வணக்கம். அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துக்கள். இரத்தப் படலம் என்ற அற்புதமான கதையை தழுவி எடுக்கப் பட்ட ஒரு தொலைக் காட்சி தொடரை பற்றி நான் பதிவிட இருந்தேன். ஆனால் நமது காமிக்ஸ் உலகின் முடி சூடிய மன்னர் கிங் விஸ்வா அவர்கள் அதனை பற்றி அனைத்து தகவல்களுடன் பதிவிட்டு விட்டதால், நான் வேறு ஒரு பதிவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.

இந்த பதிவை நான் சற்று அவசரத்தில் இடுவதால் தீர்கமாக ஆராய இயலவில்லை. மன்னிக்கவும். நம்முடைய மினி லயன் காமிக்ஸ் புத்தகத்தில் வர வேண்டிய ஒரு கதை ஆகும். ஆனால் அந்த புத்தகம் நின்று விட்டதால் லயன் காமிக்ஸ்'ல் இந்த அற்புதமான கதாபாத்திரம் தோன்றினார்.

இந்த கதாபாத்திரத்தை உருவாக்கியவர் நமக்கு எல்லாம் நன்கு பரிச்சயம் ஆன ஆஸ்ட்ரிக்ஸ் மற்றும் லக்கிலுக் ஆகிய பாத்திரங்களின் மூலகர்த்தா கோச்சினி ஆவார். ஆனால் இந்த தொடருக்கு படம் வரைந்தது ஜான் டபரி என்பவர் ஆவார். 1961ல் ரெகார்ட் என்ற இதழில் தான் முதன் முதலில் மதி இல்லா மந்திரி தோன்றினார். சில வருடங்கள் பின், ரெகார்ட் இதழ் நின்று விட்டது. அதனால் இரு வருடங்கள் வராமல் இருந்த மதி இல்லா மந்திரி தொடர் பின்னர் 1968ல் பைலட் என்ற மாத இதழ் மூலம் மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்த தொடரின் ஆரம்பமே ஒரு நம்ப முடியாத கதை ஆகும். முதலில் ஒரு துப்பறியும் காமெடி கதையை தான் இந்த இருவரும் இணைந்து வெளியிடுவதாக இருந்தது. ஆனால், சிறுவர்களுக்கான ஒரு சம்மர் கேம்பில் மத்திய வேலையில் கூறப்பட்ட ஒரு சிறுவர் கதையின் ஆரம்ப வரிகளை கொண்டே இந்த கதை எழுதப்பட்டது என்பது பலருக்கு தெரியாது. 
கோச்சினி இருக்கும் வரை வெளி வந்த கதைகள் 13 ஆகும். அவர் இயற்கை எய்த பின் டபரி வெளியிட்ட கதைகள் 14 ஆகும். ஆக மொத்தம் மதி இல்லா மந்திரியின் கதைகள் மொத்தம் 27 ஆகும். இதை தவிர 1995'இல் புருனோ பியாங்கி'இன் இயக்கத்தில் ஒரு கார்டூன் தொடரும் வெளிவந்தது.
கோச்ச்சினி எழுதிய கதைகள் அனைத்தும் மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்ய இயலாததாக கருதப் பட்டது. ஏனெனில் இந்த கதைகளில் உள்ள நகைச்சுவை அனைத்தும் வார்த்தை விளையாட்டுகளால் நிறைந்தவை. எனவே இவற்றை தமிழில் (எனக்கு தெரிந்த வரை ஆசியாவில்) முதன் முறையாக மொழி மாற்றம் செய்து அற்புதமாக கொண்டு வந்த திரு விஜயன் அவர்களை என்றென்றும் மறக்க இயலாது.

இயக்குனர் : Patrick Braoudé
படம் வெளியானது: 9 February 2005
இஸ்நோகுட் : Michaël Youn
சுல்தான் ஹாருன் : Jacques Villeret
இஸ்நோகுட்'ன் அடிமை : Arno Chevrier
மதி இல்லா மந்திரி பட விபரங்கள் பற்றி அறிய: இங்கு வாருங்கள்
மதி இல்லா மந்திரி விபரங்கள் டவுன்லோட் செய்ய : இங்கு குத்துங்கள் மதி இல்லா மந்திரி டவுன்லோட் செய்ய: இங்கே கிளிக் செய்யவும்
மதி இல்லா மந்திரி காமிக்ஸ் டவுன்லோட் செய்ய: இங்கே கிளிக் செய்யவும்

இந்தப் படத்தை வாய்ப்பு கிடைப்பவர்கள் தவறாது பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மறக்காமல் உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமாக இட்டுச்செல்லுங்கள். இந்தப் பதிவை பொறுமையுடன் படித்ததற்கு நன்றி!
நன்றிகள் எனக்கும் பாராட்டுகள் நமக்கும். மீண்டும் சந்திப்போம். விரைவில்.

