சென்ற பதிவான முன்னோட்டம் - ரகசிய ஏஜன்ட் ரஜினிகாந்த் காமிக்ஸ் பலருடைய வரவேற்பை பெற்று இருப்பது கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். குறிப்பாக கும்மி அடித்து விளையாடிய பதிவர்களுக்கு. இருந்தாலும் யாராலும் சரியான விடையை கண்டு பிடிக்க முடியவில்லை என்பது சற்று வருத்தமான விடயமே.
குறிப்பாக நம்முடைய காமிக்ஸ் பதிவர்கள். இருந்தாலும் இது ஒரு மொக்கை கதை என்பதாலும் வெளி வந்த இதழும் ஒரு மொக்கை (ஆகி விட்ட) இதழ் என்பதாலும் தான் இந்த தேக்கம் என்பது என்னுடைய கருத்து.
இந்த கதை சிறுவர் இதழ் பூந்தளிர்'ல் வெளிவந்தது. ஆனால், இந்த கதை வெளி வந்த போது திரு வாண்டுமாமா அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டதால் ரூபன் என்பவர் தான் பொறுப்பு ஆசிரியர் ஆக இருந்தார். அவரை குறை ஏதும் சொல்ல இயலாது. எனென்றால் ஒரு மகத்தான மனிதரை யாராலும் அவ்வளவு சுலபத்தில் REPLACE செய்ய இயலாது (இதற்கான தமிழ் வார்த்தை என்ன?). முடியுமா என்ன?
இந்த கால கட்டத்தில் வெளிவந்த பூந்தளிர் இதழ்கள் யாவும் சுமாராகவே இருக்கும். இந்த கதை ஒரு சிறப்பான மொக்கை கதை ஆகும். ரஜினி காந்த் அவர்கள் அடுத்து அடுத்து மொக்கை படங்களை கொடுத்து வந்த வேளையில் (பாண்டியன், உழைப்பாளி,ETC) தான் இந்த காமிக்ஸ்'ம் வந்தது. இதற்காக கதை ஆசிரியர்கள் எந்த காபிரெய்ட் உரிமையையும் பெற்று இருக்க மாட்டர்கள் என்பது என்னுடைய எண்ணம். இப்போது இது நடக்காது. எனென்றால் திரு சௌந்தர்யா ரஜினி காந்த் அவர்கள் சூப்பர் ஸ்டார் அவர்களை காபிரெய்ட் செய்து விட்டார்கள். இதனை நமது தலை சிறந்த காமிக்ஸ் நண்பர் எப்படி கவனிக்காமல் விட்டார்?
இதன் மூலம் ஹிந்தி மொழியில் வெளிவந்த ஸ்டார் காமிக்ஸ் ஆகும். இந்த புத்தகத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் திரு அமிதாப்பச்சன் அவர்களை ஒரு காமிக்ஸ் நாயகனாக கொண்டு பல கதைகள் வந்தன. இதில் அவர் பெயர் சுப்ரீமோ ஆகும்.





