Friday, August 28, 2009

XIII இரத்தப் படலம் 2010 மே மாதம் வெளியாகும் - அதிகாரபூர்வமான அறிவிப்பு

கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,

வணக்கம்.

இந்த பதிவின் தலைப்பை பார்த்து அதிர்ச்சி அடைய வேண்டாம் தோழர்களே. முழுமையான தகவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த பதிவு நம்முடைய லயன் காமிக்ஸ் ஜம்போ ஸ்பெஷல் குறித்த வெளியீடு அல்ல.

ஆங்கிலத்தில் சினிபுக் நிறுவனதினாரால் ரத்தப் படலம் அடுத்த ஆண்டு மே மாதம் முதல மாதம் ஒரு பாகமாக அனைத்து பாகங்களையும் (பத்தொன்பது) தனியாக வெளியிட ஒப்பந்தம் செய்து முடித்து அதனை பற்றிய அதிகாரபூர்வமான வெளியீட்டை அவர்களின் தளத்தில் வெளியிட்டு உள்ளனர். இங்கே கிளிக் செய்து அதனை படிக்கவும்.


என்னை பொறுத்த வரையில் அவர்கள் நான்காம் பாகத்தில் இருந்து ஆரம்பிப்பது அவர்களின் நிறுவனத்துக்கு நல்லது. ஏனென்றால், இதுவரையில் ஆங்கிலத்தில் இந்த தொடரை இரண்டு நிறுவனத்தினர் வெளியிட முயன்று உள்ளனர். அவர்கள் இருவருமே மூன்று பாகம் தான் வெளியிட முடிந்தது. அதன் பிறகு அவர்கள் நிறுவனங்கள் அடைந்த கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.

உண்மையில் சொன்னால் பதிமூன்று (13 - XIII) எப்படி ஒரு ராசியில்லாத எண்ணோ, அதனைப் போலவே தான் இந்த கதையை பிரசுரிக்க முயல்கிறவர்கள் அனைவருமே கஷ்டப் படுகிறார்கள். நம்முடைய லயன் காமிக்ஸ் எடிட்டரும் கூட எவ்வளவோ முயல்கிறார். ஆனால், முடியவில்லை. இன்னமும் கூட அறுநூரை தாண்டவில்லையாம் முன்பதிவு எண்ணிக்கை.

கொஞ்சம் யோசித்து பாருங்கள். ஒரு புத்தகம் சினி புக் மூலம் வாங்கினால் (அதாவது அந்த புத்தகங்கள் இந்தியா வந்தால்) அதன் குறைந்த பட்ச விலை இருநூறு ரூபாயாக இருக்கும். அப்படியானால் பதினெட்டு பாகங்களுக்கு கணக்கு போட்டு பாருங்கள். ஆனால், நம்முடைய லயன் காமிக்ஸ் ஆசிரியர் அந்த பதினெட்டு பாகங்களையும் வெறும் இருநூறு ரூபாய்க்கே தருகிறார். ஆனாலும் அதனை வாங்க நம்மில் பலருக்கு மனம் வரவில்லை. என்ன கொடுமை ஐயா இது?

தொலைகாட்சி தொடராகவும் இந்த கதை வந்தது என்பதை கிங் விஸ்வா அவர்களின் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். இன்னமும் பார்க்கவில்லை. குறுந்தகடு வரவில்லையாம். காத்திருக்கிறேன்.

தரவிரக்கம் செய்ய Mega Up-Load Links:

http://www.megaupload.com/?d=BYEO6MA9

http://www.megaupload.com/?d=6NGO2PBA

 

Iceberg 1 Front Cover Sevinthiya Kudiyiruppu Wrapper-I

படங்கள் உபயம் - கிங் விஸ்வா'வின் தமிழ் காமிக்ஸ் உலகம்.

இந்த கதை தொடர் இலங்கையில் இருந்து வந்த ஐஸ்பர்க் காமிக்ஸ் மூலமும் வெளிவந்தது என்பது குறிப்பிடத் தக்கது. நண்பர் விஸ்வா அதனை பற்றி பதிவிட்டதன் மூலமே தெரிந்து கொள்ள முடிந்தது.

அடுத்த காமிக்ஸ் பதிவு மூலம் உங்களை சந்திக்கிறேன், விரைவில்.

நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.

Related Posts Widget for Blogs by LinkWithin