கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,
வணக்கம்.
லக்கிலுக் படத்தினை உங்களுக்கு அறிமுகம் செய்யலாம் என்று நினைக்கும்போது நண்பர் லிமட் அவர்கள் அதனை அவருடைய வலைப்பூவில் வழங்கி விட்டதால் வேறொரு பதிவை இட வேண்டிய கட்டாயம் எனக்கு. இது அவருடைய தவறும் அல்ல. இவ்வாறு கூறுவது என்னுடைய தவறு. இனிமேல் இப்படி கூறாமல் இருக்கிறேன். ஆனால் இங்கே இப்படி கூற காரணம் என்னவெனில் இந்த பதிவில் முக்கியமான படம் எதுவும் இல்லை. மாறாக தொலைக்காட்சி தொடர் ஒன்றுதான் உள்ளது. அதனால் தான் இந்த பீடிகை. தடங்கலுக்கு மன்னிக்கவும்.
நான் முதன்முதலில் படித்த லக்கிலுக் காமிக்ஸ் புரட்சிதீ ஆகும். அருமையான இந்த கதையை படித்தவுடன் எனக்கு லக்கி லுக் மீது ஒரு காதலே வந்து விட்டது. பின்னர் லக்கி லூகின் மற்ற கதைகளை படிக்கும்போது ஒரு விஷயம் எனக்கு நன்கு புரிந்தது.
லக்கி லுக் கதைகளின் வெற்றிக்கு கதை அமைப்பும் துணை பாத்திரங்களும் எவ்வளவு முக்கியம் என்பது அவரை தவிர மற்ற பாத்திரங்களின் வெற்றியை கொண்டே கணிக்கலாம். உதாரணமாக அவரது குதிரை ஜாலி ஜம்பர், ஜோ டால்டன், ஆவரேல் டால்டன், காது கேட்காத கிழவர், ஜெயிலர், மா டால்டன். என்று பல துணை பாத்திரங்களும் சிறப்பாக இருப்பது புரியும்.
தீவிர வாசகர்கள் (கனவுகளின் காதலன்) "நண்பரே, ரின்-டின்-கேன் எங்கே?". என்று கேட்பது எனக்கு நன்றாக கேட்கிறது. நமக்கெல்லாம் ரின்-டின்-கேன் என்ற பெயரில் அறிமுகம் ஆன ரன்-டன்-ப்ளான் தான் இந்த பதிவின் நாயகன் (காமிக்ஸ் டாக்டர் மன்னிக்கவும் - இவர் அந்த நாயகன் ஜே.கே.ரித்தீஷ் இல்லை).
தன்னுடைய நிழலை விட வேகமாக சுடும் வீரன் லக்கி லுக் என்பது நமக்கு தெரியும். அவருக்கு இணையாக செயல் ஆற்றும் திறன் கொண்டது ஜாலி ஜம்பர் என்பதும் நமக்கு தெரியும். ஆனால், ரன்-டன்-ப்ளான்? இதற்க்கு ஏதாவது அடைமொழி உள்ளதா? பன்ச் வசனம் உள்ளதா?
இருக்கிறது, நண்பர்களே இருக்கிறது. "தன்னுடைய நிழலை விடவும் முட்டாள்தனமான ஒரு நாய்" என்பதே இதற்குரிய அடைமொழி. ரன்-டன்-ப்ளான் முதன் முதலில் அறிமுகம் ஆனது பிப்ரவரி நாலாம் தேதி 1960'ம ஆண்டு. இந்த பதிவை இரண்டு வாரங்களுக்கு முன்னர் இட்டு இருந்தால் பொன்விழா ஆண்டு துவக்கம் என்று கூறி தூள் கிளப்பி இருக்கலாம். என்ன செய்வது? தாமதம் என்ற கொடிய வியாதிக்கு நான் ஆளாகி பல மாமாங்கம் ஆகி விட்டதே?
ரன்-டன்-ப்ளான் ஆறுமுகம் ஆனது ஸ்பிரோ என்ற பிரபல பிரெஞ்சு காமிக்ஸ் இதழில் தான். இவர் தோன்றிய கதை Sur la piste des Dalton ஆகும். இது வெளிவந்த நாள் 04-02-1960 ஆகும்.லக்கி லூக்கை உருவாகிய கோச்சினி அவர்களின் மரணதிர்ற்கு சரியாக பத்து வருடங்கள் கழித்து திரு மொரிஸ் அவர்கள் ரன்-டன்-ப்ளான் உடைய தனி கதைகளை வெளியிட முடிவு செய்தார். ரன்-டன்-ப்ளான்'ன் குணாம்சங்கள் என்ன என்று இப்போது பார்ப்போம்:
திடீரென்று பாய்வது (வழமையாக ஜோ டால்டன் அல்லது லக்கிலுக் மீது)
அவ்வாறு பாயும்போது எல்லாம் தவறி கிழே விழிவது
ஆபத்து நேரங்களில் நீரில் குதிப்பது (பின்னர் லக்கிலுக் அவர்களால் முதல் உதவி பெறுவது - ஆம், உலகிலேயே நீந்த தெரியாத ஒரே நாய் இது தான்).
மிகவும் சோம்பேறியாக இருப்பது (கதையின் முதல் கட்டத்தில் யாரவது காலை மிதித்தால் பத்தாவது கட்டத்தில் கத்துவது).
அற்புதமான காவல் நாயாக இருப்பது (சிறையில் இருந்து டால்டன்'கள் தப்பித்தால் பல நாட்கள் கழித்தே தெரிந்து கொள்ளும் அளவிற்கு).
மா டால்டன் அவர்களின் சொல்லுக்கு மட்டும் கீழ் படிவது
மா டால்டன் அவர்களின் சொல்லுக்கு மட்டும் கீழ் படிவது
எதையுமே தவறாக புரிந்து கொள்வது (ஜோ டால்டன் இதனை விளக்க செய்யும் முயற்சியை அன்பின் அடையாளமாக எடுத்து கொள்வது)
ஜாலி ஜம்பர்'ஆல் வியப்புக்கு ஆளாவது (இப்படியும் ஜன்மங்கள் இருக்குமா என்று).
இதுவரையில் மொத்தம் இருபத்தி நான்கு ரன்-டன்-ப்ளான் கதைகள் வெளிவந்தது உள்ளன (கணக்கு சரிதானா கனவுகளின் காதலனே?). அவற்றின் அட்டை படங்களை இங்கு வரிசையாக வழங்கி உள்ளேன். இந்த பதிவை படித்து முடித்து விட்டு பின்னர் ஆற, அமர ஒரு முறை ஒவ்வொரு அட்டை படத்தையும் கூர்ந்து பாருங்கள். ஒவ்வொரு அட்டையும் ஒரு கதை சொல்லும்.
இப்போது இந்த பதவின் சாரம்சத்துக்கு வருவோம். மூன்று வருடங்களுக்கு முன் 2006'இல் பிரெஞ்சு அனிமேஷன் கம்பெனியாகிய ஷிலம் மூன்று குறும்படங்களை ரன்-டன்-ப்ளான்'ஐ கதை நாயகனாக கொண்டு வெளியிட்டது. இதோ அதனை பற்றிய விவரங்கள் இந்த அட்டை படத்துக்கு கீழே:
இப்போது முக்கயுயமான ஒரு விடயத்திற்கு வருவோம்: சமீபத்தில் எங்கேயோ நான் (காமிக்ஸ் டாக்டர் / கிங் விஸ்வா / கனவுகளின் காதலன் / செழி / ரபிஃ) லயன் காமிக்ஸ் இதழில் லக்கி லுக் கதைகளின் உரிமை முடிந்து விட்டது என்று படித்தேன். அது உண்மையானால் ஆசிரியர் விஜயன் அவர்கள் இந்த தொடரை வாங்கி வெளியிடலாமே?
இதில் மற்றுமொரு நல்ல விடயம் உள்ளது. இது ஒரு தனி தொடர் ஆகும். அதனால் இது லக்கி லுக் காமிக்ஸ் என்ற பதிப்பகத்தில் வெளியிடப் பட்டது. அதனால் செலவும் குறைவாகவே இருக்கும்.
மீண்டும் விரைவில் அடுத்த காமிக்ஸ் படம் மூலம் உங்களை சந்திக்கிறேன்.
நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.