கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரதத்தின் ரத்தமே,
தமிழில் தொன்று தொட்டு வரும் காமிக்ஸ்'ஆகிய முத்துவின் முதல் இதழான 'இரும்புக்கை மாயாவி'யில் மாயாவி 'க.கொ.க.கூ.' (கடத்தல் கொலை கலகக் கூட்டமைப்பு) என்னும் இயக்கத்துக்கு எதிராக போராடுவார், இதுவே எங்கள் / நமது இயக்கமாகும். கீழே முத்து காமிக்ஸ்'இன் லோகோ உள்ளது. புதிதாக காமிக்ஸ் பற்றி படிப்பவர்கள் தெரிந்து கொள்ள இது உதவும்.
பின்னர் 'மர்மத்தீவில் மாயாவி' கதையிலும் இக்கூட்டத்தைச் சேர்ந்த 'ஸ்கார்ல்' எனும் வில்லனோடு மோதுவார். இந்த ஸ்கார்ல் தான் நமது அப்போதைய தலைவர். இதோ, அந்த கதையின் தமிழில் வந்த பதிப்பும் & ஆங்கிலத்தில் வந்த பதிப்பின் அட்டை படங்கள்.
க.கொ.க.கூ.வின் ஒரிஜினல் பெயர் 'F.E.A.R.' (Federation of Extortion, Assassination and Rebellion) என்பதாகும். இவர்கள் காமிக்ஸ் உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு அமைப்பினர் ஆவர்கள். இவர்கள் பிலீட்வே என்னும் ஒரு லண்டனை சேர்ந்த பதிப்பகத்தின் சித்திர கதைகளில் வரும் அமைப்பினர்.இது தான் முத்து காமிக்ஸ்'இன் முதல் இதழ் அட்டை படம். இந்த கதையில் தான் நமது இயக்கம் முதன்முதலில் உலகிற்கு தெரிய வர ஆரம்பித்தது.
இது, முத்து காமிக்ஸ்' பதிப்பகத்தின் ஆங்கில இதழான மோடி காமிக்ஸ்'இன் அட்டை படம். இந்த புத்தகம் மிகவும் அரிதான ஒன்றாகும்.
இந்த இதழ் தான் நாம் மேலே பாத்த இதழ்களின் அப்பா (மூலகர்த்தா). ஆம், இதுதான் மேற்கூறிய புத்தகங்களின் ஒரிஜினல்.
இது மற்றுமொரு ஆங்கில இதழின் அட்டை.
இங்கு பாருங்கள் கண்மணிகளே, இப்படி தான் நாம் நம்மை உலகிற்கு தெரிவித்தோம். ஒரு விளம்பரம்தான். உடனே உடன் பிறப்புகள் கேட்கலாம்: நெருப்பிற்கு எதற்கு தீக்குச்சி? என்று. ஆனால், இன்றைய சந்தைமயமாகிவிட்ட உலகில், விளம்பரம் இல்லாமல் எதுவுமே இல்லை.
இது மற்றுமொரு ஆங்கில இதழின் அட்டை.
இது மற்றுமொரு ஆங்கில இதழின் அட்டை.
வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. தயவு செய்து உங்களின் கருத்துகளை பதிவு செய்து கழக கண்மணிகளாக மாறுங்கள். நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்..
மைக் டெஸ்டிங் 1-2-3
ReplyDeleteமைக் டெஸ்டிங் 1-2-3-4-5
மைக் டெஸ்டிங் 1-2-3-4-5-6-7
மைக் டெஸ்டிங் 1-2-3-4-5-6-7-8-9
ஹலோ, என்ன லுக்கு?
யாருமே கமெண்ட் போடததால், நாங்களே இப்படி எல்லாம் செய்யறோம்.
அக்கறை இருந்தால், கமெண்ட் போடவும்.
அக்கறை இல்லை என்றாலும் கமெண்ட் போடவும், சாமி.
எவ்வளவு நாளைக்கு தான் டெஸ்ட் கமெண்ட்'யே பார்த்து கொண்டு இருப்பது?
இந்த மாதிரி எத்தனை பேருய்யா கிளம்பியிருக்கீங்க. இரும்புகை மாயாவி எங்க சொந்த மச்சான். நாங்க அடிச்சுப்போம். சேந்துப்போம். நீங்க யாருய்யா குறுக்கால?
ReplyDeleteபுதிய வலைப்பூ வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது இயக்கத்தில் உள்ள அனைவருக்கும் உள்ள சோம்பேறிதனம் உங்களுக்கும் தொற்றி விடாமல் இருக்க எல்லாம் வல்ல இரும்புகையாரை வேண்டிக் கொள்கிறேன்.
விடமாட்டீங்களே ,ஊமை,ஷோலெ என கழக ஸ்டைலில் செல்லமா மிரட்டி பதிவு வாங்கிட்டீங்களே.
ReplyDeleteஅது சரி இந்த போட்டோவெல்லாம் முத்து விசிறிகிட்ட சுட்டது போலிருக்கே, மற்றும் படி கட்சி மாற சூட்கேஸ் அனுப்பிடுவீங்க தானே.
அடுத்த மிரட்டல் எப்பயுங்க, உங்க தலைவரின் நினைவாக முத்திரை வெளியீடு ஒண்ணும் கிடையாதா.
கடவுளே! எங்களை காப்பாத்து...
ReplyDeleteஉங்களை நம்பி follower ஆயிட்டேன். எதோ நாலு வார்த்தை நல்லதா சொல்லுங்க!
ஹாலிவுட்டில் ஜாலி - கதையில் மாடர்ன் செவ்விந்தியர்களுக்கு சண்டை போட கற்று தரும் வெள்ளை ஸ்டேன்ட் மாஸ்டர் சொல்வானே ஒரு வசனம் ஞாபகம் இருக்கா?
''ஒரே ஆளு பல பேருக்காக அம்பு உடறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?''
யோவ், யாருயா நீங்க?
ReplyDeleteதைரியமான தீவிரவாதியா இருந்தா மொதல்ல உங்க ப்ரொஃபைல்ல ஒங்க ஃபோட்டோவையும், பேரையும் போடுங்க! உம்மை தொடர்பு கொள்ள மின்னஞ்சல் முகவரியும் கூறுக.
படங்களை சுட்டுப் போடுவதில் தவறில்லை. ஆனால் அதற்கு முதுவிசிறிக்கு நன்றி தெரிவித்து விடுங்கள்.
இதோடு நிறுத்திவிடாமல் மேலும் தொடருவீர்கள் என்று நம்புகிறேன்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
நல்ல டீம் மாதிரி இருக்கு
ReplyDeleteமச்சான் ஜோஸ் - இப்போதைக்கு நான் மட்டும்தான் கிளம்பி இருக்கேன். கூடிய விரைவில் எங்க அண்ணன் பாட்சா பாய் வருவார். நான் சோம்பேறி இல்லை, சுருசுருப்பாளி. (இதை சாமி பட விக்ரம் ஸ்டைலில் படிக்கவும்)
ReplyDeleteசங்கர விஸ்வலிங்கம் - கண்டிப்பாக இந்த போட்டோ எல்லாம் முத்து விசிறி கிட்டே இருந்து சுட்டது தான். ஆனால் அதை வெளிப்படைய சொன்னா, நம்ம கழகத்துக்கு தானே அவமரியாதை?. அதான் சொல்லலை. சூட்கேஸ் உங்க வீட்டுக்கு இன்னும் வந்து சேரலையா? என்ன ஒரு விந்தை?
தெய்வம் அய்யம்பாளையம் அவர்களே - நல்லதா நாலு வார்த்தை கேட்டுக்குங்க: க.கொ.க.கூ . என்ன இப்ப இன்னும் நாலு வார்த்தை கேக்க தோணுதா?
பயப்படும் பயங்கரவாதியே - எந்த ஒரு இயக்க தோழரும் நம்முடைய புகைப்படத்தை வெளிடக்கூடாது என்பது தானே நமது பால பாடம்? இது கூட தெரியாமல் நீர் என்னையா பயங்கரவாதி? இதில் தலைவர் பட்டம் வேறு. இப்போது என்னுடைய தகவல்கள் அனைத்தையும் வெளிட்டுள்ளேன். பாரும், பார்த்து தொலையும். எமது இயக்க கொள்கைகளை பரப்புவதே என்னுடைய வேலை என்பதால் இந்த பணி தொடரும்.
சுரேஷ் - என் சாமி, எங்க ப்ளக்கை எல்லாம் பின் தொடர மாட்டீங்களா?
இத படிக்குற மத்த எல்லாருக்கும் = யோவ், உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? வாங்கையா, வந்து உங்க இயக்க வெறியை காட்டுங்க.
சிறு வயதில் பார்த்து, படித்து மிகவும் இரசித்தது.
ReplyDeleteஇந்த அட்டைப்படங்களை பார்த்தவுடன் ப்ற்பல பள்ளிக்கால ஞாபகங்கள் வருகின்றன. நன்றி நண்பரே.
எலே,
ReplyDeleteநம்ம பயல நீ? நம்ம மூக்காயி பைய்யன் தானேடா நீ? எங்க என்ன வேலை பாக்கியா?
என்னது, டி சாப்பிடனுமா? வேனம்ட. நீயே சம்பளத்துக்கு வேலை பாக்குற.
சரிடா. டேய், நம்ம ஊர்க்காரன் வந்து கடை ஆரம்பிச்சுஇருக்கன். வாங்கடா. வந்து இட்லியோட சாம்பாரா கலந்து அடிங்கடா.
வருக வருக வலையுலகிற்கு. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவந்துட்டான்யா வந்துட்டான்னு அலற வைக்க வசிடீங்கலேப்பு...... சரி இந்த வலை "காயையும்" இருவர் பின் தொடருகிரார்களே...... என்ன நடக்குது இந்த வூருல....
ReplyDeleteசரி..... சீகுரம் ஒரு சொந்த முயற்சி பதிவை போடவும்....... இல்லென வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப வேண்டி வரும்......
ஹீ ஹீ ஹிஹி ஹேஹெஹெஹ் ஹெதேதேதே ஹி ஹீ
ரஃபிக் ராஜா
காமிக்கியல் - "ஒரு காமிக்ஸ் ஆராய்ச்சி கூடம்"
நண்பரே க கோ க கூ ,
ReplyDeleteவாழ்த்துக்கள். வலைப்பூவை மருத்துவர் அய்யாவை பார்த்து அப்படியே ஆரம்பித்து விட்டீர்கள். முதல் பதிவையும் அப்படியே போட்டு விட்டீர்கள். இனி மேல் என்ன செய்வதாக உத்தேசம்?
டெண்டுல்கரை பார்த்து சேவாக் விளையாடுவதாக கூறினாலும், சேவாக்'க்கு என்றே தனித்திறன் உண்டு. உங்களிடம் அப்படி உள்ளதா என வலைபூ நண்பர்கள் அனைவரும் கருதுகின்றனர்.
இந்த கேள்விக்கு காலமும், உங்களின் அடுத்த கட்ட இடுகைகளும் தான் பதில் சொல்லும்.
அதிரை ஜமாலை வழிமொழிகிறேன்.
ReplyDelete