Pity on billy, for we laughed at him when he could be possibly suffering from a medical illness.
The posting proved your mettle to the rest of tamil bloggers. It was nice that you have apologised to him. Stalking is always a menace and monica seles will vouch for that.
The posting would have been complete had you given the download links of the movie as you have done for the tex willer movie. Kindly update this and give us the link so that we can enjoy this fine piece of Comics history.
Way to go. All the best.
Great dedicative work.
ReplyDeletekindly remove the template message before the comment box. it irritates and makes you to look like silly.
because, the kind of work that you have put forward over here, will garner many comments and may not require this kind of provocation.
senthil.
hi there,
ReplyDeletenice update. been so long that i was out of blogosphere. many many new comers. your way of presenting facts with photos/scans made me to feel that i was infact reading a comics.
all the best.
Excellent and Thanks for the efforts, keep going and bring us more info about more comics
ReplyDeleteOnce again thanks
உங்கள் வலை பதிவின் முயற்சி பாராட்டுக்குரியது, உங்களுக்கு என் வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள், நன்றி
ReplyDeleteஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
ReplyDeleteதலைவர்,
அ.கொ.தீ.க.