வணக்கம்.
சமீபத்தில் நான் என்னுடைய புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்தபோது பல பெட்டிகளை ஆராய்ந்ததால் நிறைய நேரம் செலவானது. ஆனால், அந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏனெனில், பல பழைய புத்தகங்கள் சிக்கின. அவற்றில் ஒன்று மிகவும் அதிசயதக்க வகையில் இருந்தது.
ஒரு மாதத்திற்கு முன் கிங் விஸ்வா அவர்களின் பதிவில் காந்தி அடிகளை பற்றி காமிக்ஸ் வருவதாக எழுதி இருந்தார். அதன் பின்னுட்ட பகுதியில் ஜோஸ் அவர்கள் ரஜினி அவர்களை மைய்யமாக கொண்ட ஒரு நாவலை பற்றி எழுதி இருந்தார். அவரும் காமிக்ஸ் பற்றி கேட்டு இருந்தார். (ரஜினியை கதாநாயகனாக கொண்டு ஒரு நாவல் வெளிவந்தது. காமிக்ஸ்ம் கூடவா? ஆனால் நாவல் முயற்சி வெற்றி பெற வில்லை) என்பதே அவரின் பின்னுட்டம். இதோ அந்த பதிவின் சுட்டி: கிங் விஸ்வா.
தற்பொழுது காமிக்ஸ் வலை பூக்களில் முன்னோட்டம் அளிப்பது வழமையாக உள்ளது. கிங் விஸ்வா அவர்களும், ரபிஃ ராஜா அவர்களும், ஒலக காமிக்ஸ் ரசிகனும் சைடு பார்'இல் முன்னோட்டம் பகுதியை வைத்து உள்ளனர். ஆனால், திரு கனவுகளின் காதலன் அவர்கள் இவர்களை எல்லாம் விட ஒரு படி முன்னே போய் முன்னோட்டம் இடுவதையே ஒரு பதிவாக போட்டு நம்மை எல்லாம் அசத்துகிறார். அதனால், நானும் என் பங்கிற்கு ஒரு முன்னோட்டம் இடுகிறேன்: ரகசிய ஏஜன்ட் ரஜினி.
இந்த கதை எந்த இதழில் வெளி வந்தது என்பதே ஒரு போட்டி கேள்வி ஆகும். பல விஷயங்களில் சிறந்து விளங்கும் காமிக்ஸ் டாக்டர், முத்து விசிறி, கிங் விஸ்வா, ராஜா, கனவுகளின் காதலன், ஜோஸ், ஒலக காமிக்ஸ் ரசிகன் போன்றவர்களின் காமிக்ஸ் அனுபவத்திற்கு இதெல்லாம் சர்வ சாதரணம் என்பதை நான் நன்கு அறிவேன். இருந்தாலும் இது என்னுடைய கன்னி முயற்சி என்பதால் மன்னிக்கவும்.