கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே,
வணக்கம்,
வலைப்பூவை வந்து பார்த்து வாழ்த்தியோருக்கு நன்றி! வலையுலகத்திற்கு புதிய இயக்கமாகிய நம்மையும் சிலர் பின் தொடர்கிறார்கள். அவர்களுக்கு நமது இயக்கத்தின் சார்பாக நன்றிகள். பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள்.
ரொம்ப நாளாக ஒலக சினிமா பற்றி எழுதலாம் என்று நினைத்து கொண்டு இருந்தேன். இதோ அதில் முதல் பதிவு.
சமீபத்தில் லயன் காமிக்ஸில் வெளிவந்த 'எமனின் எல்லையில்' கதாநாயகனாகிய டெக்ஸ் வில்லர் பாத்திரத்தை வெள்ளி திரையில் கொணரும் முயற்சியில் ஒரு திரைப் படம் வந்ததாக ரொம்ப நாளாக கேள்வி பட்டு இருக்கிறேன். சமீபத்தில் தான் அந்த படத்தின் ‘எண்மிய பல்திற வட்டு’ம் (அட டிவிடிங்க) கிடைத்தது. ஆர்வ மிகுதியால் உடனே அந்த படத்தை பார்த்தும் விட்டேன்.
இந்த படத்தின் போஸ்டேர்கள் இதோ:
இதோ மற்றுமொரு போஸ்டர்:
இன்டியானா ஜோன்ஸ் அப்போது பிரசித்தமாக இருந்ததால் அந்த ஸ்டைலில் ஒரு போஸ்டர்:
படத்தின் கதை சுருக்கம் இதோ: செவ்விந்திய பழங்குடியினரில் ஒரு இனமான யாக்கை இனத்தினர் பல ஆண்டுகளாக கட்டுப்படுத்தி இருந்த தங்களின் பழி வாங்கும் உணர்ச்சியை அடக்க இயலாமல், வெள்ளையரை பழி வாங்க தீவிரமாக முயல்கின்றனர். அவர்கள் படத்தின் ஆரம்பத்தில் வெள்ளையர்கள் செல்லும் ஒரு ரயிலை கொள்ளை அடிக்கின்றனர். பல செவ்விந்திய பழங்குடியினரை ஒன்று திரட்டி ஒரு மிகப்பெரும் படைபலத்தை உருவாக்குகின்றனர்.
ஆனால் அவர்களின் இந்த திடீர் தாக்குதலுக்கு காரணமே அவர்கள் வாசம் உள்ள ஒரு விசித்திர ஆயுதம் ஆகும். அந்த ஆஉ\யுத்தத்தின் மூலம் அவர்கள் தங்கள் எதிரிகளை வெறும் கற்சிலையாக மாற்றும் திறன் கொண்டவர்களாக உருவெடுக்கின்றனர். இவர்களை கட்டுப்படுத்த ரேஞ்சர் ஆன டெக்ஸ் வில்லர் தன்னுடைய சகாவான கிட் கார்சனுடன் வருகிறார். இவர்களுடன் நவஜோ இனத்தை சேர்ந்த டைகர் ஜாக் சேர்ந்து கொள்ளுகிறார். ஆங்கிலேயர்களுக்கான படமாதலால் அவர் படம் முழுக்க ஊமை போல வருகிறார். இவருக்கு பதிலாக டெக்ஸ்'இன் மகனான கிட்'ஐ போட்டு இருக்கலாம். ஆனால், டெக்ஸ் வயதானவர் என்பது தெரிந்து விடும் என்பதால் படத்தின் இயக்குனர் அவ்வாறு செய்ய வில்லை.
துப்பாக்கி சுடுவதில் உள்ள திறமையை டெக்ஸ் சிறப்பாக வெளிப்பட்திய போதிலும், ஏனோ இந்த படம் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை என்பதே என் கருத்து.
படத்தின் எண்மிய பல்திற வட்டு இப்போது சில இணைய தளங்களில் கிடைக்கின்றது. இந்த எண்மிய பல்திற வட்டின் முன் அட்டை பகுதி இதோ:
லார்ட் ஆப் த டீப் படத்தின் எண்மிய பல்திற வட்டு அட்டை பகுதி:
லார்ட் ஆப் த டீப் படத்தின் எண்மிய பல்திற வட்டு
படவிவரங்கள்: வருடம் : 1985
ஓடும் நேரம் : 104 நிமிடங்கள்
மொழி : இத்தாலிய மொழி
சப்-டைட்டில் : ஆங்கிலம்
இயக்கம் : டுக்கயோ டேச்சரி
கதை: கிஒவன்னி போனெல்லி
இசை : கியன்னி பிர்ரயோ
ஒளிப்பதிவு : பிஎத்ரோ மொர்பிடெல்லி
எடிட்டிங் : லிடியா போரடி
தயாரிப்பு : என்சோ போர்செல்லி
அந்த படம் வரும்போது இத்தாலியில் வந்த தினசரிகளில் வெளிவந்த விளம்பரம் இதோ.
அந்த விளம்பரத்தின் படக் காட்சி இதோ உங்களின் பார்வைக்கு:
படத்தில் டெக்ஸ் வில்லர்'ஆக நடித்தவர் கிலியானோ கெம்மா ஆவார்.
படத்தில் கிட் கார்சன்'ஆக நடித்தவர் வில்லியம் பெர்கேர் ஆவார்.
படத்தில் டைகர் ஜாக் ஆக நடித்தவர் கார்லோ முகாரி ஆவார்
படத்தில் கார்லோஸ் தோன்றும் ஒரு காட்சி:
மூன்று குதிரை வீரர்களும் படத்தின் இயக்குனரும்:
இந்தப் படத்தை வாய்ப்பு கிடைப்பவர்கள் தவறாது பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மறக்காமல் உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமாக இட்டுச்செல்லுங்கள். இந்தப் பதிவை பொறுமையுடன் படித்ததற்கு நன்றி!
இது போன்ற பதிவுகளை மேலும் தொடரலாமா என கருத்துரையிடுங்களேன்?
தயவு செய்து உங்களின் கருத்துகளை பதிவு செய்து கழக கண்மணிகளாக மாறுங்கள். நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும்.
இப்போதைக்கு அவ்வளோதான், மீண்டும் சந்திப்போம்.
பி. கு:
அய்யம்பளையத்தார் பின்னிப்பெடலெடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது வலைப்பூவின் வடிவமைப்பு நாளுக்குநாள் மெருகேறிக்கொண்டேயிருக்கிறது. சுதந்திரத்திற்கு முன்வந்த அம்புலிமாமா இதழை அவர் நமக்கெல்லாம் அறிமுகப்படுத்தியிருக்கிறார். படிக்க இங்கே 'க்ளிக்'கவும்.
இதுவரை 'ஹைக்கூ' எழுதுகிறேன் பேர்வழி என்று நம்மையெல்லாம் இம்சித்துக்கொண்டிருந்த 'பங்கு வேட்டையர்' இப்போது 'கௌபாய்' கதை வேறு எழுதுகிறார். அதில் எல்லோரது டவுசரையும் அவிழ்த்து விடுவது என கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார். உஷார்! மக்களே, உஷார்! பாகம்-1, பாகம்-2.
நமக்குப் போட்டியாக 'ஆ கோ தீ க .' மற்றும் 'முதலை பட்டாளம்' என இரு சக தீவிரவாதிகள் வலைப்பூக்களை ஆரம்பித்துள்ளனர். இதில் 'முதலை பட்டாளம்' வைத்திருக்கும் ‘ப்ருனோ பிரேசில்’ ஒரு கவுண்டர்-டெர்ரரிஸ்ட் என கூறிக்கொள்கிறார்! வரவேற்கிறோம்! அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்! சும்மா ஒரு பதிவோடு நிறுத்திவிடாமல் தொடர்ந்து காமிக்ஸ் பற்றி எழுதுங்கள். காமிக்ஸ் பற்றி உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். காமிக்ஸ் என்பது ஒரு கடல். அதில் எல்லோரும் சேர்ந்தே முத்தெடுக்கலாமே?
தொடர்புடைய இணைய தளங்கள்:
பட விவரங்களை தெரிந்து கொள்ள: இங்கே வாருங்கள்
ஆங்கில மொழி அடி கற்றைகளுக்கு: இங்கே கிளிக்குங்கள்
ட்ரைலர் பார்க்க: இங்கே நுழையுங்கள்
டவுன்லோட் செய்ய: இவ்விடம் வர வேண்டும்
மேலும் விபரங்களுக்கு: இங்கு சென்று பார்க்கவும்